TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அதிரடி அபராதம், தண்டனை! வருகிறது புதிய சட்டம்! வழக்கறிஞர் வி.யுவராஜ்

Go down

அதிரடி அபராதம், தண்டனை! வருகிறது புதிய சட்டம்! வழக்கறிஞர் வி.யுவராஜ் Empty அதிரடி அபராதம், தண்டனை! வருகிறது புதிய சட்டம்! வழக்கறிஞர் வி.யுவராஜ்

Post by மாலதி Tue Nov 04, 2014 9:02 pm

அதிரடி அபராதம், தண்டனை! வருகிறது புதிய சட்டம்! வழக்கறிஞர் வி.யுவராஜ் Dot குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாய் அபராதம் அல்லது
அதிரடி அபராதம், தண்டனை! வருகிறது புதிய சட்டம்! வழக்கறிஞர் வி.யுவராஜ் Dot 3 மாதங்கள் சிறை;
அதிரடி அபராதம், தண்டனை! வருகிறது புதிய சட்டம்! வழக்கறிஞர் வி.யுவராஜ் Dot சாலை விதிகளை மதிக்காமல் சென்றால், முதன்முறை 2,500 ரூபாய்; அடுத்தமுறை 5,000 ரூபாய்;
அதிரடி அபராதம், தண்டனை! வருகிறது புதிய சட்டம்! வழக்கறிஞர் வி.யுவராஜ் Dot டிராஃபிக் சிக்னலை மதிக்காமல் சென்றால், 2,500 ரூபாய்;
அதிரடி அபராதம், தண்டனை! வருகிறது புதிய சட்டம்! வழக்கறிஞர் வி.யுவராஜ் Dot பதிவு செய்யாமல் வாகனத்தை ஓட்டினால், 25,000 ரூபாய்.
அதிரடி அபராதம், தண்டனை! வருகிறது புதிய சட்டம்! வழக்கறிஞர் வி.யுவராஜ் Dot இரண்டாவது முறை செய்தால், 50.000 ரூபாய் அபராதம்’
 - இது, விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கும், 'சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்புச் சட்டம் 2014’ல் உள்ள சாம்பிள்கள்.
தற்போது நடைமுறையில் உள்ள மோட்டார் வாகனச் சட்டத்தை, முழுக்க முழுக்க காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மட்டுமே அமல்படுத்தும் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இதில் சாலைகள், சாலை மேம்பாடுகள் பற்றி எதுவும் கிடையாது. ஆனால், புதிய வரைவு மசோதாவின் தலைப்பே, 'சாலைப் போக்குவரத்து பாதுகாப்புச் சட்டம்2014’ என்பது தான். இது, மொத்தம் 15 பகுதிகள், 340 செக்‌ஷன்கள், 4 ஷெட்யூல்கள் கொண்டுள்ளது.
எந்த ஒரு சட்டமும் அமல்படுத்துவதற்கு முன்பு, ஒரு வரைவாகத் தயாரிக்கப்பட்டு, அது பொதுமக்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், சட்டக் குழுக்கள் ஆகியோரின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதன் பின்பு தேவைப்படும் திருத்தங்கள் செய்து, நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டு நிறைவேறிய பிறகுதான் சட்டமாகும். அதிரடி அபராதம், தண்டனை! வருகிறது புதிய சட்டம்! வழக்கறிஞர் வி.யுவராஜ் P54a
புதிய மோட்டார் வாகனச் சட்ட வரைவில் இடம்பெற்றுள்ள மாறுதல்கள்  அனைத்தும், இந்தக் காலகட்டத்துக்கு ஏற்றதுபோல, அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்தப் புதிய சட்ட வரைவின்படி, தேசிய அளவிலான வாகன ஒழுங்குபடுத்துதல் மற்றும் சாலைப் பாதுகாப்பு அதிகாரம் கொண்ட ஒரு தேசிய கமிட்டிதான், இந்தியா முழுவதும் சாலைப் பாதுகாப்பு மற்றும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியைச் செய்யும்.
இந்தக் கமிட்டி பயணிகள் பயணம் செய்யும் பஸ், வேன் போன்ற வாகனங்களின் அமைப்பு, இருக்கைகளின் அமைப்பு, பாதுகாப்பு போன்ற பல அம்சங்களை நெறிப்படுத்தும். நெறிமுறைகளுக்குக் கட்டுப்படாத வாகனங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் அதிகாரம், இந்த தேசிய கமிட்டிக்கு உண்டு.
ஹெல்மெட் கட்டாயம்...
இந்தியா முழுவதும் இரண்டு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணி இருவருமே, ஹெல்மெட் அணிவது கட்டாயம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காரில் குழந்தையை முன் சீட்டில் உட்காரவைத்தால்...
எட்டு வயதுக்குக் குறைவான குழந்தையை காரின் முன் சீட்டில் உட்காரவைத்துக்கொண்டு செல்லக் கூடாது. எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தை முன் சீட்டில் உட்காரலாம். ஆனால், கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். சீட் பெல்ட் அணியாமல் குழந்தைகளை அழைத்துச் சென்றால், அந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் பொறுப்பானவர், இந்தப் புதிய வரைவின்படி குற்றம் செய்தவர் ஆகிறார்.
போதையில் வண்டி ஓட்டினால்...
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு, 25,000 ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாதங்களுக்குக் குறையாமல் சிறைத் தண்டனையுடன், ஆறு மாதங்களுக்கு அவரது ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படும். இதே நபர் மூன்று ஆண்டுகளுக்குள் மீண்டும் இதே தவறைச் செய்தால், 50,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை ஜெயில்  தண்டனையுடன், ஓர் ஆண்டுக்கு ஓட்டுநர் உரிமமும் சஸ்பெண்ட் செய்யப்படும். மீண்டும் இதே தவறைச் செய்தால், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து  செய்யப்படு்வதுடன், அவருடைய வாகனத்தை 30 நாட்கள் பறிமுதல் செய்யவும் இந்த வரைவு வழி வகுக்கிறது.
செல்போன் பேசியபடி வண்டி ஓட்டினால்...
செல்போன் அல்லது வேறு ஏதாவது தகவல் பரிமாறும் உபகரணத்தைப் பயன்படுத்தியவாறு வாகனம் ஓட்டினால், முதல்முறை 4,000 ரூபாய்  அபராதமும், இரண்டாவது முறை 6,000 ரூபாயும், மூன்றாவது முறை 10,000 ரூபாயும் அபராதத்துடன் ஒரு மாதம் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்ய்யப்படும். அது மட்டுமின்றி, அவர் கட்டாய சிறப்புப் பயிற்சி பெற்றுத்தான் மீண்டும் லைசென்ஸ் பெற முடியும்.
விபத்து ஏற்படுத்தினால்...
ஒருவர் வாகன விபத்தை ஏற்படுத்தி, அதில் யாரேனும் இறந்துவிட்டால், 1,00,000 ரூபாய் அபராதம். மேலும், 4 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனையும் கிடைக்கும். அதுவே, விபத்தில் ஒரு குழந்தை இறந்துவிட்டால், 3,00,000 ரூபாய் அபராதமும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைக்கும்.
புள்ளிகள் ஜாக்கிரதை....
ஒருவர் விதிகளை மீறும்போதும் அல்லது தவறு செய்யும்போதும், அந்தக் குற்றத்துக்கு அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை மட்டுமல்லாமல், ஒவ்வொரு குற்றத்துக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் தரப்படும். ஒரு குற்றத்துக்கு இரண்டு, மூன்று என இந்தப் புள்ளிகள் இருக்கும். 12 புள்ளிகள் சேர்ந்துவிட்டால், ஓட்டுநர் உரிமம் ஓர் ஆண்டுக்குத் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
ஒருவருக்கு வழங்கப்படும் தண்டனைப் புள்ளிகள் மூன்று ஆண்டுகள் வரை அவருடைய பெயரில் இருக்கும். அதன் பிறகு, அந்தத் தண்டனைப் புள்ளிகள் தானாக நீக்கப்படும்.
சான்றிதழ் அவசியம்...
இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் அல்லது பஸ், லாரி, மினி லாரி, டிரெய்லர் என எந்த வாகனமாக இருந்தாலும், குறிப்பிட்ட மாடல் தயாரிக்கப்பட்டு, அதனை தேசிய கமிட்டி ஆராய்ந்து, பாதுகாப்பானது என்று உறுதி செய்துகொண்டு சான்றிதழ் வழங்கும். சான்றிதழ் பெற்ற வாகனத்தில் சிறு மாற்றங்கள் செய்தாலும், மீண்டும் தேசிய கமிட்டியிடம் சான்றிதழ் பெற்ற பின்புதான் விற்பனைக்கு அனுமதிக்கப்படும்.
தேசிய கமிட்டியின் சான்றிதழ் பெறாமல் ஷோரூமில் நிறுத்திவைப்பதுகூட குற்றம். சான்றிதழ் பெறாத வாகனத்தை விளம்பரத்தில்கூடக் காட்டக் கூடாது. அப்படிச் செய்தால், அவர்களுக்குத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
வாகனத்தில் குறையிருந்தால்...
தேசிய கமிட்டியின் சான்றிதழ் பெற்ற வாகனத்தை, பயன்படுத்துபவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், குறிப்பிட்ட மாடலில் குறைபாடுகள் உள்ளதாகத் தெரிந்தால், உற்பத்தியாளரே உடனடியாக அந்தக் குறைபாட்டை தேசிய கமிட்டியின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும். குறைபாடுகள் உள்ள வாகனங்களை உற்பத்தியாளரே திரும்பப் பெற்று, நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மாடல் வாகனத்தில் குறிப்பிட்ட குறைபாடு இருக்கிறது என்றால், அதே மாடலை வாங்கிய பலருக்கும் இதே பிரச்னை ஏற்படும்போது, அதேபோல 100க்கும் மேற்பட்ட புகார்கள் தேசிய கமிட்டிக்கு வந்தால், தேசிய கமிட்டி உடனே சம்பந்தப்பட்ட உற்பத்தியாளருக்கு நோட்டீஸ் கொடுத்து, அந்த மாடலின் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடும் அதிகாரம் உண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறைபாடுகொண்ட வாகனத்தை வாங்கியவர்களிடம் இருந்து திரும்பப் பெற்று, அந்தக் குறைபாடுகளை பணம் பெறாமல் சரிசெய்து கொடுக்க வேண்டும்.
அதிரடி அபராதம், தண்டனை! வருகிறது புதிய சட்டம்! வழக்கறிஞர் வி.யுவராஜ் P54b
ஒன்றிணைந்த ஓட்டுநர் உரிமம்
புதிய சட்ட மசோதாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று, நாடு முழுவதும் ஒரே சீரான ஒன்றிணைந்த ஓட்டுநர் உரிமம் வழங்குவது. ஒரு நபர் இந்தியாவின் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் ஓட்டுநர் உரிமம் பெற மனு செய்யலாம். ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதைக்கூட இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். 18 வயதுக்கு மேலானவர்கள்தான் உரிமம் பெற முடியும் என்பதில் மாற்றம் இல்லை. அதேபோல், ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்சப் படிப்பு எதையும் புதிய வரைவில் குறிப்பிடவில்லை.
பதிவு செய்யாமல் எந்த வாகனத்தையும் சாலையில் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால், முதல்முறை 25,000 ரூபாய். அடுத்த முறை 50,000 ரூபாய் அபராதம். பதிவு செய்யாமல் வாகனத்தை டெலிவரி கொடுத்த விற்பனையாளருக்கு, (டீலர்) 1,00,000 ரூபாய் அபராதம் உண்டு. டீலரின் விற்பனை உரிமத்தை ரத்து செய்யவும் முடியும்.
ஹாரன் அலறினால்...
வாகனங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்களைப் பயன்படுத்தக் கூடாது. தேசிய கமிட்டி அதிகபட்சமாக எவ்வளவு டெஸிபல் சப்தம் அனுமதிக்கிறதோ, அதற்கு மேல் பயன்படுத்தினால் அது குற்றம்.
ஒரு வாகனத்தின் பதிவு எண்ணை, இந்தியா முழுக்க ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டரில் உள்ளிட்டாலே, அனைத்து விபரங்களையும் அதிகாரிகள் உடனடியாகப் பார்த்து விடலாம். மேலும், திருடப்பட்ட வாகனமா என்பதுகூட உடனே தெரிந்துவிடும். இந்த நடைமுறை மோட்டார் வாகனப் பயன்பாடு மற்றும் போக்குவரத்துத் துறையில் ஒரு முக்கிய மைல் கல்.
சாலைகள், பாலங்கள்
சாலைகளில் வாகனங்களுக்குத் தேவைப்படும் கட்டுமானங்களைப் பற்றி ஆராய்ந்து, பஸ், லாரி போக்குவரத்து டெர்மினல்கள் அமைப்பது, ஓட்டுநர்கள் ஓய்வு எடுக்கும் இடங்கள் அமைப்பது, சாலைகளைத் தரம் உயர்த்துவது, பாலங்கள் அமைப்பது போன்ற விஷயங்களை தேசிய கமிட்டி கவனிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், ஆங்காங்கே சரக்குகளை ஸ்டாக் வைத்து அனுப்புவதற்கு, லாரி உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்து, அதற்குத் தேவையான வாடகை பெற்றுக்கொள்வது; சாலைகள் மேம்பாடு பற்றி தேசிய நெடுஞ்சாலைத் துறையுடன் சேர்ந்து திட்டமிட்டுச் செயல்படுவது என்று பல பணிகள் இந்த கமிட்டிக்குக் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாதசாரிகளுக்கு தனிப் பாதை...
இந்தப் புதிய சட்ட வரைவில் மற்றொரு முக்கிய அம்சம், சாலையைப் பயன்படுத்துவோர் பற்றியும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, பாதசாரிகளுக்கு என்று தனிப் பாதை அமைக்கப்பட வேண்டும்; சைக்கிள், தள்ளுவண்டி மற்றும் சைக்கிள் ரிக்‌ஷா போன்றவற்றைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பும் கருத்தில்கொள்ள வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படை...
தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்புப் படை என்ற ஒரு தனி அமைப்பை உருவாக்க, புதிய வரைவில் தேசிய கமிட்டிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்புப் படை, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை ஆகியவற்றில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் விதிகளை மீறுபவர் மீது நடவடிக்கை எடுக்கும்.

புதிய சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு மசோதா 2014ன் வரைவில், மேலை நாடுகளுக்குச் சமமாக புதிய பிரிவுகளும் புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வரைவின் மூலம் விபத்துகளைத் தவிர்ப்பது மட்டுமின்றி, நமது போக்குவரத்துத் துறையில் பெரும் மாற்றத்தையும் உருவாக்க முடியும். ஆனால், இதில் உள்ள முக்கியமான பிரச்னை, இந்தச் சட்ட வரைவு அப்படியே நிறைவேறுமா என்பதுதான். காரணம், இந்தப் புதிய சட்டப்படி தேசிய கமிட்டி அமைக்கப்பட்டால், மாநிலங்களுக்கான அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. எனவே, இந்தச் சட்டம் நிறைவேற வேண்டும் என்றால், அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும். நடக்குமா என்பதைப் பார்க்கலாம்!
-விகடன்-


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தனிநபர் பற்றிய தகவலை வெளியிட்டால் 5 ஆண்டு வரை சிறை தண்டனை, ரூ.2 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் புதுச்சட்டம் கொண்டுவருவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
» ஆழ்துளை கிணறு போட்டு, இனி இஷ்டத்திற்கு தண்ணீர் எடுக்க முடியாது: வருகிறது புதிய சட்டம்
» வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு 'செக்ஸ்' தொல்லை கொடுத்தால் பணி நீக்கம்: புதிய சட்டம் அமலுக்கு வருகிறது
» வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம்
» யுவராஜ் எனக்கு தம்பி மாதிரி : பிரித்தி ஜிந்தா அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum