TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சைரா கான் - தயாநிதி மாறன்

Go down

சைரா கான் - தயாநிதி மாறன்  Empty சைரா கான் - தயாநிதி மாறன்

Post by மாலதி Sat Jan 24, 2015 6:55 am

சைரா கான் - தயாநிதி மாறன்
சைரா கான் - தயாநிதி மாறன்  10934100_10152535456582377_1321635410518701988_o
கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் ஒன்றை எண்ணிப் பார்க்கிறேன்.
தனது 22 வது வயதில், நார்வே நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக சைரா கான் என்கிற பெண்மணி தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் பங்களாதேசை பூர்வீகமாகக் கொண்டவர். ஐந்து மொழிகளில் சரளமாகப் பேசக் கூடியவர். இளம் சாதனையாளரான சைர கான், சிறுபான்மை மக்களின் பிரதியாகப் பார்க்கப் பட்டவர். இளைஞர் யுவதிகளுக்கு ஒரு ரோல் மாடலாக முன்மொழியப் பட்டவர்.
அவர் ராசி பலனில் (horoscope) நம்பிக்கை உள்ளவர் போலும். தனது அலுவலகத்தில் உள்ள தொலைபேசி இணைப்பில் இருந்து ராசி பலன் கேட்க போன் செய்திருக்கிறார். இதனால் அவர் அமைச்சராகும் வாய்ப்பு பறிபோனது. இதன்காரணமாகவே மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு குறைந்து அவரது அரசியல் வாழ்வே அஸ்தமனம் ஆகி விட்டது. அப்போது அவருக்கு 29 வயது. அடுத்த தேர்தலில் கூட போட்டியிட இங்குள்ள அரசியல் சூழல் அனுமதிக்கவில்லை!!
அவர் பதவி வகித்த காலத்தில், ஒன்பது மாதங்களில் மொத்தம் 133 மணி நேரம் (700 அழைப்புகள்) பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு. அதற்கான கட்டணத்தை பொதுமக்கள் பணத்தில் இருந்து செலுத்த முடியாது. அவரே தன் சொந்தச் செலவில் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இச்செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியானது!!
இன்று ஒரு விவாத நிகழ்ச்சி பார்த்தேன்...
நம் நாட்டின் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தன் அதிகாரத்தை பயன்படுத்தி 320 தொலைபேசி இணைப்புகளைப் பெற்று , சாலையைத் தோண்டி தடம் பதித்து அலுவலகத்தில் கொண்டு போயி இணைத்து, அதிலிருந்து லட்சக் கணக்கான அழைப்புகளை செய்திருக்கிறார். இங்கே 320 இணைப்புகள் என்பது 320 தொலைபேசிகள் அல்ல. 320 கண்ணாடி இழை தடங்கள்.
தலைமுடி பருமனுள்ள ஒரு கண்ணாடி இழை வழியாக ஒரே சமயத்தில் இரண்டாயிரம் இருவழி உரையாடலை பரிமாறிக் கொள்ள இயலும். அப்படியானால் கணக்குப் போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். ஆயினும் இதில் நானூறு கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என ஆதாரங்கள் சமர்பிக்கப் பட்டுள்ளன. இத்தனைக்கும் இக்காரியத்தைச் செய்த அமைச்சர் கோடிக்கணக்கான வருவாய் ஈட்டும் சன் குழுமத்தின் அதிபதி.
இன்றைய விவாதத்தில், இந்த திருட்டுப் பயலுகளுக்கு அதரவாக பேசுகிற ஒருவன், அமைச்சருக்கு இலவச தொலைபேசி அரசு வழங்குகிறது. அதில் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் என சட்டத்தில் இடம் உள்ளது என்கிறான். இது எதிர்கட்சிகளின் அரசியல் காழ்ப்பு என்கிறான். மக்கள் வரிப்பணத்தை, அளவற்ற முறையில் தன் சொந்த அலுவலுக்காக பயன்படுதவதை வக்காலத்து வாங்குவதற்கு இவனுக்கு ஒரு வக்கீல் பட்டம் வேறு!!
ஒரு அமைச்சர் ஒரு இணைப்பில் எத்தனை அழைப்புகள் வேண்டுமானால் செய்துகொள்ளலாம். அது அரசு வழங்கும் சலுகை. ஆனால் முன்னூறு இணைப்புகள் வைத்துகொண்டு கோடிக்கனான இலவச அழைப்புகளை செய்வது திருட்டுத்தனம். 400 கோடி அரசு இழப்பு என்பது வரி செலுத்தும் மக்களிடம் திருடிய பணம்! 400 கோடி என்பது தோராயமான கணக்கீடு, இன்னும் ஆழமாக விசாரித்தால் அரசு இழப்பு இதைவிட அதிகம் இருக்கக் கூடும் என்கிறார் பிஎஸ்என்எல் அதிகாரி.
130 மணி நேரம் தொலைபேசி பயன்படுத்தியதால், தன் சொந்த முயற்சியில் சிறுகச் செதுக்கிய தன் அரசியல் வாழ்வை இழந்த சைரா கான் எங்கே ...
320 இணைப்புகளில் 400 கோடி இழப்பை ஏற்படுத்திய கோடீசுவரன் மாறன் எங்கே!
அரசியல் களத்தில் தொடர்ந்து இயங்க முடிகிறதென்றால், அதை ஆதரித்து வியாக்யான விளக்கங்களை கொடுப்பவர்கள், அதைக் கேட்கிற மக்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் அங்கம் வகிக்கும் நாடு எத்தகைய நாடாக இருக்கும்? அந்நாட்டின் வருங்கால சந்ததிகளின் நிலை என்னவாக இருக்கும்?
காரிஉமிழ வேண்டும் போல் இல்லையா? உங்களுக்கு எப்படி இருக்கிறதோ தெரியாது. இவைகளையெல்லாம் பார்க்கையில், இத்தகைய சமூகத்தில் இருந்து நெடுந்தூரம் விலகிச் செல்லவே என் மனம் நாடுகிறது!!


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum