TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பகலில் அழைத்து வந்து... இரவில் பலி கொடுத்து... நடுங்க வைக்கும் கிரானைட் நரபலிகள்!

Go down

பகலில் அழைத்து வந்து... இரவில் பலி கொடுத்து... நடுங்க வைக்கும் கிரானைட் நரபலிகள்! Empty பகலில் அழைத்து வந்து... இரவில் பலி கொடுத்து... நடுங்க வைக்கும் கிரானைட் நரபலிகள்!

Post by mmani Sun Dec 21, 2014 7:08 am

அடுக்கி வைக்கப்பட்ட கிரானைட் கற்கள்போல சகாயத்திடம் புகார்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. மீண்டும் மதுரைக்கு வந்து கிரானைட் முறைகேடுகள் பற்றிய விசாரணையை ஆரம்பித்திருக்கிறார் சகாயம்.
 ''நம்பிக்கை வந்திருக்கு!''
பகலில் அழைத்து வந்து... இரவில் பலி கொடுத்து... நடுங்க வைக்கும் கிரானைட் நரபலிகள்! P2
சாந்தி என்ற பெண் எஸ்.ஐயும் அவருடன் இரண்டு பெண் போலீஸாரும் நீண்ட நேரமாகக் காத்திருந்து சகாயத்திடம் மனு கொடுத்தார்கள். எஸ்.ஐ சாந்தியிடம் பேசினோம். ''மதுரையில்  போலீஸ் அதிகாரியாக  இருந்த ஒருவர், எங்கள் துறையில் உள்ளவர்களுக்கு மட்டும் பிளாட் போட்டு விற்றார். 35 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பிளாட் வாங்கினோம். வாங்கிய கொஞ்ச நாட்களிலேயே அந்த இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி மலைபோல அடுக்கி வைத்து இருந்தனர். அதனால் அந்த இடத்தில் எங்களால் வீடு கட்ட முடியவில்லை. நாங்கள் கேட்டதும், எங்களை மிரட்டினார்கள். அவங்களோட மிரட்டலுக்கு பயந்து அடிமாட்டு விலைக்கு நிலத்தைக் கொடுத்துட்டு வந்தோம். எங்க இடத்தை மீட்டுக் கொடுக்கச் சொல்லித்தான் சகாயம் சார்கிட்ட புகார் கொடுத்துட்டு வந்திருக்கேன். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கு' என்று சொன்னார்.
பகலில் அழைத்து வந்து... இரவில் பலி கொடுத்து... நடுங்க வைக்கும் கிரானைட் நரபலிகள்! P2b
நடுங்கவைக்கும் நரபலிகள்!
தாமரைப்பட்டி கிராமத்தில் நடந்து வந்த பி.கே.எஸ் கிரானைட் குவாரியில் கடந்த 2008-ம் ஆண்டு கோபிகா என்ற மூன்று வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்டார் என்று புகார் கிளம்பியது. கோபிகா மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட... ரவி என்ற லாரி டிரைவரைக் கைது செய்தது போலீஸ். அந்த லாரி டிரைவர் ரவி, சகாயத்திடம் மனு கொடுக்க வந்திருந்தார். 'கோபிகாவை நான் கொலை செய்யவில்லை. வழக்கை திசைதிருப்ப போலீஸ் என் மீது பழி போட்டுவிட்டனர். உண்மையான குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்கள். அவங்களைப் பிடிக்கச் சொல்லுங்கய்யா...' என்று சகாயத்திடம் கதறினார் ரவி.
பகலில் அழைத்து வந்து... இரவில் பலி கொடுத்து... நடுங்க வைக்கும் கிரானைட் நரபலிகள்! P3
மேலூர் கீழவளவு பகுதியைச் சேர்ந்த சேவற்கொடியோன் என்பவர், 'நான் பி.ஆர்.பி கிரானைட் குவாரியில் 1998 முதல் 2003 வரை டிரைவராக வேலை பார்த்தேன். நான் வேலை பார்த்து வந்த காலத்தில் மூடநம்பிக்கை அடிப்படையில்  நரபலி கொடுக்க ஒடிசா, ஆந்திரா, பீகார் மாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்த ஏழைகள் பலரை நரபலி கொடுத்தனர். அதை மறைத்து விபத்தில் இறந்ததாகப் பொய் சொல்லிவிடுவார்கள். புதிய கிரேன், பொக்லைன் வாங்கும் ஒவ்வொரு முறையும் கேரளாவில் இருந்து மந்திரவாதிகளைக் கூட்டி வந்து நரபலி கொடுப்பார்கள். மதுரை சாலைகளில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த இரண்டு பேரை மனோகரன் என்பவர் அழைத்து வந்தார். காரை நான் ஓட்டி வந்தேன். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இருவரையும் அன்று இரவே பலி கொடுத்தார்கள். கரூர் பக்கத்தில் உள்ள தோகைமலை ஏரியாவில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு பேரை அனுமந்தன் என்பவர் அழைத்து வந்தார். அவர்களும் பலி கொடுக்கப்பட்டார்கள். அதேபோல தூத்துக்குடியில் இருந்தும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பிடித்து வந்தார்கள். அவரும் அன்றே பலி கொடுக்கப்பட்டார். ஜோதிபாசு என்ற மேனேஜர் புதுக்கோட்டையில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அழைத்து வந்தார். இவர்கள் எல்லோருக்கும் நான்தான் கார் ஓட்டினேன். மேலூர் கீழவளவு பகுதியில் கல்லுதின்னி சேக்கு என்பவர் டூவீலரில் மனநலம் பாதித்த ஒருவரை கூட்டிவந்து ஜோதிபாசுவிடம் ஒப்படைத்தார். அடுத்த நாள் அந்த ஆளை நரபலி கொடுத்தனர். இது அத்தனையும் எனக்குத் தெரிந்து நடந்த நரபலிகள். எனக்கு மனதுக்குள் பெரும் வேதனையாக இருந்தது. இதை வெளியில் சொன்னால் நடவடிக்கை எடுக்கும் தைரியம் எந்த அதிகாரிக்கும் கிடையாது. பதிலுக்கு அவர்கள் என்னையே காட்டிக் கொடுத்துவிடுவார்கள். இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதால் நான் தைரியமாக புகார் கொடுத்துட்டேன். தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள்!' என்று சொல்லி, மனுவையும் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.
கிணறு வெட்ட ஆரம்பித்துவிட்டார் சகாயம்... இன்னும் எத்தனை பூதங்கள் கிளம்பப்போகிறதோ?
படங்கள்: ஈ.ஜெ.நந்தக்குமார்


இவர்தான் பிரேமா ராணி !
பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபக்கம் வரிசையில் நின்று புகார் கொடுத்தபடி இருக்க... அஞ்சல் வழியாக வந்தது அந்தக் கடிதம். கடிதத்தைப் பிரித்துப் படித்த சகாயம் அதிர்ந்துவிட்டார். ''உயர்திரு. சட்டப்பணி ஆணையர் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு, குமார் எழுதும் கடிதம். என்னுடைய உறவினர்களும் எனக்கு வேண்டப்பட்டவர்களும் கனிம வள குவாரி நடத்துகிறார்கள். அவர்களிடம் எந்தவித விசாரணையும் நடத்தக்கூடாது. எந்தவித இடையூறும் கொடுக்கக்கூடாது. உடனே மதுரையை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால், நீங்கள் உயிருடன் திரும்ப முடியாது. அதையும் மீறி தொந்தரவு கொடுத்தால், இங்குள்ள குவாரியில் போட்டு சமாதி ஆக்கிவிடுவோம். சகாயம் உடம்பிலுள்ள கறி கூறுபோட்டு விற்கப்படும்.
பகலில் அழைத்து வந்து... இரவில் பலி கொடுத்து... நடுங்க வைக்கும் கிரானைட் நரபலிகள்! P4என் மனைவி பிரேமா ராணி நெடுஞ்சாலைத் துறையில் ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்கிறார். இவருக்கு பதவி உயர்வும், சேலத்துக்கு பணியிட மாற்றமும் செய்ய நீங்கள் உதவி செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் அவர் உதவி செயற்பொறியாளராக உள்ளார். இவருக்குப் பணி உயர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நீங்கள் மதுரையில் தங்கி விசாரணை நடத்தக்கூடாது. விசாரணையை விலக்கிக் கொள்ள வேண்டும்'' என்று முடிந்திருந்தது அந்தக் கடிதம்.
கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிரேமா ராணியைத் தேடி, ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்குப் போனோம். கொடுமுடியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பிரேமா ராணி உதவி செயற்பொறியாளராக இருக்கிறார். இந்த கடித விவகாரத்துக்குப் பிறகு பிரேமா ராணி விடுப்பில் சென்றுவிட்டார். நீண்ட முயற்சிக்குப் பிறகு அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். ''இப்படி ஒரு கடிதத்தை யாரு எழுதினாங்க என்று எனக்குத் தெரியலை. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே ராசிபுரத்தில்தான். படிப்பு முடிஞ்சதும் சேலம், குரங்குச்சாவடியைச் சேர்ந்த குமார் என்பவரை காதலித்து கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். எங்களுக்குத் திருமணமாகி 25 வருஷம் ஆகிடுச்சு. ஒரே பொண்ணு. சென்னையில் ஐ.ஏ.எஸ் ட்ரெயினிங் சென்டர்ல படிச்சுட்டு இருக்கா. கடந்த அஞ்சு வருஷமா கரூர்ல வேலை பார்த்தேன். கொடுமுடிக்கு மாற்றலாகி வந்து ஒரு வருடம்தான் ஆகுது. என்னோட சர்வீஸ்ல யாருக்காகவும் நான் வளைந்து கொடுக்க மாட்டேன். நேர்மை என்பது எனக்குள் ஊறிப்போன விஷயம்.
ரெண்டு மாசத்துக்கு முன்பு சேலம் ரயில்வே கோட்ட அலுலகத்துக்கு குண்டு வைத்து தகர்க்கப்போவதாக எங்களுடைய பெயரில் மிரட்டல் கடிதம் போயிருக்கிறது. அப்போது சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து விசாரணைக்குக் கூப்பிட்டார்கள். எனக்கும் அந்தக் கடிதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டேன். இப்போது நான் மிகவும் மதிக்கும் சகாயம் சாருக்கு என் கணவர் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். இதை யார் செய்கிறார்கள் என்று எனக்கே புரியவில்லை. என்னுடைய அலுவலகத்தில் சங்கர் என்ற தற்காலிகப் பணியாளர் ஒருவர் இருந்தார். அவர் தினமும் குடித்துவிட்டு அலுவலகம் வருவார். நான் பல முறை கண்டித்துப் பார்த்தேன். அவர் திருந்தவில்லை. அதனால் வேறு வழியில்லாமல், அவரை பணியில் இருந்து நீக்கினேன். அவர்தான், 'பொறுத்திருந்து பாருங்கள்... அவங்களை நான் என்ன செய்யுறேன் என்பது தெரியும்’ என்று பேசிவிட்டுப் போயிருக்கிறார். அதேபோல திருமணமாகி என் தங்கை அவளின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக என் அம்மா வீட்டில் இருக்கிறாள். என் தங்கைக்கு நான் உதவி செய்கிறேன் என்பதால், தங்கையின் கணவர் ஏதாவது செய்கிறாரா என்ற சந்தேகமும் இருக்கிறது. காவல் துறைதான் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். கடந்த மூன்று மாதங்களாக எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் நிம்மதியை இழந்து தவிக்கிறோம் என்பதுதான் நிஜம்!' என்று தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.
வீ.கே.ரமேஷ்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பகலில் ஆன்மீகம்... இரவில் பெண்மீகம்!
» பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
» கிழக்கு தீமோருக்கு சிறிலங்கா அதிகாரிகளை அழைத்து சென்று நிலப்பிரச்சனை
» கிர்கிஸ்தானில் தவிக்கும் இந்தியர்கள்: சிறப்பு விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு
» மதுரையில் 48 கி.மீ., நீளத்தில் 'கிரானைட் கோட்டை'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum