Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஐ.நாவின் முடிவு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசு ஏமாற்றம்! - வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை
Page 1 of 1

சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஒத்திவைத்துள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், மார்ச் மாத அமர்வில் வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கையை வெளியிடுவதை, ஐ.நா மனித உரிமைகள் பேரவை செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது தொடர்பாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில்-
பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை, காணாமற்போதல், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள் உட்பட இலங்கையில் நடந்தேறிய மனித உரிமை மீறல்கள் பற்றி முழுமையான விசாரணை அறிக்கையினை ஐ.நா மனித உரிமைச்சபை 25/1 தீர்மானம் கோரியிருந்தமையினைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வாரத்தில், வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில், தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பு குறித்து உரிய விசாரணை செய்யப்பட வேண்டுமென கோரியிருந்ததோடு, வரும் மார்ச் ஐ.நா மனித உரிமைச்சபை அமர்வில் விசாரணை அறிக்கை வெளியிட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்திருந்தனை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், ஐ.நா மனித உரிமைச்சபை, இலங்கையில் நடந்தேறிய இனவழிப்பு குறித்த விசரணையில் நம்பத்தகுந்தவாறான எவ்வகை முன்னேற்றமும் இல்லாமையைக் கண்டு வருந்துவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது சிறிலங்காவில் புதிய அதிபராக பொறுப்பேறுள்ள மைத்திரிபால சிறிசேனா அவர்கள், முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனவழிப்புப் போரின்போது, அப்போதைய ராஜபக்ச அரசின் பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்தாரென்பதும், அப்போது சிறிலங்காவின் இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகா அவர்கள், தற்போது, சிறிலங்கா அதிபருக்கான பாதுகாப்புத்துறை ஆலோசகராக உள்ளார் என்பதனையும் ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். எனவே, இவ்விருவருமே சிறிலங்காவில் நடந்தேறிய இனஅழிப்பை மூடிமறைக்கவே முற்படுவர் என்றும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இடித்துரைத்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பில் நம்பத்தகுந்த பொறிமுறையில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான தோல்விகளை கண்டுள்ளமை தொடர்பில் மனித உரிமைச்சபை தீர்மானம் 25/1 முன்மொழிவில் குறித்துரைக்கப்பட்டுள்ளமையினை சுட்டிக்காட்டிய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், சிறிலங்காவின் தேசிய செயற்பொறிமுறைகள் தொடர்ந்து உண்மையை நிறுவ மற்றும் நீதி நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதனையும் அத்தீர்மானத்தின் முன்மொழிவில் விவாதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் நினைவூட்டியுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாத கூட்டத் தொடரில், சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணையின் வாய்மூல அறிக்கையினை முன்வைக்க கோருவதாக தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இது தொடர்பிலான வெளிப்படையான முழுமையான விவாதத்துக்கும் மனித உரிமைச்சபையினைக் கோரியுள்ளார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» சிறிலங்கா அரசுக்கு எதிரான பொருளாதரத் தடை: இந்திய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை
» ஆசிரியர் சக்திதரனை இராணுவம் படுகொலை செய்ததை ஐ.நா சபை உடனடியாக விசாரிக்க வேண்டும்! நாடு கடந்த தமிழீழ அரசு அவசர கோரிக்கை
» தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் தென்சூடான் துணையிருக்கும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
» மாணவர்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் 1.65 கோடி வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க தமிழீழ மாணவர் கூட்டமைப்பு முடிவு
» மே18 - தமிழீழ தேசிய துக்க நாள்! முன்னெடுப்புகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum