TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை!

3 posters

Go down

மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Empty மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை!

Post by mmani Sun Oct 05, 2014 9:15 am

கடந்த சில ஆணடுகளாக, தமிழ்நாட்டின் மிக முதன்மையான பிரச்னையாகவே பிரகாசித்து வருகிறது, மின் பற்றாக்குறை. தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்து நிறுத்தியதில் மின் வெட்டுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. நீர் மின்சாரமும், காற்றாலை மின்சாரமும் அடிக்கடி கையை விரித்து விடுகிறது. நிலக்கரியின் விலை உயர்வாலும் பற்றாக்குறையின் காரணமாகவும் அனல்மின் நிலையங்களும் அடிக்கடி நம்பிக்கை துரோகம் இழைத்துவிடுகிறது. அணுமின் நிலையங்களோ பெரும் அபத்தானது என மக்கள் அபயக்குரல் எழுப்புகிறார்கள். மின்பற்றாக்குறையை நிரந்தரமாக எப்படி தான் சமாளிப்பது?
[You must be registered and logged in to see this image.]
இந்த கட்டுரையை நீங்கள் படித்து முடிக்கும் போது, உங்களுக்கு ஷாக் அடித்தது போல் இருக்கும். அடப் பாவிகளா, கைல வெண்ணையை வச்சிக்கிட்டு, நெய்க்கு அலைஞ்ச கதையாக இருக்கே என நீங்கள் ஆதங்கப்படுவீர்கள். ஒரு கல்லுல பல மாங்காய்கள் அடிக்கக்கூடிய எளிமையான வழி இருக்கும்போது, ஆட்சியாளர்கள் ஏன் இதுல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்காமல் அடக்கி வாசிங்கிறாங்க என நீங்கள் கொந்தளித்துப் போவீர்கள். 

சர்க்கரை ஆலை முதலாளிகளை பொறுத்தவரை, சர்க்கரையைவிட, சக்கையே உயர்வானது. தற்போது இதுதான் அவர்களை வளமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. கரும்பில் இருந்து சர்க்கரையை எடுத்த பிறகு எஞ்சியிருக்கக்கூடிய சக்கையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, கோடியாக லாபம் பார்த்து வருகிறார்கள். கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் உள்ள அம்பிகா சர்க்கரை ஆலை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, கரும்பு சக்கையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு விற்பனை செய்து வருகிறது.  இதன் உற்பத்தி திறன்... மணிக்கு 40 மெகாவாட்.

தஞ்சை மாவட்டம், திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை 1999 ஆம் ஆண்டு சுமார் 31 கோடி ரூபாய் முதலீட்டில் மின் உற்பத்தி நிலையத்தை துவக்கியது. இதில் 27 சதவீத தொகையை மானியமாக, மத்திய அரசின் மரபு சாரா எரிசக்தி துறை வழங்கி விட்டது. கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் அப்போதே இந்த ஆலைக்கு கிடைத்துவிட்டது. 

இதைத்தவிர, மின்சாரம் விற்பனை மூலமாக, இந்த ஆலைக்கு இதுவரை கிடைத்துள்ள மொத்த தொகை 250 கோடி ரூபாயை தாண்டும் என்கிறார்கள், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், சாக்கோட்டையில் உள்ள துணை மின் நிலையம் மூலமாக, கும்பகோணம் நகரத்திற்கு வழங்கப்படுகிறது. இதனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைகிறார்கள். 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீதனலட்சுமி ஸ்ரீனிவாச சர்க்கரை ஆலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தான், பெரம்பலூர் மாவட்டத்தின் மின் தேவையில் ஒர் கனிசமான அளவினை நிறைவு செய்து வருகிறது. இதுபோல் இன்னும் ஏராளமான உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். தமிழகத்தில் 25 தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் பெரும்பாலானவற்றில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இந்த தனியார் ஆலைகள் உற்பத்தி மின்சாரம் அனைத்துமே, தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு யூனிட்டுக்கு கொள்முதல் விலையாக, ரூ.3.75ல் இருந்து 4 ரூபாய் வரை தரப்படுகிறது. இதன் மூலம் தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகள் பெரும் லாபம் பார்த்து வருகிறார்கள். 

ஆனால் சாபகேடாக, தமிழ்நாட்டில் உள்ள ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலையிலோ, கூட்டுறவு சர்க்கரை ஆலையிலோ இதுவரையில் கூட மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. இதில் மிகப்பெரும் அதிர்ச்சி என்னவென்றால், தனியார் ஆலைகளை விட, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு தான் வயது அதிகம். பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் 18 உள்ளன. 

இவை அனைத்திலும் மின் உற்பத்தி நடைபெற்றால், தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையில் கனிசமான அளவை நிறைவு செய்யலாம். இதில் கிடைக்கக்கூடிய லாபத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை, விவசாயிகளின் கரும்புக்கு கூடுதல் கொள்முதல் விலையாக கொடுக்கலாம். கிராமப்புறங்களில் தலைவிரித்தாடும் மின்வெட்டு பிரச்னையை முழுமையாக தீர்க்கலாம்.

[You must be registered and logged in to see this image.]
இதனை விவசாயிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பலனாக,  கடந்த திமுக ஆட்சியில் 2009ஆம் ஆண்டு முதல்கட்டமாக 12 பொதுத்துறை மற்றும் கூட்டுறவு ஆலைகளில் மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து தரக்கூடிய தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டு, அதற்குரிய பணத்தையும் அரசு வழங்கிவிட்டது. அதிகப்பட்சமாக 18 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு மின் உற்பத்தி துவங்கப்படும் என அப்போது அரசு அறிவித்தது. 

ஆனால் இதுவரை ஒரு ஆலையில் கூட மின் உற்பத்தி தொடங்கப்படவே இல்லை. மின் நிலையம் அமைத்து தருவதற்கு பணத்தை பெற்றுக் கொண்ட தனியார் நிறுவனங்கள் அலட்சியமாகவே இருக்கிறது. இதை தட்டிக்கேட்க வேண்டிய அதிகாரிகளோ மெத்தனமாக இருக்கிறார்கள். 

தஞ்சை மாவட்டம், குருங்குளத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனமான அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க, சுமார் 115 கோடி ரூபாய் நிதி வழங்கியது தமிழக அரசு. இதைத் தவிர, கரும்பு விவசாயிகளிடம் இருந்து பங்கு தொகையாக, 9 கோடியே 87 லட்சம் ரூபாய் வாங்கப்பட்டது. நான்காண்டுகளாகியும் இந்த தொகை கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கிறது. மின் உற்பத்தி துவங்கப்படாததால், விவசாயிகளுக்கு டிவிண்டட் கிடைக்கவில்லை. வட்டியும் கிடைக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, குருங்குளம், திருக்கானூர்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தலைவிரித்தாடக்கூடிய மின் வெட்டு இன்று வரை தொடர்கிறது. இங்கு மின் உற்பத்தி நடைபெற்றால், தங்கள் கிராமங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான், இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பங்கு தொகையாக பணம் கொடுத்தார்கள். 

ஆனால் ஏமாற்றத்தினால் இருள் தொடர்கிறது. பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் அனைத்திலும் உடனடியாக மின் உற்பத்தி தொடங்கப்படுவதோடு, புதிதாக சர்க்கரை ஆலைகளை அதிக எண்ணிக்கையில் தமிழக தொடங்கி, அவைகளில் மின் உற்பத்தியை துவக்க வேண்டும். இதன்மூலம் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒளிமயமான வாழ்வு கிடைக்கும். காற்றும், தண்ணீரும், நிலக்கரியும் அவ்வபோது கிடைக்காமல் போகலாம். ஆனால் கரும்பு சக்கை, பைசா செலவில்லாமல் எப்போதும் கிடைக்கும். மக்களுக்கு குறைந்த விலையில் சர்க்கரையும் கிடைக்கும்.

-கு.ராமகிருஷ்ணன்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Empty Re: மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை!

Post by logu Sun Oct 05, 2014 1:11 pm

அருமையான யோசனை அரசுகள் இதை செய்யவேண்டும்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Empty Re: மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை!

Post by மாலதி Mon Oct 06, 2014 7:53 am

logu wrote:அருமையான யோசனை அரசுகள் இதை செய்யவேண்டும்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை! Empty Re: மின்வெட்டை போக்க, ஓர் இனிப்பான யோசனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum