Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விரைவில் உயரப்போகிறது மின் கட்டணம் கிடு கிடு
Page 1 of 1
விரைவில் உயரப்போகிறது மின் கட்டணம் கிடு கிடு
விரைவில் உயரப்போகிறது மின் கட்டணம் கிடு கிடு
தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, 6,805 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் வகையில், மின் கட்டணத்தை, 15 - 17 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்து, உத்தேச பட்டியலையும் வெளியிட்டுள்ளது. 'மின் கட்டண உயர்வால், ஏழை மக்களுக்கு பாதிப்பு வராது' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். எனினும், இரண்டு மாதங்களுக்கு, 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் நடுத்தர மக்கள், இந்த கட்டண உயர்வில் இருந்து தப்ப முடியாது என்றே கூறப்படுகிறது.வருவாய் பற்றாக்குறை ரூ.49 கோடியாக குறையும்: தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, வீடு, விவசாயம், வணிகம், தொழிற்சாலை என, மொத்தம், 2.53 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். எரிபொருள் செலவினம், சரக்கு ரயில் கட்டணம், ஊழியர் சம்பளம் போன்ற காரணங்களால், மின் வாரியம், தொடர் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால், மின் வாரிய கடன் ஆண்டு தோறும், அதிகரித்து வருவதுடன், அதற்கான வட்டியும் உயர்ந்து வருகிறது.இதையடுத்து, அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மின் வாரியம், 2011 நவம்பரில், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் கட்டணம் உயர்த்தக் கோரி மனு அளித்தது.மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி நகரங்களில், பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி, 2012 ஏப்., 1ம் தேதி முதல், 37 சதவீத மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது.இதன் மூலம், மின் வாரியத்திற்கு, 7,800 கோடி ரூபாய்க்கும் கூடுதல் வருமானம் கிடைத்தது.
இந்நிலையில், 2012 - 13; 2013 - 14; 2014 - 15 ஆண்டுகளுக்கான, வருவாய் தேவை மற்றும் மின் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான மனுவை, மின் வாரியம் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தற்போது, தானாகவே மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.அதன்படி, நடப்பு நிதியாண்டில், நிகர வருவாய் தேவையாக, 39,092 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள, மின் கட்டணத்தின்படி, 32,238 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.இதனால், 6,854 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம், புதிய மின் கட்டணம் அறிமுகம் செய்தால், அதன் மூலம், 6,805 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால், வருவாய் பற்றாக்குறை, 49 கோடி ரூபாயாக குறைய வாய்ப்புள்ளது.இதற்கிடையே, 'இந்த கட்டண உயர்வு, ஏழை மக்களை பாதிக்காது. அதற்கான மானியத்தை, அரசே மின்வாரியத்திற்கு செலுத்தும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிக்கை
வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த அறிக்கையில், தொகை ஏதும் குறிப்பிடப்படவில்லை.பொதுவாக, இரண்டு மாதங்களுக்கு, 500 யூனிட்டுக்கு மேல், மின்சாரத்தை பயன்படுத்தும் நடுத்தர மின்நுகர்வோர்களுக்கு, மானியம் கிடையாது. எனவே, இந்த நடுத்தர மக்கள், மின் கட்டண உயர்வில் இருந்து தப்ப முடியாது என்றே கூறப்படுகிறது.
மின் கட்டண உயர்வு குறித்து, கருத்து தெரிவிக்க விரும்புவோர், 'செயலர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 19 - ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை - 8' என்ற முகவரிக்கு, அடுத்த மாதம், 23ம் தேதிக்குள், நேரில் அல்லது தபால் மூலமாககருத்து தெரிவிக்கலாம். இதைத் தொடர்ந்து, மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள், முக்கிய நகரங்களுக்கு சென்று, பொதுமக்களிடம், நேரடியாக கருத்து கேட்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், புதிய கட்டணத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். எனவே, தமிழ் புத்தாண்டு பரிசாக, மின் கட்டண உயர்வு இருக்கும் என்றே கூறப்படுகிறது.
'மின் கட்டண உயர்வு ஏற்புடையதல்ல':
சென்னை, வேளச்சேரி நலச்சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் குமாராஜா:மின்தடை, தாழ், உயர் அழுத்த மின்சார பிரச்னை, மின்மாற்றிகள் பழுது என, பல்வேறு பராமரிப்பு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. இப்பணிகளை நிறைவேற்றிய பின், மின் கட்டணத்தை உயர்த்த பரிசீலிக்கலாம். அதுவும், 15 சதவீத உயர்வு என்பது அதிகம். 10 சதவீதம் அதிகரித்தால் பரவாயில்லை. சிறு வியாபாரிகளை இது நிச்சயம் பாதிக்கும்.சென்னை, துரைப்பாக்கம், ஸ்ரீதேவி: மூன்று ஆண்டுகளுக்கு முன், மின் கட்டணத்தை உயர்த்தி, 'ஸ்லாப் சிஸ்டம்' கொண்டு வரப்பட்டது. இது நடுத்தரவாசிகளை மிகவும் பாதித்தது. அதாவது சராசரியாக, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, 500 ரூபாய் மின் கட்டணம் செலுத்தியவர்கள்,இத்திட்டத்தின் மூலம், ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டி வந்தது.அதுவும், இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் போது, யூனிட்கள் அதிகம் ஓடி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், 15 சதவீத மின் கட்டண உயர்வுக்கு பரிசீலிப்பது நடுத்தர மக்களை நிச்சயம் பாதிக்கும். மின்துறையில் உள்ள பல்வேறு பராமரிப்புப் பணிகளை முழுமையாக, மேற்கொண்ட பின், கட்டண உயர்வு குறித்து அரசு பரிசீலிக்கலாம்.
Advertisement
சென்னை, பெரும்பாக்கம், கலைவாணி:டீசல் விலை உயர்வால், என்னென்ன பிரச்னைகள் ஏற்படுமோ அதே அளவிற்கு மின் கட்டணம் உயர்த்தும்போதும் பாதிப்பு இருக்கும்.குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினரின் பட்ஜெட்டில், 20 சதவீதம் துண்டு விழும்.மின்வாரியத்திற்கு தேவையான நிதியை பெற சிகரெட், மது மீது மேலும் விலை உயர்த்தலாம். இலவசம் கொடுப்பதை நிறுத்தி விட்டு, அதற்கான தொகையை மின் வாரியத்திற்கு ஒதுக்கினால், மின் கட்டண உயர்வு குறித்து அரசு யோசிக்கவே தேவையில்லை.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, தனியார் நிறுவன ஊழியர், சுப்பிரமணி:அரசு இயந்திரம் முன்னேற்றம் காண, மின் கட்டணத்தை ஏற்றுவதை தவிர வேறு வழியில்லை என்றால் சரி தான். ஆனால், அதே வேளையில் தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளமும் ஏற அரசு வழி செய்ய வேண்டும்.அத்துடன் மின் சிக்கனத்தை காண, அரசு முன்பே அறிவித்தது போல், வீட்டுக்கு வீடு சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.
சென்னை, ஓட்டேரி, தனியார் நிறுவன ஊழியர் பாபு:அரசின் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி, மின் வாரியத்தில் கணினி மயமாக்கல் மூலம், அதிகப்படியான மின்வாரிய ஊழியர்களை குறைக்கலாம்.தியேட்டர், ஷாப்பிங் மால், ஐ.பி.எல்., போட்டி நடத்தும் கிரிக்கெட் ஸ்டேடியம் போன்றவற்றுக்கு ஒன்றுக்கு, நான்கு மடங்கு மின் கட்டணம் உயர்த்தலாம். இதைவிடுத்து, அப்பாவி பொதுமக்கள் மேல் மின் கட்டண சுமையை ஏற்றுவது மிகவும் தவறு. ஏற்கனவே ஏற்றப்பட்ட மின்கட்டணத்தால், பலர் கடும் நிதிசுமைக்கு ஆளாகியுள்ளனர்.
- நமது நிருபர் -
தினமலர்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» 'கத்தி' பட பாணியில் ஒரு கிடு கிடு போராட்டம்!
» மின் கட்டணம் செலுத்தப்போவதில்லை--ஈ.வி .கே .எஸ் .இளங்கோவன்
» மின் கட்டணம் செலுத்தப்போவதில்லை--ஈ.வி .கே .எஸ் .இளங்கோவன்
» லிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு
» டெல்லியில் மின் கட்டணம் : 22 சதவீதம் உயர்வு!
» மின் கட்டணம் செலுத்தப்போவதில்லை--ஈ.வி .கே .எஸ் .இளங்கோவன்
» மின் கட்டணம் செலுத்தப்போவதில்லை--ஈ.வி .கே .எஸ் .இளங்கோவன்
» லிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு
» டெல்லியில் மின் கட்டணம் : 22 சதவீதம் உயர்வு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum