Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஃபேஸ்புக்: செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்?!
4 posters
Page 1 of 1
ஃபேஸ்புக்: செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்?!
எனக்குத் தெரிஞ்சி இதுவரைக்கும், “ஆடை
இல்லாதவன் அரை மனிதன்” அப்படீன்னுதான் சொல்லிக்கிட்டிருக்காங்க. ஆனா,
இனிமே “ஃபேஸ்புக் பக்கமில்லாதவன் ஃபேஸே இல்லாதவன்”னு (அதாங்க, முகமே
இல்லாதவன் அப்படீன்னு) சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கு!
wikimedia: by Maxo
அட நான் ஒன்னும் சும்மா சொல்லலீங்க,
உலகம் போல போற போக்கு என்னை அப்படிச் சொல்ல வைக்குது! ஆமாங்க, அந்த
அளவுக்கு ஃபேஸ்புக் தளம், ஒவ்வொருவரோட அன்றாட வாழ்க்கையில அப்படியே
பின்னிப் பிணைஞ்சு இருக்குன்னா பார்த்துக்கங்களேன்! அப்படிப்பட்ட
ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்துவதில் ஏற்படும் சில/பல சிக்கல்கள் குறித்து
சில இடுகைகளை மேலிருப்பானில் நீங்கள் படித்திருக்கக்கூடும்!
ஃபேஸ்புக் தளத்தினால் மக்களுக்கு
ஏற்படும் சிக்கல்கள் பெரும்பாலும், ஒருவர் தன் புகைப்படம், முகவரி,
பணியிடம் தொடர்பான விவரங்கள், பொன்ற பல்வேறு விதமான சுயவிவரங்களை
ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துகொள்வதால், அதை தங்கள் சுயநலத்துக்காகவோ,
விளையாட்டாகவோ சில விஷமிகள் மாற்றி/திரித்துவிடுவது, மற்றும் விவரங்களைக்
கொண்டு சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு சில்மிஷங்கள் செய்வது போன்ற பல
சிக்கல்களை ஃபேஸ்புக் பயனாளிகள் சந்திக்கக்கூடும்!
இப்படி நிறைய பிரச்சினைகள்
இருக்குங்கறதுக்காக, ஒட்டுமொத்தமா ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தாமல்
இருந்துவிடுவது நல்லது என்றோ, ஃபேஸ்புக்கினால் கிடைக்கும் சில நல்ல
விஷயங்களை அனுபவிக்காமல் விட்டுவிடவேண்டும் என்றோ சொல்ல முடியாது. ஆனால்,
ஃபேஸ்புக்கை பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துகொண்டால்
மட்டுமே போதுமானது! அதைப்பற்றிய சில நுணுக்கங்களை அலசத்தான் இந்தப்
பதிவு…..
ஃபேஸ்புக்கில் செய்யக்கூடாத 7 தவறுகள்!
ஃபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக
பயன்படுத்த, தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்/செயல்களை
பட்டியலிட்டிருக்கிறார்கள் சில வலைப்பின்னல் துறை வல்லுனர்கள். அவை….
1. சுலபமான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்துவது (Using a Weak Password)
பெயர்கள்,
களஞ்சியத்தில் உள்ள சில சுலபமான வார்த்தைகள், அவற்றுக்கிடையில் எண்களை
சேர்த்து பயன்படுத்துவது போன்றவற்றை உங்கள் கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை
தவிர்த்தல் அவசியம்! அதற்க்கு பதிலாக, பெரிய மற்றும் சிறிய
எழுத்துக்களுடன் (upper- and lower-case letters) எண்கள் மற்றும்
குறியீடுகளை (symbols) கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் உறுதியானது!
ஒரு கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக் கொண்டிருத்தல் நலம். மற்றுமொரு
வழி, ஒரு வார்த்தையின் நடுவில் எண்கள்/குறியீடுகளை சேர்த்து கடவுச்சொல்லாக
பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. உதாரணமாக, “houses” என்னும் வார்த்தையை hO27usEs என்று மாற்றிப் பயன்படுத்துவது!
2. உங்களின் முழு பிறந்த தேதியை வெளிப்படையாக குறிப்பிடுவது (Leaving Your Full Birth Date in Your Profile)
இணையத்தில் உலவும்,
அடையாளத் திருடர்களுக்கு (identity thieves), ஒருவரின் பிறந்ததேதிதான்
முதன்மையான இலக்கு. அதைத் திருடி என்ன செய்வாங்கன்னு கேக்குறீங்களா? உங்க
பிறந்ததேதியை வச்சி, உங்களின் மேலதிக தகவல்களை சேகரித்து, உங்க வங்கி
கணக்கு/க்ரெடிட் கார்டு கணக்கு போன்றவற்றை கடத்தக் கூடும்?!
அய்யய்யோ…அப்படீன்றீங்களா? சரி சரி, உடனே உங்க ஃபேஸ்புக் கணக்கை திறந்து,
profile பக்கத்துக்கு போய், Info tab-அ கிளிக் பண்ணி, Basic Information
பகுதியில வெறும் பிறந்த தேதி மட்டும்/மாதம் மட்டும் இல்லைன்னா
பிறந்ததேதியே குறிப்பிடாம விட்டுடுங்க. சரிங்களா?!.
3. சுய பாதுகாப்பு கட்டுப்பாடு வாய்ப்புகளை அலட்சியப்படுத்துவது (Overlooking Useful Privacy Controls)
உங்க ஃபேஸ்புக்
பக்கத்துல, மத்தவங்களுக்கு தொடர்பு வழங்க நண்பர்கள் மட்டும் (only
friends) நண்பர்களின் நண்பர்கள் மட்டும் (friends of friends) அல்லது
நீங்கள் மட்டும் (yourself) இப்படி பல கட்டுப்பாடுகள் வச்சிக்கலாம்.
இந்தப் பக்கத்துல, உங்க படங்கள், பிறந்த தேதி, மத பார்வை மற்றும் குடும்ப
விவரங்கள், இது எல்லாத்தையும் மேற்குறிப்பிட்டபடி ஒரு வகையான
கட்டுப்பாட்டுக்குள் வைங்க! மிக முக்கியமா, உங்க தொலைபேசி எண், முகவரி
போன்ற தொடர்பு விவரங்கள மத்தவங்க பார்க்குற மாதிரி வைக்காதீங்க!!
4. உங்களின் குழந்தையின் பெயரை புகைப்பட தலைப்புகளாக பயன்படுத்துவது (Posting Your Child’s Name in a Caption)
உங்க குழந்தைங்க
பெயரை படங்களின் தலைப்புகளாகவோ, குறியீடுகளாகவோ (photo tags)
பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வேறு யாராவது உங்க குழந்தைங்க பெயரை
பயன்படுத்தியிருந்தா, Remove Tag என்னும் தொடர்பை அழுத்தி நீக்கிடுங்க
இல்லைன்னா அவங்கள நீக்கச் சொல்லுங்க!
5. நான் வெளியூருக்குச் செல்கிறேன் என்று குறிப்பிடுவது (Mentioning That You’ll Be Away From Home)
அதாவது,
வெளியூருக்குச் செல்வதாயிருந்தா, “no one’s home” அப்படீங்கிற மாதிரியான
விஷயங்கள எழுதுவதை தவிர்த்திடுங்க! நீங்க திரும்பி வந்து உங்க சுற்றுலா
எப்படி இருந்ததுன்னு சொல்லிக்கலாம். அதேமாதிரி சுற்றுலா செல்லும் தேதியை
மறந்தும் குறிப்பிடாதீங்க!!
6. கூகுள் போன்ற தேடியந்திரங்களின் பார்வையில் இருப்பது (Letting Search Engines Find You)
பரிச்சயமில்லாதவர்கள்
உங்கள் ஃபேஸ்புக் பக்கங்களை, கூகுள் போன்ற தேடியந்திரங்கள் மூலம் அடைவதை
தவிர்க்க, ஃபேஸ்புக்கின் சுயபாதுகாப்பு பகுதிக்குள் இருக்கும் தேடுதல்
பகுதியில் (Search section of Facebook’s privacy controls) நண்பர்கள்
மட்டும் என்பதை தேர்ந்தெடுங்கள் (select Only Friends for Facebook search
results). முக்கியமா பொதுத் தேடுதல் முடிவகள் என்பதை தேர்ந்தெடுக்காமல்
இருக்கிறதா என்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்! (Be sure the box for public
search results isn’t checked)
7. மேற்பார்வையில்லாமல் குழந்தைகளை ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்த அனுமதிப்பது (Permitting Youngsters to Use Facebook Unsupervised)
இதுவரைக்கும்
பார்த்ததிலேயே ரொம்ப முக்கியமானது இதுதான்! அதாவது, ஃபேஸ்புக் பக்கம் 13
வயது மற்றும் அதற்க்கு மேற்பட்டவர்கள் மட்டுமே ஃபேஸ்புக்கை
பயன்படுத்தவேண்டும் என்று விதிமுறைப்படுத்தியிருந்தாலும், 13 வயதுக்கு
குறைவானவர்களும் பயன்படுத்துகிறார்களாம். இவ்வயதுக்குட்பட்ட உங்க
குழந்தை/குழந்தைகளும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களை
மேற்பார்வையிட மிகவும் சுலபமான வழி, அவர்களின் நண்பர்களில் ஒருவராகச்
சேர்ந்து கொண்டு, அவர்களின் தொடர்பு மின்னஞ்சல் பகுதியில் உங்கள்
மின்னஞ்சலைக் கொடுத்து, அவர்களுக்கு வரும் தகவல்கள் உங்களுக்கு
வரும்படியாக செய்துகொள்வதுதான்!
“குழந்தைகள் தங்கள்
ஃபேஸ்புக் பக்கத்தில் தாங்கள் எழுதும் சிலவற்றை பெரிதாக
எடுத்துக்கொள்வதில்லை” என்கிறார், இணையதளத்தின் குற்றப்புகார் மைய
மேற்பார்வையாளர் சார்லஸ் பேவலிட்ஸ் (Charles Pavelites, a supervisory
special agent at the Internet Crime Complaint Center). உதாரணமாக, “அம்மா
வர நேரமாச்சு, நான் சீக்கிரம் வீட்டைச் சுத்தப்படுத்தியாகனும்” அப்படீன்னு
எழுதும் ஒரு குழந்தைக்கு, தினமும் தம் பெற்றோர் அலுவலகம் செல்லும் அல்லது
வீடு திரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, தங்களையறியாமலேயே ஃபேஸ்புக்
தளத்தில் குறிப்பிடுகிறார்கள் என்று உணர்வதில்லை அப்படீங்கிறாரு சார்லஸ்.
இதுல இருக்குற சாதக பாதகம் என்னன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு
நெனக்கிறேன்.
இப்படி இன்னும் நிறைய விளக்கங்கள
எழுதிக்கிட்டே போகலாமுங்க. அதனால, இந்தப் பதிவுல குறிப்பிட்டிருக்கிற 7
தவறுகளை முடிஞ்ச வரைக்கும் செய்யாமப் பார்த்துக்குங்க! அப்படிச்
செஞ்சிருந்தா, உடனே உங்க ஃபேஸ்புக் பக்கத்துக்குப் போயி திருத்திடுங்க.
சரிங்களா? வேறு எதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க (எனக்குத் தெரிஞ்சா)
சொல்றேன்! இது தவிர்த்த முக்கியமான தவறுகள் எதாவது இருந்தா நீங்க
சொல்லுங்க, நானும் நம்ம வாசகர்களும் தெரிஞ்சிக்கிறோம்! நன்றி.http://padmahari.wordpress
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: ஃபேஸ்புக்: செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்?!
தேவையான் தகவலை தந்தமைக்கு நன்றி நண்பரே.
kalairaja- கணினி கவிஞன்
- Posts : 500
Join date : 09/04/2010
Re: ஃபேஸ்புக்: செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்?!
kalairaja wrote:தேவையான் தகவலை தந்தமைக்கு நன்றி நண்பரே.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஆன்ட்ராய்டு போன்களுக்காக ஃபேஸ்புக் வழங்கும் புதிய ‘ஃபேஸ்புக் ஹோம்’ வசதி!
» அந்த வெடி வெடிக்கையில் அந்த விதை முளைக்கிறது.. (சிறுகதை) வித்யாசாகர்!
» குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!
» டிக்கடி செய்யும் அலங்காரத் தவறுகள்
» கம்ப்யூட்டரில் தவிர்க்க வேண்டிய தவறுகள்
» அந்த வெடி வெடிக்கையில் அந்த விதை முளைக்கிறது.. (சிறுகதை) வித்யாசாகர்!
» குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!
» டிக்கடி செய்யும் அலங்காரத் தவறுகள்
» கம்ப்யூட்டரில் தவிர்க்க வேண்டிய தவறுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum