TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழ் அகராதி - "ஆ"

Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 24, 2014 7:52 pm

ஆசை - ஒரு பொருள் அல்லது அனுபவத்தை அடைவதற்கான ஏக்கம் (விருப்பு) : desire
ஆடு - இறைச்சி, முடி, பால் ஆகியவற்றுக்காக வளர்க்கப்படும் ஒரு வகை விலங்கின் பொதுப் பெயர்
கை கால்களை தாளத்திற்கேற்ப ஆட்டு, ஆட்டம் போடு : goat, dance
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 24, 2014 7:53 pm

ஆ - இரக்கம், இகழ்ச்சி, வியப்பு ஆகியவற்றைக் காட்டும் ஒரு குறிப்பு மொழி; ஒரு வினாவெழுத்து (எ.கா - செய்தானா?); இறந்தகால உடன்பாட்டு வினையெச்ச விகுதி (எ.கா - பெய்யாக் கொடுக்கும்); எதிர்மறை இடைநிலை (எ.கா - செய்யாமை செய்யாத); பலவின் பால் எதிர்மறை வினைமுற்று விகுதி (எ.கா - மரங்கள் நில்லா); பசு; எருது; ஆன்மா; ஆச்சாமரம்; விதம் (ஆறு என்பதன் கடைக்குறை)
ஆக்கம் - சிருட்டி; உண்டாக்குதல்; அபிவிருத்தி; இன்பம்; செல்வம்; இலக்குமி; தங்கம்; வாழ்த்து
ஆக்கல் - படைத்தல்; சமைத்தல்
ஆக்கியோன் - படைத்தவன்; ஒரு நூல் செய்தவன்
ஆக்கிரமி - வலிமையைக் கைக் கொள் [ஆக்கிரமித்தல், ஆக்கிரமணம்]

ஆக்கினை - கட்டளை; உத்தரவு; தண்டனை
ஆக்கு - சிருட்டித்தல்; சிருட்டி; உண்டாக்கு; தயார் செய்; சமைத்தல் செய்; உய்ரர்த்து [ஆக்குதல், ஆக்கல்]
ஆக்கை - (யாக்கை) உடம்பு; நார்
ஆக - அவ்வாறு; மொத்தமாய்; நான்காம் வேற்றுமை உருபுடன் வரும் துணையுருபு (எ.கா - எனக்காகச் செய்)
ஆகட்டும் - ஆகுக; ஆம்

ஆகம் - உடம்பு; மார்பு; மனம் அல்லது இதயம்
ஆகமம் - வேத சாஸ்திரங்கள்; வருகை
ஆகமனம் - வந்து சேர்தல்
ஆகரம் - இரத்தினக் கற்கள் கிடைக்கும் சுரங்கம்; உறைவிடம் கூட்டம்
ஆகவே - ஆதலால்

ஆகா - வியப்பு, சம்மதம் போலவற்றைக் காட்டும் ஒரு குறிப்பு மொழி; ஆகாத என்பதன் கடைக்குறை; ஆகாத ; ஆகமாட்டா
ஆகாசக்கோட்டை - (உண்மையில் இல்லாத) கற்பனை; மனோராஜ்யம்
ஆகாச கமனம், ஆகாய கமனம் - காற்றில் நடந்து செல்லும் வித்தை
ஆகாசத்தாமரை - கொட்டைப்பாசி; ஒருவகை நீர்த்தாவரம்; 'ஆகாயத்தில் தாமரை' என்பது போல் இல்லாத பொருள்
ஆகாசம், ஆகாயம் - ஐம்பூதங்களில் ஒன்றான 'வெளி' வானம்; வாயுமண்டலம்

ஆகாசவாணி, ஆகாயவாணி - அசரீரியான; வானொலி
ஆகாத்தியம் - பிடிவாதமும் பாசாங்கு
ஆகாதவன் - பகைவன்; பயற்றவன்
ஆகாமியம் - வரு பிறப்புக்களில் பலன் தரக்கூடிய இப்பிறப்பு நல்வினை தீவினைகள்
ஆகாயம் - ஆகாசம்

ஆகாரம் - உருவம்; வடிவம்; உடம்பு; உணவு; நெய்; வீடு
ஆகிய - பண்பை விளக்கும் மொழி
ஆகிருதி - உருவம்; வடிவம்
ஆகு - எலி; பெருச்சாளி
ஆகுதி - ஓமத் தீயில் இடும் நெய்; உணவு போன்ற பலி

ஆகுபெயர் - ஒன்றன் பெயர் அதனுடன் தொடர்புடைய மற்றொன்றுக்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர்
ஆகுலம் - மனக் கலக்கம்; துன்பம்; ஆரவாரம்; பகட்டு
ஆகுளி - ஒருவகைச் சிறு பறை
ஆகையால் - ஆதலால்
ஆங்க - அவ்வாறு; அவ்விதமே; உவம உருபு

ஆங்கண் - அவ்விதம்
ஆங்காரம் - செருக்கு; அகங்காரம் அல்லது 'நான்' என்னும் நினைவு
ஆங்காலம் - நல்ல காலம்; எடுத்த காரியமெல்லாம் வெற்றியடையும் காலம்
ஆங்கிலம் - ஆங்கிலேயர்களின் மொழி
ஆங்கு - அவ்விடத்து; அப்பொழுது; அவ்வாறு; போல; ஓர் அசைச் சொல்

ஆங்ஙனம் - (அங்ஙனம்) அவ்வாறு
ஆச்சரியம் - வியப்பு
ஆச்சி - தாய்; பாட்டி; பெருமாட்டி
ஆச்சு - முடிந்தது
ஆசனம் - அமரும் பீடம்; தவிசு; யோகியர் அமரும் நிலை; மலம் வெளியேறும் வழி

ஆசனவாய் - மலம் வெளியேறும் துவாரம்
ஆசாபங்கம் - விரும்பியது பெறாத ஏமாற்றம்
ஆசாபாசம் - ஆசையாகிய வலைக் கயிறு
ஆசாமி - ஓர் ஆள்
ஆசாரம் - சாத்திர முறைப்படி அல்லது குல முறைப்படி நடத்தல்; வழக்கம்; ஒருவரது சுய சுத்தம்; பெருமழை; அரசனின் கொலுமண்டபம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 24, 2014 7:53 pm

ஆஸ்தானம் - அரசவை
ஆன்மா -உடல் இயக்கத்துடன் இருப்பதற்குக் காரணமானது எனக் கருதப்படுவது. ( உயிர்,ஆவி,பசு)
ஆயர் - கத்தோலிக்க திருச்சபை அல்லது அதையொத்த திருச்சபைகளில் மறை மாவட்டம் ஒன்றுக்கு பொறுப்பாக இருக்கும் சமயத் தலைவர். அருட் தந்தையருக்கும் மேலான நிலையாகும்.யாதவ இனத்தவரை இடையர், ஆயர் என்று அழைப்பார்கள்.( bishop )
ஆனந்தம் - மகிழ்ச்சி, பேரின்பம்.
ஆஜானுபாகு -அருகி வரும் வழக்கு. நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற எடையும் உடைய தோற்றம்

ஆவணப்படுத்து - செயல் படுத்த வை, ஆவணங்களைத் தயார் படுத்து.( document )
ஆவி - உயிர், ஆன்மா
ஆரம் - ஒரு வட்டத்தின் மையப்பள்ளியில், வட்டத்திற்குள் முழுமையாக இருக்கும் குறுக்குக்கோட்டின் சரிபாதி மற்றும் அதனளவு ஆரம் எனப்படும். ( radius )
ஆச்சாரி - தச்சர், பொற்கொல்லர், கருமார், சிற்பி, கன்னார் போன்ற தொழில் செய்பவர்கள்.
ஆதாரம் - சான்று,அடிப்படை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 4:03 am

ஆ - பசு
ஆலயம் - கோவில்
ஆறு - நதி, ஒரு எண்ணிக்கை, தேற்றுதல், வழி
ஆடவன் - வாலிபன்
ஆலை - கூடம், ஒரு பணி நடைபெறும் இடம் (எ.டு, பாடசாலை)


ஆள் - நபர்
ஆதாயம் - லாபம்
ஆகிருதி - நல் உடல் தோற்றம்,
ஆப்பு - மரத்தை பிளக்க மரத்தின் இடுக்கில் செருகப்படும் பிளக்கும் பொருள்
ஆதலின் - எனவே, அதனால்


ஆணவம் - செருக்கு, கர்வம்
ஆர்ப்பரிப்பு - உற்சாகம்
ஆராதனை - வழிபாடு
ஆம் - ஒத்துக் கொள்ளுதல்
ஆச்சரியம் - வியப்பு


ஆடம்பரம் - விமரிசை
ஆக்கம் - படைப்பு
ஆலம் - நஞ்சு, விஷம்
ஆதரவு - உடன்படுதல்
ஆரம் - மார்பில் அணியும் ஆபரணம்


ஆபரணம் - அணிகலன், நகை
ஆயுள் - உயிர் வாழ்தல்
ஆதவன் - கதிரவன், சூரியன்
ஆகாரம் - உணவு, இரை
ஆற்றாமை - தாங்கி கொள்ள முடியாமை, செயல் படுத்த முடியாமை (Frustration)

ஆரவாரம் - பெரும் சத்தம், கூச்சல்
ஆவல் - விருப்பம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 4:04 am

ஆசாரவாசல் - ஒரு கோயிலின் அல்லது அரண்மனையின் வெளிமண்டபம்
ஆசாரியன் - மதத் தலைவன்; மதகுரு; உபாத்தியாயன்
ஆசான் - உபாத்தியாயன்; குடும்ப குரு; தேவகுருவான வியாழன்; முருகக் கடவுள்
ஆசானுபாகு - முழங்கால் வரை நீண்ட கையுடையவன்
ஆசி - வாழ்த்து

ஆசியா - பூமியின் கண்டங்களுள் ஒன்று
ஆசிரமம், ஆச்சிரமம் - முனிவர் வாழுமிடம்; மனித வாழ்க்கை நிலை நான்கில் ஒன்று
ஆசிரியப்பா, ஆசிரியம் - தமிழ்யாப்பிலக்கணத்தில் கூறியுள்ள நால்வகைப் பாக்களில் ஒன்று (அகவல்பா)
ஆசிரியவசனம் - மேற்கோளாக எடுத்துக் காட்டக்கூடிய பிற ஆசிரியரின் வாக்கு
ஆசிரியன் - உபாத்தியானன்; மதகுரு; நூலாசிரியன்

ஆசினி - ஈரப் பலாமரம்
ஆசீர்வதி - வாழ்த்துக் கூறு [ஆசீர்வதித்தல், ஆசீர்வாதம்]
ஆசீவகன் - சமணத்துறவி
ஆசு - குற்றம்; அற்பம்; நுட்பம்; பற்றுக்கோடு; ஆதாரம்; உலோகப் பகுதிகளை இணைக்க உதவும் பற்றாக; விரைவு; விரைவில் பாடும் கவி (ஆசுகவி)
ஆசுகவி - கொடுத்த பொருளை அமைத்து அப்பொழுதே பாடப்படும் செய்யுள்; ஆசுகவி பாடும் புலவன்

ஆசுவாசம் - இளைப்பாறுதல்
ஆசைகாட்டு - தன்வசப்படுத்துவதற்கு ஏதேனும் ஒன்றைக் காட்டி இச்சை உண்டாக்கு [ஆசை காட்டுதல்]
ஆசைப்படு - விரும்பு; விருப்பம் கொள் [ஆசைப்படுதல், ஆசைப்பாடு]
ஆஞ்சனேயன் - ஆஞ்சனா தேவியின் மகனான அனுமான்

ஆஞ்ஞாசக்கரம் - அரசனது ஆணையாகிய சக்கரம்
ஆஞ்ஞாபி - கட்டளையிடு [ஆஞ்ஞாபித்தல்]
ஆஞ்ஞை - கட்டளை உத்தரவு; இரண்டு புருவங்களுக்கும் இடையே இருப்பதாகக் கூறப்படும் ஒரு சக்கரம்
ஆட்காட்டி - சுட்டுவிரல்; சாலையில் ஒரு வழிகாட்டு பலகை
ஆட்கொள் - அடிமையாகக் கொள்; பக்தனாக ஏற்றுக் கொண்டு அருள் செய் [ஆட்கொள்ளுதல்]

ஆட்சி - ஆளுதல்; உரிமை; அனுபவம்; வழக்கம்; ஒரு கிரகத்தின் உரிமை ராசி
ஆட்செய் - தொண்டு செய் [ஆட்செய்தல்]
ஆட்சேபி - தடை செய்; மறுத்துக் கூறு [ஆட்சேபித்தல், ஆட்சேபம்]
ஆட்டம் - அசைவு; அதிர்வு; விளையாட்டு; கூத்து
ஆட்டு - விளையாட்டு; கூத்து; அசையச் செய்; அதிரச் செய்; அலைத்து வருத்து; வெற்றியடை; கூத்தாடச் செய்; நீராட்டுவி; எந்திரத்தில் அரை [ஆட்டுதல்]

ஆட்டுக்கல் - அரைக்க உதவும் கல்லுரல்; ஆட்டுரோசனை
ஆட்டுக்கிடை - ஆடுகளைக் கூட்டுமிடம்
ஆட்டுத் தொட்டி, ஆட்டுப்பட்டி - ஆட்டுக்கிடை
ஆட்டுரல் - அரைக்க உதவும் கல் உரல்
ஆட்டுரோசனை - ஆடுகளின் இரைப்பையில் உண்டாகும் கல் போன்ற ஒரு பொருள்

ஆட்படு - அடிமையாகு; அடிமையாகக் கொள் [ஆட்படுதல், ஆட்படுத்தல்]
ஆடம்பரம் - பகட்டான வெளித் தோற்றம்]
ஆடல் - அசைதல்; அதிர்தல்; நாட்டியம்; விளையாடல்; புணர்தல்; சொல்லுதல்; நீராடல்; ஆட்சி செய்தல்; வெற்றி; போர்
ஆட்பிரமாணம் - (சராசரி) ஆளின் உயரம்
ஆடகம் - தங்கம்; நால்வகைப் பொன்களில் ஒன்று; துவரை

ஆடம் - இருபத்துநான்கு படிகொண்ட ஒரு முகத்தலளவை
ஆடலை - பூவாத மரம்
ஆடவல்லான் - தஞ்சைக் கோயிலில் உள்ள நடராசமூர்த்தி; முதலாம் ராஜராஜ சோழன் காலத்தே வழக்கத்தில் வந்த மரக்கால்; எடைக்கற்களின் பெயர்
ஆடவன் - ஆண்மகன்; இளைஞன்; முப்பத்திரண்டு முதல் நாற்பத்தெட்டு வயதுக்குட்பட்ட பருவத்தினன்
ஆடாதோடை - ஒரு மருந்துச் செடி

ஆடி - தமிழ் மாதங்களில் நான்காம் மாதம்; உத்தராட நட்சத்திரம்; கூத்தாடுபவன்; கண்ணாடி; பளிங்கு
ஆடிப்பட்டம் - ஆடி மாதத்தில் பயிரிடும் பருவம்
ஆடிப்பெருக்கு - காவிரி நதியில் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஏற்படும் வெள்ளம் (பதினெட்டாம் பெருக்கு)
ஆடு - வெள்ளாடு, செம்மறியாடு போன்ற மிருகவகை; மேஷம் ராசி; கொல்லுதல்; வெற்றி; சமைத்தல்; கூத்தாடு; அசைதல் செய்; சஞ்சரி; விளையாடு; நீராடு; போர் செய் [ஆடுதல்]
ஆடு சதை - கீழ்க்காலின் பின்புறத்தசை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 4:04 am

ஆடுதன் - விளையாட்டுச் சீட்டுச் சாதி நான்கினுள் ஒன்று
ஆடு தின்னாப் பாளை, ஆடு தீண்டாப்பாளை - ஒரு புழுக்கொல்லிப் பூண்டு
ஆடூஉ - ஆண்மகன்
ஆடை - உடை அல்லது சீலை; பால் போன்ற பொருளின் மேல் திரளும் ஏடு; சித்திரை நட்சத்திரம்
ஆண் - ஆண்பால் பொது; ஆண்மை; தலைம; சேனா வீரன்

ஆண்டகை - மனிதரில் சிறந்தவன்; ஆண் தன்மை
ஆண்டலைக்கொடி - முருகனது சேவற்கொடி
ஆண்டவன் - (நம்மை ஆள்பவனான) கடவுள்; எசமானன்
ஆண்டி - பரதேசி; செவத் துறவி; பண்டாரம் (பெண்பால் - ஆண்டிச்சி)
ஆண்டு - வருடம்; பிராயம்; வயது; அவ்விடம்

ஆண்டை - எசமானன்; அவ்விடம்
ஆண்பனை - காயாத பனைமரம்
ஆண்பால் - ஆண் இனம்; (இலக்கணத்தில்) உயர்திணையில் ஆண் இன ஒருமைப் பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல்
ஆண்பிள்ளை, ஆண்மகன் - ஆண் குழந்தை; வீரன்
ஆண் மரம் - உள் வயிரமுள்ள மரம்; செங்கொட்டை மரம்

ஆண்மை - ஆண் தன்மை; ஆளும் தன்மை; வலிம; அகங்காரம்
ஆணவம் - செருக்கு; அகங்காரம்; ஆன்மாவைச் சூழ்ந்திருக்கும் மும்மலங்களில் ஒன்றான ஆணவ மலம்
ஆணி - இரும்பு, மரம் முதலியவற்றால் ஆன ஆணி; அச்சாணி; பொன்னால் ஆன உரையாணி; ஆதாரம்; அடிப்படைப் பகுதி; மேன்மை
ஆணிக்கல் - தங்கம் நிறுக்கும் எடைக்கல்
ஆணிப் பொன் - உயர்ந்த மாற்றுடைய பொன்

ஆணு - நன்மை; இனிமை; அன்பு; பாதரசம்
ஆணை - கட்டளை; உத்தரவு; அதிகாரம்; அதிகார எல்லை; சபதம்; அதிகார முத்திரை (இலாஞ்சனை); நீதித்தலப்பிரமானம்; ஆன்றோர் வழக்கம் [ஆணையிடு]
ஆத்தி - ஆத்தி மரம்
ஆத்திகன் - 'கடவுள் உண்டு' என்று நம்புகிறவன்
ஆத்திரம் - பதற்றம்; பரபரப்பு; சினம் [ஆத்திரக்காரன்]

ஆத்மஞானம் - தன்னையறிதல் [ஆத்மஞானி]
ஆத்மா, ஆத்துமா - சீவான்மா; உயிர்; பிராணி; உயிருள்ளது
ஆத்மார்த்தம் - தன்பொருட்டு; தன் ஆத்மாவின் பொருட்டு
ஆதங்கம் - துன்பம்; அச்சம்; நோய்; முரசு ஒலி

ஆதபத்திரம் - குடை
ஆதபம், ஆதவம் - வெயில்; சூரிய ஒளி
ஆதபன், ஆதவன் - சூரியன்
ஆதரம் - அன்பு; ஆசை; மதிப்பு; உபசாரம்; ஊர்
ஆதரவு - அன்பு; உதவி; ஆதாரம்

ஆதரி - உபசாரம் செய்; பாதுகாத்தல் செய்; அன்புமிகு [ஆதரித்தல், ஆதரணை]
ஆதல் - ஆகுதல்; கூத்து; தோற்றம்; நுண்மை; ஒரு சாத்திர நூல்; ஆவது (எ.கா - தங்கத்தாலாதல், வெள்ளியாலாதல் அணிகள் செய்யலாம்)
ஆதலால் - ஆகையால்
ஆதன் - குருடன்; அறிவில்லாதவன்; ஆன்மா; அருகக் கடவுள்
ஆதனம் - ஆசனம்; சீலை; பிருட்டம்; புட்டம்; சொத்து; தரை

ஆதாம் - (விவிலிய நூலின் படி) முதல் மனிதன்
ஆதாயம் - இலாபம்; வருவாய்
ஆதாரம் - பற்றுக்கோடு; பிரமாணம்; (உயிருக்கு ஆதாரமாகும்) உடம்பு; அத்தாட்சிப் பத்திரம்; மழை
ஆதி - தொடக்கம்; பழைமை; காரணம்; மூலம்; கடவுள்; சூரியன்; (இசையில்) ஆதிதாளம்; தொடக்கமான பிறவும் அல்லது பிறரும்; தலைவன்
ஆதிக்கம், ஆதிக்கியம் - உரிமை; அதிகாரத் தலைமை; செழிப்பு

ஆதிசேடன் - விஷ்ணுவின் படுக்கையாயுள்ள அனந்தன் என்ற நாகம்
ஆதிசைவன் - சிவலாயத்தில் பூசை செய்வதற்கு உரிமையுள்ள அந்தணன்
ஆதித்தர் - அதிதி மக்களான தேவர்
ஆதித்தவாரம் - ஞாயிற்றுக் கிழமை
ஆதித்தன், ஆதித்தியன் - சூரியன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 4:05 am

ஆதித்தாய் - (விவிலிய நூலின் படி) முதல் தாயான ஏவாள்
ஆதிபகவன் - கடவுள்
ஆதிபத்தியம் - அதிகாரத் தலைமை
ஆதிமூலம் - முதல் காரணம்; முதல் காரணமான கடவுள்
ஆதிரை - திருவாதிரை நட்சத்திரம்

ஆதினம் - சொந்த உரிமை; சைவமடம்
ஆதுரம் - பரபரப்பு; பதற்றம்; அவா [ஆதுரன்]
ஆதுலர்சாலை - ஏழை எளியோர்க்கு அன்னமிடும் சாலை
ஆதுலன் - வறியவன்; நோய் முதலிய காரணத்தால் வலிமையற்றவன்
ஆந்திரம் - தெலுங்கு நாடு; தெழுங்கு மொழி; குடல்

ஆந்தை - கூகை; ஒரு வகைப் பறவை
ஆப்தன் - நெருங்கிய நண்பன்; நம்பத்தக்கவன்
ஆப்திகம் - இறந்தவர்க்கு முதல் ஆண்டு முடிவில் செய்யப்படும் திதி
ஆப்பம் - அப்பம்
ஆப்பி - பசுவின் சாணம்

ஆப்பு - முளை; உடல்; கட்டு; நொய்யரிசி; எட்டி மரம்
ஆப்பை - அகப்பை
ஆபத்து - துன்பம்; விபத்து
ஆபத்து சம்பத்து - வாழ்வும் தாழ்வும்
ஆபரணம் - அணிகலம்

ஆபாசம் - அசுத்தம்; அழுக்கு; போலி நியாயம்; முறைத்தவறு, அஞ்சத்தக்க வடிவம், பிரதி பிம்பம், பொய்த்தோற்றம்.
ஆபிசாரம் - மாந்திரிகம்
ஆப்பிரிக்கா - பூமியில் ஒரு கண்டப்பகுதி
ஆபீசு - உத்தியோக நிலையம்
ஆம் - நீர்; அழகு; ஆகும்; சம்மதம் குறிக்கும் மொழி; இகழ்ச்சி, அனுமதி, தகுதி முதலியன குறிக்கும் சொல்

ஆம்பல் - அல்லிக்கொடி; மூங்கில்; ஓர் இசைக்குழல்; ஊதுகொம்பு; யானை; சந்திரன்; கள்; அடைவு; முறைமை; நெல்லிமரம்; பேரொலி; ஒரு பேரெண்
ஆம்பி - காளான் (நாய்க்குடை); ஒலி; இறைகூடை
ஆமசிராத்தம் - பக்குவம் செய்யாத உணவுப் பொருள்கள் கொண்டு செய்யப்படும் திதி
ஆமணக்கு - கொட்டைமுத்துச் செடி
ஆமந்திரிகை - ஒருவகைப் பறை

ஆமலகம், ஆமலகி - நெல்லி மரம்
ஆமாத்தியன் - மந்திரி
ஆமாம் - சம்மதம் காட்டும் குறிப்பு மொழி
ஆமாறு - ஆகும் வழி; உபாயம்
ஆமை - ஒரு பிராணி (கூர்மம்)

ஆமோதி - பிரேரணையை ஆதரி; ஒப்புக்கொள் [ஆமோதித்தல், ஆமோதனம்]
ஆய் - அழகு; நுண்மை; சிறுமை; வருத்தம்; இடையர் குலம்; கடையெழு வள்ளல்களில் ஒருவன்; ஏவலொருமை விகுதி (எ.கா - உண்ணாய்); முன்னிலை ஒருமை விகுதி (எ.கா - நடந்தாய்); ஆராய்ச்சி செய்; தெரிந்த்தெடு; பிரித்தெடு; ஆலோசனை செய்; கொய்தல் செய்; குத்துதல் செய்; நுணுக்கமாகு; குறைவாகு; அழகாகு; வருந்து [ஆய்தல்]
ஆய்ச்சி - தாய்; பாட்டி; இடைச்சி
ஆய்தம், ஆய்தப் புள்ளி - ஆய்தவெழுத்து
ஆய்ப்பாடி - இடையர் சேரி

ஆய்வு - நுட்பம்; நுணுக்கம்; ஆராய்தல்; பரிசோதனை; அகலம்; வருத்தம்; தும்பம்
ஆயக்கட்டு - ஒரு கிராமத்தின் நில அளவுக்கணக்கு ஓர் ஏரி நீர்ப்பாசன நிலப்பரப்பு (குளப்புரவு); பொய்வாக்குமூலம்
ஆயக்காரன் - சுங்கம் வாங்குபவன்
ஆயக்கால் - பவனி வரும் பொழுது பல்லக்கைத் தாங்கும் முட்டுக்கால்
ஆயத்தம் - முன்னேற்பாடு; தயாராக இருக்கும் நிலை

ஆயத்தார் - ஒரு பெருமாட்டியின் தோழியர்
ஆயம் - வருவாய்; சுங்கவரி; சூதாடு கருவி; சூதாட்டம்; இரகசியம்; ஒரு பெருமாட்டியின் தோழியர் கூட்டம்; மேகம்; வருத்தம்; துன்பம்; பசுத்திரள்
ஆயர்பாடி - இடையர் சேரி
ஆயன் - இடையன் (பெண்பால் - ஆய்ச்சி, ஆய்த்தி)
ஆயாசம் - களைப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 4:06 am

ஆயாள் - தாய்; தாதி
ஆயி - தாய்
ஆயிரம் - பத்து நூறு (1000)
ஆயின் - ஆனால்
ஆயினும் - ஆனாலும்; ஆவது

ஆயுதம் - கருவி; படைக்கலம்
ஆயூர்வேதம், ஆயுள்வேதம் - (ஹிந்து வைத்திய சாத்திரம்); மருத்துவக் கலை, அருள்மறை
ஆயுள் - வாழ்நாள் காலம்
ஆர் - ஆத்திமரம்; சக்கரத்தின் ஆரக்கால்; அச்சுமரம்; அழகு; நிறைவு; கூர்மை; மலரின் புல்லிவட்டம்; (உயர்திணை)பலர் பால் படர்க்கை விகுதி; (எ.கா - சென்றார்); மரியாதைப் பன்மை விகுதி (எ.கா - தந்தையார், ஒளவையார்)
ஆர்கலி - கடல்; வெள்ளம்; மழை

ஆர்ச்சிதம் - தேடப்பட்ட பொருள்; சம்பாத்தியம்
ஆர்ப்பரி - ஆரவாரம் செய்; முழங்கு [ஆர்ப்பித்தல்]
ஆர்ப்பாட்டம் - ஆரவாரம்; இடம்பம்
ஆர்ப்பு - சிரிப்பு; மகிழ்ச்சி; பேரொலி; போர்; கட்டு; தளை
ஆர்வம் - அன்பு; பக்தி; ஒரு பொருளைப் பெற விரும்பு; ஒருவகை நரகம்

ஆர்வலம் - அன்புகொண்டவன்; பரிசிலன்; கணவன்
ஆர்வலித்தல் - அன்பு மிகுதல்
ஆர - நிறைய; மிக; ஓர் உவம உருபு
ஆரக்கால் - சக்கரத்தின் மையத்திலிருந்து விளிம்புவரை அமைந்துள்ள கோல்களில் ஒன்று
ஆரஞ்சு - கிச்சிலி, ஒரு வகை பழம்

ஆரண்யகம் - வேதத்தின் ஒரு பகுதி
ஆரணம் - வேதம்; வேதத்தின் ஒரு பகுதியான ஆரண்யகம்
ஆரணியம் - காடு
ஆரதி, ஆரத்தி - தீப ஆராதனை; ஆலத்தி
ஆரபி - ஓர் இராகம்

ஆரம் - பூமாலை; மணிவடம்; முத்து; பதக்கம்; பறவையின் கழுத்திலுள்ள வரி; சந்தனக் குழம்பு; சந்தன மரம்; கடம்ப மரம்; காட்டாத்தி மரம்; ஆரக்கால்; பித்தளை; தோட்டம்
ஆரம்பம் - தொடக்கம்
ஆரம்பி - தொடங்கு
ஆரல் - கார்த்திகை நட்சத்திரம்; நெருப்பு; செவ்வாய்க் கிரகம்; ஆரல் மீன்; மதில்சுவர்
ஆரவாரம் - பேரோசை; ஆடம்பரம்

ஆராதனம், ஆராதனை - பூசனை
ஆராதி - பூசனை செய்; உபசாரம் செய் [ஆராதித்தல்]
ஆராமம் - சோலை; நந்தவனம்
ஆராமை - தெவிட்டாமை; திருப்தியாகாமை
ஆராய் - தேடு; சோதனை செய்; ஆலோசனை செய்; கருது [ஆராய்தல், ஆராய்ச்சி]

ஆராய்ச்சிமணி - நியாயம் வேண்டுவோர் அடிக்கும்படி அரண்மனைவாயிலில் கட்டப்படும் மணி
ஆராவமுதம், ஆராவமுது - தெவிட்டாத அமிர்தம்
ஆரியக் கூத்து - கழைக்கூத்து
ஆரியம் - ஆரிய நாடு; சமஸ்கிருத மொழி; அழகு; கேழ்வரகு
ஆரியன் - ஆரிய இனத்தவன்; மதித்தற்கு உரியவன்; ஆசிரியன்; புலவன்; ஐயனார் தெய்வம்; கழைக்கூத்தன்

ஆரியாவர்த்தம் - இமயமலைக்கும் விந்தியமலைக்கும் இடைப்பட்ட பிரதேசம்
ஆருகதம் - சமண மதம்; நாவல்மரம்
ஆருகதன் - சமணன்
ஆரூடம் - ஏறிய நிலையிலுள்ளது; நினைத்த காரியம் சொல்லும் சோதிடம்
ஆரூடன் - சீவன்முத்தன்; வாகனம் முதலியவற்றில் ஏறியுள்ளவன்

ஆரோக்கியம் - (உடலின்) நோயில்லாத நிலை; நன்னிலை
ஆரை - நீர்த்தாவரமான ஆரை, கோரைப்புல் போன்றதனால் பின்னப்பட்ட பாய்; ஓர் அரனின் மதில் சுவர்; அச்சு மரம்
ஆரோகணம் - ஏறுதல்; படிக்கட்டு; தாழ்வாரம்; (இசையில்) சுர வரிசையில் ஏறுதல்
ஆல் - ஆலமரம்; நீர் வெள்ளம்; கார்த்திகை நட்சத்திரம்; நஞ்சு; விடம்
ஆலகாலம் - பாற்கடலைக் கடைந்த பொழுது தோன்றிய நஞ்சு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 4:07 am

ஆலங்கட்டி, ஆலாங்கட்டி - கல் மழை(பனிக்கட்டி மழை)
ஆலசியம் - சோம்பல்; மடிமை; தாமதம்
ஆலத்தி, ஆலாத்தி - மஞ்சள் நீர் அல்லது விளக்கு போன்ற பொருளைச் (மணமக்கள் முன் அல்லது விக்கிரகத்துக்கு முன்) சுற்றுதல்
ஆலம் - நீர்; கடல்; மழை; ஆலமரம்; ஆகாயம்; விடம்; நஞ்சு; கருமை; கலப்பை
ஆலயம் - கோயில்; தேவாலயம்; வாழுமிடம்; தங்குமிடம்; யானைக்கூடம்; நகரம்

ஆலல் - மயிலின் குரல்; ஒலி; கூவுதல்
ஆலவட்டம் - விசிறி
ஆலாபி - ஓர் இராகத்தை விஸ்தாரமாகப் பாடு [ஆலாபித்தல், ஆலாபனம், ஆலாபனை]
ஆலாலம் - (ஆலகாலம்) பாற்கடலைக் கடைந்தபொழுது பிறந்த நஞ்சு; வீட்டு வெளவால்
ஆலி - மழை; மழைத்துளி; காற்று; ஆலங்கட்டி; கள்; கோயில்; விழாக்களில் சுவாமி வீதிவலம் வரும் பொழுது எடுத்துச் செல்லப்படும் பூத உருவம்

ஆலிங்கனம் - தழுவுதல்
ஆலை - கரும்பாலை; கரும்பு; சாலை; கூடம்; கள்
ஆலோசி - பிறருடன் யோசனை செய்; கருது; சிந்தனை செய் [ஆலோசித்தல், ஆலோசனை]
ஆலோலம் - பறவைகளை ஓட்டும் ஒலிக்குறிப்பு; நீரோட்ட ஒலி
ஆவணக்களம், ஆவணக்களரி - பத்திரம் பதிவு செய்யுமிடம்

ஆவணம் - கடைவீதி; சொத்துரிமை; உரிமைப் பத்திரம்; அடிமைத்தனம்
ஆவணி - தமிழ் ஆண்டில் ஐந்தாம் மாதம்
ஆவர்த்தம் - ஏழுவகை மேகங்களுள் நீரைப் பொழியும் மேகம்; திரும்பச் செய்தல்; மறுபடி நிகழ்தல்
ஆவல் - ஆசை; மிகு விருப்பம்; வளைவு
ஆவலங்கொட்டு - வாயைக் கையால் தட்டிக்கொண்டே உரக்கக் கத்து [ஆவலங்கொட்டுதல்]

ஆவலாதி - குறை சொல்லுதல்; அவதூறு
ஆவலி - அழு; புலம்பு [ஆவலித்தல்]
ஆவளி, ஆவலி - வரிசை; வம்ச பரம்பரை
ஆவாரை - ஆவிரைச் செடி
ஆவி - உயிர்; ஆன்மா; சுவாசம்; வலிமை; நீராவி; நறுமணம்; உயிர் எழுத்து; நீராவியில் வேக வைத்த பிட்டு; குளம்

ஆவியர் - ஆவி என்ற வேரின் பரம்பரையினர்; வேளாளர்; வேட்டுவர்
ஆவிரை - (தோல் பதனிடப் பயன்படும்) ஒரு செடி வகை
ஆவுடையார், ஆவுடையாள் - (சிவாலயத்தில்) இலிங்கத்தின் பீடம்
ஆவேசம் - பேய்; பிசாசு; ஓர் ஆள் தெய்வத்தன்மை
ஆழ் - மூழ்கு; விழு; துளைத்துச் செல்; அழுந்து; ஆழமாயிரு; ஆழமாகத்தோண்டு [ஆழ்தல், ஆழல்]

ஆழ்வார் - விஷ்ணு பக்தரில் சிறந்த பன்னிருவரில் ஒருவர்; சமண, பெளத்த முனிவர்களின் பட்டப்பெயர்
ஆழம் - ஆழ்ந்திருக்கும் அளவு; கருத்தின் ஆழம்
ஆழம் பார் - ஆழத்தை அள; ஒருவனின் அறிவு, நிலைமை போன்றவற்றைச் சோதனை செய் [ஆழம் பார்த்தல்]
ஆழாக்கு - அரைக்கால் படி அளவு
ஆழி - அரசனின் ஆணைச் சக்கரம்; கட்டளை; மோதிரம்; சக்கரம்; வட்டம்; சக்கராயுதம்; யானையின் துதிக்கை நுனி; (ஆழமுடையதான) கடல்; கடற்கரை; ஆளிவிதைச் செடி

ஆள் - ஆண் மகன்; வீரன்; ஊழியன்; தொண்டன்; வளர்ந்த ஆள்; ஆளின் உயரம்; பெண்பால் பெயர் விகுதி; பெண்பால் வினைமுற்று விகுதி (எ.கா - இல்லாள், சென்றாள்); அடக்கி வை; அடங்கி நடக்கச் செய்; அரசு செய்; பாதுகாப்பின் கீழ்க்கொள்; ஒரு சொல்லை ஒரு பொருளில் வழங்கு; கையாளு; உபயோகித்து வா [ஆளுதல், ஆளுகை, ஆட்சி]
ஆள்வினை - முயற்சி; ஊக்கம்; உற்சாகம்
ஆளத்தி - இராக ஆலாபனம்
ஆளாதல் - அடிமையாதல்; பக்தனாதல்
ஆளி - ஆள்பவன்; சிங்கம்; துதிக்கையும் சிங்க உடலும் கொண்டிருந்ததாகக் கூறப்படும் யாளி என்ற மிருகம்; ஒருவகைக் கிளிஞ்சில்; ஆளி விதைச் செடி

ஆளுகை - ஆட்சி
ஆளோடி, ஆள்வாரி - குளத்தின் மதில்சுவர் உட்புறத்தில் மக்கள் செல்ல அமைத்த நடை பாதை
ஆற்ற - முழுதும்; மிகவும்
ஆற்றல் - சக்தி; வலிமை; ஆண்மை; உறுதி; பொறை; முயற்சி
ஆற்றாமை - பொறுக்கமுடியாமை; தளர்ச்சி; பலவீனம்; துக்கம்

ஆற்றிடைக்குறை - ஆற்றின் இடையே உள்ள மேடு
ஆற்று - செய்; நடத்து; பொறு; தாங்கு; தணியச் செய்
ஆற்றுணா - வழிப் பயணத்திற்காக எடுத்துச் செல்லும் கட்டுச் சோறு
ஆறப்போடு - காலதாமதம் செய்து தீவிரத்தைக் குறை [ஆறப்போடுதல்]
ஆறலை - வழிப்பறி செய் [ஆறலைத்தல்]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 4:08 am

ஆறவமர - பொறுமையாகவும் அமைதியாகவும்
ஆறு - நதி; வழி; விதம்; உபாயம்; மதம்; அறம்; நன்டைக்கை; ஆறு என்ற எண்; அடங்கு; தணிதல் செய்; சூடு குறை; (புண்) குணமாகு [ஆறுதல், ஆறல்]
ஆன் - எருது; பெண் எருமை; பசு; பெண் மான்
ஆன்மா - (ஆத்மா) உயிர்
ஆன்ற - அகலமான; ஆழமும் அடக்கமும் உள்ள; இருந்து மறைந்து போன; மிகச் சிறந்த; மாட்சிமைப்பட்ட

ஆன்றவர், ஆன்றார், ஆன்றோர் - அறிஞர்; தேவர்
ஆனந்தபைரவி - ஓர் இராகம்
ஆனந்தம் - பேரின்பம்; சாவு; செய்யுள் குற்றங்களில் ஒரு வகை; அரத்தை
ஆனந்தித்தல் - பெரு மகிழ்வடைதல்
ஆனமட்டும் - கூடியவரை

ஆனா - அளவு கடந்த; அழிவில்லாத; நீக்கமில்லாத [ஆனாமை]
ஆனால் - ஆயின்; ஆகையால்
ஆனி - தமிழ் ஆண்டில் மூன்றாம் மாதம்
ஆனை - யானை; அத்தி மரம்
ஆனைக்கால் - பெருங்கால் நோய்

ஆனைக் கொம்பன் - ஒருவகை நெல்
ஆனைச் சாத்தன் - கரிக் குருவி
ஆனைத் தீ - தீராத பசியை விளைவிக்கும் ஒரு நோய்
ஆனைந்து - பஞ்சகவ்வியம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 4:08 am

ஆஅ - வியப்பிடைச் சொல்.
ஆகச்செய்தே - ஆகவே : ஆகச்சே.
ஆகடியம் - பரிகாசம் : கொடுமை.
ஆகண்டலன் - இந்திரன்.
ஆகதம் - அடிக்கப்பட்டது : அறியப்பட்டது : கொடிச்சீலை : வந்தது : விகற்பமான பேச்சு : வாத்தியம்.


ஆகதர் - சைனர்.
ஆகந்துகம் - இடையில் வந்தது.
ஆகமப் பிரமாணம் - காட்சியாலும் அனுமானத்தினாலும் அறியப்படாத பொருளையும்
அறிவிக்கும் ஆப்த வாக்கியமாகிய சாத்திரம்.
ஆகமமலைவு - பிரமாணத்திற்கு மாறாக வருவது.
ஆகம் - உடல் : மார்பு : நெஞ்சு.


ஆகம்பிதம் - மேலுங் கீழுமாகத் தலையசைத்தல்.
ஆகரன் - கள்வன் : குடியிருப்போன் : பலவான்.
ஆகரி - ஒரு பண் : திப்பிலி.
ஆகரித்தல் - தருவித்தல்.
ஆகருடணம் - இழுக்கை : அழைக்கை : சேய்மையில் இருக்கும் பொருளை அண்மையில் அழைத்தல்.


ஆகலநம் - அறிந்து கொள்ளுதல் : எண்ணுதல் : சிறை செய்தல் : பிடித்தல்.
ஆகலாகல் - ஆக ஆக.
ஆகலூழ் - ஆகூழ்.
ஆகவபூமி - போர்க்களம்.
ஆகவம் - போர் : சீலை : பலியிடுதல்.


ஆகவனீயம் - வேதக்கினி வகை மூன்றனுள் ஒன்று.
ஆகவியன் - போர் வீரன்.
ஆகளரசம் - அபின்.
ஆகற்பகம் - அவா : அறிவு மயக்கம் : இருள் : மகிழ்ச்சி : முடிச்சு.
ஆகற்பம் - அதிகப்படுத்தல் : நோய்.


ஆகன்மாறு - ஆகையால்.
ஆகன்மை - காதளவு.
ஆகாச கபாலி - புரளிக்காரன்.
ஆகாச கமனம் - விண்ணிற் செல்லுதல்.
ஆகாசகாமி - பறந்து செல்லும் ஆற்றலுடையவன் : பறக்கும் குதிரை.


ஆகாச காமினி - விண்ணிற் பறந்து செல்வதற்கு உதவும் ஒரு மறை.
ஆகாசக் கப்பல் - வானூர்தி : விமானம்.
ஆகாசக் கல் - விண்ணிற் பறக்கும் அணு.
ஆகாச பலம் - விண் வீழ்கொள்ளி.
ஆகாச மண்டலம் - நாட்டிய வகை.


ஆகாசயானம் - வானூர்தி : விமானம்.
ஆகாசலிங்கம் - பஞ்சலிங்கத்துள் ஒன்று : சிதம்பரத்தில் உள்ளது.
ஆகாசவல்லி - ஒரு பூண்டு : சீந்தில்.
ஆகாடம் - எல்லை : நாயுருவி.
ஆகாதநம் - அடித்தல் : கொல்லல் : விலங்குகளைக் கொல்லுமிடம்.


ஆகாய கங்கை - மந்தாகினி.
ஆகாரணம் - அழைத்தல் : இழுத்தல் : கவர்தல்.
ஆகாரி - உண்போன் : உடம்பினையுடையவன் : சமையற்காரன் : உயிர் : பூனை.
ஆகாரை - உருவுடையாள்.
ஆகாறு - பொருள் வரும் வழி.


ஆகிடந்து - ஒரு நிகழ்கால இடை நிலை.
ஆகியர் - ஆகவேண்டும்.
ஆகிரந்தம் - புன்கு மரம்.
ஆகிலியர் - ஆகாதொழிக.
ஆகின்று - ஆகாநின்றது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 4:09 am

ஆகீசன் - ஆனைமுகன்.
ஆகுகன் - விநாயகன்.
ஆகுஞ்சனம் - சுருக்குகை.
ஆகுண்டிதம் - கோழை : காறல் : எச்சில்.
ஆகுதல் - செல்வம் பெறுதல் : பயன்படுதல் : மேலாதல் : விளைதல் : உண்டாக்குதல் : வளர்தல்.


ஆகுப - ஆகுவன.
ஆகுலித்தல் - துன்புறுதல் : அழுதல் : கவலல்.
ஆகுவாகனன் - பிள்ளையார்.
ஆகூதம் - அழைக்கப்பட்டது : வியப்பு : கருத்து : விருப்பம்.
ஆகூழ் - நல்வினைப் பயன்.


ஆகேறு - சரக்கொன்றை.
ஆகை - ஆதல் : உயருதல் : சம்பவிக்கை.
ஆகோ - ஆவேனோ?
ஆகோள் - பசுக் கவர்தல்.
ஆக்கக்கிளவி - ஆக்கம் உணர்த்தும் சொல்.


ஆக்கங் கூறுதல் - ஆசி கூறுதல் : வாழ்த்துதல்.
ஆக்கஞ்செப்பல் - தன் நெஞ்சில் வருத்தம் மிகுகின்ற படியைப் பிறருக்கு உரைக்கை.
ஆக்கந்திதம் - அசுவகதியின் ஒன்று.
ஆக்கப்பாடு - பேறு.
ஆக்கப்பெயர் - இடுகுறிப் பெயர் : காரணமின்றித் தொன்று தொட்டு வழங்கி வரும் பெயர்.


ஆக்கினா சக்கரம் - சக்கரம் போல் எங்கும் சுழலும் அரசன் ஆணை.
ஆக்கிநேயம், ஆக்கினேயம் - தென் கீழ்த்திசை அக்கினிக்குரியது : பதினெண் புராணத் தொன்று.
ஆக்கிநேயஸ்நானம் - திருநீற்றை உத்தூளனமாகத் தரிக்கை.
ஆக்கியாபித்தல் - கட்டளையிடுதல்.
ஆக்கிரகம் - விடாப்பிடி : கடுஞ்சினம் : ஆங்காரம் : சூரம் : தத்துவம் : பொல்லாங்கு : மேற்கொள்ளுதல்.


ஆக்கிரமணம், ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்.
ஆக்கிராணம் - மோந்து பார்க்கை : மூக்கு : மூக்கிலிடும் மருந்துப் பொடி.
ஆக்கினேயம் - ஒரு வகைக் கணை : பதினெண் புராணத் தொன்றாகிய அக்கினி புராணம் : தென் கீழ்த் திக்கு : குழைக்காத திருநீற்றுப் பூச்சு.
ஆக்கின்று - ஆக்கிற்று.
ஆக்குப்புரை - சமையற் பந்தல்.


ஆக்கொத்துமம் - சரக்கொன்றை.
ஆக்கொல்லி - தில்லை : ஒரு புழு.
ஆங்கனம் - அவ்விதம்.
ஆங்காரி - அகங்காரம் உள்ளவன் : செருக்குள்ளவன்.
ஆங்கிரசம் - தர்மநூல் பதினெட்டில் ஒன்று.


ஆங்கிரசன் - ஓர் இருடி.
ஆங்கீரச - ஓர் ஆண்டு.
ஆசங்கை - ஐயம் : தடை.
ஆசடை - நீளவாட்டத்தில் அமைக்கும் வீட்டின் முகட்டுத் தூலம்.
ஆசத்தி - பற்று.


ஆசந்தி - சவப்பாடை.
ஆசமநம் - மந்திர நீர் சிறுக உட் கொள்கை.
ஆசம் - சிரிப்பு.
ஆசயம் - உடலின் உட்பை : உறைவிடம் : கருத்து.
ஆசரித்தல் - கைக்கொள்ளுதல் : அநுட்டித்தல் : வழிபடுதல்.


ஆசலம் - துன்பம்.
ஆசலை - ஆடாதோடை.
ஆசவம் - கள் : விரைவு : ஆவேசம்.
ஆசவுசம் - தீட்டு.
ஆசறுதல் - முடிதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 4:09 am

ஆசறுதி - முடிவு : கடைசி.
ஆசனை - இருக்கையை உடையவள்.
ஆசன் - நகையுண்டாக்குவோன்.
ஆசாடபூதி - மோசஞ்செய்பவன்.
ஆசாட்டம் - தெளிவற்ற தோற்றம்.


ஆசாரக்கள்ளன் - ஒழுக்கமுடையவன் போல் நடிக்குங் கள்ளன்.
ஆசாரக்கோவை - பதினெண் கீழ்க்கணக்குள் ஒன்று.
ஆசாரஞ்செய்தல் - ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல்.
ஆசாரபரன் - ஒழுக்கத்தில் ஊக்கமுள்ளவன்.
ஆசாரிய சம்பாவனை - ஆசாரியருக்குக் கொடுக்கும் காணிக்கை.


ஆசாரியதண்டி - வடநூலாசிரியருள் ஒருவர் : தண்டியலங்காரம் இயற்றியவர்.
ஆசாரிய புருஷம் - கோயிற் குருக்களுக்கு விடப்படும் மானியம்.
ஆசாரியாபிடேகம் - குருவாதற்குச் செய்யப்படும் சம்ஸ்காரம்.
ஆசாள் - குருபத்தினி : தலைவி.
ஆசானுபாகு - முழங்கால் வரை தாழ்ந்த கையையுடையவன்.


ஆசான்றிறம் - குருபரம்பரை யொழுக்கம் : பாலையாழ்த்திறம் : ஓரிசை.
ஆசிடுதல் - பற்றாக வைத்தல் : அசை சேர்த்தல்.
ஆசிடை - வாழ்த்து : ஆசாக இடையிட்ட சொல் : கூட்டம் : சேலை.
ஆசிதகம் - இருத்தல்.
ஆசிதம் - ஆசனம் : நகரம் : பத்துப் பறை கொண்ட ஓர் அளவை : வசிக்குமிடம் : இருக்கை.


ஆசித்தல் - விரும்புதல்.
ஆசியம் - சிரிப்பு : வாய் : முகம் : நவரசத்துள் ஒன்று : விகடம்.
ஆசியரசம் - நகைச்சுவை.
ஆசிரமி - ஆச்சிரம நிலையில் நிற்பவன் : சந்நியாசி.
ஆசிரம் - இடம் : தீ : நெருப்பு : தணல் : கனல்.


ஆசிரயம் - அடுத்திருக்கை : இருத்தல் : இடம் : கொள்கொம்பு : அன்னம் :
புகலிடம் : வழக்கு.
ஆசிரயனம் - சார்ந்து நிற்கை.
ஆசிரவம் - நவ பதார்த்தங்களுள் ஒன்று : இணக்கம் : உபத்திரவம் : ஓடுதல் :
கீழ்ப்படிவு : தவறு : நீரோட்டம்.
ஆசிரிதன் - சார்ந்திருப்பவன்.
ஆசிரியச்சீர், ஆசிரியவுரிச்சீர் - அகவல் உரிச்சீர்.


ஆசிரியத்தளை - மாமுன் நேரும் விளமுன் நிரையும்வரத் தொடுக்கப்படுஞ் செய்யுட்டளை.
ஆசிரியம் - அகவல் : அகவற்பா.
ஆசிரிய விருத்தம் - அகவல் விருத்தம்.
ஆசிவேடம் - ஆலிங்கனம் : அணைப்பு : சார்பு : அணுக்களின் சேர்க்கை.
ஆசில் - மதிப்பு.


ஆசீயம் - கருஞ்சீரகம்.
ஆசீர்வாதம் - வாழ்த்து.
ஆசீவகர் - சமணததுறவி.
ஆசுகம் - அம்பு : காற்று : விரைவாய்ப் போதல் : பறவை.
ஆசுகி - பறவைப்பொது.


ஆசுசுக்கனி - அக்கினி : தீ.
ஆசுணம் - அசோகு : அரசு.
ஆசுமணை - நூல் சுற்றுங் க்ருவி.
ஆசுரபாவம் - அசுரத்தன்மை.
ஆசுரம் - ஆசுரம் : இஞ்சி.


ஆசுரி - அசுரப் பெண்.
ஆசுவம் - குதிரைக் கூட்டம் : குதிரை இழுக்குந் தேர் : குதிரை சம்பந்தமுடையது.
ஆசூசம் - தீட்டு : அசுத்தம்.
ஆசெறூண் - ஆதீண்டு குற்றி.
ஆசேகம் - நனைக்கை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 4:10 am

ஆசைக்காரணர் - திக்குப் பாலகர்.
ஆசைக்கிழத்தி - வைப்பாட்டி.
ஆசைப்பாடு - விருப்பம்.
ஆசைவார்த்தை - விருப்பம் உண்டாகச் சொல்லுஞ் சொல்.
ஆசோதை - இளைப்பாறல் : களைப்பாறல்.


ஆசௌசம் - அசூசம் : தீட்டு : விலக்கு.
ஆச்சல் - பாய்ச்சல் : அசைத்தல் : நகர்த்தல்.
ஆச்சா - சாலமரம்.
ஆச்சாட்டுப் பயிர் - சிற்றீரமுள்ள நிலத்துப் பயிர்.
ஆச்சாதம் - உறை : புடவை : மூடி : மேலங்கி.


ஆச்சாதனபலம் - பருத்திக் கொட்டை.
ஆச்சாதனம் - ஆடை : மறைப்பு.
ஆச்சாள் - ஆத்தாள் : தாய் : ஈன்றாள்.
ஆச்சான் - ஆசாரியன்.
ஆச்சியம் - நெய் : நேயம் : பரிகசிக்கத்தகுந்தது.


ஆச்சிரமம் - ஆசிரமம் : ஆச்சிரயம்.
ஆச்சிரயாசித்தல் - பட்சத்தில் இல்லாத ஏதுவைக் கூறும் ஏதுப் போலி.
ஆச்சிலை - கோமேதகம்.
ஆஸ்தானம் - அரசவை : சபை.
ஆஸ்தி - சொத்து.


ஆஸ்திகம் - கடவுளுண்டென்னுங் கொள்கை.
ஆஸ்பதம் - புகலிடம் : காரணம்.
ஆஞா, ஆ - தந்தை.
ஆஞ்சான் - மரக்கலப்பாயை இழுக்குங் கயிறு : பாரந்தூக்கும் கயிறு : இளமரத்தின் தண்டு.
ஆஞ்சி - அசைவு : அலையல் : ஏலம் : கூத்து : சோம்பு : அச்சம்.


ஆஞ்சிக் காஞ்சி - போர்க்களத்து இறந்த கணவனது வேல் வடுவைக் கண்டு மனைவி அஞ்சிய புறத்துறை.
ஆஞ்சில் - சங்கஞ்செடி : சங்கு.
ஆஞ்செல்கை - தெப்பம்.
ஆடகமாடம் - இது மலை நாட்டில் கன்னியாகுமரிக்கு வடமேற்கு எல்லையில் ஏழு நாழிகை
வழித் தூரத்திலுள்ளது : அனந்தபத்மநாபன் கோயில் கொண்ட திருவனந்தபுரம்.
ஆடகச் சயிலம் - மேருமலை.


ஆடகர் - நிலத்திலிருந்து இரண்டு கோடி யோசனைக்குக் கீழே கனிட்ட பாதலத்தில் இருக்கும் ஆடகேச வுருத்திரர்.
ஆடகன் - இரணியன்.
ஆடகி - துவரை.
ஆடகேசன் - பாதாள உலகத்திலுள்ள உருத்திரகணத் தலைவன்.
ஆடகேசுரம் - ஆடகேசவுருத்திரர்கள் வாழும் இடம்.


ஆடங்கம் - துன்பம் : காலந்தாழ்த்தல்.
ஆடம்பரம் - அலங்காரமான தோற்றம் : இடம்பம் : இறுமாப்பு : இன்பம் : ஒட்டோலக்கம் :
போர்ப்பறை யானைப் பிளிற்றொலி.
ஆடலார் - கூத்துடையவர்.
ஆடல் கொடுத்தல் - அசைதல் : இடங்கொடுத்தல் : துன்பம் அனுபவித்தல்.
ஆடவை - நடனசபை : மிதுனராசி.


ஆடற்கூத்தியர் - அகக்கூத்தாடுங் கணிகையர்.
ஆடனூல் - கூத்து நூல்.
ஆடா - அசையமாட்டா : ஆடாத : ஆடாமல் : ஆடி : ஆடாதவை : குதிரைக் காலில் வரும் ஒருவிதக் கட்டி.
ஆடிக்கழைத்தல் - ஆடி மாதப் பிறப்பில் மாப்பிள்ளையையும் பெண்ணையும் பெண் வீட்டுக்கு அழைத்தல்.
ஆடிக்கோடை - ஆடித் திங்களில் அறுவடையாகும் நெல்.


ஆடிடம் - விளையாடும் இடம்.
ஆடிய - அளைந்த : நடித்த : கூத்தாடிய.
ஆடுகம் - ஆடுவேம்.
ஆடுதல் - அசைதல் : அலைதல் : அனுபவித்தல் : கலத்தல் : கொண்டாடுதல் : செய்தல் : சொல்லுதல் : தோன்றுதல் : நீராடல் : நடனஞ் செய்தல் : பிறத்தல் : புணர்தல் : முயலுதல் : வழங்குதல் : வழுவுதல் : விளையாடுதல் : வெல்லுதல்.
ஆடுநர் - கூத்தர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 4:11 am

அடூஉ அறிசொல் - ஆண்பாற் கிளவி.
ஆடூஉக் குணம் - அறிவு : நிறைவு : ஓர்ப்பு : கடைப்பிடி.
ஆடூஉமுன்னிலை - ஆண்பாலாரை முன்னிலைப்படுத்திக் கூறுகை.
ஆடைக்குங் கோடைக்கும் - எல்லாப் பருவகாலத்தும்.
ஆடைத்தயிர் - ஏடெடாத தயிர்.


ஆடோபம் - பெருமை : வாயு : வீங்குகை : உப்பல் : பருத்தல் : ஊதுதல்.
ஆட்காசு - பழங்காசு வகை.
ஆட்கொல்லி - கொலைஞன் : பணம் ஆட்கொள்ளுதல் : அடிமை கொள்ளுதல்.
ஆட்செய்தல் - தொண்டு செய்தல்.
ஆட்சேப சமாதானம் - தடை விடை.


ஆட்சேபம் - தடை : மறுத்துக் கூறுதல்.
ஆட்டகம் - திருமஞ்சன சாலை.
ஆட்டல் - அசைத்தல் : அலைத்தல் : அரைத்தல் : நடப்பித்தல் : நீராட்டல்.
ஆட்டாளி - செயலாற்றுவோன் : நிர்வகிப்போன்.
ஆட்டாள் - ஆட்டிடையன்.


ஆட்டி - பெண்பால் விகுதி : பெண் : மனைவி.
ஆட்டுக்கசாலை - ஆட்டுக்கிடை.
ஆட்டுதல் - அசைத்தல்.
ஆட்டுப் பலகை - செக்கின் கீழ்ச் சுற்றும் மரம்.
ஆட்டுமறிக் கூலி - கிடைவைக்கத் தரும் கூலி.


ஆட்டைத் திதி - ஆட்டைத் திவசம் : ஆட்டைச் சிராத்தம்.
ஆட்டை விழா - ஆண்டுத் திருவிழா.
ஆட்படுதல் - தொண்டனாதல் : உயர் நிலையடைதல் : உடல் நலமுறுதல்.
ஆட்பார்த்தல் - வேறாள் வராமற் பார்த்தல் : ஆள் தேடுதல்.
ஆட்பாலவன் - அடியாள்.


ஆட்பிடியன் - முதலை.
ஆணகம் - சுரை.
ஆணங்காய் - ஆண் பனையின் காய்.
ஆணத்தி - கட்டளை.
ஆணம் - பற்றுக்கோடு : அன்பு : சிறுமை : குழம்பு : கொள்கலம்.


ஆணலி - ஆண் தோற்றம் மிகுந்த அலி.
ஆணழ்கன் - அழகு வாய்ந்தவன்.
ஆணன் - ஆண்மையுடையவன்.
ஆணாடுதல் - மனம் போனபடி நடத்தல்.
ஆணாள் - பரணி : கார்த்திகை : உரோகினி : புணர்பூசம் : பூசம் : அத்தம் : அனுடம் : திருவோணம் :
பூரட்டாதி : உத்திரட்டாதி ஆகிய ஆண் நட்சத்திரங்கள்.


ஆணாறு - மேற்கு நோக்கியோடும் ஆறு.
ஆணிக்கொள்ளுதல் - இருப்பிடத்தை நிலைபெறச் செய்து கொள்ளுதல்.
ஆணிக்கோவை - உரையாணி கோத்தமாலை.
ஆணித்தரம் - முதல்தரம் : உறுதி.
ஆணிப்புண் - உள்ளாணியுள்ள சிலந்தி.


ஆணிமுத்து - உயர்தரமான முத்து.
ஆணியிடுதல் - இறக்குங் காலத்தில் விழி அசையாமலும் மூடாமலும் விழித்தபடியிருத்தல்.
ஆணிவேர் - மூலவேர்.
ஆணுடம்பு - ஆண்குறி.
ஆணெழுத்து - உயிரெழுத்து.


ஆணையோலை - கட்டளையோலை.
ஆண்கடன் - ஆண்மக்கள் கடமை.
ஆண்குமஞ்சான் - குங்கிலியம்.
ஆண்கை - ஆண்பாற் செயல் காட்டும் அபிநயக்கை.
ஆண்சிரட்டை - தேங்காயின் அடிப் பாதியோடு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 4:12 am

ஆண்டலை - பூவாது காய்க்கும் மரம் : கோழி : ஆண்மகன் தலை போன்ற தலையுடைய ஒரு புள்.
ஆண்டலைக் கொடியுயர்த்தோன் - முருகன்.
ஆண்டலையடுப்பு - ஆண்டலைப் புள் வடிவாகச் செய்து பறக்கவிடப் பெறும் மதிற்பொறி.
ஆண்டவரசு - திருநாவுக்கரசு நாயனார்.
ஆண்டளப்பான் - வியாழன்.


ஆண்டான் - ஆண்டவன்.
ஆண்டுமாறி - ஆண்டு மூஞ்சி : ஒரு வகைச் சொல்.
ஆண்டொழில் - வீரச் செய்கை.
ஆண்தண்டு - வலக்காதின் தண்டு.
ஆண்பாடு - ஆண்மக்களின் முயற்சி.


ஆண்பால் எழுத்து - அ, இ, உ, எ, ஒ என்னுங் குற்றெழுத்துக்கள்.
ஆண்பெண் - தம்பதி.
ஆண்மாரி - அடங்காக் குணமுள்ளவள்.
ஆதகு - ஆகின்ற.
ஆதக்க - ஆகக்கடவன.


ஆதண்டை - காற்றோட்டி.
ஆததாயிகள் - கொடியோர்.
ஆதபயோகம் - வெயிலின் கடுமை தாங்கும் யோக நிலை.
ஆதநீயம் - ஒருவகை நெல்.
ஆதமிலி - ஆதரவில்லாதவன்.


ஆதம் - ஆதரவு : அன்பு : கூந்தற் பனை : மகிழ்ச்சி.
ஆதரவுச் சீட்டு - பற்றுச் சீட்டு.
ஆதரிக்கை - அன்பு செய்தல்.
ஆதரிசம் - கண்ணாடி : விரிவு : மூலப்படி.
ஆதர் - அறிவில்லாதவர்.


ஆதளை - ஆமணக்கு : காட்டாமணக்கு வகை : ஆயாசம் : மாதுளை.
ஆதவச்சுரம் - வெய்யிலில் வழி நடப்பதனால் உண்டாகும் ஒரு வகைச் சுரம்.
ஆதவம் - வெயில் : ஒளி : குடை : கொன்றைப் பூ.
ஆதவன் - ஆதபன் : பார்ப்பான்.
ஆதனவினி - ஒரு சேரன்.


ஆதனழிசி - ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் நண்பருள் ஒருவன்.
ஆதனுங்கன் - ஒரு கொடையாளன்.
ஆதனோரி - ஒரு வள்ளல்.
ஆதன்மை - பேதைமை.
ஆதன்மையால் - ஆனபடியால் : ஆகையால்.


ஆதாரதண்டம் - முதுகெலும்பு.
ஆதாரத் தோற்றம் - ஆதார தானத்தில் தோன்றுந் தோற்றங்கள் : அவை பந்தம், விளக்கு,
மின்னல், மின்மினி, கதிரவன், திங்கள் என்பன.
ஆதாளி - பேரொலி : மனக்கலக்கம் : ஆடம்பரப் பேச்சு : புரட்டல் : வீம்பு பேசுதல்.
ஆதாளிமன்னன் - கரடி.
ஆதானம் - அடகு : எடுத்தல் : ஏற்றுக் கொள்ளுதல் : கருத்தரித்தல் : சங்கற்பித்தல் : செய்தல் :
செய்து முடித்தல் : ஆனை முழக்கம்.


ஆதிகம் - சிறுகுறிஞ்சா : சிறு சேவிகச் செடி.
ஆதிகவி - பழைமையான புலவன் : வால்மீகி முனிவர் : முதற் கவிஞன்.
ஆதிகாரணம் - முற்காரணம்.
ஆதிகாலம் - முதற்காலம்.
ஆதிகாவியம் - வால்மீகி இராமாயணம்.


ஆதிக்குரு - முப்பூ.
ஆதிசாரணை - முதலிற் சார்தல் : வாள் கொண்டு செய்யும் போர்.
ஆதிசான் முனிவன் - புத்தன்.
ஆதிசைவம் - சைவம் பதினாறில் ஒன்று.
ஆதிச்சனி - மகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 4:13 am

ஆதிதிராவிடன் - பஞ்சம சாதியான்.
ஆதிதேயன் - அதிதியைப் போற்றுபவன்.
ஆதிதேவன் - சிவபெருமான் : கதிரவன் : முதற்கடவுள் : நாராயணன் : பிரமசைதயன்.
ஆதிதைவிகம் - தெய்வத்தால் வருந் துன்பம்.
ஆதித்த சயநம் - ஒரு விரதம்.


ஆதித்தமணி - கதிரவன்.
ஆதித்தமண்டலம் - உள்ளத்தாமரையில் அறுகோணமாய் எட்டிதழுடைய ஒரு மலராய்க் கீழ் நோக்கியிருப்பது : திங்கள் மண்டிலம்.
ஆதித்தியம் - உபசரணை.
ஆதிநாதன் - கடவுள் : தீர்த்தங்கரருள் ஒருவன் : சிவன்.
ஆதிநாராயணன் - வச்சிரக்கல் : திருமால்.


ஆதிநூல் - மறை.
ஆதிபலம் - சாதிக்காய்.
ஆதிபன் - அரசன் : எப்பொருட்கும் இறைவன் : தலைவன்.
ஆதிபாடை - தமிழ்மொழி : வட மொழி.
ஆதிபுங்கவன் - அருகன் : கடவுள்.


ஆதிபுரி - திருவொற்றியூர்.
ஆதிபூதன் - நான்முகன் : முன் பிறந்தவன் : முன்னுள்ளவன்.
ஆதிபூமி - திருமணவேள்வி நடத்தும் இடம்.
ஆதிபௌதிகம் - துன்பக் கூட்டங்கள் மூன்றனுள் ஒன்று : அஃது ஐம்பூதங்களால் வருவது.
ஆதிப்புலவன் - அகத்திய முனிவன்.


ஆதிமகாகுரு - துரிசு.
ஆதிமகாநாதம் - உலோகமணல்.
ஆதிமடக்கு - அடியில் முதலிற் சொல் மடங்கி வருவது.
ஆதிமருந்து - சுக்கு : மிளகு : திப்பிலி.
ஆதிமலை - இமயமலை.


ஆதிமீன் - அசுவினி.
ஆதிமுதல் - எல்லாவற்றிற்கும் முன் : கடவுள் : தொடக்கம் : முதல் : உலகந் தோன்றிய காலம்.
ஆதிமுதல்வன், ஆதிமுனிவன் - புத்தன்.
ஆதிமுத்தர் - மலம்நீங்கினவர்.
ஆதியங்கடவுள் - முதற்கடவுள் : அருகன்.


ஆதியந்தம் - முதல் தொடங்கி முடிவு வரை.
ஆதியரியந்தம் - போக பூமிவகை.
ஆதியுகம் - கிருதயுகம்.
ஆதியுலா - திருக்கைலாய ஞானவுலா.
ஆதியூழி - ஆதியுகம்.


ஆதியெழுத்து - உயிர் பன்னிரண்டும், மெய் பதினெட்டுமாகிய முதலெழுத்துக்கள்.
ஆதிரம் - நெய்.
ஆதிரன் - பெரியோன்.
ஆதிரைமுதல்வன், ஆதிரையான் - சிவன்.
ஆதிவாகியம் - நுண்ணுடம்பு : புரியட்டகம்.


ஆதிவாரம் - ஞாயிற்றுக் கிழமை.
ஆதீண்டுகுற்றி - பசுக்கள் உரிஞ்ச அமைக்கப் பெறுங் கல்.
ஆதீனகர்த்தர் - சைவமடாதிபதி.
ஆது - யானைப் பாகர் வழங்குஞ் சொல்.
ஆதும் - ஒன்றும் : சிறிதும் : ஒரு பொருளும் : ஆகக்கடவேம்.


ஆதுலசாலை - அசத்தர்க்கும் வறியவர்க்கும் உண்டியும் உறைவிடமும் அமைக்கும் சாலை.
ஆதேசம், ஆதேயம் - திரிந்த எழுத்து : கட்டளை : தாங்கப் பெறுவது.
ஆதொண்டை - ஒரு கொடி.
ஆதொண்டைச் சக்கரவர்த்தி - தொண்டை மண்டலத்தை யரசாண்ட முதலரசன்.
ஆதோரண மஞ்சரி - எதிர்த்த மதயானைகளை யழித்தும் அடக்கியும் போந்த வீரனது சிறப்பை வஞ்சிப்பாவால் தொடுத்துப் பாடும் பிரபந்தம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 4:15 am

ஆதோரணன் - யானைப் பாகன்.
ஆத்தம் - அன்பு.
ஆத்தவாக்கியம் - நட்பாளர் மொழி : மறைநூல் முதலியவைகள் : மேற்கோள் உரைகள்.
ஆத்தன் - நம்பத்தக்கவன் : அருகன் : கடவுள் : விருப்பமானவன்.
ஆத்தாடி - வியப்புக் குறிப்பு : இளைப்பாற்றற் குறிப்பு.


ஆத்தானம் - அரசவை : பெருமன்றம் : கோபுரவாயில்.
ஆத்திக்கேடு - ஆற்றாமை : சத்துக் கேடு.
ஆத்திட்டி - நீர் முள்ளி.
ஆத்தியான்மிகம் - தன்னைப் பற்றி வருந்துன்பம்.
ஆத்திரையம் - வேதாங்கமாகிய கற்பத்தைப் பற்றிய ஒரு வட நூல்.


ஆத்திரையன் - அத்திரி குலத்திற் பிறந்தவன்.
ஆத்தின்னி - பாணன்.
ஆத்து - பிணித்து : பிணிபட்டு : யாத்து.
ஆத்துமம் - உயிர்.
ஆத்துமீயம் - தன்னுடையது.


ஆத்தை - தாய் : ஓர் அதிசய இரக்கச் சொல்.
ஆத்மகத்தி - தற்கொலை.
ஆத்மசத்தி - ஆத்மாவுக்குரிய ஆற்றல்.
ஆத்மஞானி - தன்னையறிந்தோன்.
ஆத்மலாபம் - சொந்தலாபம்.


ஆத்மானுபவம் - தன்னைத் தான் அனுபவிக்கை.
ஆநகதுந்துபி - வசுதேவன் போர்ப்பறை.
ஆநநம் - ஒருவகைத்துந்துபி : தேவதாரு : முகம்.
ஆநந்தகானம் - காசி.
ஆநந்த நித்திரை - யோக நித்திரை.


ஆநந்தபாட்பம் - மகிழ்ச்சியால் வரும் கண்ணீர்.
ஆநந்தம் - அரத்தை : கடவுள் : சாக்காடு : யாப்பிலக்கண நூற் குற்றங்களுள் ஒன்று : மகிழ்ச்சி.
ஆநந்தமயம் - ஆனந்த நிறைவு.
ஆநந்தமூலி - கஞ்சா.
ஆநந்ததசம் - ஒருவகை மருந்து.


ஆநந்தவல்லி - உமாதேவி : கோழித்தலைக் கெந்தகம்.
ஆநந்தன் - அருகன் : கடவுள் : சிவன் : பலராமன்.
ஆநந்தாகிருதி - கடவுளுடைய எண் குணங்களில் ஒன்று.
ஆநந்தி - அரத்தைப் பூண்டு : ஆநந்தமுடையவள் : ஆநந்தி என்ற ஏவல் : உமாதேவி : மகிழ்ச்சி.
ஆநந்தியம் - அழிவின்மை : ஆநந்தத்தின் தன்மை : முடிவின்மை : நித்தியம்.


ஆநி - கழிவு : குறைவு : கேடு : விடுதல் : பொருளிழப்பு.
ஆநிலன், ஆநிலி - அனுமான் : வீமன்.
ஆநிலை - பசுக் கொட்டில்.
ஆநின்று - நிகழ்கால இடைநிலை.
ஆநீர் - கோசலம் : கோமூத்திரம்.


ஆந்தகம் - குருடர் கூட்டம் : பாதாள உலகம்.
ஆந்தைக்காதல் - ஆந்தை கூவுதல் : ஆந்தை நூல்.
ஆந்தோணி - சிவிகை.
ஆப - ஆவார்.
ஆபச்சைவன் - அட்டவசுக்களில் ஒருவன்.


ஆபணம் - அங்காடி.
ஆபணிகன் - வாணிகஞ் செய்வோன்.
ஆபதம் - ஆபத்து.
ஆபதோத்தாரணன் - இடர் நீக்குவோன்.
ஆபத்சகாயன் - துன்பத்தில் உதவுவோன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 4:15 am

ஆபத்தம்பம் - அறநூல் பதினெட்டில் ஒன்று : மகிழ்ச்சி.
ஆபத்தம் - அன்பு : அணிகலன் : கட்டுதல் : நுகம் : பிரதிட்டை.
ஆபத்தி - அடைதல் : பெறுதல் : அதிக்கிரமித்தல் : தவறு : பொருத்துதல் : இடுக்கண்ணான நிகழ்ச்சி.
ஆபந்தம் - அலங்காரம் : உருக்கம் : கட்டு : நுகம் : விபத்து : ஆபத்து : இடையூறு.
ஆபம் - நீர் : தீவினை.


ஆபயன் - ஆவின்பால்.
ஆபரணச் செப்பு - அணிகலப் பேழை.
ஆபவன் - வசிட்ட முனிவன்.
ஆபற்சந்நியாசம் - சாக்காட்டையஞ்சிப் பெறும் துறவு.
ஆபாசித்தல் - உண்மையான பொருளைப் போலத் தோன்றுதல் : அஃதாவது கயிறு பாம்பாகத் தோன்றுவதைப் போன்றது.


ஆபாத சூடம் - அடிமுதல் முடிவரை.
ஆபாதம் - அடர்த்தல் : தாக்கல் : துன்பஞ் செய்தல் : இறங்குதல் : இறங்கச் செய்தல் : ஓடுதல் : விழுதல்.
ஆபாதன் - தீயவன்.
ஆபீரவல்லி - இடைச்சேரி.
ஆபீனம் - முலைமடி : கிணறு : கொழுப்பு.


ஆபை - அழகு : ஒளி : தோற்றம்.
ஆபோகம் - கீதவுறுப்புள் ஒன்று.
ஆபோசனம் - உண்கைக்கு முன்னும் பின்னும் மந்திர பூர்வமாக நீரை உட்கொள்ளுகை.
ஆப்தர் - நண்பர்.
ஆப்பிடுதல் - அக்கப்படுதல்.


ஆப்பியந்திரம் - உள்ளானது.
ஆமக்கழிச்சல் - சீதபேதி.
ஆமங்கர் - கோமேதகத் தீவில் வாழும் சாதியார்களுள் ஒருவர்.
ஆமடம் - மசுமடம் : உயர்வு : மேன்மை.
ஆமணத்தி - கோரோசனை.


ஆமம் - பாகஞ் செய்யப்படாதது : அரிசி : சீதபேதி : கடலை : துவரை.
ஆமயம் - நோய் : ஆவின் சாணம்.
ஆமரம் - எட்டி மரம்.
ஆமரி - வசனம் : நெல்லி : சிறுநெல்லி.
ஆமலகம் - நெல்லி.


ஆமல் - மூங்கில் : விஷ மூங்கில்.
ஆமளம் - சிவத்துதி வகை.
ஆமா - காட்டுப் பசு : பால் கொடுக்குந் தாய் : ஆமாம்.
ஆமாகோளா - கடுக்காய்த் தீ.
ஆமாங்கு - பாற்பசு : தகுதி : விபரீதம் : வியப்பு.


ஆமாத்தூர் - திருவாமாத்தூர் என்னும் ஊர்.
ஆமான் - ஆமா.
ஆமான் புகல்வி - ஆமான் ஏறு.
ஆமிடம் - உணவு : அனுபவம் : ஊன் : இச்சை.
ஆமிநாயம் - ஆகமம் : பரம்பரையான வழக்கம்.


ஆமிரம் - மாமரம் : புளிப்பு : மாம்பழம்.
ஆமிரேசர் - ஏகாம்பரநாதர்.
அமிலம் - புளியமரம் : புளிப்பு.
ஆமிஷம் - கண்டு முதல் : விளைவு மதிப்பு.
ஆமுகர் - நந்திதேவர்.


ஆமூர் - சோழ நாட்டில் உள்ள ஊர்.
ஆமைக்கல் - அறுகோணக்கல்.
ஆமைத்தாலி - ஆமை வடிவிலுள்ள தாலி.
ஆமோசனம் - விடுதலை செய்தல்.
ஆமோதம் - மகிழ்ச்சி : மிகு மணம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 31, 2014 4:16 am

ஆம்பலரி - கதிரவன் : முதலை : குமுதம் : யானை.
ஆம்பலா - புளியாரை.
ஆம்பற் குழல் - குமுத வடிவாக அணைசு பண்ணிச் செறிந்த ஓர் இசைக் குழல்.
ஆம்பான் - கணவன்.
ஆம்பிரம் - ஆம்பிலம் : புளிப்பு : கள் : ஆமிலம்.


ஆம்புடை - உபாயம் : சூழ்ச்சி.
ஆம்புலம், ஆம்புவம், ஆம்பூறு - குதிரை : பாய்மா : துரகதம் : கந்தருவம் : வாசி : இவுளி : கந்துகம் : பரி : அசுவம் : கற்கி.
ஆய - ஆகிய.
ஆயக்கம் - மொத்த எண்.
ஆயக்காரி - விலைமகள்.


ஆயதம் - நீளம்.
ஆயதாக்கி - அகன்று நீண்ட கண்களையுடையவள்.
ஆயத்தி - உருக்கம் : எல்லை : நன்னடை : நாள் : நீளம் : பெலன் : முயற்சியுடையவள்.
ஆயத்துய்த்தல் - தலைவியைப் பாங்கி முதலிய பெண்கள் கூட்டத்திற் சேர்த்தல்.
ஆயத்துறை - சுங்கம் வாங்கும் இடம்.


ஆயநம் - ஒருவகை நெல் : ஆண்டு.
ஆயந்தி - தமையன் : மனைவி.
ஆயப்பாலை - பாலைவகை.
ஆயர் - இடையர்.
ஆயல் - ஆராய்தல் : களைந்துவிடல் : தியானித்தல் : தெரிதல் : தெளிதல் : நுண்மை : பறித்தல்.


ஆயா - பாட்டி : மர வகை.
ஆயாமம் - அடக்குகை : அகலம் : உயரம் : தடுத்தல் : நீட்சி.
ஆயிடை - அவ்விடம் : அக்காலத்து.
ஆயிரக்காலி - துடைப்பம் : மரவட்டை.
ஆயிரங்கண்ணன் - இந்திரன்.


ஆயிரங் கதிரோன் - சூரியன்.
ஆயிரங்காய்ச்சி - மிகுதியாகக் காய்க்கும் தென்னை : பலா : மா போன்ற மரங்கள்.
ஆயிரம் பெயரோன் - திருமால்.
ஆயிர முகத்தோன் - வீரபத்திரன்.
ஆயிரவாரத் தாழியன் - புத்தன்.


ஆயில் - மதகரி : வேம்பு : செவ்வகில் : ஆயிலியம்.
ஆயிழை - பெண் : தெரிந்தெடுத்த அணிகளையுடையவள்.
ஆயின்று - ஆயிற்று.
ஆயு, ஆயுசு - வாழ்நாள்.
ஆயுட்டானம் - சன்ம லக்கினத்திலிருந்து எட்டாந்தானம்.


ஆயுஷ்ய ஓமம் - தீர்க்காயுசு வேண்டி ஆண்டுதோறும் சிறப்பு நாட்களில் செய்யும் ஓமம்.
ஆயுட் பொருத்தம் - மணப் பொருத்தங்களுள் ஒன்று.
ஆயுதசாலை - படைக்கல வீடு.
ஆயுரு - பரிகார வித்தை : மருத்துவ நூல்.
ஆயா - குறிஞ்சி நில மகளிர் பறவையோட்டுதலைக் குறிப்பிக்கும் ஒலி.


ஆயோகம் - காரை : பூசனை : ஆராதனை.
ஆயோதனம் - போர்.
ஆய்க்குடி - இடைச்சேரி.
ஆய்ச்செல் - பாட்டு : வேகம்.
ஆய்ஞன் - ஆராய்பவன்.


ஆய்தப் புள்ளி - ஆயுதவெழுத்து.
ஆய்தல் - நுணுகியறிதல் : வருந்துதல் : அழகமைதல் : அசைதல் : கொண்டாடுதல் : குத்துதல் : கொய்தல்.
ஆய்தூவி - சூட்டுமயிர்.
ஆய்த்து - ஆயிற்று.
ஆய்நலம் - அழகிய நலம்.

நன்றி ;நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "ஆ"  Empty Re: தமிழ் அகராதி - "ஆ"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum