Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
'இனப் படுகொலை குற்றச்சாட்டு: நாட்டை காப்பாற்றும் முயற்சியில் சிறிசேன!'
Page 1 of 1

சென்னை: போர்க்குற்ற நடவடிக்கைகளிலிருந்து நாட்டை காப்பாற்றும் முயற்சியில் இலங்கை அதிபர் சிறிசேன இறங்கியுள்ளதாகவும், இந்தியா வரும் அவர் இதே கோரிக்கையை முன்வைத்தால் மத்திய அரசு ஏற்கக்கூடாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்தும் பன்னாட்டு விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஐ.நா. மனித உரிமை ஆணையம் மூலம், இலங்கையின் ஒத்துழைப்பின்மையும் மீறி பன்னாட்டு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு, விரிவான விசாரணை அறிக்கையும் தயார் செய்யப்பட்டிருக்கிறது.
ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 28வது கூட்டத்தில் மார்ச் 25ஆம் தேதி இலங்கை போர்க்குற்ற விசாரணை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் இலங்கை அரசு மீது கடுமையான குற்றச்சாற்றுகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கை வெளியானால், உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக இலங்கை அம்பலப்பட்டு நிற்கப்போவது உறுதி. எனவே, இதைத் தடுக்கும் நோக்குடன் இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பான அறிக்கையை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் தாக்கல் செய்ய விடாமல் முட்டுக்கட்டைப் போடும் செயல்களில் இலங்கையின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டிருக்கிறார். இதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் ஆதரவைத் திரட்டி வரும் அவர், அடுத்த வாரம் டெல்லி வரும் போது இந்தியாவின் ஆதரவையும் கேட்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தொடர்ச்சியாக தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்காவும் இப்போது இலங்கைக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தெரிகிறது. ஈழத் தமிழர் பிரச்னையில் தொடக்கத்திலிருந்தே அமெரிக்காவுக்கு அக்கறையில்லை. சீனாவின் கட்டுப்பாட்டிலிருந்து இலங்கையை மீட்டு, தனது ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது. இப்போது அமெரிக்காவின் நட்பு வளையத்திற்குள் இலங்கை வந்து விட்ட நிலையில், போர்க்குற்ற விசாரணை அறிக்கையை தாமதமாகவே தாக்கல் செய்யலாம் என அமெரிக்காவும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. அதுமட்டுமின்றி, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கூட அடுத்த மாதம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும்படி வலியுறுத்தப் போவதில்லை என்று கடந்த வாரம் இலங்கையில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கூறும் ஒரே காரணம் இலங்கையில் புதிய அரசு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது தான். ஆனால், இலங்கையில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பது தான் உண்மை. தமிழர் எதிர்ப்பு நிலைப்பாட்டை ராஜபக்சேவை விட சிறிசேன தீவிரமாக கடைபிடித்து வருகிறார். தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து ராணுவத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்ட அவர், ராணுவத்திற்கு காவல்துறை அதிகாரத்தையும் கூடுதலாக வழங்கியிருக்கிறார். மேலும் இலங்கை இனப்படுகொலை குறித்த பன்னாட்டு விசாரணையை ஏற்க முடியாது என்றும், இலங்கை அரசே தனியாக விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரிக்கும் என்று ராஜபக்சேவின் குரலையே புதிய அதிபர் சிறிசேனவும் எதிரொலித்து வருகிறார்.
இலங்கை விடுதலை அடைந்த பின்னர் இன்று வரையிலான காலத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரிக்க பல ஆணையங்கள் அமைக்கப்பட்ட போதிலும், ஒரே ஒரு சிங்களர் கூட தண்டிக்கப்பட்டதில்லை என்பதிலிருந்தே இவ்விஷயத்தில் இலங்கையின் அக்கறையும், நேர்மையையும் உணரலாம். இலங்கைப் பிரச்னையை அமெரிக்காவும், அதன் ஆதரவு நாடுகளும் கிட்டத்தட்ட கைகழுவி விட்ட நிலையில், ஈழத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரும் பொறுப்பு முழுக்க முழுக்க இந்தியாவுக்கே உள்ளது. எனவே, இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கை ஏற்கனவே அறிவித்தபடி அடுத்த மாதம் 25ஆம் தேதி மனித உரிமைப் பேரவையில் தாக்கல் செய்யப்படுவதை இந்தியா தான் உறுதி செய்யவேண்டும்; ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுகளை ஐ.நா. பாதுகாப்பு அவை மூலம் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பி ராஜபக்சே உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவதற்கான தீர்மானத்தையும் இந்தியா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அடுத்த வாரம் இந்தியா வரும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன போர்க்குற்ற நடவடிக்கைகளிலிருந்து தமது நாட்டை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தால் அதை இந்திய அரசு ஏற்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» 'தென் கொரிய டி.வி. சீரியல்களை பார்த்ததாக குற்றச்சாட்டு: வடகொரியாவில் 50 பேர் படுகொலை'
» "இலங்கை இனப் படுகொலையை அமைதியாக வேடிக்கை பார்த்த ஐ.நா சபை! பிரான்சிஸ் ஹாரிசன் காட்டம் "
» விடுதலைப்புலிகள் மீண்டும் தலையெடுக்க விடமாட்டேன்: சொல்கிறார் மைத்திரிபால சிறிசேன
» நேற்று காசாவில் ......தொடரும் சியோனிசவாதிகளின் மனித இனப் படுகொலைகள்
» மூன்றாவது அணி முயற்சியில் மதிமுக?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum