TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:03 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மன ஆரோக்கியத்திற்கு மாடித்தோட்டம்; மானியம் தருது அரசு!

Go down

மன ஆரோக்கியத்திற்கு மாடித்தோட்டம்; மானியம் தருது அரசு!  Empty மன ஆரோக்கியத்திற்கு மாடித்தோட்டம்; மானியம் தருது அரசு!

Post by ஜனனி Tue Jan 20, 2015 7:15 am

வெளிநாடுகளில் ‘ஹார்ட்டிகல்ச்சர்  தெரப்பி’  ( Horticultural therapy ) என்ற முறை பிரபலமாகி வருகிறது. இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டத்தில் தினமும் சில மணி நேரங்கள் செல விட்டால் உடலும், உள்ளமும் உற்சாகம் அடையும் என்று கண்டுப்பிடித்துள்ளார்கள்.

நாகரிகம் என்ற பெயரில், இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்துவிட்டோம்.  இதனால், நமக்கும் செடி, கொடிகளுக்குமான தொடர்புகள் அறுந்துவிட்டன.
மன ஆரோக்கியத்திற்கு மாடித்தோட்டம்; மானியம் தருது அரசு!  Garden%20on%20floor%20500%201
இதன் பலனாகத்தான் மன அழுத்தம் தொடங்கி பல்வேறு வகையான நோய் சிக்கலுக்கு உள்ளாகிறோம். மருந்துகள் கொடுத்து சில நோய்களை குணப்படுத்த முடியும். சிலவற்றுக்கு மருந்து தேவைப்படாது, சூழ்நிலை மாற்றம் மூலமே அவை குணமாகும். ஆக, என்ன பாதிப்பு இருந்தாலும், தினமும் சிறிது நேரம் செடி, கொடிகளுடன் செலவிட்டால் நோய், நொடி அண்டாது என்பதுதான் ‘ஹார்ட்டி தெரப்பி’யின் ஆதாரம். 

இதை இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்துப்பார்த்தால், செடி, கொடிகளுடன் கிராமத்தில் உள்ள மனிதர்களை காட்டிலும், கான்கிரீட் காட்டில் வாழும் நகர வாசிகளுக்கு உடல் பாதிப்பு அதிகமாக இருப்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.

மன ஆரோக்கியத்திற்கு மாடித்தோட்டம்; மானியம் தருது அரசு!  Garden%20on%20floor%20500%20rightஇப்போது, உங்கள் வீட்டில் தோட்டம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தவிட்டால், அதில் என்ன வகையான செடி, கொடிகளை வளர்க்கலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அழகு செடிகளைக்காட்டிலும், காய்கறிகளும், கீரைச்செடிகளும் கூட உங்கள் உள்ளத்துக்கு உற்சாகம் அளிக்க கூடியவைதான். இப்படி காய்கறித்தோட்டம் அமைப்பதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். அதாவது, உடலுக்கும் நன்மை, காய்கறி செலவும் குறையும்.

இதை மனதில் கொண்டுதான், தமிழக அரசு மாடித்தோட்டம் அமைக்க இப்போது மானியம் கூட கொடுத்து வருகிறது. நீங்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் கூட மாடித்தோட்டம் போடலாம். ஏன் தரையில் தோட்டம் போட சொல்லாமல், மாடியில் தோட்டம் போடச் சொல்கிறார்கள் என்று கேள்வி எழுகிறதுதானே? இதற்கு முக்கிய காரணம், ஒன்று இடநெருக்கடி. மற்றொன்று தரையில் உள்ள செடி களுடன், மாடித்தோட்டத்தில் உள்ள செடிகளை ஒப்பிட்டுப்பார்த்தால், பூச்சி-நோய் தாக்குதல் சுமார் 70 % குறைவு. இதனால், காய்கறி வளர்ப்பில் அனுபவம் இல்லாதவர்கள் கூட, எளிதாக செடிகளை வளர்க்க முடியும்.

இதுகுறித்து திருவான்மியூர் உதவித் தோட்டக்கலை அலுவலர் டி.செந்தில்குமரன், சொல்கையில்,  ‘‘தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் நகர்ப்புறத் தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற பெயரில் மாடித்தோட்டம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்சமயம் சென்னை மற்றும் கோயம்புத்தூர் நகர் பகுதியில் மட்டுமே செயல்படும் இத்திட்டம், நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வீட்டின் மாடி மற்றும் பால்கனி பகுதிகளில் எளிய முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்துகிறோம். பத்து வகையான காய்கறிகளை உற்பத்தி செய்ய தேவையான 2,650 ரூபாய் மதிப்பிலான இடுபொருட்கள் அடங்கிய தளை ஒன்றினை (KIT) 50 சதவிகித மானிய விலையில் 1,325 ரூபாய்க்கு வழங்குகிறோம். ஒரு தளை மூலம் தோட்டம் அமைக்க, 150 சதுர அடி இடம் போதுமானது. அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 தளைகள் வரை வழங்கப்படுகிறது.
மன ஆரோக்கியத்திற்கு மாடித்தோட்டம்; மானியம் தருது அரசு!  Garden%20on%20floor%20500%202
ஒவ்வொரு தளையிலும் தென்னை நார்க்கழிவு கட்டி, பாலித்தீன் பை, காய்கறி விதைகள், பாலித்தீன் விரிப்பு, உயிர் உரங்கள், உயிர் பூஞ்சணக்கொல்லி, இயற்கை வேம்பு பூச்சிக்கொல்லி என்று 13 விதமான பொருட்கள் இருக்கும். மண்ணைவிட எடைகுறைந்த, அதேசமயம் நீர்ப்பிடிப்பு அதிகம் கொண்டது என்பதால்தான், தென்னை நார்க்கழிவை செடிகள் வளர்ப்பதற்கான ஊடகமாகக் கொடுக்கிறோம்.

செடிகளை வளர்க்க நாங்கள் வழங்கும் பாலித்தீன் பைகள் எடை குறைந்த மற்றும் யு.வி.கதிர்களைத் தாங் கும் திறன்கொண்டதாக இருக்கும். காய்கறி விதைகளில் கத்திரி, தக்காளி, மிளகாய், வெண்டை, கொத்த வரை, செடிஅவரை, முள்ளங்கி, சிறுகீரை, பாலக்கீரை மற்றும் கொத்தமல்லி ஆகிய விதைகள் மூன்று பருவங்களுக்கும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.

மன ஆரோக்கியத்திற்கு மாடித்தோட்டம்; மானியம் தருது அரசு!  Garden%20on%20floor%20leftஇயற்கை முறையிலான பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சணக்கொல்லிகளையே, மாடித் தோட்டங்களில் பயன்படுத்த ஆலோசனை வழங்குகிறோம்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகர மக்கள் மட்டுமே தகுதியானவர்கள்.

இருப்பிடச் சான்று நகலுடன், எங்கள் தோட்டக் கலைத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் விளக்கப்படும்.

வாடகை வீட்டில் வசிப்பவர்களும்கூட மானியம் பெற்று மாடித்தோட்டம் அமைக்கலாம் என்பது குறிப்பிடதக்கது. இணையம் மூலமும் விண்ணப்பிக்கலாம் ’’  என்றார்.

இணையதள முகவரி: http://tnhorticulture.tn.gov.in/horti/do-it-yourself-kit
தொலைபேசி: 04425554443. செல்போன்: 9841317618
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சூரிய ஒளியில் இயங்கும் ஏ.சி. பம்பு செட்டுக்கு 80% மானியம் : அரசு !
» மாடித்தோட்டம் தேடி விதை
» சமையல் கியாஸ் மானியம் ஒரே மாதத்தில் ரூ.100 குறைந்தது: மத்திய அரசு திடீர் நடவடிக்கை
» உணவுக்குக் காய்கறி… மருந்துக்கு மூலிகைகள்… மலைக்க வைக்கும் மாடித்தோட்டம்!
» ஜனவரி 1-ந்தேதி முதல் கியாஸ் மானியம் வங்கியில் போடப்படும்: வங்கி கணக்கு தொடங்காவிட்டால் மானியம் ரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum