Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
என்எஸ்கேவின் 106 வது பிறந்தநாள் இன்று.
Page 1 of 1
என்எஸ்கேவின் 106 வது பிறந்தநாள் இன்று.
பொக்கிஷம்போல் இவரின் நகைச்சுவை காட்சிகள் திரைப்படங்களில் கொட்டிக்கிடக்கின்றன.. துப்பு கெட்ட காமெடி சேனல்களுக்கு இவரின் அருமை பெருமையே தெரியவில்லை..
[You must be registered and logged in to see this image.]
என்எஸ்கேவின் 106 வது பிறந்தநாள் இன்று.
[You must be registered and logged in to see this image.]
என்எஸ்கேவின் 106 வது பிறந்தநாள் இன்று.
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: என்எஸ்கேவின் 106 வது பிறந்தநாள் இன்று.
நவம்பர் 29: கலைவாணர் பிறந்த தினம்
தமிழ் சினிமாவின் முதல் சமூகப்படமான ‘மேனகா’வில் மொட்டைத் தலையுடன் அறிமுகமான என்.எஸ்.கே.
எத்தனை சாதனைகள் படைத்திருந்தாலும் காலம் எல்லோரையும் பொக்கிஷமாகப் பொத்தி வைத்துப் பாதுகாப்பதில்லை. நூறாண்டு தமிழ்த் திரைக்கு ஆரம்ப அஸ்திவாரத்தைப் பலமாகப் போட்டுத்தந்த ஜாம்பவான்களில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தமிழ் சினிமா மறக்காத பொக்கிஷம். நகைச்சுவையைச் சமூக மாற்றத்துக்காகப் பயன்படுத்த முனைந்த முதல் முன்மாதிரி. ஒப்புமையும் மாற்றும் இல்லாத அசல் கலைஞன். ‘சிரிப்பு என்பது வியாதிகளை விரட்டும் மருந்து’ என்று மருத்துவர்கள் கண்டறிந்து சொல்லும் முன்பே, மக்களுக்குப் புரிய வைத்தவர்.
தனது முற்போக்குச் சிந்தனைகளால், கட்டியங்காரனுக்கும் கோமாளிக்கும் நாடக மேடையில் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தவர். நாடகத்திலிருந்து திரைக்குப் பிரவேசித்ததும், அந்த ஊடகத்தின் வீச்சைப் புரிந்துகொண்டு, மூடத்தனங்களை வலிக்காமல் கிண்டி கிழங்கெடுத்தவர். இன்று தமிழ் சினிமாவின் நகைச்சுவை தரமிழந்து விட்டாலும் ஒரு சில நகைச்சுவை நடிகர்கள் கையாளும் கிண்டலும், கேலியும் கலைவாணர் போட்டுக்கொடுத்த பாதையைப் பின்பற்றித் தொடர்வதுதான்.
வறுமையும் இளமையும்
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த நாஞ்சில் நாட்டில் ஒழுகினசேரி என்ற கிராமத்தில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29 அன்று கலைவாணர் பிறந்தார். தொடக்கக் கல்வியை மலையாளப் பள்ளியில் படித்த கலைவாணர் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். ஆனால் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல வீட்டின் வறுமையான சூழல் ஒத்துழைக்கவில்லை. அப்பா சுடலைமுத்து நாகர்கோவில் தபால் அலுவலகத்தில் கடைநிலை ஊழியர். தாயார் இசக்கி அம்மாளோ வீட்டிலேயே சாப்பாட்டுக் கடை நடத்தி வந்தார். பெற்றோரின் வருமானம் மொத்தக் குடும்பத்துக்கும் போதவில்லை. குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்த கலைவாணருக்கு இரண்டு அக்காள்கள், மூன்று தங்கைகள் ஒரு தம்பி எனப் பெரிய குடும்பமாக இருந்தது. பல வேளைகளில் அம்மாவுக்கும், மூத்த அக்காவுக்கும் காலை உணவு இல்லாமல் போவதைக் கண்டறிந்து உணவு உண்ண மறுத்துக் குடும்பத்துக்காக வேலைக்குச் செல்ல முன்வந்தார்.
அப்போது பலசரக்குக் கடை ஒன்றில் விற்பனைப் பையனாக அவருக்கு வேலை கிடைத்தது. மாதம் ஐந்து ரூபாய் சம்பளம். ஆரம்பத்தில் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேலைக்கும் ஆபத்து வந்தது. வீட்டு வேலைகளை முடித்துவிட்டுக் கொஞ்சம் தாமதமாகக் கடைக்குச் சென்றவரைத் திட்டி அவமானப்படுத்தினார் கடை முதலாளி. கடுமையாக வேலையும் வாங்கினார். கொஞ்சம் உட்கார்ந்துவிட்டாலோ கலைவாணரைப் பார்த்து “உழக்கு, கோம்பை “ ஆகிய சொற்களால் அடிக்கடி திட்டத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் மனம் கொதித்த கலைவாணர், தனது கணக்கைப் பைசல் செய்து அனுப்பும்படி கோபத்துடன் கேட்க, பயந்துபோன முதலாளி உடன் அந்த மாதத்திற்கான நாட்களைக் கணக்கிட்டு நான்கு ரூபாய் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டார்.
கம்பீரமாகச் சக ஊழியரிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினார் கலைவாணர். வேலையை விட்டது வீட்டுக்குத் தெரியக் கூடாது என்று எட்டையபுரத்தில் இருந்த தனது அக்காள் வீட்டுக்குச் சென்றுவிட்டார். போகும்போது கிடைத்த நான்கு ரூபாய் சம்பளத்துக்கும் சீர் பொருட்களை வாங்கிச் சென்றார் அந்தப் பதிமூன்று வயதில்! தம்பி மீது பாசம் கொண்ட அக்காவோ தம்பியைப் பிள்ளைபோல் உபசரித்ததோடு, கலைவாணரின் கோபம் குறையட்டும் என்று மிருதங்கம் கற்றுக்கொள்ள அனுப்பினார். ஆறே மாதத்தில் மிருதங்கம் கற்றுமுடித்த கலைவாணருக்கு அதன் பிறகு அங்கே கால் தரிக்கவில்லை.
பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய கலைவாணர் 14 வயதுப் பையனாக நாடகக் கொட்டகை அருகே சோடா விற்கும் கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்தார். ஒருநாள் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றவரை நாடக மேடை மாயம் செய்து வசப்படுத்தியது. அதன்பிறகு நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கும் சிறுவனாகத் தனது வேலையிடத்தை மாற்றிக்கொண்டார். ஆனால் நாடகக்குழு முகாமை முடித்துக் கிளம்பியதும் வெறுமையை உணர்ந்தார். அடுத்த நாடகக் குழு வந்து முகாம் அமைக்கும் வரை, அம்மாவின் புடவையையே திரைச் சீலையாக்கி, தனது சக நண்பர்களுடன் நாடகம் நடித்தார். அப்படி அவர் நடித்தது புராணம் அல்ல. அவரே எழுதிய நகைச்சுவை நாடகம் என்பதுதான் ஆச்சரியமான உண்மை. அதன்பிறகு தனது 17 வயதில் வில்லுப்பாட்டுக் குழுவில் சேர்ந்தார்.
பன்முகக் கலைஞன்
இப்படித்தான் நாடகமும் கலையும் அவரை அழைத்துக் கொண்டது. எஸ்.எஸ்.வாசன் கதை எழுதி எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் 1936-ல் வெளியான ‘சதிலீலாவதி’படத்தின் மூலம், எம்.ஜி.ராமச்சந்திரனோடு அறிமுகமானர். ஆனால் இந்தப் படத்துக்கு பின்னர் கலைவாணர் நடித்த ‘மேனகா’ என்ற திரைப்படமே முதலில் வெளியானது. தமிழ் சினிமாவுக்கு ‘சிரிப்பு மேதை’ கிடைத்தார்.
என்.எஸ்.க

நவம்பர் 29: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பகிர்வு...
நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்
[You must be registered and logged in to see this image.]டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.
நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம்
திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு "இவன் என் நாடக கம்பெனி ஆள் !"என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.
சீர்திருத்த கருத்துக்களை படங்களில் இயல்பாக கொண்டு சேர்த்தார் அவர். தன்னுடைய நிலம் முழுவதையும் ஊர் மக்களுக்குப் பொதுவாக்கி, கூட்டுஉழைப்பால் கிடைக்கும் பலனை ஊர் மக்கள் ஒற்றுமையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நல்லத்தம்பி படத்தில் வலியுறுத்தினார். தீண்டாமை மற்றும் மதுவை எதிர்த்தும் அவர் குரல் கொடுத்தார். கிந்தனார் நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். இது எதுவும் அறிவுரை போல இருக்காது என்பது தான் கலைவாணரின் முத்திரைக்கு சான்று
என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா .
என்.எஸ். கே லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை ஸ்ரீநடராஜா கல்விக் கழக இலவச வாசகர் சாலையில் பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்
பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி
"நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? "என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.
[You must be registered and logged in to see this image.]அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் . ” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நாற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு
ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டுத்தான் அவரின் மூச்சு ஓய்ந்தது. தன் மனைவி மதுரத்திடம் இப்படிச்சொன்னார் ,"நான் ஐம்பது வயசுக்குள்ள இறந்துடணும் மதுரம். ஒரு கலைஞன் தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும் !" என்று
சொன்னபடியே நாற்பத்தி ஒன்பது வயதில் மரணமடைந்தார்.
பூ.கொ. சரவணன்
நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்
[You must be registered and logged in to see this image.]டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.
நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம்
திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு "இவன் என் நாடக கம்பெனி ஆள் !"என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.
சீர்திருத்த கருத்துக்களை படங்களில் இயல்பாக கொண்டு சேர்த்தார் அவர். தன்னுடைய நிலம் முழுவதையும் ஊர் மக்களுக்குப் பொதுவாக்கி, கூட்டுஉழைப்பால் கிடைக்கும் பலனை ஊர் மக்கள் ஒற்றுமையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நல்லத்தம்பி படத்தில் வலியுறுத்தினார். தீண்டாமை மற்றும் மதுவை எதிர்த்தும் அவர் குரல் கொடுத்தார். கிந்தனார் நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். இது எதுவும் அறிவுரை போல இருக்காது என்பது தான் கலைவாணரின் முத்திரைக்கு சான்று
[You must be registered and logged in to see this image.]
அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ? அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே.என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா .
என்.எஸ். கே லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை ஸ்ரீநடராஜா கல்விக் கழக இலவச வாசகர் சாலையில் பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்
[You must be registered and logged in to see this image.]
என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனேபணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி
"நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? "என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.
[You must be registered and logged in to see this image.]அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் . ” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நாற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு
ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டுத்தான் அவரின் மூச்சு ஓய்ந்தது. தன் மனைவி மதுரத்திடம் இப்படிச்சொன்னார் ,"நான் ஐம்பது வயசுக்குள்ள இறந்துடணும் மதுரம். ஒரு கலைஞன் தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும் !" என்று
சொன்னபடியே நாற்பத்தி ஒன்பது வயதில் மரணமடைந்தார்.
பூ.கொ. சரவணன்
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» இன்று பிறந்தநாள் !
» இன்று பிறந்தநாள் காணும்srini_viswa
» ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்தநாள் இன்று.
» காமராஜர் அவர்களின் பிறந்தநாள் இன்று..
» இன்று பிறந்தநாள் காணும் வெங்கட்ராமன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum