TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இன்ஸ்டாகிராமில் கலக்கும் எலும்புக்கூடு !

Go down

இன்ஸ்டாகிராமில் கலக்கும் எலும்புக்கூடு ! Empty இன்ஸ்டாகிராமில் கலக்கும் எலும்புக்கூடு !

Post by ஜனனி Tue Jan 27, 2015 7:04 am

ந்த எலும்புக்கூடு ரெஸ்டாரண்டிற்கு செல்கிறது. கம்ப்யூட்டர் முன் அமர்ந்து ஷாப்பிங் செய்கிறது. மேக் அப் செய்து கொள்கிறது. கண்ணாடி முன் அமர்ந்து அழகு பார்க்கிறது. நீச்சல் குளத்தில் குளிக்கிறது. புத்தாண்டு உறுதிமொழி எழுதிவைக்கிறது. எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்கிறது.
இந்த பகிர்வுகளை பார்த்து ரசிக்க லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்கள் அதற்கும் இருக்கின்றனர். சும்மாயில்லை, இன்றைய தேதிக்கு 2 லட்சத்தை அதன் பின் தொடர்பாளர்கள் எண்ணிக்கை நெருங்கியிருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆம், இன்ஸ்டாகிராமில் கலக்கி கொண்டிருக்கும் ஸ்கல்லியை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்! அதுதான் அந்த எலும்புக்கூட்டின் பெயர்.

ஸ்கல்லியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தால் அதன் புகைப்பங்களை பார்த்து நீங்களும் சொக்கிப்போவீர்கள். நீங்கள் இன்ஸ்டாகிராம் பயனாளி என்றால் அதற்கு கிடைத்து வரும் ஆதரவை பார்த்து லேசாக பொறாமைப்படவும் செய்வீர்கள். ஒரு எலும்புக்கூட்டிற்கு இத்தனை ஃபாலோயர்களா? என்ற எண்ணம் ஏற்படலாம். ஆனால் அதன் படங்களை பார்த்தால், அத்தனையும் அழகாகத்தான் இருக்கின்றன என்று சொல்லத்தோன்றும்.
[You must be registered and logged in to see this image.]
எலும்புக்கூடு எப்படி தன்னைத்தானே படம் எடுத்து வெளியிட முடியும்? என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மனதில் தோன்றி அதற்கான பதிலையும் கூட ஊகித்திருக்கலாம்.

ஆம், சரிதான் இந்த எலும்புக்கூடு இன்ஸ்டகிராமின் கணக்கின் பின்னே யாராவது இருக்க வேண்டும் என்னும் ஊகம் சரியானதுதான்.
கனடா நாட்டைச்சேர்ந்த டானா ஹெர்லி (Dana Herlihy ) எனும் பெண்மணிதான் இந்த எலும்புக்கூட்டை இன்ஸ்டாகிராமில் உருபெற வைத்திருப்பவர்- ஓஎம்ஜிலிட்ரலிடெட் எனும் முகவரியில்!
சமூக ஊடக மார்கெட்டிங் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் டானா, இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை அமைத்ததன் பின்னணியில் சுவாரஸ்யமான கதை இருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டானா பணியாற்றும் நிறுவனத்திற்கு யாரோ ஒருவர் பிளாஸ்டிக் எலும்புக்கூட்டை பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார். இது போன்ற திகிலூட்டும் பரிசுகளுக்கும் செயல்களுக்கும் பெயர் பெற்ற ஹாலோவன் பண்டிகையின் போதுதான் ஒரு குறும்புக்காரர் இந்த விஷமத்தனத்தை செய்திருக்கிறார். எலும்புக்கூட்டை பார்த்து டானாவின் சக ஊழியர்களில் எத்தனை பேர் பயந்தனர் என தெரியவில்லை, ஆனால் குறும்புக்காரர் ஒருவர் அந்த எலும்புக்கூட்டின் கைகளில் ஸ்டார்பக்ஸ் காபி கோப்பையை வைத்துவிட்டு சென்று விட்டார். எலும்புக்கூடு காபி பருகுகிறதாம் !

இந்த காட்சியை பார்த்து புன்னகைத்த டானா, அதை அப்படியே க்ளிக் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். எலும்புக்கூடு காபி குடிக்கும் புகைப்படம் செம கியூட்டாக இருப்பதாக பலரும் பார்த்து ரசித்தனர். அதோடு அதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும் செய்தனர். இப்படிதான் அந்த புகைப்படம் இணையத்தில் பிரபலமாகி ஸ்கெல்லியாக உருவெடுத்தது. டானா தொடர்ந்து எலும்புக்கூட்டை வைத்து வேறு சில புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து கொண்டபோது இதற்காக என்றே தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தை அமைக்கலாமே என நினைத்து , எலும்புகூட்டிற்கு பெயரும் வைத்து இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்துவைத்தார்.

அடுத்தடுத்த புகைப்படங்களில் ஸ்கெல்லியும் பிரபலமாகி அதற்கென்று ரசிகர்கள் உருவாகத்துவங்கிவிட்டனர்.

அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் டானாவும், ஸ்கெல்லியை விதவிதமாக போஸ் கொடுக்க வைத்து புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஃபேஷன் ரசம் சொட்டும் புகைப்படங்களையும், சுய அழகு புகைப்படங்களையும் பார்த்து அலுத்தவர்கள் ஒரு மாறுதலுக்காக ஸ்கெல்லியின் புகைப்படத்தை பார்த்து ரசிக்கின்றனர். அதன்பின்னே மறைந்திருக்கும் கேலியான நகைச்சுவை சொக்க வைக்கிறது.

ஆனால் , ஸ்கெல்லியின் பிரம்மாவான டானா, வெறும் நகைச்சுவையாக மட்டும் இந்த படங்களை எடுப்பதில்லை. சமகாலத்து இளம் பெண்களின் மனப்போக்கையும், பழக்க வழக்கங்களையும் அழகாக பகடி செய்யும் வகையில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதாவது இந்த கால பெண்கள் எதை எல்லாம் புதிய போக்கு என விழுந்தடித்து பின்பற்றுகின்றனரோ அதை எல்லாம் ஸ்கெல்லியையும் செய்ய வைத்து விமர்சனம் செய்கிறார்.

அழகிய பின்னணியில் ஃபர் கோட்டு போட்டுக்கொண்டு தலையில் மலர் கிரீடம் வைத்துக்கொண்டிருக்கும் பெண் போல எலும்புக்கூடு போஸ் தரும் புகைப்படமும், அதனுடன் 'வன ராணி போல உணர்கிறேன்!' எனும் வாசகமும், சிரிக்கவும் வைக்கிறது சிந்த்திக்கவும் வைக்கிறது.
இன்னொரு புகைப்படத்தில் கண்களில் வெள்ளரிக்காயை வைத்துக்கொண்டு அழகு கலை ரகசியம் பற்றி பேசுகிறது. இன்னொரு படத்தில் பணியிடத்தில் களைத்து போய் படுத்திருக்கும் போசில் அலுத்துக்கொள்கிறது. இப்படி ஒவ்வொரு புகைப்படமும் சமகால போக்கை அழகாக கேலிக்குள்ளாக்கி பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது.
[You must be registered and logged in to see this image.]


இணையம் மூலம் படம் பார்க்கும் சேவையான நெட்பிளக்சில் படம் பார்ப்பது, போம் குளியல் குளித்து இளைப்பாறுவது, புதிய ஷூ வாங்கி கொண்டு பெருமைபடுவது என ஒவ்வொரு படமும் ஒரு செய்தியை கேலியாக முன்வைக்கிறது. ஆனால் புகைப்படத்தின் அமைப்பும் அதன் பின்னே உள்ள கற்பனைத்திறன் மற்றும் கிரியேட்டிவிட்டி கவர்ந்திழுக்குக்கிறது.அதனால்தான் ஸ்கெல்லிக்கு ரசிகர்கள் கூடிக்கொண்டே போகின்றனர்.
இவ்வளவு ஏன்... பத்திரிகைகளில் ஸ்கெல்லியின் பேட்டியும் கூட வெளியாகி இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் சில ஆயிரம் ஃபாலோயர்களையேனும் பெறுவது எப்படி? என பலரும் திண்டாடிக்கொண்டிருக்கையில் டானா, ஒரு எலும்புகூட்டை உருவாக்கி லட்சகணக்கானவர்களை அதன் அபிமானியாக்கி காட்டியிருக்கிறார். வித்தியாசமாக செயல்பட வேண்டும், அந்த வித்தியாசம் கவனத்தை பெறும் போது அந்த ஆர்வத்தை தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கு புதுமையை கடைபிடிக்க வேண்டும் என்பதும்தான் ஸ்கெல்லி மூலம் டானா பிரலமாகி இருப்பது உணர்த்தும் செய்தி.

டானா, ஸ்கெல்லி மீது ஏற்பட்டிருக்கும் ஆர்வத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஸ்கெல்லி படம் போட்ட கோப்பைகள், ஸ்மார்ட்போன் கவர்கள் ஆகியவற்றையும் விற்பனை செய்யத்துவங்கியிருக்கிறார்.

டானாவின் கதை ஊக்கமளிக்கிறதா? புதுசாக ஏதாவது செய்து பாருங்கள் ,நீங்களும் பிரபலமாகலாம்.

ஸ்கெல்லியின் இன்ஸ்டாகிராம் பக்கம்:..http://instagram.com/omgliterallydead/

- சைபர்சிம்மன்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 2 கோடி ஆண்டு மனித குரங்கு எலும்புக்கூடு!
» மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு
» நாகர்கோவில் இராணுவமுகாமுக்கு அருகில் இளம் பெண்ணின் எலும்புக்கூடு: கண்ணிவெடிகளை அகற்றும் குழுவினரால் மீட்பு.
»  புத்தூர் இராணுவ காவலரணுக்கு அருகில் இளம் பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு! கொலையில் இராணுவத்திற்கும் தொடர்பு?
» யோகாவில் கலக்கும் செல்லப்பிராணிகள்....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum