Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 4:16 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
சல்லேகனை-வடக்கிருத்தல்-உண்ணாநோன்பு
Page 1 of 1
சல்லேகனை-வடக்கிருத்தல்-உண்ணாநோன்பு
உண்ணாநோன்பு என்பது ஒரு தவம். பழந்தமிழர்கள் தங்களுக்கு இழுக்கு ஏற்பட்டபொழுது...............
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் (குறள் எண்: 969)
என்பதற்கு எடுத்துக்காட்டாக, வடக்கிருந்து உணவுமறுத்து உயிர்விட்டுள்ளனர்.
உண்ணாநோன்பிருந்து உயிர்துறக்கும் சமணர் செயல், ’சல்லேகனை’ எனப்படும்.
இடையூறுஒழிவில்நோய் மூப்புஇவை வந்தால்
கடைதுறத்தல் சல்லே கனை.
என்கிறது ‘அருங்கலச் செப்பு’ என்னும் சமணநூல். பொறுத்துக் கொள்ள இயலாமல் பிறரால் ஏற்படும் தொல்லை, தீராமல் தொடர்ந்து துன்பம் தருகின்ற நோய், தாங்க இயலா முதுமைத் தொல்லை, ஆகியன வரும் பொழுது ‘சல்லேகனை’ என்னும் உண்ணாநோன்புச் செயலால் உயிர்விடலாம் என்கிறது இந்நூல். ‘
இரத்தின கரண்டக சிராவகாசாசரம்’ என்னும் மற்றொரு சமண நூல் பெரும்பஞ்சம் வந்து துயர்ப்படும்பொழுதும் இவ்வுண்ணாநோன்பிருந்து உயிர் நீத்தலை மேற்கொள்ளலாம் என்கிறது. அதே நேரம் இம்முறையைத் தற்கொலையாகக் கொச்சைப்படுத்தக் கூடாது என்றும் அறவழி உயிர் துறக்கும் உயர்ந்த முறை இது என்றும் நீலகேசி என்னும் சமண நூல் கூறுகிறது.
பலரும் சமணரின் ‘சல்லேகனை’ என்பதுதான் தமிழரின் வடக்கிருத்தலாக மாறிற்று என்று தவறாகச் சொல்வர். இதனைக் கையால் ஆகாதத்தனம் எனக் கூறாவிட்டாலும் தனக்குத் துயர் வரும் காலத்துத் தன்னால் பிறருக்குத் துயரம் வரக்கூடாது என்று எண்ணித் தன்னை வருத்தி உயிர்விடலாகக் கூறலாம்.
ஆனால், தமிழரின் வடக்கிருத்தல் என்பது தனக்கு இழுக்கு நேர்ந்த விடத்து, பெருமிதக் குறைபாடாகவோ களங்கமாகவோ மானமிழத்தலாகவோ கருதி அதனைத் தாங்கிக் கொள்ள இயலாமல் வடக்கிருந்து உண்ணா நோன்பிருந்து உயிர் விடலாகும். சிக்கலை அல்லது துன்பத்தை எதிர்கொள்ள இயலாமல் என்றில்லாமல் வாழும் வழியிருந்தும் மானக்குறைபாடென எண்ணி உணவு மறுத்து உயிர் துறத்தல் என்பது பெரும் பண்பாகும். எப்படி இருந்தாலும் இரண்டிலுமே பொய்மையோ நடிப்போ இல்லை. தன் துயர் பொறுத்தலும் துணிவும் உள்ளன.
சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும் சோழன் கரிகாற் பெருவளத்தானுக்கும் ’வெண்ணிப் பறந்தலை’ என்னும் இடத்தில் போர் நடைபெற்றது. திருமா வளவன் செலுத்திய நெடுவேல் சேரமான் மார்பில்பட்டு முதுகின் புறத்தே உருவிச் சென்று புண் செய்தது. முதுகில் புண்படுதல் என்பது புறமுதுகிட்டு ஓடுதல் என்னும் வீரக்குறைபாடாகும். “
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி”யைச் சேர்ந்த தமிழ் மக்கள்மார்பில் புண்பட்டு இறப்பதை விரும்பினரே யன்றி, முதுகில் புண் பட்டு வாழ்தலை அன்று. எனவே, முதுகில் புண் ஏற்பட்டு விட்டதை மானக் குறைபாடாக எண்ணிச் சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் நீத்தான்.
உலகில் அனைவரும் மறக்கக்கூடா வடக்கிருத்தல் இணைபிரியா நட்பிற்கு அடையாளமான கோப்பெருஞ்சோழன்- பிசிராந்தையார் வடக்கிருந்த செயலாகும். கோப்பெருஞ்சோழனின் பிள்ளைகள் அரசுரிமைக்காகத் தந்தையாகிய மன்னரை எதிர்த்தனர். அவர்களுடன் போர் தொடுக்கஇருந்த மன்னனிடம் புலவர்கள் அறிவுரை கூறி அப்போரைத் தடுத்தனர்.
புலவர்களின் அறிவுரைக்கிணங்க வேந்தனும் போரை நிறுத்தி அரசுரிமையை அவர்களிடமே கொடுத்தான். எனினும் மக்களே தந்தையிடம் போர்தொடுக்க நேர்ந்த சூழலை அவமானமாகக் கருதினான். எனவே, வடக்கிருந்து உண்ணாநோன்பு மேற்கொண்டு உயிர் விட்டான்.
அப்பொழுது அதுவரை வேந்தனை நேரில் கண்டறியாமல் நட்பு பூண்டிருந்த புவலர் பிசிராந்தையார் அங்கு வந்து, மன்னன் இறந்த துயரம் அறிந்து தானும் அவன் வழி வடக்கிருந்து உயிர் துறந்தார்.
நட்புலகில் போற்றப்படவேண்டிய மற்றொன்று மன்னன் பாரி – புலவர் கபிலர் இடையே உள்ள நட்பாகும். மன்னன் பாரி இறந்ததும் அவர் பெண்மக்களைத் திருமணம் செய்வித்த பின் புலவர் கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்தார்.
சிலப்பதிகாரக் காலத்தில் கவுந்தியடிகள்,கோவலன் கொலையுண்டதன் தொடர்ச்சியாக – பாண்டிய வேந்தன் மரணம், கோப்பெருந்தேவி மரணம், கண்ணகி இழப்பு, மாதரி எரியுண்டல் எனத் தொடர்ந்து – ஏற்பட்ட மரண அவலங்களால், சமண சமய நெறிப்படி வடக்கிருந்து உயிர் விட்டார்.
”தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம்......................
உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும்..”
என்று சிலப்பதிகாரத்திலுள்ள ‘நீர்ப்படைக் காதை’ ( 79-83) குறிப்பிடுகின்றது.
சமண முனிவர்கள் பல்வேறு காலங்களில் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்துள்ளனர்.
இக்காலத்தில், உண்ணா நோன்பு என்பது கோரிக்கையை நிறைவேற்ற மேற்கொள்ளும் போராட்ட முறையாகவும் மாறிவிட்டது. உலக நாடுகள் எங்கும் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் உண்ணா நோன்புப் போராட்டத்திலும் சாகும்வரை உண்ணா நோண்புப் போராட்டத்திலும் ஈடுபட்டவர் பலராவர். இதில் குறிப்பிடத்தகுந்தது அயர்லாந்து நாட்டில் நிகழ்ந்துள்ள உண்ணாநோன்புப் போராட்டங்களாகும்.
இராபர்ட்டு செரார்டு சான்டு என்ற பாபி சாண்டு (Robert Gerard Sands @ Bobby Sands, மாசி 26, 1985 – சித்திரை 22, 2012 / மார்ச்சு 9, 1954 – மே 5, 1981), என்பவர் ஐரிசு குடியரசுப்படையைச் சேர்ந்த தன்னார்வலர். இவர் சிறையில் இருந்த பொழுதே ஐக்கிய மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1981இல் வட அயர்லாந்தில் (இ)லிசுபேர்ன் நகரில் உள்ள சிறையில் பிரித்தானிய அரசுக்கெதிராக உண்ணாநோன்பிருந்த சிறைவாசிகளுக்குத் தலைமை வகித்தார். இவரும் இவருடன் உண்ணாநோன்பிருந்த பதின்மரும் இறந்தனர்.
இந்தியாவில் காந்தியடிகள் [மோகன்தாசு கரம்சந்த்து காந்தி (புரட்டாசி 18, 1900 - தை 17, 1979; 2.10.1869-30.01.1948)] உண்ணாநோன்புப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்டவர். ஆங்கிலேயரின் அருள் பார்வை இவர் மீது இருந்தமையால்தான் பல போராட்டங்களை நடத்த முடிந்தது.இல்லையேல் ஏதேனும் ஒரு போராட்டத்திலேயே இவர் உயிர் பிரிந்திருக்கும்.
சதீந்திராநாத்து தாசு என்ற யதின்தாசு (Jatindra Nath Das ) ஐப்பசி 12, 1935 – ஆவணி 29, 1960 / அக்.27, 1904 – செப்.13, 1929) இலாகூர் சிறையில் உண்ணாநோன்பிருந்து 63 ஆவது நாளில் உயிரிழந்தார்.
பகத்துசிங்கு (புரட்டாசி 11, 1938 – பங்குனி 10, 1962 / செப். 27, 1907 –மார்ச்சு 23, 1931), பிரித்தானிய சிறைவாசிகளுக்கும் இந்தியச் சிறைவாசிகளுக்கும் சமஉரிமை இருக்க வேண்டும் என்று 116 நாள் உண்ணாநோன்பிருந்துள்ளார்.
இந்திய விடுதலைக்குப் பின்னரான உண்ணாநோன்புப் போராட்டமெனில், தெலுங்கு மக்களுக்கான தனி மாநிலம் வேண்டி உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்த பொட்டி சிரீராமுலுவைக் (பங்குனி 3, 1932 – மார்கழி 2, 1983 / மார்.16, 1901 – திச.16, 1952) கூறலாம்.
சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும், இந்தியா முழுவதும் மதுவிலக்கு முதலான 12 வேண்டுகைகளுக்காக ஆடி 12, 1987 முதல் (27.07.1956) 76 நாட்கள்உண்ணா நோன்பிருந்து புரட்டாசி 28, 1987 (13.10.1956) அன்று உயிர் துறந்த சங்கரலிங்கனாரையும் நம்மால் மறக்க இயலாது.
உலகம் முழுவதும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வு, மாவீரன் திலீபன்(கார்த்திகை 12, 1994 – புரட்டாசி 10, 2018; 27.11.1963- 26.09.1987) ஆவணி 30,2018/ செப்.15, 1987 முதல் உண்ணாநோன்பிருந்து, நீர்கூட அருந்தாமல்புரட்டாசி 10, 2018 / செப்.26, 1987 இல் இந்தியத்தால் உயிரிழந்ததாகும்.
பெண்போராளிகளில் குறிப்பிடத்தகுந்தவர் நீர்மட்டும் அருந்தி மார்.19, 1988 முதல் உண்ணா நோன்பிருந்து ஒரு திங்களில் – அஃதாவது ஏப்.19,1988 இல் உயிர் துறந்தஅன்னை பூபதி(ஐப்பசி 19, 1963 – சித்திரை 5, 2019; நவம்பர் 3, 1932 – ஏப்பிரல் 19, 1988)
தமிழ்நாட்டில் ஈழ மறவன் செந்தூரன் போன்றோர் உண்ணாநோன்பிருப்பதும் உயிரை மதிக்கா அறப் போராட்டமாகும்.
இப்பொழுது உண்ணாநோன்பு, அடையாள உண்ணா நோன்பு, தொடர் உண்ணாநோன்பு, சாகும்வரை உண்ணாநோன்பு எனப் பலவகை உணவு மறுப்புப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
என்றாலும் அண்மைக்காலங்களில் அரசியல் கட்சிகள்நடத்தும் உண்ணாநோன்புப் போராட்டங்கள் மக்களின் கேலிக்குள்ளாகி வருகின்றன. உணவு உட்கொண்டபின் உண்ணா நோன்புப் பந்தலுக்கு வருதல் அல்லது போராட்டப் பந்தலுக்குப் பின்னர் மறைவிடம் சென்று உணவு உண்ணல், அல்லது இடையிடையே வந்து சென்றுவிட்டு உண்ணாநோன்பை நாடகமாக்குதல் அல்லது இரண்டு உணவு நேரத்திற்கு இடையே உள்ள கால அளவை உண்ணா நோன்பாகக் காட்டுதல் போன்ற அவலங்கள் மேடையேறி வருகின்றன.
இவற்றிலெல்லாம் மிகவும் மோசமாகவும் மக்களின் ஏளனத்திற்கும் வெறுப்பிற்கும் உள்ளாகி வருவன, கருணாநிதியின் ஒரு மணி நேர உண்ணாவிரதம், இப்பொழுது அஇஅதிமுக பொதுச்செயலர் செல்வி செயலலிதாவின் விடுதலைக்காக நடத்தும் உண்ணா நோன்புப்போராட்டங்கள் ஆகும்.
…..............
உண்ணா நோன்பு என்பது பெருமிதம் கொள்வோர் இழுக்கைத் துடைக்கும் ஈகச் செயலாகும்!
உண்ணாநோன்பு என்பது தங்கள் இலக்கை அடைவதற்காகப் போராளிகள் உயிர்க்கொடைபுரியும் மறச் செயலாகும்!
உண்ணா நோன்பு என்பது தங்களின் இன்னலைக்களைய – தங்கள் முறையீட்டை வெற்றியாக மாற்ற நிகழ்த்தும் ஓர் அறவழிப் போராட்ட முறையாகும்!
எனவே, உண்ணா நோன்பைக் கொச்சைப்படுத்தாதீர்!
போலிப் போராட்டம் மூலம் உங்களை இழிவு படுத்திக் கொள்ளாதீர்கள்!
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|