TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


4 லட்சம் டாலர் சம்பளம்-1 லட்சம் டாலர் பயணப்படி: ஒபாமாவின் அதிபர் வாழ்க்கை

Go down

4 லட்சம் டாலர் சம்பளம்-1 லட்சம் டாலர் பயணப்படி: ஒபாமாவின் அதிபர் வாழ்க்கை Empty 4 லட்சம் டாலர் சம்பளம்-1 லட்சம் டாலர் பயணப்படி: ஒபாமாவின் அதிபர் வாழ்க்கை

Post by ஜனனி Sun Jan 25, 2015 7:24 am

4 லட்சம் டாலர் சம்பளம்-1 லட்சம் டாலர் பயணப்படி: ஒபாமாவின் அதிபர் வாழ்க்கை 10917402_762938710457723_2516776540383240400_n
பராக் ஒபாமாவின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும், அலுவலகமாகவும் 132 அறைகள், 35 குளியல் அறைகளுடன் 18 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட வாஷிங்டன் வெள்ளை மாளிகை விளங்குகின்றது. விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக வெள்ளை மாளிகையை சுற்றியுள்ள இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர வாஷிங்டனில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ள மேரிலேண்ட் பகுதியில் கேடோக்டின் மலையில் அமைக்கப்பட்டுள்ள 'கேம்ப் டேவிட்' ஓய்வு இல்லத்திலும், 70 ஆயிரம் சதுரடி நிலப்பரப்பில் 20 படுக்கையறைகள், 35 குளியல் அறைகள் உள்பட 119 அறைகள் கொண்ட, வெள்ளை மாளிகையைவிட அளவில் பெரியதான 'ப்ளெய்ர்' இல்லத்திலும் ஒபாமா தங்கிக் கொள்ளலாம்.
தொலைதூர வெளிநாட்டு பயணங்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்திலும், குறைந்த தூரம் கொண்ட பயணங்களுக்காக உருவாக்கப்பட்ட 'மெரைன் ஒன்' ஹெலிகாப்டரிலும் அவர் பயணம் செய்யலாம். இவை இரண்டுமே 70 பேரை ஏற்றிச் செல்லும் வசதி கொண்டவை. அதிபருக்கு என 2008-ம் ஆண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட போயிங்-747 ரக விமானத்தின் 'காக் பிட்'டில் அமர்ந்திருக்கும்போது, விமானம் ஏறும்போதும் இறங்கும்போதும் எந்த மாற்றமும் உணரப்படுவதில்லை. இவ்வேளைகளில் பயணம் செய்பவர்கள் தடுமாற்றமின்றி நடந்துகூட செல்லலாம்.
ஏறும்போது, அதிபர் உபயோகிக்கும் மேஜை எதிர்விசையில் இயங்கி எப்போதுமே சம நிலையில் உள்ளது போல் இருக்கும். அவசர சிகிச்சைக்கு என தயார் நிலையில் மருத்துவ அறையும் விமானத்தினுள் உண்டு.
அதிபர் பயணம் செய்யும்போது, உள்ளே இருக்கும் லெதர் சோபாவில் எப்போதுமே 5 நாளிதழ்கள் வைக்கப்பட்டிருக்கும். பயணத்தின்போது ஈ.எஸ்.பி.என். உள்ளிட்ட செய்தி சேனல்களை பார்ப்பதில் ஒபாமா, அதிக ஆர்வம் காட்டுகின்றார்.
நாட்டு மக்களிடையே விமானத்தில் இருந்தபடியே பேசுவதற்கு வசதியாக, அனைத்து நவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்பமும் செய்யப்பட்டுள்ளது. அதிபர் பயணிக்கும்போது, விமானிகளிடமிருந்து எந்த அறிவிப்பும் ஒலிபரப்பப்பட மாட்டாது. அதிபரின் மரணத்திற்கு பின்னர் அவரது சவப்பெட்டியை விமானத்தில் கொண்டு செல்ல நேர்ந்தால், அதற்கேற்ப உள்ளே இருக்கும் பொருட்களை மாற்றம் செய்ய முடியும். விமானத்தின் நடுப்பகுதியில், அதிபரின் சவப்பெட்டியை ஏற்றி, இறக்கும் அளவிற்கு பெரிய கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிபரின் சாலைவழி பயணத்துக்கென 'கெடிலாக் ஒன்' என்றழைக்கப்படும் சிறப்பு கார் உபயோகிக்கப்படுகிறது. நவீன தொலை தொடர்பு சாதனங்கள், தீயணைப்பு கருவி, ஆக்ஸிஜன் செலுத்தும் கருவி போன்ற வசதிகள் இந்த காரினுள் உள்ளன. டயர் பஞ்சரான நிலையிலும் நிற்காமல் ஓடும் வகையில், இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணிக்கு கண் விழிக்கும் ஒபாமா, 7.30 மணிக்கு 'ஜிம்'மில் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார். குளியலுக்குப் பின், காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு எல்லா நாளிதழ்களையும் புரட்டி, நிகழ்வுகளை அறிந்துக் கொள்கிறார்.
லிப்ட் வழியாக முட்டை வடிவ அலுவலகத்திற்கு (ஓவல் ஆஃபீஸ்) வந்து சேரும் ஒபாமா, பாதுகாப்பு தொடர்பான செய்திகளை முதலில் அறிந்துக் கொள்கிறார். பதவியேற்ற ஆரம்ப நாட்களில் ரகசிய செய்திகளை கேட்டு ஆச்சரியமடைந்த அவர், இப்போதெல்லாம் முன்னர் போல் ஆச்சரியத்தை வெளிப்படுத்துவதில்லை.
வாஷிங்டனில் இருக்கும்போது அரைநாள் பொழுதை தனது அலுவலகத்தின் உள்ளேயே செலவிடுகிறார். முதன்முறையாக முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்-ஷை சந்திக்க இந்த அலுவலகத்தினுள் நுழைந்த அவர், இரண்டாம் முறையாக, அதிபராக பதவியேற்ற பின், தனது முதல் பணி நாளின்போதுதான் மீண்டும் இந்த அலுவலகத்திற்குள் வந்தார்.
அவர் பதவியேற்ற பிறகு ஜார்ஜ் புஷ் காலத்தில் வைக்கப்பட்டிருந்த 'ஆயில் பெயிண்டிங்' படங்களை எல்லாம் அகற்றி விட்டு, தன் ரசனைக்கேற்ப அலுவலகத்தில் மெதுமெதுவாக சில மாற்றங்களை செய்தார். அவர் பதவியேற்ற வேளையில் அமெரிக்க பொருளாதாரம் மிகவும் நலிவடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இரவு 10 மணிக்கு மேல் நள்ளிரவு வரை உள்ள நேரத்தை தனது குடும்பத்தாருடன் கழிக்கும் ஒபாமா, பின்னிரவு 1 மணியளவில் தூங்குகிறார். 6 மணி நேர உறக்கத்திற்கு பின்னர், மீண்டும் மறுநாளுக்கான அலுவல்கள் காலை 7 மணியில் இருந்து தொடங்குகின்றன.
உறங்கும்போது, அவரை எழுப்பி யாரும், எந்த தகவலும் சொல்வதில்லை. அவசர தகவல்கள் ஏதுமிருப்பின், அவரது முதல் நிலை உதவியாளர்களுக்கு தெரிவிக்கப்படும். சூழ்நிலைக்கேற்ப அவர்களே முடிவெடுப்பார்கள்.
உறக்கத்தில் இருந்த ஒபாமாவை, அவரது உதவியாளர்கள் ஒரேயொரு முறை மட்டும், ஒரு முக்கிய தகவலை கூறுவதற்காக எழுப்பியுள்ளனர்.
2009-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9ம் தேதி, அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை உதவியாளர்கள் அவருக்கு தெரிவித்தனர். இதில் ஏதோ குறும்புத்தனம் உள்ளது என அவர் முதலில் கருதியதாக தெரிகிறது.
ஒபாமா அதிகமாக பேசும் பழக்கம் இல்லாதவர். அவரது பேச்சுக்கள் ரத்தின சுருக்கமாக அமைந்திருக்கும். அடுத்தவர்களை பேசவிட்டு, அதிலிருக்கும் நல்ல கருத்துகளை தேர்வு செய்து கொள்வார். அவருடன் சரிசமமாக அமர்ந்து பேச வாய்ப்பில்லாத இரண்டாம் நிலை அதிகாரிகளின் கருத்துகளையும் அவர் கவனமாக கேட்பதுண்டு.
பல்வேறு சாதக-பாதகங்களை சீராய்ந்து முடிவெடுப்பதையே அவர் அதிகம் விரும்புகிறார்.
வெள்ளை மாளிகையில் உள்ள 'ட்ருமேன் பால்கனி', தெற்கே உள்ள பசுமையான புல்வெளி, ஜெஃபர்ஸன் நினைவகத்தின் எதிரே உள்ள வாஷிங்டன் நினைவிடம் ஆகியவை ஒபாமாவுக்கு மிகவும் பிடித்தமான சில இடங்கள்.
அமெரிக்க அதிபருக்கு சம்பளமாக ஆண்டுக்கு 4 லட்சம் டாலர்கள் வழங்கப்படுகின்றது. மேலும் பயணப்படிக்கென 1 லட்சம் டாலர்களும், அலுவலக விழாக்களுக்கென 19 ஆயிரம் டாலர்களும் உண்டு. சம்பள பணத்திற்கு மட்டும் வரிப்பிடித்தம் செய்யப்படுகின்றது. மற்ற படிகளுக்கு வரி கிடையாது.
2008-மார்ச் மாத நிலவரத்தின்படி, முன்னாள் அதிபர்களுக்கு ஆண்டுதோறும் ஓய்வூதியமாக 1 லட்சத்து 91 ஆயிரத்து 300 டாலர்கள் தரப்படுகின்றது. அவர்களின் அலுவலகத்திற்கான இடமும், ஊழியர்களுக்கான சம்பளமும், அலுவலக செலவினங்களுக்கான நிதியும், பயணப்படியும் அமெரிக்க அரசு வழங்குகின்றது.
2003-ஆம் ஆண்டிலிருந்து, அதிபரின் பாதுகாப்பு பணிக்கு அமெரிக்க ரகசிய போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் பாதுகாப்பையும் இவர்கள் தான் நிர்வகித்து வருகின்றனர்.
என்ன தான்... கை நிறைய சம்பளம், வெள்ளை மாளிகை வாசம் என்றிருந்தாலும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 500 கொலை மிரட்டல்களை அமெரிக்க அதிபர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum