TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சைனஸ் பிரச்னை தடுக்க... தவிர்க்க.. எம்.ராமகிருஷ்ணம ராஜூ, காது, மூக்கு, தொண்டை நிபுணர்

Go down

சைனஸ் பிரச்னை தடுக்க... தவிர்க்க.. எம்.ராமகிருஷ்ணம ராஜூ, காது, மூக்கு, தொண்டை நிபுணர் Empty சைனஸ் பிரச்னை தடுக்க... தவிர்க்க.. எம்.ராமகிருஷ்ணம ராஜூ, காது, மூக்கு, தொண்டை நிபுணர்

Post by mmani Tue Jan 27, 2015 1:47 pm

பனிக்காலம் வந்தால், சிலருக்கு விடாத தலைவலி மற்றும் தும்மல் படுத்திஎடுத்துவிடும். தூசி இருக்கும் பகுதிக்குச் சென்றால், விடாது தும்மிக்கொண்டே இருப்பார்கள். கேட்டால், ''சைனஸ் பிரச்னைங்க, தீரவே இல்ல'' எனக் கவலையோடு சொல்வார்கள். சைனஸ் பிரச்னை ஏன் வருகிறது? அதை எப்படித் தவிர்ப்பது?
சைனஸ் என்றால் என்ன?
நமது மூக்கைச் சுற்றி, நான்கு காற்றுப் பைகள் உண்டு. மூளை  மூக்கு, கன்னம்  மூக்கு, மூக்கு நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன. இந்த காற்றுப் பைகள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறிப்பிட்ட வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. இந்த காற்றுப் பைகளே சைனஸ் பகுதி என அழைக்கப்படுகின்றன.
[You must be registered and logged in to see this image.]
சைனஸ் பிரச்னை எப்படி வருகிறது?
சைனஸ் பகுதியில் ஒரு திரவம் சுரந்து, நமது மூக்கில் உள்ள சளி சவ்வுக்கு  ( Mucous membarane) வரும். இந்த சளி சவ்வுதான், நாம் சுவாசிக்கும் வெப்பமான காற்றை ஈரபடுத்தி, சைனஸ் பகுதிக்கு அனுப்புகிறது. சைனஸ் பகுதியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், திரவம் காற்றுப் பையிலேயே தங்கிவிடும். இதன் காரணமாக பல பாதிப்புகள் முகத்தில் ஏற்படக்கூடும். சைனஸ் பகுதியில் ஏற்படும் இந்த பிரச்னைக்கு 'சைனசிட்டிஸ்’ (Sinusitis) என்று பெயர். மூக்குத் துவாரத்தைப் பிரிக்கும் எலும்பு வளைவாக இருப்பதன் காரணமாகவும், சைனஸ் பகுதிக்கு அருகில் இருக்கும் எலும்பின் முறையற்ற வளர்ச்சியாலும், மூக்குப் பகுதிக்குள் 'பாலிப்’ (Polyp) எனப்படும் மூக்கு சதை வளர்ச்சி காரணமாகவும், சைனஸ் பிரச்னை வருகிறது. பெரும்பாலும்  சுற்றுச்சூழல் மாசு, அலர்ஜி காரணமாக சைனஸ் பிரச்னை வருகிறது.
சைனசிடிஸ் அறிகுறிகள் என்ன?
[You must be registered and logged in to see this image.]  கன்னம், நெற்றிப் பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.
[You must be registered and logged in to see this image.]  தலையைக் கீழே கவிழ்த்தால், தாங்க முடியாத தலைவலி இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]  அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறும், சிலருக்கு சளி சிந்தும்போது, ரத்தமும் சேர்ந்து வரும். சளி, கடுமையான நாற்றத்துடன் இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]  மூக்கைத் தொட்டாலே, கடுமையான வலி ஏற்படும்.
[You must be registered and logged in to see this image.]  இரவு நேரத்தில் இருமல் வரும். காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாகத் தும்மல் வரும்.
[You must be registered and logged in to see this image.]  பல் வலி, காது வலி ஏற்படும். வாசனை, சுவை உணர்வு குறையும்.
[You must be registered and logged in to see this image.]  காய்ச்சல் வரலாம், உடல் சோர்வாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது.
சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?
யூக்லிப்டஸ் எண்ணெயைக் கலந்து, நீராவி பிடிக்கலாம், தைலம் தடவலாம். தும்மலைத் தடுக்க, மருத்துவர் ஆலோசனைப்படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரையின் பேரில், குறிப்பிட்ட காலத்துக்கு ஸ்டீராய்டு கலந்த ஸ்ப்ரே  பயன்படுத்தலாம். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் ஸ்டீராய்டு கலந்த சொட்டு மருந்துகளை மூக்கினுள் விட வேண்டாம்.
இந்த சிகிச்சைமுறைகளில் சரியாகவில்லை எனில், எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலமாக சைனஸ் பகுதியில் உள்ள திரவம் அப்புறப்படுத்தப்படும். எலும்புப் பகுதி, சதைப் பகுதியில் பிரச்னை இருந்தால் மருத்துவர் ஆலோசனைப்படி அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம். ஆனால், உடனே பலன் இருக்காது. தொடர்ந்து, ஓரிரு வருடங்களுக்கு, மருத்துவர் பரிந்துரைப்படி மாத்திரை மருந்துகளைச் சாப்பிடவேண்டும்.  சைனஸ் பிரச்னை வருவதற்கான அறிகுறி அறிந்து, பிரச்னை பெரிதாகாமல் தடுப்பதே புத்திசாலித்தனம்.
[You must be registered and logged in to see this image.]
சைனஸ் பிரச்னைக்கு எளிய டிப்ஸ்!
[You must be registered and logged in to see this image.]  பனிக்காலத்தில் அதிகாலை, இரவு வேளைகளில் வெளியே செல்வதைக் குறைத்துக்கொள்ளவும்.
[You must be registered and logged in to see this image.]  படுக்கை, தலையணை, படுக்கையறை ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருக்கவும். தலையணை உறைகளை அடிக்கடி துவைத்து, மாற்றவும்.
[You must be registered and logged in to see this image.]  கைக்குட்டைகளைக் கொதிக்கும் தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து, துவைத்துப் பயன்படுத்தவும். கைக் குட்டையை அடிக்கடி மாற்றவும்.
[You must be registered and logged in to see this image.]  நூல் மற்றும் கயிற்றுத் துகள்கள் பரவியிருக்கும் இடங்கள், புகை, ஒட்டடை, சிமென்ட் இருக்கும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.
[You must be registered and logged in to see this image.]  இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]  சைனஸ்  பிரச்னை உள்ளவர்கள், செடி, பூக்கள், மரங்கள் இருக்கும் பகுதியில் உலவ வேண்டாம். வீட்டில் கரப்பான் பூச்சி பெருகவிடாமல் தடுக்க வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]  அசுத்தமான நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம். குளிர்பானம் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]  அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளைக் கண்டறிந்து, அவற்றை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]  மூக்குப்பொடி போடுவதையும்,புகை பிடிப்பதையும் அறவே தவிர்க்க வேண்டும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum