Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
Dyslexia – Dysgraphia – dyscalculia என்பது என்ன?
2 posters
Page 1 of 1

படிப்பதிலும் எழுதுவதிலும் தாமதமான வளர்ச்சி பெறும் குழந்தைகளில் சிலருக்கு எழுத்துகளைப் படிப்பதில் சிரமம் இருக்கும்.இது டிஸ்லெக்சியா-Dyslexia – எனப்படுகிறது. டிஸ்லெக்சியா குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இயல்பான புத்திசாலித்தனம் இருந்தாலும் அவர்களால் மிகவும் எளிமையான வாக்கியங்களைக்கூடப் படிக்க முடியாது.
இத்தகைய பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்குப் படிப்பது ஒன்றுதான் சிரமமே தவிர மற்ற வகையான தகவல் தொடர்புகள் அனைத்தையும் புரிந்துகொள்ளும்.
இன்னொரு குறைபாட்டுக்குப் பெயர் டிஸ்கிராபியா-Dysgraphia -. இந்தக் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு எழுதுவது மிகவும் சிரமமானது. கேள்விகளுக்குப் பதில் கேட்டால் இந்தக் குழந்தைகள் உடனே பதில் சொல்லிவிடும். ஆனால், அதையே எழுதச் சொன்னால் சிரமப்படும். நேர்காணல்கள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் ஆகியவற்றில் இந்தக் குழந்தைகள் சிறப்பாகச் செயல்படும். அதேநேரத்தில், ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டுமென்றால் ரொம்பவும் கஷ்டப்படும்.
அந்தக் குழந்தைகளும் கேள்விகளுக்கு வாயால் பதிலளித்துவிட்டு, அதையே எழுதுவதற்குச் சிரமப்படும். இன்றைய சூழலில் இத்தகைய குழந்தைகளுக்குத் தேர்வின் போது, எழுதுவதற்கு ஒருவரைத் துணையாக வைத்துக்கொள்ள சில பள்ளிகளில் அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், இத்தகைய குழந்தைகளுக்கு எழுதுவது மட்டும்தான் சிரமம் என்பதையும், கேள்விகளுக்குரிய விடைகள் அவர்களுக்குத் தெரியும் என்பதையும் பெற்றோரும் ஆசிரியர்களும் உணர்ந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
இன்னொரு குறைபாட்டின் பெயர், டிஸ்கால்குலியா-dyscalculia . இந்தக் குழந்தைகளுக்கு எண்கள் தான் பிரச்சினை. இவர்களின் மொழியாற்றல் நன்றாக இருக்கும். நாடக வசனங்களை, சொல்லும். திருக்குறளை அதற்கான விளக்கங்களை மனப்பாடமாகச் சொல்லும். ஆனால், அவர்களிடம் சிறிய பெருக்கலைக் கேட்டால் கூட ரொம்பக் கஷ்டப்படுவார்கள். மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இந்தக் குழந்தைகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கணக்கு மட்டும்தான் தகராறு.
எந்தக் குழந்தையும் எல்லா நேரத்திலும் கவனத்தோடு இருப்பதில்லை. ஏன் பெரியவர்களேகூட அப்படி இருப்பதில்லை. அதுபோலவே எல்லாக் குழந்தைகளும் எப்போதுமே அதீத செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன என்றும் சொல்லிவிட முடியாது. எனினும், கவனக்குறைவும் அதீத செயல்பாடும் உள்ள நிலைமைகள் இருக்கவே செய்கின்றன. இத்தகைய குழந்தைகளுக்கு ஆசிரியர்களிடமிருந்து தொடர்ந்து தண்டனையோ பெற்றோரின் கோபமான திட்டுகளோ தீர்வாகாது.
மனநல மருத்துவரிடம் முறையான சிகிச்சையே இதற்குத் தீர்வாகும். ஆனால், பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைகளின் இந்த நிலை குறித்து கவனத்துடன் இருப்பதில்லை.
பள்ளியில் கல்வித்திறன் குறைவாக இருப்பதற்கு குழந்தைகளை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. வீடுகளில் உருவாகும் பிரச்சினைகளும், பள்ளிகளில் நடக்கும் பிரச்சினைகளும் குழந்தைகளை உணர்ச்சிவசப்பட வைத்து மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.
இங்கே குறிப்பிட்டுள்ள குறைபாடுகள் அனைத்தும் சரிசெய்யக் கூடியவையே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவற்றை அடையாளம் காண்பது மட்டுமே சவாலான பணியாகும். கூடுதல் அக்கறை செலுத்த வேண்டிய குழந்தைகளின் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து விட்டோமென்றால், விரைவாக சிகிச்சையளித்து நல்ல பலனைக் காண முடியும்.
சிகிச்சை என்பது காதுகளில் அடைத்துள்ள அழுக்கை நீக்குவது, கண்பார்வையைச் சீராக்க கண்ணாடி அணியச் செய்வது போன்ற எளிமையான முறையில் தொடங்கி, இக்குறைபாடுகளைச் சீராக்கும் மருந்து -மாத்திரைகள்வரை செல்லும். இந்தச் சிகிச்சை முறைகளில், மற்றக் குழந்தைகளுக்கு இணையாக இந்தக் குழந்தைகளும் செயல்படும் வகையிலான பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும். அதன் மூலமாக அவர்களின் குறைபாடுகள் களையப்படும்.
சில அபூர்வமான சூழல்களில் இந்தக் குறைபாடுகளைச் சரி செய்யவே முடியாத அளவிற்கும் ஒருசில குழந்தைகள் இருக்கக்கூடும்.
அவர்களுக்கு உரிய மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டு அதன் மூலமாக டிஸ்லெக்சியா போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகள் தேர்வெழுதும்போது துணைக்கு ஒரு நபரை வைத்துக்கொள்வதற்கும், டிஸ்கால்குலியா போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு கால்குலேட்டர் போன்ற வசதிகளை அனுமதிக்கவும், கூடுதல் தேர்வு நேரம் வழங்கவும் அனுமதி பெறப்படும்.
கல்வித்திறன் குறைவாக உள்ள குழந்தைகளை, இவர்கள் புத்திசாலிகளில்லை , மக்குகள் எனப் பெற்றோரும் ஆசிரியரும் முடிவு செய்துவிடக்கூடாது. அப்படிச் செய்வதுதான் அறியாமையாகும்.
குழந்தைகளின் குறைபாடுகளை உரிய சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த
முடியும் என்பதை உணர்ந்து அதற்கேற்பச் செயல்பட வேண்டும்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: Dyslexia – Dysgraphia – dyscalculia என்பது என்ன?
yslexia – Dysgraphia – dyscalculia என்பதை பற்றி விளக்கமாக கூறியதற்கு நன்றிகள்
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» PDF என்பது என்ன?
» நவ பாஷாணம் என்பது என்ன?
» மதச்சார்பின்மை என்பது என்ன ?
» ஆஸ்த்துமா என்பது என்ன ?
» கிளர்ச்சி அடைவது என்பது என்ன?
» நவ பாஷாணம் என்பது என்ன?
» மதச்சார்பின்மை என்பது என்ன ?
» ஆஸ்த்துமா என்பது என்ன ?
» கிளர்ச்சி அடைவது என்பது என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum