Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொங்கல் படங்கள்... ஒரு சிறப்பு பார்வை!
Page 1 of 1
பொங்கல் படங்கள்... ஒரு சிறப்பு பார்வை!
பொங்கல் என்றாலே இனிப்பான பொங்கல், மஞ்சள், கடிக்க கரும்பு, பின் புதுப்படங்கள். இந்த முறை எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது. அஜித்தின் ‘என்னை அறிந்தால்' மற்றும் ‘ஐ’ இவ்விரு படங்களும் போட்டி போட்டுக்கொண்டு இறங்குமென நினைத்தோம். திடீரென ‘என்னை அறிந்தால்’ இறுதிக்கட்ட பணிகள் முடியவில்லை என ஒதுங்கி கொண்டது. இப்போது ரேசில் ‘ஐ’, ‘ஆம்பள’ மற்றும் எதிர்பாராத வரவாக ‘டார்லிங்’ இணைந்துள்ளது.
ஐ
இதில் இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கும் படம் ‘ஐ’. விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ளது. பொங்கல் சிறப்பாக திரைக்கு வரவிருப்பதாக இருந்து இடைக்கால தடை என சில காரணங்களால் படம் வெளியாவதில் சற்றே சந்தேகம் தலைதூக்கி, ஒரு வழியாக இப்போது பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இந்த படத்திற்காக விக்ரம் தனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். ஷங்கரின் பிரமாண்ட காட்சி அமைப்பும், மெனக்கெடலும் டீஸர் மற்றும் டிரெய்லரிலேயே இரு வருடங்களுக்கும் மேலான உழைப்பை எடுத்துக்காட்டும் அளவிற்கு பிரமிப்பை கொடுத்துள்ளது.
தீபாவளி அன்றே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு இறுதிக்கட்ட வேலைகள் முடிவடையாத காரணத்தால் படம் தள்ளிப்போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. படத்தை பார்த்த சென்சார் தரப்பு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். விரைவில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது ’ஐ’, சுமார் 3000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் 650க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் 3 மணி நேரம் 8 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகி உள்ளதாம். இதற்கு முன்பு வெளியான ‘கத்தி’, 'லிங்கா’ படங்களும் இதே பாணியில் 3 மணி நேரம் இருந்து, பிறகு நீளம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் படம் என்பதால் படத்தின் கதைக்களமும் , பிரமாண்டமும் 3 மணி நேரத்தை சமாளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் 3 மணி நேரம் 8 நிமிடங்கள் என்பது கண்டிப்பாக மிக நீளபடம் என்பதால் முதல் இரு தினங்களில் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்குத்தான் முழுமையான படத்தை பார்க்கும் வாய்ப்பு இருக்கும். ஒருவேளை நீளம் கருதி ஓரிரு நாட்களில் படத்தை குறைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இப்போதெல்லாம் எப்பேற்பட்ட படமாயினும் 2.30 மணிநேர படங்களையே நீளம் என மக்கள் கருதத் துவங்கியுள்ளதும் இதற்கு ஒரு காரணம். படத்தின் கதை, இதுவாக இருக்கும், அதுவாக இருக்கும் என பலரும் பலவாறு தெரிவித்தாலும், ஷங்கர் என்றால் மிகச் சாதரண கருப்பு பணம் என்ற கதையையே வித்யாச, வித்யாசமான காட்சியமைப்பு, பிரமாண்டம் என மக்களை சீட்டில் கட்டி போடும் அளவிற்கு கை தேர்ந்தவர். எனவே, இந்த படத்திற்கும் இப்போது வரை இதுதான் கதை என கணிக்க முடியாததாகவே இருக்கிறது. ஒரு படத்திற்காக ரசிகர்கள் இரண்டு வருடங்களுக்கும் மேல் காத்திருந்தது மிகச் சில படங்களுக்காகவே இருக்கும். அதில் ‘ஐ’ நிச்சயம் இப்போது முதல் இடம் தான்.
ஆம்பள
பொங்கல் ரேசில் அடுத்து ‘ஆம்பள’. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், வைபவ், சந்தானம், சதீஷ், கிரண், ஐஸ்வர்யா என ஒரு நடிகர்கள் பட்டாளமே கலக்கியுள்ளனர். சுருக்கமாக சொன்னால் பொங்கலுக்கு ஏத்த படம் என்றும் சொல்லலாம். ஏனென்றால் சுந்தர்.சி என்றாலே காமெடிக்கும், கலகலப்புக்கும் பஞ்சம் இருக்காது. ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு படவேலைகளை ஆரம்பிக்கும் விஷால், இந்த படத்தையும் மூன்று மாதங்களில் விரட்டி முடித்துள்ளார். போலீஸ் விஷால், அவருக்கு தம்பிகளாக வைபவ், சதீஷ். அப்பாவாக பிரபு. கட்டினால் அத்தை பெண்களைத்தான் கட்ட வேண்டும் என கட்டளை போடுகிறார். பிறகு என்ன நிகழ்கிறது என்பதே கதை.
கிராமத்திற்கு செல்லும் விஷால், அங்கே போலீஸாக என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வியையும் சற்றே கிளப்புகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டில் விஷால் பேசியபோது ''முதலில் தலைப்பு பற்றி ஒரு பயம் வந்தது. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது எனக்கு இன்னொரு பயம் இருந்தது. ஏற்கனவே சுந்தர்.சியுடன் இணைந்து நடித்த 'மத கஜ ராஜா' படம் இன்னமும் வெளிவரவில்லை. சினிமாவில் செண்டிமெண்ட் அதிகம். அதனால் பலரும், 'ஏற்கெனவே இப்படி இருக்கும் போது மறுபடியும் சுந்தர்.சியுடன் படம் பண்ணப்போறே?' எனக் கேட்டனர். இருந்தாலும் நான் தெளிவான முடிவில் இருந்தேன். இந்த 'ஆம்பள' லைன் முன்பே சொல்லப்பட்டதுதான்.
சுந்தர்.சிக்கும், எனக்குமான உறவு நன்றாக இருக்கிறது. அது ஒரு சொத்து போன்றது. செப்டம்பர் 20ல் தொடங்கிய படம் டிசம்பர் 26ல் தயாராகி விட்டது. மூன்றே மாதத்தில் முழுப்படமும் முடித்தோம். எல்லாரையும் விரட்டி, விரட்டி வேலை வாங்கினோம். பலரும் எனக்காக கஷ்டப்பட்டு உழைத்தார்கள். நெருக்கடியில் பதற்றத்துடனும், டென்ஷனுடனும் உழைத்திருக்கிறார்கள். இப்படி சிரமப்படுத்தி கஷ்டப்படுத்துவது இதுவே கடைசியாக இருக்கட்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இனியும் ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு இப்படிச் செய்வது நல்லதல்ல. ஆனாலும் சுந்தர்.சி சார் சீக்கிரம் முடித்தாலும், தரமாகவும் முடித்திருக்கிறார்.
படம் முடிந்துதான் விடுமுறைப் பயணம் போவார்கள். இந்தப் படமே ஜாலியான ஹாலிடே அனுபவமாக இருந்தது. டைரக்டர் அந்த அளவுக்கு டென்ஷன் இல்லாமல் எடுத்தார். இந்தப் படத்துக்கு இசையமைக்க மெட்டுப்போட 2500 ரூபாய்தான் செலவு. ஆர்.ஏ.புரத்தில் தங்கி இதை ஹிப் ஹாப் தமிழா செய்தார். பாங்காக், ஸ்பெயின் எல்லாம் போகவில்லை. பஜ்ஜி, டீ செலவுதான் பெரிய செலவு. இதை வெளியிடும் 'வி' மியூசிக்கில் இதன் 6 பாடல்களும் பெரிய அளவில் வெற்றிபெறும்'' என தனது கருத்துகளை பதிவு செய்தார்.
மேலும், 'என்ன மச்சான் பெரிய படங்கள் வருகிறதே' என தான் கேட்டதற்கு, ‘எவனா இருந்தாலும் வெட்டுவேன்’ என விஷால் பதிலளித்ததாக ஆர்யா கூறியுள்ளார். விஷால் இந்த பொங்கலில் வசூல் கரும்பை வெட்டுவாரா என்பது இன்னும் இரு தினங்களில் தெரிந்துவிடும்.
டார்லிங்
‘டார்லிங்’. தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிரேம கதா சித்ரம்’ படத்தின் ரீமேக். பொங்கல் ரேசில் திடீரென குதித்த படம். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ் பேசும்போது ''என் தாடியை பார்த்துதான் இப்பட வாய்ப்பு வந்தது என கூறியுள்ளார். அவர் பேசுகையில், 'பென்சில்' படம் 3 மாதங்களாக படப்பிடிப்பு இல்லாததால் சலித்து தாடி விட்டிருந்தேன். என் தாடியைப் பார்த்து இப்பட வாய்ப்பு வந்தது' என பதிவு செய்தார்.
நிக்கி கல்ராணி, ஸ்ருஷ்டி நடிக்கும் இப்படத்தில் நிக்கி பேயாக மிரட்ட இருக்கிறார். ‘டார்லிங்' ட்ரெய்லரை பார்த்து வாழ்த்தி ஏ.ஆர்.ரகுமான் ட்வீட் செய்ததில் இந்திய அளவில் ட்ரண்டில் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், படத்தில் ராஜேந்திரனிடம் பேய் ‘ஐயம் கம்மிங் ஃபார் யூ’ என கூற ‘ஐயம் வெயிட்டிங்’ என ‘துப்பாக்கி’ விஜய் டயலாக்குடன் பதில் சொல்ல என இப்போதே டி.வி.க்களில் ’ஐ’, ‘ஆம்பள’ பட ப்ரமோஷன்களை காட்டிலும் பட்டையை கிளப்பி வருகிறது.
சாம் ஆண்டன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமாக உள்ள படம் வசூலிலும் மை ‘டார்லிங்’ என சொல்ல வைக்குமா என பொருத்திருந்து பார்ப்போம்.
இந்த பொங்கலுக்கு ஆறேழு படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்து, மூன்று படங்களாக குறைந்துள்ளது. இந்த மூன்றில் பொங்கல் விருந்து படைக்கப் போவது எந்த படம் என்பது இதோ இன்னும் இரு தினங்களில் தெரிந்துவிடும்.
-ஷாலினி நியூட்டன்

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» பொங்கல் ரேசிலிருந்து விலகும் படங்கள்!
» ஆதார் அடையாள அட்டை எண் : ஒரு சிறப்பு பார்வை
» பொங்கல் படங்கள் – இதான் ஃபைனல் லிஸ்ட்!
» பொங்கல் படங்கள் : ஒரு முன்னோட்ட பார்வை!
» ஹைடெக் சாமியார் நித்யானந்தாவின் கார்: சிறப்பு பார்வை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum