TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:03 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கரையை கடக்கிறாள் 'லைலா' ; கடலோர மக்கள் 35 ஆயிரம் பேர் வெளியேற்றம்; ரயில்கள் ரத்து

3 posters

Go down

கரையை கடக்கிறாள் 'லைலா' ; கடலோர மக்கள் 35 ஆயிரம் பேர் வெளியேற்றம்; ரயில்கள் ரத்து Empty கரையை கடக்கிறாள் 'லைலா' ; கடலோர மக்கள் 35 ஆயிரம் பேர் வெளியேற்றம்; ரயில்கள் ரத்து

Post by ஜனனி Thu May 20, 2010 2:50 pm

சென்னை : ஆந்திராவில் கடக்கும் புயல் காரணமாக
கடலோரவாழ் மக்கள் 35 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு கிழக்கு மற்றும் வடமேற்கு
திசையில், 190 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ள லைலா புயல்,
இன்று நெல்லூருக்கும், காக்கிநாடாவிற்கும் இடையே கரையை இன்று (
வியாழக்கிழமை) கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில்,
கோடையின் உச்சகட்டமான கத்திரிவெயில் கடந்த 4ம் தேதி துவங்கி, வேலூர்,
திருச்சி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சுட்டெரித்தது. வங்கக் கடலில்
புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம்
முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளது,

விமான படையினர் தயார் :
ஆந்திராவில் புயல் கடந்து செல்லும்போது காற்றின் வேகம் மணிக்கு 120
கி.மீட்டர் வேகத்தில் இருக்கும் இதன்காரணமாக ஆந்திர கடலோர மக்கள், சுமார்
35 ‌ஆயிரம் பேர் பாதுகாப்பான மாற்று இடங்களுக்கு செல்லுமாறு கேட்டு
கொள்ளப்பட்டுள்ளனர். விமான படையினர் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். நெல்லூர்
பகுதியில் 100 க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போய்விட்டதாக அவர்களை
தேடும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேரிடர் அவசர
கால மீட்பு படையினர் தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் ரயில்கள் ரத்து
செய்யப்பட்டுள்ளன. விஜயவாடா, நெல்லூர் இடையிலான ரயில் போக்குவரத்து
முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமான சேவையும் பாதிக்பப்ட்டுள்ளது.

ராணுவ உதவி தேவையா ? :
நாட்டில் லைலா புயல் காரணமாக எழுந்துள்ள நிலையை சமாளிக்க ராணுவ உதவி
அளிக்கப்படும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அண்டனி கூறியுள்ளார்.
டில்லியில் மூத்த பாதுகாப்பு படை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில்
நாட்டின் கடலோர பாதுகாப்பு விஷயம் தொடர்பாக அமைச்சர் அந்தோணி முக்கிய
யோசனை வழங்கினார். தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறுகையில் :
நாட்டில் நெருக்டி நிலை ஏற்படும் போது ராணுவம் தேவையான உதவிகள் செய்வது
கடமை. லைலா புயல் பாதிப்புக்கு ராணுவ உதவி தேவைப்பட்டால் அனுப்பி
வைக்கப்படும் என்றார்.

வலுவிழக்குமா புயல் :
ஆந்திராவை கடந்து செல்லும் புயல் தற்போது வலுவிழந்து வருவதாக வானிலை ஆய்வு
மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வலுவிழக்கும் நேரத்தில் சேதமும்
குறைந்து விடும். இருப்பினும் ஆந்திர, கர்நாடக, தமிழக கடலோரம்
கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வுமைய அதிகாரி
குழந்தைவேலு கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த, 'லைலா'
புயல் நேற்று காலை 8.30 மணியளவில், சென்னைக்கு கிழக்கு மற்றும் வடமேற்கு
திசையில் 190 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக தமிழகம்
மற்றும் புதுச்சேரியின் வடக்கு கடலோர மாவட்டங்களின் பெரும்பாலான
பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இப்புயல் மேலும் வலுவடைந்து வடமேற்கு,
வடக்கு திசையை நோக்கி நகர்ந்து, நெல்லூர் மற்றும் காக்கிநாடாவிற்கு இடையே
ஆந்திர கடற்கரை பகுதியில், இன்று அதிகாலை கரையை கடக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம்
மற்றும் புதுச்சேரியின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ஆந்திர கடலோர
மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 65 முதல் 75
கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் கரையை கடக்கும் போது,
மணிக்கு 115 முதல் 125 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும். அடுத்த 24
மணி நேரத்தில், வடக்கு கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 50 முதல் 60
கி.மீ., வரை இருக்கும். கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால்,
மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை
விட்டுவிட்டு பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தரைக்காற்று
பலமாக வீசும் என்றார்.

லைலா பெயர்க்காரணம் :
புயல் என்று வந்து விட்டால் நிஷா, கத்ரீனா, லைலா என பெண்கள் பெயர் தான்
வைக்கப்படுகிறது. புயலுக்கு எப்படி பெயர் வைக்கிறார்கள் என்பது குறித்து
ஸ்வாரஸ்‌ய தகவல் இதோ. சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் துணை இயக்குநர் ராஜ்
கூறுகையில் : வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு பெயர்
வைக்கும் வழக்கம் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கியது. சர்வதேச வானிலை
ஆராய்ச்சி மைய குழுமத்தில் உறுப்பினர்களாக இருக்கும் வங்கதேசம, இந்தியா,
மாலத்தீவு, மியன்மார், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகள்
புயலுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற பெயர் பட்டியலை வெளியிட்டது.

இந்த நாடுகள் பரிந்துரைத்த 64 பெயர்கள் தான்
தற்போது ஒவ்வொரு புயலுக்கும் பெயராக வைக்கப்படுகிறது. பெயரை
தேர்ந்தெடுக்கும் போது, சிறியதாக, எளிதில் உச்சரிக்கக் கூடியதாக, சர்ச்சை
இல்லாத பெயராக இருக்க வேண்டும் என்ற ஒரு சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.
அப்படி பரிந்துரைக்கப்பட்ட 64 பெயர்களில் இது வரை 22
உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வைக்கப்பட்டுள்ள லைலா என்ற பெயரை
பாகிஸ்தான் அளித்ததாகும். அடுத்து வரும் புயலுக்கு பாண்டு என பெயர்
வைக்கப்படும். இந்தப் பெயரை பரிந்துரைத்துள்ளது இலங்கை. இவ்வாறு அவர்
கூறினார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

கரையை கடக்கிறாள் 'லைலா' ; கடலோர மக்கள் 35 ஆயிரம் பேர் வெளியேற்றம்; ரயில்கள் ரத்து Empty Re: கரையை கடக்கிறாள் 'லைலா' ; கடலோர மக்கள் 35 ஆயிரம் பேர் வெளியேற்றம்; ரயில்கள் ரத்து

Post by kalairaja Thu May 20, 2010 6:55 pm

புயலுக்கு பின் அமைதி வர வேண்டும் ஆதலால் பெண்கள் பெயரா ?

லைலா ம்ஜுனை காண போனவரை சரியே.....
லைலா போனமைக்கு நன்றி சொல்லுவோம்..
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

கரையை கடக்கிறாள் 'லைலா' ; கடலோர மக்கள் 35 ஆயிரம் பேர் வெளியேற்றம்; ரயில்கள் ரத்து Empty Re: கரையை கடக்கிறாள் 'லைலா' ; கடலோர மக்கள் 35 ஆயிரம் பேர் வெளியேற்றம்; ரயில்கள் ரத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் 7 கோடி பேர்: நகரத்தில் மக்கள் தொகை 48 சதவீதம் உயர்வு; சென்னையில் சதுர கிலோ மீட்டருக்கு 27 ஆயிரம் பேர்
» இன்று கரையை கடக்கிறது 'லைலா' புயல்
» எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதல்: 50 பேர் பலி; 150 பேர் காயம்
» அமெரிக்கா கப்பல் ஊழியர்கள் 35 பேர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு: தூத்துக்குடி கடலோர காவல் படை நடவடிக்கை!
» கடலோர மக்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் எச்சரிக்கை…

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum