Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
குழந்தைகளில் பிட்டம் தொடைகளில் அரிப்பு நோய்
Page 1 of 1

கொமோட் அரிப்பு (Commode rash)
‘நான் மாட்டன்’ அந்தக் குட்டிப் பையன் வெட்கத்துடன் சொன்னான். மாட்டன் என்று பிடிவாதம் பிடித்த அவனுக்காக அம்மா செய்ய வேண்டியதாயிற்று. கழற்றியதும் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவன் சிணுங்கிக் கொண்டே நின்றான்.
[You must be registered and logged in to see this image.]
‘இவன் எப்ப பாத்தாலும் பின் பக்கமாகச் சொறியிறான்.’ என்று தாய் சொன்னபடியால்தான் கால்சட்டையை அகற்றுமாறு சொல்ல நேர்ந்தது. ஆனால் அதற்கு முன்னரே அவனது கைகள் முகம் கழுத்து உடல் அக்குள் காதின் பின்புறம் என அவனது உடல் முழவதையும் அக்கறையோடு பார்த்துவிட்டேன். வேறு இடங்களில் எந்த சரும மாற்றத்தையும் காண முடியவில்லை.
அப்பட்டமாகத் தெரிந்தது வேறு எதுவுமல்ல. நோயுற்ற அவனது தொடைச் சருமம்தான். வெண்மையான அவனது சருமம் பாதிப்புற்று ஆங்காங்கே அலங்கோலமாகக் காட்சியளித்தது. அவனது பிட்டம் (குண்டிப் பகுதி) மற்றும் தொடையின் பின்புறமாக மேற்பகுதியிலும் சருமத்தில் சொரசொரப்பாக அரிப்புக் (Rash) கண்டிருந்தது. ஒரு சில இடங்களில் அது சிறு புண்களாகவும் மாறியிருந்தன.
கொமோட் அரிப்பு (Commode rash) என்று இங்கு மருத்துவர்கள் குறிப்படுவார்கள்.
Toilet seat rash என்று பொதுவாகவும் toilet seat dermatitis என மருத்துவதிலும் சொல்லுவார்கள். ஐந்து புதிய அத்தகைய நோயாளிகளை இனங் கண்டதாக 2010 ல் வெளியான ஒரு மேலைத்தேய மருத்துவ அறிக்கை கூறியதை படித்தபோது ஆச்சரியமாக இருந்து. இங்கு நான் மட்டுமே பல குழந்தைகளைக் கண்டுள்ளேன்.
‘நாங்கள் கேடு கெட்டனாங்கள் ஒன்றையும் சுத்தமாக வைத்திருக்கத் தெரியாது. அதனாலைதான் இஞ்சை அதிகம். அவர்கள் எதிலும் வலு கிளீன்’ என்று சொல்ல வருகிறீர்களா?
அருகே நெருங்கவிடாது பொது மலசல கூடங்கள் நாற்றத்தால் விரட்டியடிப்பதும், ஒதுக்குப் புறமான இடங்களில் மதிலோரம் மூத்திர நாற்றம் மூச்சடக்கச் செய்வதும். காலையில் வீதியோரமாக மலங்கழிக்க வீட்டு நாய்களை அழைத்துச் செல்வதும் தலைநகரத்திலும் சகசமாகக் காணக்கிடைக்கையில் எமது சுகாதரம் பற்றிப் பெருமையாகப் பேச என்ன இருக்கிறது.
இருந்தபோதும் இது சுகாதாரக்கேட்டால் வரும் தொற்று நோயல்ல என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். நோயுற்ற ஒருவரிலிருந்து மற்றவருக்கோ அல்லது அழுக்கான பொருள்களிலிருந்து மனிதர்களுக்கோ பரவும் தொற்று நோயல்ல.
சுகாதாரத்தில் அதிக அக்கறை எடுப்பதால் வரும் நேயென்றும் கூறலாம். அது ஏன் என்பதை கட்டுரையைப் படித்துச் செல்லும்போது புரிந்து கொள்ளலாம்.
ஆதிகாலத்தில் இந்த நோய் இருந்ததில்லை. ஏன் எனில் அக்காலத்தில் மனிதர்கள் குந்திருந்தே மல சலம் கழித்தார்கள். பிட்டம் தொடை படுமாறு நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போல உயர்ந்த மலசல இருக்கைகள் அறிமுகமான பின்னரே இந்த நோயும் வர ஆரம்பித்தது.

இந்த நோய் பற்றிய முதல் மருத்துவக் குறிப்பு 1927ம் ஆண்டுதான் வெளியானது. அக்காலத்தில் மரத்தாலான இருக்கைகளே இருந்தன். ஈரலிப்பான மர இருக்கைகள்,அதற்கு அடிக்கப்பட்ட வார்னிஸ் பெயின்ட் போன்றைவை காரணமாக இருக்கலாம் என நம்பப்பட்டது.
ஏனெனில் இது ஒருவகை ஒவ்வாமை நோயாகும். வார்னிஸ் போன்றவற்றால் சரும ஒவ்வாவை ஏற்படுவதால் வரும் நோய். ஒட்டுக் கிரந்தி – எக்ஸிமா (Contact Dermatitis) என சொல்லலாம்.
1980 – 1990 வாக்கில் பிளாஸ்டிக்காலான மலசலபீட இருக்கைகள் அறிமுகமாயின. பிளாஸ்டிக்ற்கு ஒவ்வாமை ஏற்படுவது குறைவு என்பதால் இந்த நோயும் அருகிவிடடிருந்தது.
ஆனால் அண்மைக் காலத்தில் மீண்டும் கொமோட் அரிப்பு நோய் வருவற்குக் காரணம் என்ன?

அவற்றைச் சுத்தம் செய்யப்பயன்படுத்தும் மாசகற்றும் பொருட்கள்தான் (னநவநசபநவெள). அவற்றில் பல கடுமையான இரசாயம் கலந்தவையாக இருக்கின்றன. இவையே சருமத்திற்கு ஊறு விளைவித்து ஒட்டுக் கிரந்தி நோய்க்கு காரணமாகின்றன.
இது பெரியவர்கள் குழந்தைகள் என்ற பேதம் இன்றி எவருக்கும் வரக் கூடியது. சில பெரியவர்களிலும் பார்த்திருக்கிறேன். ஆயினும் குழந்தைகளிலேயே அதிகம் காணப்படுகிறது.
குழந்தைகளின் சருமம் மிக மென்மையாக இருப்பது இவர்களில் அதிகம் வருவதற்குக் காரணமாக இருக்கலாம். குழந்தைகள் பாடசாலைக்குப் போகிறார்கள். அங்கு கழிப்பறைக்குச் செல்வார்கள். பெரும்தொகையான பிள்ளைகள் பயன்படுத்துவதால் அவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நிர்வாகிகளின் கடமை என்பதால் கடுமையான மாசகற்றும் பொருட்களை அதிகளவு உபயோகித்திருப்பார்கள். அதுவே காரணமாயிருக்கலாம்.
அதே போல வீடுகளிலும் எல்லோரும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய மாசகற்றும் பொருட்களை; (detergents) உபயோகிக்கிறார்கள். அதில் தவறேதும் இல்லை.
அப்படியானால் தடுப்பது எப்படி?
[list="padding-right: 2em; padding-left: 2em; margin: 2em; color: rgb(51, 51, 51); font-family: verdana, tahoma, arial, sans-serif; font-size: 12px; line-height: 19.45599937438965px; background-color: rgb(255, 255, 255);"]
[*]மரத்தாலான கழிப்பறை இருக்கைகள் இன்னமும் பாவனையில் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். பாதுகாப்பான பிளாஸ்டிக் இருக்கைகளையே உபயோகிக்க வேண்டும்.
[*]கடுமையான மாசகற்றும் இரசாயனங்களை உபயோகிக்கக் கூடாது. எந்த வகையான இரசாயங்களுக்கும் ஒவ்வாவை ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏன் ஒரு சிலருக்கு சோப் போன்றவற்றிகும் ஏற்படுதுண்டு அல்லவா? மேலை நாடுகளில் செய்த ஆய்வுகளில் அவற்றில் கலந்திருந்த Didecyl dimethyl ammonium chloride and Alkyl dimethyl benzyl ammonium chloride போன்ற பொருட்கள்தான் ஒவ்வாமைக்கு காரணம் என்று கண்டறியப்பட்டது. உதாரணங்களாக Phenol, Formaldehyde ற்றைச் சொல்லலாம்.
[*]இவற்றிக்குப் பதிலாக Sprit, hydrogen peroxideபோன்றவறைச் சுத்தப்படுத்த உபயோகிக்கலாம்.
[*]மாசகற்றும் இரசாயனங்களால் சுத்தப்படுத்திய பின்னர் அவற்றின் தாக்கம் சிறிதளவும் இல்லாதவாறு இருக்கைகளை அதிக நீரால் கழுவ வேண்டும்.
[*]குழந்தைகள் அதில் உட்காரும் போது அந்த இருக்கைகளின் மேல் சுத்தமான பத்திரிகைத் தாளை அல்லது துணித் துண்டைப் போட்டு உட்காரச் சொல்லலாம். ஒவ்வாமை உள்ள பெரியவர்களும் அவ்வறே செய்கின்றன.
[/list]
சிகிச்சை
சிகிச்சைப் பொறுத்த வரையில் ஒவ்வாமைக்கு எதிரான ஸ்டீரொயிட் வகை கிறீம் வகைகைளை உபயோகித்தால் சுகமாகும்
ஆனால் மீண்டும் மீண்டும் வராமல் தடுக்க வேண்டுமாயின் அத்தகைய இரசாயனங்கள் சருமத்தில் படாதவாறு தவிர்ப்பது அவசியம்.
பாடசாலைகளிலும் பொதுக் கழிப்றைகளிலும் உபயோகிக்கக் கூடிய toilet seat covers மேலை நாடுகளில் பரவலாகக் கிடைக்கினறன. இங்கும் கிடைக்கும் என்றே நம்புகிறேன். அவற்றை உபயோகிக்கலாம்.
கக்கூஸ் பற்று என்று நம்மவர்கள் சொல்லும் நோயிற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. அதை மருத்துவத்தில் Tinea cruris என்பார்கள். அது ஒரு பங்கஸ் தொற்றுநோய். அது பொதுவாக தொடை இடுக்குகில் எற்படும் அரிப்பாகும்.
தொடைகளில் வேறு காரணங்களாலும்
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» குழந்தைகளில் ஏற்படும் பற்சூத்தைகளைத் தடுக்கலாம்
» அரிப்பு ஏற்படுவது ஏன்?
» சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் எவ்வாறான உணவுப் பழக்கத்தை கைக்கொள்ளலாம்?
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» தலை அரிப்பு அதிகமா இருக்குதா? இதை படிங்க...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum