Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அமெரிக்கா சுஜாதா அசிமோவ் பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு
Page 1 of 1
அமெரிக்கா சுஜாதா அசிமோவ் பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு
ஜனவரி 02: ஐசக் அசிமோவ் எனும் அறிவியல் புனைகதை உலகின் பிதாமகர் பிறந்ததினம் இன்று...
ரஷ்யாவை பூர்வீகமாக கொண்ட யூத குடும்பத்தில் பிறந்தார் அசிமோவ். மற்ற யூதர்களைப்போல இல்லாமல் மத நம்பிக்கை இல்லாமலே இவரை பெற்றோர் வளர்த்தார்கள். அசிமோவ் பள்ளியில் படிப்பில் வெகு சுட்டி. பாதி வகுப்புகளை கட் அடித்தாலும் மதிப்பெண்களை அள்ளிவிடுவார். பைக் ஓட்டவோ,நீச்சல் அடிக்கவோ இறுதி வரை பழகிக்கொள்ளவே இல்லை. ஊசிகள், ரத்தம் ஆகியவற்றை கண்டாலும் பயம் தான் அசிமோவுக்கு.
அமெரிக்காவில் இனிப்புக்கடை நடத்திக்கொண்டு இருந்தார்கள் பெற்றோர்கள். அந்த கடையில் இதழ்கள் விற்பார்கள். அப்படி தான் அறிவியல் கதைகள் அவருக்கு அறிமுகம் ஆனது. பல்ப் இலக்கியங்களை படிக்கக்கூடாது என்று தந்தை தடை போட்டிருந்தார். "அறிவியல் பல்ப் கதைகளில் அறிவியல் என்கிற பெயர் இருக்கிறது ; அறிவு வளரும் அப்பா !" என்று சொல்லித்தான் அந்த கதைகளை படித்து ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார் அசிமோவ்
மூன்று வருடங்கள் அறிவியல் புனைகதை என்று ஓரளவிற்கு எழுதிக்கொண்டு இருந்தார் அசிமோவ். நைட்ஃபால் என்றொரு அறிவியல் புனைகதையை எழுதியது தான் திருப்பம். ஆறு சூரியன்கள் ஓயாமல் வெளிச்சத்தை பொழிந்து கொண்டிருக்கும் ஒரு கிரகத்தில் திடீரென்று இருட்டு வரப்போகிறது. அந்த இருட்டு 2049 வருடங்களுக்கு ஒரு முறை வரும் இருட்டு என்றும் அது எப்படி மக்களை பாதிக்கும் என்று சுவாரசியமாக பின்னியிருந்த அந்த கதை உலகின் மிகச்சிறந்த அறிவியல் புனைகதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
அதற்கு பிறகு அவர் எழுதிய சிறுகதைகள், நாவல்கள் எல்லாமே சக்கைப்போடு போட்டன. சூரியனில் பத்து நிமிடம் நடந்தால் உடனே இவரின் உடம்பு அரிக்கும் அதனால் அவரின் கதைகளில் பெரும்பாலும் செயற்கை வெளிச்சம் பற்றிய
குறிப்புகளே வரும். இன்றைக்கு மிகப்புகழ் பெற்றிருக்கும் ரோபோக்களுக்கான மூன்று விதிகளை தன்னுடைய கதைகளின் மூலம் வகுத்தது அவரே. ரோபோக்கள் தன்னை உருவக்கையவரையே கொல்ல முயல்வது என்கிற கதைக்கரு தன்னை தொடர்ந்து ஈர்க்கிறது என்று குறித்தார் அசிமோவ். அவரின் ரோபோ கதைகள் ஐ ரோபோட் தொகுப்பாக வெளிவந்தது. ரோபோடிக்ஸ் என்கிற வார்த்தையே அவர் தந்தது தான் !
பைபிளுக்கு ஒரு வழிகாட்டி, ஷேக்ஸ்பியரை படிக்க ஒரு வழிகாட்டி, உலக வரலாறு சார்ந்த நூல்கள்,தன்னுடைய அறிவியல் துறை சார்ந்த நூல்கள் என்று எதையாவது எழுதிக்கொண்டே இருந்தார் அசிமோவ். தானே ஒரு பத்திரிக்கையை தொடங்கி வாசகர்களின் அறிவியல் கேள்விகளுக்கு அவரே பதில் சொல்கிற பணியை உற்சாகமாக
செய்தார். தத்துவத்தை தவிர அவர் தொடாத துறைகளே இல்லை என்கிற அளவுக்கு எழுதினார். ஒரு நிமிஷத்துக்கு தொண்ணூறு வார்த்தைகள் என்கிற வேகத்தில் அவரின் நூல்கள் எழுதப்பட்டது. அதற்கு பிறகு ஏகத்துக்கும் எழுதித்தள்ளினார். அவர் எழுதிய வெளியிடப்படாத தாள்கள் மட்டுமே 464 பெட்டிகளில் 232 அடி ஷெல்ஃபில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்றால் நீங்கள் யோசித்துக்கொள்ளலாம்.
அவர் எழுபத்தி இரண்டாவது வயதில் இறந்த பொழுது கிட்னி மற்றும் இதய கோளாறால் இறந்துபோனார் என்று உலகுக்கு சொல்லப்பட்டது. எனினும் பத்து வருடங்கள் கழித்து இதய சிகிச்சையின் பொழுது செலுத்தப்பட்ட ஹெச்.ஐ.வி கிருமி தொற்று இருந்த ரத்தம் அவரின் உயிரை பறித்தது என்று உலகுக்கு தெரிந்தது. அறிவியலின் மீது எளிய மக்களுக்கு ஆர்வத்தை விதைத்த அமெரிக்க சுஜாதா 2014 எப்படியிருக்கும் என்று ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் என்ன
எழுதினார் பாருங்கள் :
ஒளிகிற பேனல்கள் உலகை நிறைக்கும். ஒற்றை ஸ்விட்ச் அமுக்கலில் மாறும் வண்ணத்தில் சுவர்களும், மேற்கூரைகளும் இருக்கும். கடினமான மனித வேலைகளை கருவிகள் பார்த்துக்கொள்ளும். சமையலறையில் காபி போடுவது, பிரெட்டை டோஸ்ட் செய்வது எல்லாமும் தானாகவே செய்யும் இயந்திரங்கள் வந்துவிடும். பரவலாக ரோபோக்கள் இருக்காது ; அவை நல்ல ரோபோவாகவும் இருக்காது. எதிர்பக்கத்தில் பேசுகிறவரை பார்க்கிற வசதி வரும் ; அதே திரையில் கோப்புகள் படிப்பது,படங்கள் பார்ப்பது, புத்தகங்கள் படிக்கவும் ஆகியனவும் செய்ய
இயலும் . "
பூ.கொ.சரவணன்
ரஷ்யாவை பூர்வீகமாக கொண்ட யூத குடும்பத்தில் பிறந்தார் அசிமோவ். மற்ற யூதர்களைப்போல இல்லாமல் மத நம்பிக்கை இல்லாமலே இவரை பெற்றோர் வளர்த்தார்கள். அசிமோவ் பள்ளியில் படிப்பில் வெகு சுட்டி. பாதி வகுப்புகளை கட் அடித்தாலும் மதிப்பெண்களை அள்ளிவிடுவார். பைக் ஓட்டவோ,நீச்சல் அடிக்கவோ இறுதி வரை பழகிக்கொள்ளவே இல்லை. ஊசிகள், ரத்தம் ஆகியவற்றை கண்டாலும் பயம் தான் அசிமோவுக்கு.
அமெரிக்காவில் இனிப்புக்கடை நடத்திக்கொண்டு இருந்தார்கள் பெற்றோர்கள். அந்த கடையில் இதழ்கள் விற்பார்கள். அப்படி தான் அறிவியல் கதைகள் அவருக்கு அறிமுகம் ஆனது. பல்ப் இலக்கியங்களை படிக்கக்கூடாது என்று தந்தை தடை போட்டிருந்தார். "அறிவியல் பல்ப் கதைகளில் அறிவியல் என்கிற பெயர் இருக்கிறது ; அறிவு வளரும் அப்பா !" என்று சொல்லித்தான் அந்த கதைகளை படித்து ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார் அசிமோவ்
[You must be registered and logged in to see this image.]
மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காமல் உயிரியல் படிக்கப்போனார் அசிமோவ். இறந்து போன பூனையை பகுக்க சொன்ன பொழுது "விடுங்க ஆளை !" என்று கழன்று கொண்டு வேதியியல் படித்து முடித்தார். படிப்படியாக பட்டங்கள் வாங்கி உயிரி வேதியியல் பேராசிரியர் ஆனார். பிரபலமான எழுத்தாளர் ஆனதும் பிற்காலத்தில் அந்த பதவியை விட்டார். பதினொரு வயது சிறுவனின் அனுபவங்கள் என்று எழுத தொடங்கி காஸ்மிக் கார்க் ஸ்க்ரூ என்கிற தலைப்பில் அவர் எழுதி தந்த அறிவியல் புனைகதையை நிராகரித்து மீண்டும் மீண்டும் எழுத சொல்லி ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் அனுப்பியது தான் ஆரம்பம்.மூன்று வருடங்கள் அறிவியல் புனைகதை என்று ஓரளவிற்கு எழுதிக்கொண்டு இருந்தார் அசிமோவ். நைட்ஃபால் என்றொரு அறிவியல் புனைகதையை எழுதியது தான் திருப்பம். ஆறு சூரியன்கள் ஓயாமல் வெளிச்சத்தை பொழிந்து கொண்டிருக்கும் ஒரு கிரகத்தில் திடீரென்று இருட்டு வரப்போகிறது. அந்த இருட்டு 2049 வருடங்களுக்கு ஒரு முறை வரும் இருட்டு என்றும் அது எப்படி மக்களை பாதிக்கும் என்று சுவாரசியமாக பின்னியிருந்த அந்த கதை உலகின் மிகச்சிறந்த அறிவியல் புனைகதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
அதற்கு பிறகு அவர் எழுதிய சிறுகதைகள், நாவல்கள் எல்லாமே சக்கைப்போடு போட்டன. சூரியனில் பத்து நிமிடம் நடந்தால் உடனே இவரின் உடம்பு அரிக்கும் அதனால் அவரின் கதைகளில் பெரும்பாலும் செயற்கை வெளிச்சம் பற்றிய
குறிப்புகளே வரும். இன்றைக்கு மிகப்புகழ் பெற்றிருக்கும் ரோபோக்களுக்கான மூன்று விதிகளை தன்னுடைய கதைகளின் மூலம் வகுத்தது அவரே. ரோபோக்கள் தன்னை உருவக்கையவரையே கொல்ல முயல்வது என்கிற கதைக்கரு தன்னை தொடர்ந்து ஈர்க்கிறது என்று குறித்தார் அசிமோவ். அவரின் ரோபோ கதைகள் ஐ ரோபோட் தொகுப்பாக வெளிவந்தது. ரோபோடிக்ஸ் என்கிற வார்த்தையே அவர் தந்தது தான் !
பைபிளுக்கு ஒரு வழிகாட்டி, ஷேக்ஸ்பியரை படிக்க ஒரு வழிகாட்டி, உலக வரலாறு சார்ந்த நூல்கள்,தன்னுடைய அறிவியல் துறை சார்ந்த நூல்கள் என்று எதையாவது எழுதிக்கொண்டே இருந்தார் அசிமோவ். தானே ஒரு பத்திரிக்கையை தொடங்கி வாசகர்களின் அறிவியல் கேள்விகளுக்கு அவரே பதில் சொல்கிற பணியை உற்சாகமாக
செய்தார். தத்துவத்தை தவிர அவர் தொடாத துறைகளே இல்லை என்கிற அளவுக்கு எழுதினார். ஒரு நிமிஷத்துக்கு தொண்ணூறு வார்த்தைகள் என்கிற வேகத்தில் அவரின் நூல்கள் எழுதப்பட்டது. அதற்கு பிறகு ஏகத்துக்கும் எழுதித்தள்ளினார். அவர் எழுதிய வெளியிடப்படாத தாள்கள் மட்டுமே 464 பெட்டிகளில் 232 அடி ஷெல்ஃபில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்றால் நீங்கள் யோசித்துக்கொள்ளலாம்.
அவர் எழுபத்தி இரண்டாவது வயதில் இறந்த பொழுது கிட்னி மற்றும் இதய கோளாறால் இறந்துபோனார் என்று உலகுக்கு சொல்லப்பட்டது. எனினும் பத்து வருடங்கள் கழித்து இதய சிகிச்சையின் பொழுது செலுத்தப்பட்ட ஹெச்.ஐ.வி கிருமி தொற்று இருந்த ரத்தம் அவரின் உயிரை பறித்தது என்று உலகுக்கு தெரிந்தது. அறிவியலின் மீது எளிய மக்களுக்கு ஆர்வத்தை விதைத்த அமெரிக்க சுஜாதா 2014 எப்படியிருக்கும் என்று ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் என்ன
எழுதினார் பாருங்கள் :
ஒளிகிற பேனல்கள் உலகை நிறைக்கும். ஒற்றை ஸ்விட்ச் அமுக்கலில் மாறும் வண்ணத்தில் சுவர்களும், மேற்கூரைகளும் இருக்கும். கடினமான மனித வேலைகளை கருவிகள் பார்த்துக்கொள்ளும். சமையலறையில் காபி போடுவது, பிரெட்டை டோஸ்ட் செய்வது எல்லாமும் தானாகவே செய்யும் இயந்திரங்கள் வந்துவிடும். பரவலாக ரோபோக்கள் இருக்காது ; அவை நல்ல ரோபோவாகவும் இருக்காது. எதிர்பக்கத்தில் பேசுகிறவரை பார்க்கிற வசதி வரும் ; அதே திரையில் கோப்புகள் படிப்பது,படங்கள் பார்ப்பது, புத்தகங்கள் படிக்கவும் ஆகியனவும் செய்ய
இயலும் . "
பூ.கொ.சரவணன்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» புருஸ் லீ பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு
» sony - புகழ் ஆகியோ மோரிடா பிறந்த தினம் சிறப்பு பகிர்வு
» ஜனவரி 15: முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிக் குக் பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு
» ஜனவரி 26: sony - புகழ் ஆகியோ மோரிடா பிறந்த தினம் சிறப்பு பகிர்வு
» ஜனவரி 27: மொசார்ட் எனும் மாபெரும் இசைஞானி பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum