Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அடிலெய்டு டெஸ்டில் இந்தியா தோல்வியடைய காரணம் என்ன?- ஒரு அலசல்
Page 1 of 1

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 517 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 290 ரன்களும் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 444 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 315 ரன்களும் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இப்போட்டியில் முரளி விஜய் (99), வீராட் கோலி (141) ஆட்டத்தால் இந்தியா வெற்றிபெறும் நிலையில் இருந்தது. ஆனால், இந்திய வீரர்களின் தவறாலும், நடுவர்கள் செய்த தவறாலும் இந்தியா தோல்வியை சந்திக்க நேரிட்டது.
இந்தியா தோல்விக்கான காரணத்தை பார்ப்போம்:-
1. 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழற்பிற்கு 369 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருந்தது. ரோஹித் சர்மா 33 ரன்களுடனும், சஹா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 4-வது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரோஹித் சர்மா மேலும் 10 ரன் எடுத்து அவுட் ஆனார்.
லயன் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆப் ஸ்டம்பிற்கு வெளியே வந்த பந்தை முன்னால் வந்து சார்ட் மிட்ஆப் (Short Mid Off) திசையில் அடித்தார் ரோஹித். ஆனால், பந்து பவுலரிடம் கேட்ச் ஆக மாறியது. சமீபத்தில் ஒருநாள் போட்டியில் 250 ரன்னுக்கு மேல் அடித்த ரோஹித் சர்மா இதுமாதிரியான ஷாட் அடித்ததுதான் முதல் தவறு.
அவர் மட்டும் ஓரளவுக்கு நிலைத்து நின்று ஆடியிருந்தால் இந்தியா 500 ரன்னை தாண்டியிருக்கும். அப்படி நடந்திருந்தால் இந்த போட்டி டிராவில் முடிந்திருக்கும்.
2. 2-வது இன்னிங்சில் இந்தியா பேட்டிங் செய்யும்போது தவான் 9 ரன்னில் ஜான்சன் பந்தில் அவுட் ஆனார். லெக் சைடு பிட்ச் ஆகிய பவுன்சர் பந்து ஸ்விங் ஆகி தவான் உடலை நோக்கி வந்தது. தவான் குனிந்து அந்த பந்தை தவிர்த்திருக்கலாம். ஆனால், அவர் அடிப்பதற்காக திரும்பினார். ஆனால், பந்து அவரது மார்பை உரசி விக்கெட் கீப்பர் ஹாடின் கைக்குள் புகுந்தது. ஆனால், அரைகுறை மனதுடன் ஹாடின் அப்பீல் செய்தார். அதற்குள் நடுவர் விக்கெட் கொடுத்து விட்டார்.
ரீப்ளேயில் பந்து பேட்டில் படாதது துல்லியமாக தெரிந்தது. நடுவரின் இந்த தவறும் இந்தியா தோற்பதற்கு ஒரு காரணம்.
3. புஜாரா 21 ரன்னில் ஆட்டம் இழந்தார். லயன் ஆப்சைடுக்கு வெளியே வீசிய பந்தை முன்னால் வந்து ஸ்ட்ரோக் வைக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டில் உரசி கீப்பரிடம் சென்றது. பந்தை வருவதை அறிந்த புஜாரா முன்காலை ஏற்கனவே ஆப்சைடுக்கு வெளியே வைத்தார். ஆனால், பேட்டை அவர் முன்னால் கொண்டு செல்லாமல் இருந்திருக்கலாம்.
4. விஜய் பொறுமையாக விளையாடி 99 ரன்கள் எடுத்தார். 95 ரன்னில் இருந்து அவர் பவுண்டரி மூலம் 99 ரன்னைத் தொட்டார். ஆனால் அதன்பின் ஒரு ரன் எடுக்க விஜய் அதிக அளவில் திணறினார். ஒருவித பதற்றத்துடன் விளையாடினார். இதனாலேயே 233 பந்துகள் சந்தித்த அவர் 234 பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். இந்திய வீரர்களுக்கு 99 ரன்னில் இருக்கும்போது மனநிலையை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்று இன்னும் பயிற்சி கொடுக்க வேண்டும்.
5. ரகானே டக் அவுட். அம்பயர் செய்த அடுத்த தவறு. இந்த தவறுதான் இந்தியா தோல்வி அடைய 50 சதவீத காரணமாகும். ஆப் ஸ்டம்பிற்கு வெளியே வந்த பந்தை முன்னால் சென்று (Front Foot) ஸ்ட்ரோக் வைத்தார். ஆனால் பந்து பேடில் உரசி சிலி மிட்ஆன் (Sily Mid On)ல் இருந்த வீரர் கேட்ச் பிடித்தார். பந்து பேட்டில் படவில்லை. ஆனால், நடுவர் அவுட் கொடுத்து விட்டார்.
6. அடுத்து ரோகித் சர்மா முதல் போட்டியில் எவ்வாறு தவறு செய்தாரோ அதேபோல் இந்த இன்னிங்சிலும் ஆப்சைடுக்கு வெளியே வந்த பந்தை முன்னால் சென்று தடுத்து விளையாடினார். ஆனால் பந்து கையுறையில் பட்டு லெக் சைடு ஸ்லிப் திசையில் கேட்ச் ஆனது. அவர் அந்த பந்தை பின்னால் சென்று (Back Foot) விளையாடி இருக்கலாம்.
7. ரோகித் சர்மா அவுட் ஆகும்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையில்தான் இருந்தது. இந்தியா வெற்றிக்கு 86 ரன்கள் தேவைப்பட்டது. கோலியுடன் சஹா களத்தில் இருந்தார்.
இந்த இருவரும் களத்தில் நிற்கும்போது 80-வது ஓவரை லயன் வீச வந்தார். இந்த ஓவருக்குப் பின் புதிய பந்தை எடுக்க ஆஸ்திரேலியா முடிவு செய்திருந்தது. ஆனால், சஹா 80-வது ஓவரின் கடைசி பந்தில் போல்டானார். இதனால், ஆஸ்திரேலியா புதிய பந்தை எடுக்கும் முயற்சியை கைவிட்டது.
8. 82-து ஓவரை லயன் வீசினார். அந்த ஓவரின் 4 பந்தில் கோலி அவுட் ஆனார். ஷாட் பிட்ச் ஆக வந்த பந்தை லாங் மிட்விக்கெட் நோக்கி தூக்கி அடித்தார். ஆனால், கேட்ச் ஆக மாறியது. பொறுப்பான நிலையில் விளையாடிய கோலி அந்த பந்தை தூக்கி அடித்திருக்கக்கூடாது. கடைசி வரை அவர் நிலைத்து நின்று போராடியிருக்க வேண்டும்.
முக்கியமானது டாஸ். அடிலெய்ட் ஆடுகளத்தில் புற்கள் இல்லை. பந்து ஸ்விங்கும் ஆகவில்லை. இதனால் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதல் இரண்டு நாட்கள் நன்றாக பேட்டிங் செய்தார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். டாஸ் வென்றிருந்தால் பேட்டிங் தேர்வு செய்து இந்தியா முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்பு போனது.
ஆடுகளம் 4 மற்றும் 5-வது நாட்களில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. லயன் ஆப் ஸ்பின் பந்து வீச்சு என்பதால் அவரை எதிர்கொள்ள பின்னால் வந்து (Back Foot) விளையாடுவது முக்கியத்துவம் வாயந்ததாகும். இதை இந்திய வீரர்கள் சரியாகச் செய்யாததால்தான் இந்தியா தோற்றது.
பொதுவாக இந்தியா சுழற்பந்தை எளிதாக எதிர்கொண்டு விளையாடக்கூடியவர்கள். சச்சின், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் ஆப் ஸ்பின்னை பின்னால் வந்து (Back Foot) விளையாடுவதில் சிறந்தவர்கள். அதனால் ஆப் ஸ்பின்னர் பந்து இவர்களிடம் எடுபடாது.
ஆனால் தற்போது இந்திய அணியில் உள்ள இளம் வீரர்களில் கோலியைத் தவிர மற்ற வீரர்கள் யாருக்கும் பின்னால் வந்து (Back Foot) விளையாட தெரியவில்லை. இதனால்தான் இந்த போட்டியில் நாம் தோற்றோம். இந்த தவறை இளம்வீரர்கள் திருத்திக்கொள்ளாவிட்டால் இந்தியா நான்கு டெஸ்டிலும் தோற்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனெனில், டெஸ்ட் போட்டியில் ஒருவர் சதம் அடித்தால் மட்டும் போதாது. குறைந்தது 4 வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» நல்ல திட்டங்களை நிறைவேற்றியும் திமுக தோல்வியடைய என்ன காரணம்?
» ஜெ VS கமல் - மோதல் - உண்மையான காரணம் என்ன?ஜு வி யின் அலசல்
» மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» நம்பர் -1 இடத்தை தக்க வைத்தது இந்தியா : கோல்கட்டா டெஸ்டில் அபார வெற்றி
» அமெரிக்காவில் நடப்பது என்ன? ஓரு விரிவான அலசல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum