TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஓபனிங் ஷோ: 'ஷமிதாப்' எப்படி?

Go down

ஓபனிங் ஷோ: 'ஷமிதாப்' எப்படி?  Empty ஓபனிங் ஷோ: 'ஷமிதாப்' எப்படி?

Post by அருள் Sun Feb 08, 2015 7:05 am

சினிமா கனவை மட்டுமே சுமந்தபடி மும்பைக்கு வரும் வாய் பேசமுடியாத ஏழை இளைஞன், அவனுக்கு பின்னணி குரலாக வரும் மனிதன். இருவருக்கும் பாலமாக ஒரு பெண். ஈகோ மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்று இந்த முக்கோண கூட்டணியை வைத்து பால்கி நடத்தியிருக்கும் பாடமே ‘ஷமிதாப்’.

பள்ளியில், ‘காந்திஜியின் மனைவி பெயர் என்ன?’ என்று கேட்டால், ‘காந்தி’ படத்தில் அவருக்கு மனைவியாக நடித்த நடிகையின் பெயரை’ எழுதும் அளவுக்கு சினிமா ரசிகனாக இருக்கிறார் சின்ன வயது #தனுஷ். ஹீரோவாக நினைக்கும் தனுஷுக்கு குரலாகிறார் அமிதாப். இருவரும் இணையும் புள்ளியில் ஹீரோ ‘ஷமிதாப்’பாக உருவெடுக்கும் தனுஷ், காலப்போக்கில் சூப்பர் ஸ்டாராகிறார். பிறகு படம் முழுக்க பேசுகிறது #ஈகோ. ஈகோ உடையும் தருவாயில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.
ஓபனிங் ஷோ: 'ஷமிதாப்' எப்படி?  Shammmmi_1
அமிதாப், அசால்டாக மனதை அள்ளுகிறார். படம் முழுவதும் குடித்துக்கொண்டே தனுஷை தன் பிடியில் வைத்துக் கொண்டு ஆட்டி வைக்கும் போதும், ‘என்னது நீ ஹீரோவாகணுமா, அதும் உன் மூஞ்சிக்கு என்னோட வாய்ஸா..?‘ என பிரித்தெடுக்கிறார் பிக்பி. அதுவும் கடைசி அரைமணிநேரம் ரசிகர்களின் மனதில் நாற்காலி போட்டு அமர்கிறார். மிகைப்படுத்தாத நடிப்பு, அர்ப்பணிப்பு... இந்த வயதிலும் பாலிவுட்டில் அவசிய தேவையாக தன்னை தேடுவது ஏன்? என்பதை தன் நடிப்பால் உணர்த்துகிறார்.

கரும்பும், குறும்புமாக தனுஷ். பார்த்த உடனேயே பிடித்துவிடுகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் பாலிவுட்டிலேயே தங்கிவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. தன் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கேட்டு அலைவது, அ ஷராவுடன் நெருங்கி மருகுவது, அமிதாப் தன்னை சீண்டும்போதெல்லாம் கோபமும் வெறுப்பும் காட்டுவது என காட்சிக்கு காட்சி ஸ்கோர் செய்கிறார். அதுவும் ’நான் இல்லன்னா நீயும் ஃபினிஷ்ட்’ என கால் மேல் கால் போட்டு லுக் விடுவது, அமிதாப்பின் டார்ச்சர் தாங்காமல் அவரை அடித்துவிட்டு, சத்தமே இல்லாமல் உணர்வுகளினாலேயே துடிப்பது என தனுஷ் இந்திய புகழ் நடிகர் என காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
ஓபனிங் ஷோ: 'ஷமிதாப்' எப்படி?  Sathiyiaphotos2

இந்த இருவருக்கும் இடையில் எப்போதும் கருப்பு உடையில் ‘ஹேய் இடியட்ஸ் ஏன் இப்படி அடிச்சுக்கறீங்க’ என கேட்டு ஒவ்வொரு கட்டத்திலும் தனுஷ், அமிதாப்பை இணைக்க போராடும் அக்‌ஷரா. அவ்வப்போது தனுஷிடம் என்னோட ஸ்க்ரிப்ட்ல நடிப்பேல்ல என அப்பாவியாக கேட்டு நிற்பது, முத்தம் கொடுக்க நெருங்கும் தனுஷை மத்தவங்களுக்குதான் நீ சூப்பர் ஸ்டார் , எனக்கு நீ குரங்கு தான் இப்படில்லாம் பாத்தா நான் மயங்க மாட்டேன் என அசால்ட்டாக டயலாக் பேசி விட்டு, ' ஆனாலும் எனக்கு பிடிச்சுருக்கு!' என சொல்லி விட்டு தொப்பியை போடும் காட்சிகளில், 'ஓ... இவுங்க கமல் பொண்ணுல்ல.. இது கூட நடிக்கலைன்னா எப்படி?' என நமக்கு நாமே ஆறுதல் சொல்லி கொள்ளலாம்.

கலைஞர்களின் ஈகோ, அதனால் ஏற்படும் விளைவு... நுணுக்கமாக செதுக்கியிருக்கும் பால்கியின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. கோபம், ஆதங்கம், எள்ளல்... என பிரமாதமான கதையை தொய்வில்லாமல் கமர்ஷியலாக சொன்ன திரைக்கதையில் வெற்றிபெற்று இருக்கிறார் பால்கி. அவரின் கதைக்கு உயிராக நிற்கிறது பி.சி.ஸ்ரீராமின் விஷுவல்.

‘நான் விஸ்கி, அவன் தண்ணி, விஸ்கி தனியா போதை குடுக்கும், ஆனா தண்ணி தராது’ என படம் முழுக்க அமிதாப் சொல்லும் டயலாக்குக்கு ஒரு இடத்தில் அக்‌ஷரா, ‘ஹேய் லேபில் பாக்க மாட்ட, விஸ்கியிலயே 57 ஓபனிங் ஷோ: 'ஷமிதாப்' எப்படி?  Shammmmi_1sசதவீதம் தண்ணிதான்யா இருக்கு. 43 சதவீதம் தான் ஆல்கஹால்...’ இப்படி பல இடங்களில் அட... போட வைக்கிறது வசனம்.

பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார் ராஜா. காட்சியமைப்புக்கு ஏற்றபடி மனித உணர்வுகளை நம்முள் கடத்துவதுபோல் இருக்கிறது இவரின் இசை. சன்னட்டா பாடல் அதிரடி, பிட்லி பாடல் ரிதம், இஷ்க் இ ஃபில்லம் பாடல் சினிமாவுக்கு சமர்ப்பணம். இப்படி இசைஞானி படம் முழுவதும் ராஜாங்கம் நடத்துகிறார்.

எங்கேயோ இருந்து வந்த யாரென்றே தெரியாத ஒரு சினிமா ரசிகன் சூப்பர் ஸ்டார் ஆக, தனது கனவுகளைக்கூட ஒத்தி வைத்து விட்டு ஏன் அக்‌ஷரா இப்படி விழுந்து கொண்டு உதவி செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை இன்னும் ஆழமாக காட்சிப்படுத்தி இருக்கலாம். தனுஷ் சைகையில் பேசும்போது நாம் கேட்கும் முன்பே ‘சப் டைட்டில் ப்ளீஸ்’ என அமிதாப் கேட்கிறார். இப்படி ஒவ்வொரு ஃப்ரேமிலும் பால்கியும் ஒரு சினிமா ரசிகன் என காட்டுகிறது.

பாலிவுட்டில் ‘100 கோடி கிளப்’பில் சேருவது என்பது பெரும் சாதனை. ஓப்பனிங்கை பார்க்கையில் அதில் ‘ஷமிதாப்’ படத்துக்கு கண்டிப்பாக இடம் உண்டு என்றே தெரிகிறது. அந்த வெற்றியில் பால்கி, இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், தனுஷ், அக்‌ஷரா... என தமிழ் பேசும் கலைஞர்கள் இருப்பது நமக்கும் பெருமைதானே? மொத்தத்தில் ‘ஷமிதாப்’ சினிமாவுக்கு ஒரு சன்னட்டா (சைலண்ட்) பாடம்..
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஓபனிங் என்னமோ நல்லா தான் இருக்கு ...But உன் பினிஷிங் சரியில்லையேம்மா .....So sad ..
» சொத்தை பற்களால் ஏற்ப்படும் வலியை குறைப்பது எப்படி? பல்லில் கரைகளைப் போக்குவது எப்படி? பல்லின் ஈறுகளை வலுப்படுத்துவது எப்படி ?
» காதலில் நீங்கள் எப்படி, உங்கள் லவ்வர் எப்படி, உங்கள் காதல் எப்படி என்பதை தெரிந்துகொள்ள 6 கேள்விக்கு பதில் அளியுங்கள்.
» திருவண்ணாமலை கிரிவலம் செல்வது எப்படி?கார்த்திகையன்று தீபமேற்றும் பழக்கம் வந்தது எப்படி?
» இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது இது எப்படி சாத்தியமானது ? ? ! ! கோயில் எப்படி கட்டப்பட்டது என்ற தகவல் உங்களுக்காக.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum