Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பெட்ரோல் விலையும் – ஏமாற்றப்படும் மக்களும்!
Page 1 of 1

அண்மைக்காலமாக எரிபொருட்களின் சில்லறை விலை மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளதை உணராமல், விலைக் குறைப்பு ஏற்பட்டுள்ளது என்று நம்பும் ஏற்றுக்கொள்ளும் வேடிக்கையை நாம் நாளும் எதிர் கொண்டு வருகின்றோம். பா.ச.க. நடுவண் ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு இதுவரை 10 முறை எரிபொருட்களின் சில்லறை விலை (Retail Price) குறைக்கப்பட்டுள்ளதாக நாம் நம்பவைக்கப்பட்டிருக்கின்றோம்.
உண்மையில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் இன்றைய விலையை ஒப்பிடும் பொழுது இந்தியாவில் எரிபொருட்களின் சில்லறை விலையானது மிகவும் உயர்த்தப்பட்டுள்ளது. முறையற்ற இந்த விலை உயர்வைத்தான் இந்திய எண்ணெய் நிறுவனங்களும், நடுவண் அரசும் விலைக் குறைப்பு என்று கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.
‘ஓப்பெக்’ எனப்படும் “எரிபொருள் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பே” உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் (கரட்டுநெய் / பண்படுத்தா எண்ணெய்) விலையை முடிவுசெய்யும் இடத்தில் உள்ளது. இந்தக் கூட்டமைப்பில் 7 அரபு நாடுகள் உட்பட மொத்தம் 15 நாடுகள் பங்கு வகிக்கின்றன.
இந்த அமைப்பின் விலை நிலவரப்படிக் கடந்த திசம்பர்-2013 காலக்கட்டத்தில் உலகச் சந்தையில் ஒரு பீப்பாய்க் கச்சா எண்ணெயின் விலை $107.67 என்றளவில் இருந்தது. அப்பொழுது சென்னையில் ஒரு இலிட்டர் கல்நெய் (பெட்ரோல்) விலை ரூ74.71.
தற்பொழுது திசம்பர்-2014 இல் ஒரு பீப்பாய்க் கச்சா எண்ணெயின் விலை ஏறக்குறைய $56.90 என்று வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு இலிட்டர் கல்நெய் விலை ரூ63.94. உலகச் சந்தையில் கல்நெய் விலைப் பாதியாகக் குறைந்த போதிலும் இந்தியாவில் பெரிய அளவில் மாற்றமில்லை.
கடந்த சில திங்களாக (மாதம்) உலக நாடுகள் பல ‘ஓப்பெக்’கிடம் எண்ணெய் வணிகத்தை மேற்கொள்ளாது வெளிச் சந்தையில் எண்ணெய் வணிகத்தை மேற்கொண்டு வருகின்றன.
இதனால் ஓப்பெக்கிடமிருந்து பல நாடுகள் மேற்கொண்ட கச்சா எண்ணெய்க் கொள்முதல் குறைந்தாலும், இந்தக் கூட்டமைப்புத் தொடர்ந்து சீரான எண்ணெய் உற்பத்தியை மேற்கொள்வதால் உற்பத்திக்கும் – தேவைக்கும் ஏற்பட்டுள்ள இடைவெளிக் காரணமாகக் கடந்த ஒன்றரைத் திங்களாகவே உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்புத் தொடர்ந்து குறைந்து வருகின்றது. அண்மையில் ஓப்பெக் இதையே விலை வீழ்ச்சிக்கான காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
ஓப்பெக் வெளியிடும் இந்த மாதத்திற்கான விலைக் குறியீட்டு நிலவரம்
உலகச் சந்தையின் விலையைப் பொறுத்து உள்ளூர்ச் சந்தையில் சீரான விலையை முடிவுசெய்ய வேண்டிய பொறுப்புடைய நடுவண் அரசு, தங்கள் இலாபத்திற்கு ஏற்றாற் போல விலையை முடிவு (நிர்ணயம்) செய்து கொள்ளும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே வழங்கும் சட்டத்தைக் கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்தில் இயற்றியது.
அதன் விளைவாக, உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தப் பொழுது இந்திய அரசின் இசைவுடன் (அனுமதி) போட்டிப் போட்டுக் கொண்டு உள்ளூர்ச் சந்தை விலையை உயர்த்திய இந்திய எண்ணெய் நிறுவனங்கள், தற்பொழுது உலகச் சந்தையில் எண்ணெய் விலைக் குறைந்துள்ள சூழலில் உள்ளூர் விலையைக் குறைக்க மறுத்து வருகின்றன. மாறாகக் கூடுதல் வரிகளுடன் உயர்த்தப்பட்ட விலையுடன் விற்பனையைத் தொடர்வதன் மூலம் மக்களிடம் பணத்தைச் சுரண்டித் தங்களின் ஈட்டத்தைப் (இலாபத்தை) பலமடங்குப் பெருக்கி வருகின்றனர்.
கச்சா எண்ணெய் விலையின் உலகச் சந்தை நிலவரம் இவ்வாறு பாதிக்குப் பாதியாகக் குறைந்திருக்கும் சூழலில், இந்தியாவில் எரிபொருளின் விலையை முடிவுச் செய்யும் அதிகாரத்தைப் பெற்றுள்ள எண்ணெய் நிறுவனங்கள் உலகச் சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு உள்ளூர்ச் சில்லறை விலையை இதுவரை குறைக்கவில்லை. மாறாகக் கடந்த இரண்டு திங்களில் ஒரு இலிட்டருக்கு 4 உரூபாய் வரை உற்பத்தி (கலால்) வரியை நடுவண் அரசு உயர்த்தியுள்ளது. அடிக்கும் கொள்ளையில் உனக்கு முக்கால்பங்கு, எனக்குக் கால்பங்கு என அரசு எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்துச் செயல்பட்டு வருகின்றது.
இந்திய எண்ணெய் நிறுவனங்களின் இந்த இலாப வெறிக்கு இசைந்துப் போகும் இந்திய அரசு உள்ளூர் விலையை இது வரை 10 உரூபாய் கூடக் குறைக்கவில்லை. அமெரிக்க இடாலருக்கு நிகரான இந்திய உரூபாயின் இன்றைய மதிப்பு ரூ 63. இத்திங்களில் ஒரு பீப்பாய்க் கச்சா (119 இலிட்டர்) எண்ணெய் $61 என்று விற்பனையாகிறது. இதைக் கணக்கிடும் பொழுது, ஒரு இலிட்டர்க் கச்சா எண்ணெயின் மதிப்பு இந்திய உரூபாய் 32 ஆகும். இது பின்னர்த் தூய்மைப்படுத்தப்பட்டு (சுத்திகரி) சேவை வரி, உற்பத்தி வரி, விற்பனை வரி எனச் சேர்த்துச் சராசரியாக ஒரு இலிட்டர் கல்நெய் ரூயாய் 66 என்று இன்று சில்லரை விற்பனைச் செய்யப்படுகின்றது.
இப்படிப் பகல் கொள்ளையாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கூடுதல் விலை வைத்து இலாபம் ஈட்டுகின்றனர். முதலாளிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக இந்தக் கொள்ளையைக் கட்டுப்படுத்தாது, மக்கள் நலனைப் பாதுகாக்காது இந்த உயர்த்தப்பட்ட விலைக்கு நடுவண் அரசுத் துணையாக (ஆதரவாக) இருந்து வருகின்றது.
இந்தியாவின் அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் நட்டத்தில் இயங்குகின்றன அதனால் எரிபொருட்களின் சில்லறை விலை உயர்த்தப்படுகின்றது என்று பல நேரங்களில் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் எரிபொருட்களின் விலையை உயர்த்தி விற்பதால் கடந்த நிதி ஆண்டில் இந்நிறுவனங்கள் அடைந்துள்ள கூடுதல் நிகர வருமான விவரம் கீழே:
மக்கள் வரிப்பணத்தைக் கோடிக்கணக்கான உரூபாய் செலவு செய்து ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நாம் ஒரு அரசைத் தேர்ந்தெடுப்பது, அந்த அரசு மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பொறுப்புடன் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் இந்த அரசும், அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவுச் செய்யும் எந்த ஒரு நல்ல திட்டத்தையும் நடைமுறை படுத்துவதற்குத் தயாராக இல்லை மாறாக மக்களை எவ்வாறு ஏய்ப்பது, நலத் திட்டங்கள் என்ற பெயரில் எப்படிச் சுரண்டுவது, பன்னாட்டு முதலாளிகளுக்கு எப்படி உதவுவது, அதன் மூலம் தாங்கள் எவ்வாறு பணம் சேர்ப்பது என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் காங்கிரசும், பா.ச.க.வும் முடிந்த வரை அனைத்து அரசுப் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் கொடுப்பதிலேயே குறியாகச் செயல்படுகின்றன.
மக்களின் அடிப்படைத் தேவையாக உள்ள எரிபொருட்கள் விலையை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்துகொண்டு, தங்களுக்குக் கொள்ளை வருமானம் வரும் நோக்கில் சில்லறை விலைவைத்து மக்களிடம் வழிப்பறிச் செய்வதற்கு நடுவண் அரசுத் துணையாக இருப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
எரிபொருட்ளின் விலை முடிவை நடுவண் அரசே மேற்கொள்ள வேண்டும். உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியைப் பொறுத்து உள்ளூர்ச் சில்லறை விலையை வெளிப்படைத் தன்மையுடன் அரசு முடிவு செய்ய வேண்டும். மேலும் எரிபொருட்களுக்கான கொள்முதல் விலையும், சில்லறை விற்பனை விலையும் ஒருங்கே ஒவ்வொரு எரிபொருள் விற்பனை நிலையத்திலும் விற்பனையாளர்களே வெளிப்படையாகப் பட்டியலிட்டு அதற்கேற்றபடிக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு ஒழுங்கு படுத்த வேண்டும். அதுவே உண்மையான விலைக் குறைப்பாக இருக்க முடியும்.
தனியார்மயமாக்குதல் நம் தேசத்தைப் பிறருக்குத் தாரைவார்த்து நம் மக்களைப் பிறருக்கு அடிமைகளாக மாற்றும் செயல். எனவே எரிபொருட்களில் மட்டுமின்றி மக்களின் அன்றாடத் தேவைகளை ஒவ்வொன்றாகக் கருத்தில் கொள்ளப்பட்டு நியாமான முறையில் நியாமான விலையில் அரசே நேரடியாக விற்பனைச் செய்யவேண்டும். அவ்வாறு மக்களின் தேவைகளை நிறைவுச் செய்யும் அரசே நல்லரசாக முடியும்.
ச.இளங்கோவன்
இளந்தமிழகம் இயக்கம்
பின்னிணைப்பு:
ஓப்பெக் வெளியிடும் கச்சா எண்ணெயின் கடந்த ஓராண்டிற்கான விலைக் குறியீடு:
இந்திய எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ள கடந்த ஓராண்டிற்கான உள்ளூர் சில்லறை விலை நிலவரம்:
நன்றி :விசை
உண்மையில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் இன்றைய விலையை ஒப்பிடும் பொழுது இந்தியாவில் எரிபொருட்களின் சில்லறை விலையானது மிகவும் உயர்த்தப்பட்டுள்ளது. முறையற்ற இந்த விலை உயர்வைத்தான் இந்திய எண்ணெய் நிறுவனங்களும், நடுவண் அரசும் விலைக் குறைப்பு என்று கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.
‘ஓப்பெக்’ எனப்படும் “எரிபொருள் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பே” உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் (கரட்டுநெய் / பண்படுத்தா எண்ணெய்) விலையை முடிவுசெய்யும் இடத்தில் உள்ளது. இந்தக் கூட்டமைப்பில் 7 அரபு நாடுகள் உட்பட மொத்தம் 15 நாடுகள் பங்கு வகிக்கின்றன.
இந்த அமைப்பின் விலை நிலவரப்படிக் கடந்த திசம்பர்-2013 காலக்கட்டத்தில் உலகச் சந்தையில் ஒரு பீப்பாய்க் கச்சா எண்ணெயின் விலை $107.67 என்றளவில் இருந்தது. அப்பொழுது சென்னையில் ஒரு இலிட்டர் கல்நெய் (பெட்ரோல்) விலை ரூ74.71.
தற்பொழுது திசம்பர்-2014 இல் ஒரு பீப்பாய்க் கச்சா எண்ணெயின் விலை ஏறக்குறைய $56.90 என்று வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு இலிட்டர் கல்நெய் விலை ரூ63.94. உலகச் சந்தையில் கல்நெய் விலைப் பாதியாகக் குறைந்த போதிலும் இந்தியாவில் பெரிய அளவில் மாற்றமில்லை.
திசம்பர் – 2013 | 107.67 | 74.71 |
திசம்பர் – 2014 | 61.85 | 66.05 |
இதனால் ஓப்பெக்கிடமிருந்து பல நாடுகள் மேற்கொண்ட கச்சா எண்ணெய்க் கொள்முதல் குறைந்தாலும், இந்தக் கூட்டமைப்புத் தொடர்ந்து சீரான எண்ணெய் உற்பத்தியை மேற்கொள்வதால் உற்பத்திக்கும் – தேவைக்கும் ஏற்பட்டுள்ள இடைவெளிக் காரணமாகக் கடந்த ஒன்றரைத் திங்களாகவே உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்புத் தொடர்ந்து குறைந்து வருகின்றது. அண்மையில் ஓப்பெக் இதையே விலை வீழ்ச்சிக்கான காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
ஓப்பெக் வெளியிடும் இந்த மாதத்திற்கான விலைக் குறியீட்டு நிலவரம்
உலகச் சந்தையின் விலையைப் பொறுத்து உள்ளூர்ச் சந்தையில் சீரான விலையை முடிவுசெய்ய வேண்டிய பொறுப்புடைய நடுவண் அரசு, தங்கள் இலாபத்திற்கு ஏற்றாற் போல விலையை முடிவு (நிர்ணயம்) செய்து கொள்ளும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே வழங்கும் சட்டத்தைக் கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்தில் இயற்றியது.
அதன் விளைவாக, உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தப் பொழுது இந்திய அரசின் இசைவுடன் (அனுமதி) போட்டிப் போட்டுக் கொண்டு உள்ளூர்ச் சந்தை விலையை உயர்த்திய இந்திய எண்ணெய் நிறுவனங்கள், தற்பொழுது உலகச் சந்தையில் எண்ணெய் விலைக் குறைந்துள்ள சூழலில் உள்ளூர் விலையைக் குறைக்க மறுத்து வருகின்றன. மாறாகக் கூடுதல் வரிகளுடன் உயர்த்தப்பட்ட விலையுடன் விற்பனையைத் தொடர்வதன் மூலம் மக்களிடம் பணத்தைச் சுரண்டித் தங்களின் ஈட்டத்தைப் (இலாபத்தை) பலமடங்குப் பெருக்கி வருகின்றனர்.
கச்சா எண்ணெய் விலையின் உலகச் சந்தை நிலவரம் இவ்வாறு பாதிக்குப் பாதியாகக் குறைந்திருக்கும் சூழலில், இந்தியாவில் எரிபொருளின் விலையை முடிவுச் செய்யும் அதிகாரத்தைப் பெற்றுள்ள எண்ணெய் நிறுவனங்கள் உலகச் சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு உள்ளூர்ச் சில்லறை விலையை இதுவரை குறைக்கவில்லை. மாறாகக் கடந்த இரண்டு திங்களில் ஒரு இலிட்டருக்கு 4 உரூபாய் வரை உற்பத்தி (கலால்) வரியை நடுவண் அரசு உயர்த்தியுள்ளது. அடிக்கும் கொள்ளையில் உனக்கு முக்கால்பங்கு, எனக்குக் கால்பங்கு என அரசு எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்துச் செயல்பட்டு வருகின்றது.
இந்திய எண்ணெய் நிறுவனங்களின் இந்த இலாப வெறிக்கு இசைந்துப் போகும் இந்திய அரசு உள்ளூர் விலையை இது வரை 10 உரூபாய் கூடக் குறைக்கவில்லை. அமெரிக்க இடாலருக்கு நிகரான இந்திய உரூபாயின் இன்றைய மதிப்பு ரூ 63. இத்திங்களில் ஒரு பீப்பாய்க் கச்சா (119 இலிட்டர்) எண்ணெய் $61 என்று விற்பனையாகிறது. இதைக் கணக்கிடும் பொழுது, ஒரு இலிட்டர்க் கச்சா எண்ணெயின் மதிப்பு இந்திய உரூபாய் 32 ஆகும். இது பின்னர்த் தூய்மைப்படுத்தப்பட்டு (சுத்திகரி) சேவை வரி, உற்பத்தி வரி, விற்பனை வரி எனச் சேர்த்துச் சராசரியாக ஒரு இலிட்டர் கல்நெய் ரூயாய் 66 என்று இன்று சில்லரை விற்பனைச் செய்யப்படுகின்றது.
இப்படிப் பகல் கொள்ளையாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கூடுதல் விலை வைத்து இலாபம் ஈட்டுகின்றனர். முதலாளிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக இந்தக் கொள்ளையைக் கட்டுப்படுத்தாது, மக்கள் நலனைப் பாதுகாக்காது இந்த உயர்த்தப்பட்ட விலைக்கு நடுவண் அரசுத் துணையாக (ஆதரவாக) இருந்து வருகின்றது.
இந்தியாவின் அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் நட்டத்தில் இயங்குகின்றன அதனால் எரிபொருட்களின் சில்லறை விலை உயர்த்தப்படுகின்றது என்று பல நேரங்களில் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் எரிபொருட்களின் விலையை உயர்த்தி விற்பதால் கடந்த நிதி ஆண்டில் இந்நிறுவனங்கள் அடைந்துள்ள கூடுதல் நிகர வருமான விவரம் கீழே:
ஒ.என்.ஜி.சி | ரூ 20925 கோடி | ரூ 22094 கோடி |
ரிலையன்சு | ரூ 21003 கோடி | ரூ 21984 கோடி |
இந்தியன் ஆயில் | ரூ 5005 கோடி | ரூ 7019 கோடி |
மக்களின் அடிப்படைத் தேவையாக உள்ள எரிபொருட்கள் விலையை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்துகொண்டு, தங்களுக்குக் கொள்ளை வருமானம் வரும் நோக்கில் சில்லறை விலைவைத்து மக்களிடம் வழிப்பறிச் செய்வதற்கு நடுவண் அரசுத் துணையாக இருப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
எரிபொருட்ளின் விலை முடிவை நடுவண் அரசே மேற்கொள்ள வேண்டும். உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியைப் பொறுத்து உள்ளூர்ச் சில்லறை விலையை வெளிப்படைத் தன்மையுடன் அரசு முடிவு செய்ய வேண்டும். மேலும் எரிபொருட்களுக்கான கொள்முதல் விலையும், சில்லறை விற்பனை விலையும் ஒருங்கே ஒவ்வொரு எரிபொருள் விற்பனை நிலையத்திலும் விற்பனையாளர்களே வெளிப்படையாகப் பட்டியலிட்டு அதற்கேற்றபடிக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு ஒழுங்கு படுத்த வேண்டும். அதுவே உண்மையான விலைக் குறைப்பாக இருக்க முடியும்.
தனியார்மயமாக்குதல் நம் தேசத்தைப் பிறருக்குத் தாரைவார்த்து நம் மக்களைப் பிறருக்கு அடிமைகளாக மாற்றும் செயல். எனவே எரிபொருட்களில் மட்டுமின்றி மக்களின் அன்றாடத் தேவைகளை ஒவ்வொன்றாகக் கருத்தில் கொள்ளப்பட்டு நியாமான முறையில் நியாமான விலையில் அரசே நேரடியாக விற்பனைச் செய்யவேண்டும். அவ்வாறு மக்களின் தேவைகளை நிறைவுச் செய்யும் அரசே நல்லரசாக முடியும்.
ச.இளங்கோவன்
இளந்தமிழகம் இயக்கம்
பின்னிணைப்பு:
ஓப்பெக் வெளியிடும் கச்சா எண்ணெயின் கடந்த ஓராண்டிற்கான விலைக் குறியீடு:
இந்திய எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ள கடந்த ஓராண்டிற்கான உள்ளூர் சில்லறை விலை நிலவரம்:
நன்றி :விசை
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சமையல் கியாசை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் உயர்கிறது: டீலர்களுக்கு ஆதரவாக அரசு முடிவு
» ஈரோடு மாவட்ட ஆட்சியர் மாற்றத்திற்கு மக்களும், பள்ளி மாணவர்களும் எதிர்ப்பு
» மருந்தின் விலையும் மோடியின் சதியும்
» எல்லா பொருட்கள் விலையும் உயரும் : திடுக் தகவல்
» இந்தியன் வீட்டுத்திட்டக் கனவும் இலவு காத்த வன்னி மக்களும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum