TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கலர் ஹேர்... ப்ளீஸ் கேர்! சோபியா, அழகுக்கலை நிபுணர்

2 posters

Go down

கலர் ஹேர்... ப்ளீஸ் கேர்! சோபியா, அழகுக்கலை நிபுணர் Empty கலர் ஹேர்... ப்ளீஸ் கேர்! சோபியா, அழகுக்கலை நிபுணர்

Post by ஜனனி Sun Oct 26, 2014 1:14 pm

[You must be registered and logged in to see this image.]
கறுப்பான முடி இப்போது ஓல்டு ஃபேஷனாகிவிட்டது. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என வாரத்துக்கு ஒரு கலரில் முடியை மாற்றுவது தான் இப்போதைய ஃபேஷன். இயற்கைக்கு மாறாக, தலைமுடியை செயற்கையான நிறத்துக்கு மாற்றுவது சரிதானா?
அழகுக்கலை நிபுணர் சோபியா என்ன சொல்கிறார்?
''பொதுவாக, ஹேர் கலரிங் என்பதே ஆபத்தானதுதான். பல்வேறு விதமான பக்க விளைவுகள் வர வாய்ப்பு உண்டு. முன்பெல்லாம், தலைமுடியில் நரை விழுந்தவர்கள் மட்டும்தான் ஹேர் கலரிங் செய்துகொள்வார்கள். ஆனால், இன்று டீன் ஏஜிலேயே கலரிங் செய்துகொள்கிறார்கள்.
சிலர் கொஞ்ச நேரத்துக்கு மட்டும் முடியின் நிறத்தை மாற்றிக் கேட்பார்கள். ஒருநாள்,  ஒரு வாரம், ஒரு மாதம் செய்துகொள்ளும் தற்காலிக ஹேர் கலரிங் முதல் நிரந்தர ஹேர் கலரிங் வரை, பல வகைகளில்  இது செய்யப்படுகிறது. எத்தனை முறை சாயம் ஏற்றுகிறோம் என்பதைப் பொறுத்தே ஹேர் கலரிங்கின் கால அளவு அமைகிறது. எவ்வளவு கால அளவுக்கு ஹேர் கலரிங் செய்கிறோம் என்பதைப் பொறுத்து, அதற்காக சேர்க்கப்படும் க்ரீம்கள் மாறுபடும்.
ஹேர் கலரிங் எப்படிச் செய்கிறார்கள்?[You must be registered and logged in to see this image.]
முதலில் தலைமுடியை நன்றாக அலசி, தலைமுடியில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீக்கி டிரையர் மூலம் காயவைக்கிறோம்.  பிறகு அவர்கள் விரும்பும் வண்ணத்தில், விரும்பும் கால அளவுக்கு ஏற்ப, அதற்குரிய சாயம் முடியில் அடிக்கப்படும். இந்த முறையில் தலைமுடியை நான்கு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவாக தலையில் இருந்து 2 செ.மீ அளவுக்கு முடியை விட்டுவிட்டு, அதற்கு மேல் பகுதியில்தான் சாயம் ஏற்றப்படுகிறது. தலைமுடி முழுவதும் நரைத்திருந்தால் மட்டும்,  தலைமுடியின் அடிப்பாகத்தில் இருந்து முழுவதுமாக சாயம் ஏற்றப்படும். தற்காலிகமாக ஹேர் கலரிங் செய்துகொள்பவர்கள் என்றால், எத்தனை நாட்களுக்கு கலரிங் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அத்தனை நாட்களுக்கு தலைக்குக் குளிக்கக் கூடாது.
நிரந்தரமாக ஹேர் கலரிங் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு, ஹேர் கலரிங் செய்தவுடன் 40 நிமிடங்கள் முடியை நன்றாகக் காயவைத்து, பின்னர் ஷாம்பூ, கண்டிஷனர், முடிக்கான மாஸ்க் (Hair Mask) ஆகியவை கலந்த 'ஹேர் ஸ்பா’ செய்யப்படுகிறது. இதுதான் ஹேர் கலரிங் செய்யப்படும் முறை.
[You must be registered and logged in to see this image.]
டை அடிப்பதும் ஹேர் கலரிங் செய்வதும் ஒன்று தான். தலைமுடி முழுவதும் நரைத்தவர்கள் வீட்டில் டை அடித்துக்கொள்ளலாம். ஆனால் சில முடிகள் மட்டும் நரைத்திருந்தால், தாங்களாகவே டை அடித்துக்கொள்வது தவறு. தலை வழுக்கையான பகுதியில் டை பட்டுவிட்டால், பல்வேறு தோல் அலர்ஜி பிரச்னைகள் வரலாம். மேலும், நிரந்தரமாக முடி நரைத்துவிடும். எனவே தரமான பொருட்களைப் பயன்படுத்தும் அனுபவமிக்க பார்லர்களில் மட்டும் ஹேர் கலரிங் செய்து கொள்வது நல்லது.
[You must be registered and logged in to see this image.]ஹேர் கலரிங் செய்தவர்கள் அதன் பிறகு, கண்டிஷனர் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மாதம் ஒருமுறையேனும் ஹேர் ஸ்பா செய்துகொள்ள வேண்டும். இவையெல்லாம் கலரிங் செய்துகொண்டவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள். அதிக ரசாயனம் சேர்த்த தரமற்ற ஷாம்பூ, கிரீம்களைப் பயன்படுத்தினால், முடி சீக்கிரம் வலுவிழந்து கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே, கவனம் தேவை!
ஹேர் கலரிங் செய்து கொள்வதால்வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?
மாயா வேதமூர்த்தி, தோல் மருத்துவர்
பொதுவாக நமது முடி என்ன நிறத்தில் இருக்கிறதோ, அதில் இருந்து மிகச்சிறிதளவு வேறுபடும் கலரில் மட்டுமே கலரிங் செய்துகொள்ளலாம். உதாரணத்துக்கு, கருமை நிறத்தில் முடி இருப்பவர்கள் மெல்லிய பிரவுன் நிறத்தில் கலரிங் செய்துகொள்ளலாம். அதை விடுத்து கிரே, ஆரஞ்சு என வித்தியாசமான கலரில், கலரிங் செய்துகொள்வது தலைமுடிக்கு ஆபத்து. ஹேர் கலரிங் செய்வதால் அலர்ஜி, முடி உதிர்தல், உடைதல் போன்ற பிரச்னைகள் வரலாம். ஹேர் கலரிங் செய்துகொள்வதால் முடிக்கு மட்டுமின்றி சில சமயங்களில் கண்களும் பாதிக்கப்படும். களையான முகமும் கறுத்துப்போகும்.  கண்களைப் பாதிக்கும் கிளக்கோமா மற்றும் வெண்புள்ளிகள் போன்ற தோல் பிரச்னைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதுவே, மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தி, நிம்மதியைக் குலைத்துவிடும்.[You must be registered and logged in to see this image.]
ஃபேஷனுக்காகச் செய்யும் இந்த கலரிங் முறை,  உடலுக்கு உகந்தது அல்ல. மேலும் நிரந்தரமாக ஹேர் கலரிங் செய்துகொண்டவர்கள், மீண்டும் விரும்பினாலும், பழைய கருமை நிற முடியைப் பெற இயலாது. முடி முழுவதையும் எடுத்துவிட்டு, பிறகு மீண்டும் இயற்கையாக முடி முளைத்தால் மட்டுமே பழைய நிறம் சாத்தியம். இல்லையெனில், ஏற்கனவே கலரிங் செய்யப்பட்ட முடியை மீண்டும் இயற்கையான முடியின் நிறத்துக்கு கலரிங் செய்துகொள்ளவேண்டும். பார்லர்களில் பயன்படுத்தும் க்ரீம்களில் 'லெட் அசிட்டேட்’ கலந்திருக்கலாம். அவ்வாறு 'லெட்  அசிட்டேட்’ கலக்கப்பட்ட க்ரீம்களை தலைமுடியில் பூசினால், அது தோல் புற்றுநோயை வரவழைக்கக் கூடும். எனவே,  தரமான க்ரீம்களைப் பயன்படுத்தும் பார்லர்களில் மட்டும் ஹேர் கலரிங் செய்துகொள்ளவும்'.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

கலர் ஹேர்... ப்ளீஸ் கேர்! சோபியா, அழகுக்கலை நிபுணர் Empty Re: கலர் ஹேர்... ப்ளீஸ் கேர்! சோபியா, அழகுக்கலை நிபுணர்

Post by அருள் Mon Oct 27, 2014 7:41 am

மொத்தத்தில் நாம் எப்பொழுதும் போல இருக்க வேண்டும்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum