Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இடியாக இறங்கும் இறால் பண்ணைகள்!
Page 1 of 1
இடியாக இறங்கும் இறால் பண்ணைகள்!
முனியாண்டி விலாஸ் துவங்கி, பெரிய ஸ்டார் ஹோட்டல்கள் வரை மெனுகார்டில் இறால் உணவு வகைகளுக்கு கட்டாயம் இடமுண்டு. அவற்றுக்கு தேவையான இறால்கள் உவர் நீரில் வளர்க்கப்படுகிறது. இவற்றால், நெடுங்காலமாக கடற்கரையோரங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் கெட்டுப்போனதுடன், உப்பு உற்பத்தியும், குடித்தண்ணீரும் பிரச்னைக்குரிய ஒன்றாக மாறி வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் மரக்காணம் சுற்றுவட்டார கிராமங்கள்.
உப்பு உற்பத்திக்கு பெயர்போன ஊர்களில் ஒன்றான மரக்காணத்தைச் சுற்றி 25 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த பிரச்னை இருக்கிறது. இந்தப் பிரச்னைக்காக பலவிதமான போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். இறால் பண்ணைகள் துவங்கப்பட்ட பிறகு, என்ன விதமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்று விளக்கினார் நமோ பேரவையின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர்வேஷ்குமார்,
"2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கடல்சார் இறால் வளர்ப்புச் சட்டத்தின் மூலம் உவர் நீரில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இறால் வளர்ப்பு செய்கின்றனர். இந்தச் சட்டத்தில் இறால் பண்ணைகள், கடல் மற்றும் கலிமுகப் பகுதிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என சொல்லப்பட்டிருந்தாலும், மரக்காணம் பகுதிகளில் இறால் வளர்ப்பு செய்பவர்கள் கலிமுகப் பகுதிகளை ஒட்டி, இறால் பண்ணைகள் அமைத்திருக்கின்றனர். இந்த இறால் பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் கந்தாடு, நடுகுப்பம், அனுமந்தை என 25 கிராமங்களில் உள்ள குடிதண்ணீர் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இறால் பண்ணைகளுக்கு தேவையான குஞ்சுகள் உற்பத்தி செய்வதற்கு இந்தியா முழுவதும் 176 குஞ்சுப்பொறிப்பகங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 22 குஞ்சுப்பொறிப்பகம் மரக்காணத்தை சுற்றியுள்ள கிராமங்களிலே இருக்கிறது. இந்த இறால் பண்ணைகளை வைத்திருப்பவர்கள் அனைவருமே அரசியல் பின்புலம் உள்ளவர். இதனால், இவற்றை எதிர்த்து கேள்விகள் கேட்பவர்களை அடியாட்கள் மூலமாகவும், போலீஸ் மூலமாகவும் மிரட்டுகின்றனர். இந்தப் பிரச்னைகள் சம்மந்தமாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுகின்றார்" என்றார்.
உப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டிருக்கும் முன்னோடிகளில் ஒருவர், "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் ஏக்கரில் இருந்த உப்பு உற்பத்தி, இன்றைக்கு 2,400 ஏக்கராக சுருங்கிவிட்டது. இதற்கு முழுமுதல் காரணம் இறால் பண்ணைகள்தான். உப்பு உற்பத்தி செய்யப்படும் கோடைக்காலங்களில், இறால் பண்ணைகளில் வெப்பத்தைக் குறைப்பதற்காக அடிக்கடி வெளியேற்றப்படும் கழிவுநீரால், கலிமுகப்பகுதியில் இருந்து உப்பு உற்பத்திக்கு எடுக்கப்படும் தண்ணீர் மாசுப்படுகிறது. இதனால், காரத்தன்மை குறைந்து, உப்பு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு 2 மூட்டை கிடைத்த இடங்களில் ஒரு மூட்டையாக மாறி இருக்கிறது. கட்டிகளாக கிடைத்த உப்புகள், அதிக அளவில் நொய் உப்புகளாகவே கிடைக்கிறது. இதனால், உப்பை வாரி வைப்பதற்கு, நேரத்தை அதிகமாக செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 1985ஆம் ஆண்டு 840 டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்ட இடங்களில், இன்றைக்கு 350 டன்னாக குறைந்துவிட்டது. இறால் வளர்ப்புக்களால், சுத்துவட்டாரத்தில் மஞ்சாம்குப்பம் துவங்கி, கடப்பாக்கம் வரை சுமார் 25 மேற்பட்ட கிராமங்களில் குடிதண்ணீர் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பண்ணைகளை பெரிய பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் நடத்துவதால் பல போராட்டங்கள் நடத்தியும், மக்களால் இறால் பண்ணைகளை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை’’ என்றார் வருத்தத்துடன்.
தேசிய மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி அஜித்குமார், "இறால் மீன்களை பொருத்தவரை, ‘வெனாமி’ என்ற வெளிநாட்டு இனம்தான் பெரும்பகுதியாக வளர்க்கப்படுகின்றது. இந்த இறால் இனத்திற்கு ‘வெண் புள்ளி’ என்ற நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதற்காக இறால் வளர்ப்பவர்கள் அதிகமான அளவுகளில், ‘ஆண்டிபயாடிக்குகளை’ பயன்படுத்துகின்றனர். இந்த ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகள் இறால் மீன்கள் மூலம் மனித உடலில் கலப்பதால், பலவிதமான பிரச்னைகள் வருகின்றன என்று உனர்ந்த மத்திய அரசு, இறால் வளர்ப்புக்கு ஆண்டிபயாட்டிக்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
இறால்களை மூன்று மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், இறால் தீவனங்களுடன், வளர்ச்சி ‘ஹார்மோன்’கள் அதிகமாக கலக்கப்படுகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் இறால் உணவுகளை தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது, மனிதர்களுக்கு பலவிதமான பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.
-காசி.வேம்பையன்

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» இறால் பிரியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி! கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இறால் இனம்
» ஆந்திரா இறால் குழம்பு – இறால் இகுரு
» பொங்கல் ரேசில் களம் இறங்கும் கொம்பன்
» தமிழர்களுக்காக களம் இறங்கும் பிரித்தானிய காவல்த்துறை!
» கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்... சிறப்பு ஆல்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum