Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
என்னை யாரும் கைக்கூலி என்று சொல்லிவிட முடியாது!– மட்டக்களப்பில் இயக்குனர் பாரதிராஜா
Page 1 of 1
என்னை யாரும் கைக்கூலி என்று சொல்லிவிட முடியாது!– மட்டக்களப்பில் இயக்குனர் பாரதிராஜா
என்னை யாரும் கைக்கூலி என்று சொல்லிவிட முடியாது!– மட்டக்களப்பில் இயக்குனர் பாரதிராஜா
நான் இலங்கை வந்தது அறக்கட்டளை சார்பாக அங்குள்ள கலைஞர் பெருமக்களை சந்திப்பதற்காகவும் அவர்களைக் கௌரவிப்பதற்காகவுமே வந்த ஒரு கலைஞன். ஆனால் அந்த அமைச்சர் என்னை வந்து சந்தித்த விடயத்தை ஒரு விசமாக உலகம் பூராகப் பரப்பி உலகத் தமிழர்கள் அத்தனை பேர்களுக்கும் என்மீது அவப் பெயரை உண்டாக்க சிலர் நினைக்கிறார்கள் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்தார்.நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற கரைஞர்களைப் பாராட்டும் நிகழ்வில் பிரதம அதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இயக்குனர் பி.பாரதிராஜா மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது
நான் அகிலன் பவுண்டேசன் நிறுவனர் நண்பர் கோபாலகிருஸ்ணனின் அறக்கட்டளை சார்பாக அவரின் வேண்டுதலின் நிமித்தம் கலைஞர்களைச் சந்தித்து பாராட்டுவதற்காக இலங்கை வந்தேன்.
இந்த வகையில் கடந்த சனிக்கிழமை யாழ்பாணத்தில் கலைஞர்களைச் சந்தித்தோம். அந்த நேரத்தில் நான் அங்கு தங்கி இருந்த போது இந்திய தாதரகத்தில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் இலங்கை அமைச்சர் ஒருவர் என்னைச் சந்திக்க வர இருப்பதாகச் சொன்னார்கள். அப்போது நான் எண்ணினேன் அமைச்சர்களை நாம் தான் போய் சந்திக்க வேண்டும், ஆனால் அமைச்சரே என்னைச் சந்திக்க வருகிறாரா என நினைத்தேன்.
அப்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்னை வந்து சந்தித்தார். மீனவர் பிரச்சினை பற்றிப் பேச முற்பட்டார். நான் அப்போது அவரிடம் சொன்னேன், அரசியல் பேசுவதற்கு நான் இங்கு வரவில்லை, நான் இங்கு வந்ததன் நோக்கம் கலைஞர்களைச் சந்திப்பதற்காகத்தானே ஒழிய அரசியல் பேசுவதற்கல்ல என சொன்னேன்.
அதன்போது அவருடன் வைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் அந்த புகைப்படங்களை இணையத்தளங்களில் வெளியிட்டு பாரதிராஜா இந்த அமைச்சரைச் சந்தித்தார், இவர் அரசின் கைக்கூலியாக வந்திருக்கிறாரோ என்ற ஒரு அபச்சாரமான, கேவலமான ஒரு விடயத்தை பாரதிராஜாவின் மேல் புள்ளியிட்டு அதை உலகம் முழுவதும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதை நான் இந்த இடத்தில் சொல்லவில்லை என்றால் நான் நாகரீகமற்றவனாகி விடுவேன்.
நான் இலங்கை வந்தது அறக்கட்டளை சார்பாக அங்குள்ள கலைஞர் பெருமக்களை சந்திப்பதற்காகவும் அவர்களைக் கௌரவிப்பதற்காகவுமே வந்த ஒரு கலைஞன். ஆனால் அந்த அமைச்சர் என்னை வந்து சந்தித்த விடயத்தை ஒரு விடயமாக ஒரு விசமாக உலகம் பூராகப் பரப்பி உலகத் தமிழர்கள் அத்தனை பேர்களுக்கும் என்மீது அவப் பெயரை உண்டாக்க சிலர் நினைக்கிறார்கள்.
இந்த உண்மைக்குப் புறம்பான விடயத்தை பத்திரிகைக்காரர்களைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும் என நினைத்தேன்.
ஆனாலும் முதல் தடவையாக இங்கு சொல்கின்றேன். நான் இங்கு வந்தது என் நண்பன் கோபாலகிருஸ்ணனின் அறக்கட்டளை சார்பாக நடைபெறும் கலைவிழாவில் கரைஞர்களைக் கௌரவப்படுத்துவதற்காக வந்தேனே தவிர வேறு எதற்காகவும் வரவில்லை என்னை யாராலும் கைக்கூலி என்று சொல்லிவிட முடியாது.
முப்பது நாற்பது ஆண்டுகளாக மூன்று நான்கு முதலமைச்சர்களைப் பார்த்து விட்டேன், தமிழ் நாட்டில் நான் அரசியலில் வந்திருந்தால் மிகப்பெரிய அதிகாரத்தில் நான் சென்றிருப்பேன். ஆனால் நான் அதை விரும்பவில்லை, ஆனால் நான் ஒரு நல்ல கலைஞனாக வாழ்ந்து சாக வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.
உலகில் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரினதும் பூர்வீகம் ஒரே இடத்தில் இருந்துதான் ஆரம்பமாகின்றது. இந்த தமிழர்களுக்கு துயரம் வரும்போது இந்த பாரதிராஜா குரல் கொடுப்பான். ஆனால் நான் ஒரு அரசியல்வாதியாக இல்லை. இந்த வகையில் ஈழத்தமிழர்களும் எமது தொப்புள் கொடி உறவுகளே, அவர்களுக்கு நான் ஒரு போதும் தீங்கு செய்யமாட்டேன் என அவர் மேலும் அங்கு தெரிவித்தார்.
அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் கதிரவன் கலைக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு, கிரான்குளம் சீ மூன் காடன் விடுதியில் நடைபெற்ற இந்த கலைஞர்களைப் பாராட்டும் நிகழ்வில் “கிராமியக் கலைஞானி” என்ற பட்டம் மட்டக்களப்பு கலைஞர்களால் இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ P.பாரதிராஜாவுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பைச் சேர்ந்த 30 கலைஞர்கள் இயக்குனர் பாரதிராஜாவினால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» நான் ஒருமுறை ஆட்சிக்கு வந்துவிட்டால் என்னை யாரும் வீழ்த்த முடியாது: விஜயகாந்த் பேச்சு
» இதனால் தான் என்னை அந்தர் பல்டி தாத்தா / தமிழக கருணா என்று என்னை மக்கள் அழைக்கிறார்கள்:படியுங்கள்
» என்னை அடிபணிய வைக்க முடியாது: அனந்தி எழிலன்
» "மக்கள் யாரும் அடுப்பை பற்ற வைக்க வேண்டாம் என்று அறிவிப்பு"
» எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு பாஜக மதிப்பளிக்க வேண்டும்!- இயக்குனர் பாரதிராஜா
» இதனால் தான் என்னை அந்தர் பல்டி தாத்தா / தமிழக கருணா என்று என்னை மக்கள் அழைக்கிறார்கள்:படியுங்கள்
» என்னை அடிபணிய வைக்க முடியாது: அனந்தி எழிலன்
» "மக்கள் யாரும் அடுப்பை பற்ற வைக்க வேண்டாம் என்று அறிவிப்பு"
» எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு பாஜக மதிப்பளிக்க வேண்டும்!- இயக்குனர் பாரதிராஜா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum