TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம்!

Go down

அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம்! Empty அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம்!

Post by Tamil Thu Nov 13, 2014 8:07 am

அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம் (அ.த.க.)என்கிற இலாபநோக்கமற்ற வரிவிலக்கு பெற்ற கல்வி அமைப்பு 4 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தித் தற்பொழுது 62 பள்ளிகள் அவற்றைப் பயன்படுத்துகின்றனர், அமெரிக்க நாட்டில் மட்டுமல்லாது  இங்கிலாந்து ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் பள்ளிகளும் இவற்றில் அடங்கும்.

இதுவரை 8 நிலைகள் உருவாக்கப்பட்டு 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் பயில்கின்றனர். அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் கல்வி மேலாண்மைக்கான பொதுவான மென்பொருள்களை நிறுவி உதவி புரிகிறது. அத்துடன் மின்கற்றலுக்கான பாடங்களையும் உருவாக்கி வருகிறது அ.த.க. இவற்றின் மூலம் வகுப்பறை பயிலுதலைக் கடந்து மேல்நிலை மாணவர்கள் பழகுத் தமிழுக்கான இலக்கணமும், அறிமுக நிலை மாணவர்கள் ஊடாட்டு மென்பொருள் வழியே அடிப்படை தமிழ் எழுத்துக்களையும், சொற்களையும்  பயில முடியும்.

அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும் வாரயிறுதியில், முழுதும் தன்னார்வத் தொண்டர்களால் இலாப நோக்கமற்று நடத்தப்படுபவை. தம் பிள்ளைகள் அமெரிக்க மண்ணில் வாழ்ந்தாலும், அவர்கள் தமிழ் படிக்க  வேண்டுமென விழையும் பெற்றோர்கள் செலுத்தும் கட்டணங்களை மட்டுமே முதலாகக் கொண்டு நடைபெறும் பள்ளிகள் தான் அனைத்துமே. பயிற்றுவிக்கும் ஆசிரியர் யாவரும் ஊதியம் எதுவுமின்றி ஒவ்வொரு வாரமும் தங்களின் பொன்னான நேரத்தைச் செலவிட்டுப் பணியாற்றும் தன்னார்வத்  தமிழ் பெற்றோர்கள் தாம்.  எந்த அரசாங்கங்களும் (இந்திய/தமிழக) இவற்றுக்கு நிதியுதவியோ, இடமோ, பொருளோ வழங்குவதில்லை.

அமெரிக்க நாட்டில் இலாப நோக்கமற்ற அமைப்புகளுக்கு வழங்கப்படும் சலுகையாக வகுப்பறை வசதிகள் சற்றுக் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு கிடைக்கின்றன. தன்னார்வச் சேவைகளால் இயங்கும்  தமிழ்ப்பள்ளிகளின் செலவீனங்களில் பெரும்பகுதி வகுப்பறை வாடகைக்கே செலவாகிறது.

இந்தச் சூழ்நிலையிலும் தமிழ்க்கல்வியைத் தரத்துடன் வழங்குவதன் மூலமே அமெரிக்கத் தமிழ் மாணவர்கள் மற்ற மொழிகளைப் போலத் தமிழையும் ஒரே தரத்தில் மதிப்பர் எனும் குறிக்கோளுடன் இயங்கி வருபவை இப்பள்ளிகள். 

பெற்றோரின் விருப்பத்திற்காகத் தொடக்கப் பள்ளியில் (நான்கு / ஐந்தாம் வகுப்பு வரை) படிக்கும் மாணவர்களே பெரும்பான்மையாக வாரக்கடைசியில் நடைபெறும் தமிழ்ப் பள்ளிகளில் பயில்கின்றனர். நடுநிலை/மேல்நிலை பள்ளி மாணவர்களின் முதன்மை கல்வி சார்ந்த வகுப்புகளும் அதனை ஒட்டிய வீட்டுப்பாடங்களும் தினசரிச் சுமையாகிப் போவதால் அவர்களுக்கு வாரநாட்களில் மிகக்குறைந்த நேரமே கிடைக்கிறது. வாரக்கடைசி நாட்களில் இவர்கள் விளையாட்டு, மற்ற பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இந்த ஆளுமையிலிருந்து மாணவர்களை மீட்டுத் தமிழ் மொழி கற்பதிலும் அவர்களுக்குப் பயன் உள்ளது என்பதைப், பெற்றோரின் வற்புறுத்தலின்றி அவர்களாகவே உணர, தமிழ்ப்பள்ளிகளுக்கு உயரிய கல்வி நிறுவனம் எனும் அங்கீகாரம் ஒரு மாபெரும் தேவை.

தமிழ்ப்பள்ளிக்கான அங்கீகாரம் என்பது அமெரிக்க மண்ணில் நடக்கும் பள்ளிகளுக்கு இணையான தரத்துடன் நடைபெறும் கல்வி நிறுவனம் என்பதற்கான சான்று. இந்த அங்கீகாரத்தினைப் பெறுவது எளிதல்ல. கல்வித்துறையில் பணியாற்றி அனுபவமில்லாத தன்னார்வலர்களால் நடத்தப்படும் பள்ளிகள், உயர்தரக் கல்வி நிறுவனத்துக்கான அங்கீகாரம் பெற முயல்வது ஒரு மலைப்பான விடயம்.

அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தினை  வடிவமைத்து, உருவாக்கி, அவற்றைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மெருகேற்றும்  பணியினைச் செய்து வருகிறது.  மட்டுமல்லாமல், பள்ளி நிர்வாகம், மின்கற்றல் போன்ற கட்டுமானப் பணிகளை அனைத்துப் பள்ளிகளுக்கும் பயன்பெறும் வண்ணம் செயல்படுத்துகிறது. இருப்பினும், இதனைக் கடந்து  பரந்து விரிந்த அமெரிக்க நாட்டில், மாநில/மாவட்ட அளவில் நடைபெறும் பள்ளிகளை நிர்வகிப்பது அந்தந்தப் பகுதி தமிழ்க்கல்வி அமைப்புகளும் தமிழ்ச்சங்கங்களும் தான். மாணவர்களை சேர்ப்பது, ஆசிரியர்களை இனம் கண்டு நியமிப்பது, வகுப்பறைகளை வாடகைக்குப் பதிவு செய்வது பின்னர்த் தலையாயக் கடமையான தமிழ் மொழியைச் சீரிய முறையில் அடுத்த தலைமுறைக்குக் கற்பிப்பது போன்ற நடைமுறைப் பணிகள் வட்டாரத் தமிழ்ப்பள்ளி அமைப்புகளையே சாரும்.

அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம்! Tamil%20language%20இப்படி  பல்வேறு சூழல்களில், அனைத்தையும் ஒருங்கிணைத்து நடைபெறும் அமெரிக்கத் தமிழ் பள்ளிகளின் அமைப்பு முறை தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை போன்ற நாடுகளில் 12 ஆண்டுகள் தமிழ் கற்கும் முறையைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது. அமெரிக்காவில் இரண்டாவது மொழியாகவே தமிழ் மொழியைக் கற்கிறார்கள். அமெரிக்க நாட்டுக் கல்வி முறைப்படி குறைந்த பட்சம் மேல் நிலைப் பள்ளியில் (9 முதல் 12 வரை) நான்கு ஆண்டுகள் ஆங்கிலமன்றி வேறொரு மொழியை மாணவர்கள் கட்டாயமாகப் பயில வேண்டும். இதற்காக 4 மொழி மதிப்பீட்டு புள்ளிகளை  (language credits) மாணவர்கள் பெற முடியும். இதனால் கல்லூரியில்/பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் சேருவதற்குத்   தேவையான கூடுதல் புள்ளிகள் கிடைப்பதுடன், கட்டணமும் வெகுவாகக் குறைகிறது.

பள்ளி ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வாரமும் 2 முதல் 4 மணி நேரம் செலவழித்துத் தமிழ் கற்கும் மாணாக்கருக்கு மற்ற மொழிகளைப் போல மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுத் தந்தால் மட்டுமே அவர்கள் உந்துதலுடன் தமிழ் கற்பர் என்ற நிலை உருவானது. இதனை மனதில் கொண்டு தமிழ் மொழி கற்பதற்கான தேவையையும் பூர்த்தி செய்வதுதான் தமிழ்ப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் (Accreditation).

மொழி மதிப்பீட்டு புள்ளிகளுக்காக ஸ்பானிஷ், ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ஏன் ஜப்பானிய, சீன மொழிகளைப் பயிலும் தமிழ் மாணவர்கள் அமெரிக்க நாடு முழுவதும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மற்ற மொழிகளுக்கு மாற்றாக அல்லது கூடுதலாகத் தமிழ் மொழியைப் பயில்வது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 4 மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுத் தரும்.

அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் வாயிலாகத் தமிழ் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது ஒரு முதல் படி. தமிழர் அடர்த்தியாக வாழும் ஊர்களில் முழு நேரப் பொதுப் பள்ளிகளிலேயே தமிழ் மொழியைப் பயிற்றுவிக்கும் வாய்ப்பாக இது அமையக்கூடும்.

தமிழ்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவது என்பதைத் தலையாயக் கடமையாகக் கொண்டு அ.த.க. கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்ததன் பயனாகத் தற்பொழுது 3 மாநிலங்களில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மினசோட்டா, மிசெளரி & டெக்சஸ் (ஹூஸ்டன் நகரப் பள்ளி) பள்ளிகள் இந்த மாபெரும் அங்கீகார முத்திரையை ஈண்டெடுத்திருக்கிறார்கள். ஹூஸ்டன் பள்ளி முதலில் ஜூன் 2014ல் இந்த அங்கீகாரத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மினசோட்டா/மிசெளரி மாநிலப் பள்ளிகள் அக்டோபர் 2014ல் இந்த மைல்கல்லைத் எட்டியிருக்கிறார்கள்.
 
அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம்! Us%20school
இந்தப் பள்ளி அங்கீகாரத்தை வழங்கிய நிறுவனத்தைப் பற்றிய சிறு குறிப்பு: அட்வான்செட் (AdvancEd [You must be registered and logged in to see this link.] எனும் இந்நிறுவனம் கல்வி நிலையங்களின் ஆற்றலைப் பல பரிமாணங்களில் ஆய்வு செய்து தரச் சான்றிதழ் வழங்கும் உலகளாவிய நிறுவனம்.

இதுவரையில் இந்நிறுவனம் உலகம் முழுதும், ஏறக்குறைய 20 மில்லியன் மாணவர்கள் பயிலும்,  32,000 கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் 50 மாநிலங்களிலும் ஏற்கத்தக்க கல்வி மதிப்பீட்டு நிறுவனம் அட்வான்செட் ஒன்று தான். அட்வான்செட் வரையறுக்கும் பள்ளி மதிப்பீடுகளைத் மீறியதொரு தரம் இன்று வரை எதுவுமில்லை என்று சொல்லலாம்.

மினசோட்டா, மிசௌரி, ஹூஸ்டன்- டெக்சாஸ் ஆகிய 3 தமிழ்ப் பள்ளிகளும் அரசு நடத்தும் பொதுப்பள்ளிகள் பெற்ற சராசரிப் புள்ளிகளை விட, அதிகப் புள்ளிகள் பெற்று சீர்மிகு  தரத்துடன் நடப்பதாக, அட்வான்செட் தனது  இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கம் பல மில்லியன் டாலர்கள் செலவழித்து முழுதுமாக எற்று நடத்தும்  பொதுப் பள்ளிகள் பல அட்வான்செட் வரையறுக்கும் அடிப்படைத் தரத்தைக் கூடத் தாண்டாது என்பதும், தரமான அரசாங்கப் பள்ளிகளின் சராசரி தரக் கட்டுப்பாட்டு புள்ளிகளைக்  காட்டிலும் கூடுதலாகப் பெற்று இம்மூன்று தமிழ்ப் பள்ளிகளும் அங்கீகாரத்தை ஈன்றெடுத்திருக்கின்றது என்பது சாலச்சிறப்பு.

அட்வான்செட் நிறுவனத்தைச் சார்ந்த வெவ்வேறு தனி நபர்கள் அடங்கிய மூன்று குழக்கள்  மினசோட்டா, மிசௌரி, ஹூஸ்டன் டெக்சாஸ் இம்மூன்று பள்ளிகளையும் ஆய்வு செய்தன. இருப்பினும் ஆய்வின் முடிவுரையாக அவர்கள் குறிப்பிட்டது ஒரே கருத்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.

"எங்களின் 30 ஆண்டு கல்வித்துறை அனுபவத்தில் இத்தமிழ்ப்பள்ளி அமைப்புகள் போன்றதொரு தன்னார்வு கல்வி நிறுவனத்தைக் கண்டதில்லை. பயிற்றுவித்தல் என்பது இத்தன்னார்வலர்களுக்கு முதன்மை பணியாக இல்லாவிடினும் தரமான கல்வி மற்றும் கல்வி நிறுவனத்துக்கான அத்தனைத் தேவைகளையும்/பணிகளையும் இவர்கள் திறம்படச் செய்வது கண்டு வியக்கிறோம். அத்துடன் தமிழ் மொழியின் மேல் கொண்டிருக்கும் பற்றைப் பள்ளி நிர்வாகக் குழு, ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணாக்கர உட்பட அனைவரின் கண்களிலும் நாங்கள் காண முடிந்தது" என்றார்கள்.

இம்மூன்று பள்ளிகளின் அங்கீகாரம் ஒரு தொடக்கம் தான்.  இது காட்டுத்தீ போல மற்ற மாநிலங்களுக்கும் பரவும். சிங்கப்பூர், மலேஷியா நாடுகளுக்குக் குடி புகுந்த தமிழர் எப்படித் தமிழை அந்நாட்டில் தழைத்தோங்கச் செய்தார்களோ அதைப்போலத் தற்போதைய அமெரிக்கத் தமிழ்த்  தலைமுறையினர் அமெரிக்க நாட்டில் வாழும் அடுத்த தலைமுறையினருக்கும் அதனைக் கடந்தும் எடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

ஆசியாவின் மூத்த செம்மொழியான தமிழ்மொழி 2000 ஆண்டுகளுக்கும் மேலாக,  மாற்றங்களற்ற இலக்கணத்துடன் பயன்பாட்டில் உள்ள ஒரே மொழி என்பதனை உலக வல்லரசான அமெரிக்காவும் உணர்ந்து போற்றும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. பல்வேறு நாட்டு இனங்களையும் மொழிகளையும் பேசும் புலம் பெயர்ந்த மக்களைப் பிரதானமாகக் கொண்டு, அனைத்துப் பண்பாடுகளையும் மொழிகளையும் சமமாக மதிக்கும் அமெரிக்க நாடும் தமிழின் உயர்வையும், பெருமையையும் உணரத் துவங்கியுள்ளது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum