Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஈழத்தமிழர் இரத்தத்தில் கை நனைக்கும் ரஜினிகாந்த்!
2 posters
Page 1 of 1
ஈழத்தமிழர் இரத்தத்தில் கை நனைக்கும் ரஜினிகாந்த்!
ஈழத்தமிழர் இரத்தத்தில் கை நனைக்கும் ரஜினிகாந்த்!
ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையில் வெறித்தாண்டவமாடிய இராஜபக்சவின் கைகைளைப் பலப்படுத்தத் தமிழர்களின் உழைப்பை உறிஞ்சிக் குடித்த லைக்கா நிறுவனம் கங்கணம் கட்டிக் கொண்டு நின்றது. இன்னமும் நிற்கின்றது. இந்த நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனும் ஐங்கரன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் கரணாமூர்த்தியும் இணைந்தே இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் இரத்தக் கரங்களை மறைக்கப் பெரும் முயற்சியில் ஈடுபட்டள்ளார்கள். இதற்குப் பிரதி உபகாரமாக இவர்களிற்கான சிறீலங்காவின் வியாபராச் சந்தையையும் இனப்டுகொலை இராணுவத்தின் அங்கீகாரத்தையும் ராஜபக்ச வழங்கியுள்ளான்.சுபாஸ்கரனும், கரணாமூர்த்தியும் பரிசைத் தளமாககக் கொண்ட மேலும் ஒரு வியாபாரப புள்ளியும் சிங்களத்திற்குக் காட்டும் விசுவாசத்திற்காக அவர்களின் அதிரடிப்படை உலங்குவானூர்தியிலேயே பயணம் செய்ய அனுமதிக்கும் அளவிற்குச் சிங்களத்தின் தோழர்கள் ஆக உருவாகி உள்ளார்கள். சிறீலங்காவின் தனித்த விசேட இராணுவ அணியின் பாதுகாப்புடனேயே சிங்கள அமைச்சர்களின் ஆதரவுடன் செயற்படடு வருகின்றார்கள். இந்த விபரங்கள் எல்லாம் அனைத்து ஊடக்களிலும் வெளியாகி இருந்தமை அனைவரும் அறிந்த விடயம்.
இவர்களின் அடுத்த ஆடுகளமாகவும் பிரச்சாரக்களமாகவும் தமிழ்த் திரையுலகம் குறி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் களமானது ராஜகச்சவின் ஆசீர்வாதத்துடனும் சில சினிமா அரசியற் பிரபலங்களின் பணத்தாசையுடனும் ஏற்கனவே தமிழ் சினிமாவின் களத்தில் காலூன்றி உள்ள ஜங்கரன் கருணாவின் வரவேற்புடனும் அல்லிராஜாவிற்குத் திறந்து விடப்பட்டுள்ளது. இவர்கள் விசிறி எறியும் காசிற்கு விஜயும், முருகதாசும் பலியானது போக அவர்களிற்கு வக்காளத்து வாங்க சீமானையும் திசை திருப்பி உள்ளது. லைக்கா குழுமத்தின் அத்தனை தமிழினத்துரோகங்களும் தெரிந்திருந்தும் வியாபாரமும் பணத்தாசையும் இவர்களைக் கோடம்பாக்கதினுள் காலூன்ற வழிவகுத்தது.
இதற்கான போராட்டங்கள், மாணவர்களின் எதிர்ப்பலைகள் என்பனவற்றை எல்லாம் புறந்தள்ளியும் பணத்தை அள்ளி வீசியும் தமிழினத்தின் துரோக நிறுவனங்காளின் கூட்டில் கத்தி தமிழினத்தின் கழுத்திற்குக் கத்தியாகவே வளர்ந்து வருகின்றது.
இதன் பாடல் வெளியீடு லண்டனில் வைப்பதாக லைக்ககாக் குழுவும் முடிவு செய்தது. ஆனால் இந்தத் தமிழினத் துரோகிகளின் கூட்டுச் சதிக்கான எதிர்ப்பு நெருப்புப் போலவே இங்கிருந்து கிளம்ப கத்தித் திரைப்படக்குழு திகைத்து நின்றுள்ளது. புலம் பெயர்தேசத்தின் எதிர்ப்பலைகள் இந்தத் திரைப்படத்தின் கடல் கடந்த உரிமையில் பெரும்பங்கை அழித்தொழித்து விட்டது. புலம்பெயர் தேசத்தில் இந்தத் திரைப்படத்தை வாங்கி வெளியிடும் துணிவு யாருக்கும் இருக்கப் போவதில்லை. இதை மீறி யாரும் இங்கு வெளியிடவும் போவதில்லை.
இனித் தமிழக மாணவர்களின் கடும் எதிர்ப்புத் தழிழ் நாட்டில் பாடலோ படமோ வெளியிடுவதையும் மிகவும் அச்சத்துடனேயே லைக்கா குழுமத்தால் பின்தள்ளி வைக்க வைத்துள்ளது. அவர்களின் அச்சத்தைப் போக்கித் துரோகிகளிற்குத் துணைசெய்ய ஒரு பிரபல குடும்பம் களமிறங்கி உள்ளது.
பெரும் தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் சர்வதேசப் படக்குழுமம் இந்தியாவின் வட மாநிலத்தின் மாபெரும் செலவு மிக்க திரைப்படத் தாயரிப்புக்களை நடாத்திவரும் நிறுவனத்தின் ஆக்கபூர்வ மற்றும் திட்டமிடல் தலைவராக ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இது இந்தித் திரைப்படத்துறையில் உள்ள தனது நண்பர்களின் செல்வாக்கின் மூலம் ரஜினிகாந்த் வாங்கிக் கொடுத்த சந்தர்ப்பமாகவே இது கூறப்படுகின்றது.
இப்படிப் பதவி பெற்ற சௌந்தர்யா செய்த முதல் வேலையே தமது துரோகத்தனத்தால் பெரும் சிக்ககிலிற்குள் சிக்கி நிற்கும் கத்தி படத்தின் பாடல் உரிமத்தை ஈரோஸ் நிறுவனத்திடம் சிபாரிசு செய்து வாங்கியது தான். அதாவது தமிழினத்தின் இரத்தத்தில் தன்வயிறு வளர்க்கும் லைக்கா குழுமத்தின் சிக்கலை அவிழ்த்தது தான் சௌந்தர்யாவின் முதல் வேலையாக இருந்துள்ளது. இதனையும் தாண்டி கத்தி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவினை எந்த எதிர்ப்பு வந்தாலும் அதனை உடைத்தெறிந்து பிரம்மாண்ணடமாக நடத்தித்தருவதாக லைக்கா குழுமத்திற்கு சௌந்தர்யா உறுதி அளித்துள்ளார்.
இங்கு உடைத்தெறிவதாக அவர் உறுதியளித்திருப்பது தமிழக மாணவர்கள் அமைப்பின் நியாயமான போராட்டங்களையும் மாணவர்களையும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மாணவர்கள் மீது ஒரு தடவை தாக்குதலும் நடந்துள்ளது.
தமிழினற்கெதிராக அநீதிகள் எழும்போதெல்லாம் குமுறி எழுந்த சீமானின் குரலும் அடக்கப்பட்டு விட்டது. அல்லது தானாவே அடங்கி விட்டது. இனி மாணவர்களின் எதிர்ப்பலைகளைத் தான் அடக்கித் தருவதாகவும் தன் தந்தை ரஜினிகாந்தின் மூலம் இவர்களிடமிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தான் செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்களிற்காக எந்தவிதமான தியாகத்தையோ அல்லது எந்தவிதமான நன்மையையோ செய்யாத ரஜினியைத் “தலைவா” என்று தலைமேல் வைத்துக் கொண்டாடும் தமிழ் இளைஞர்களை அடித்து நொறுக்கித் தான் பாடல் வெளியீட்டு விழாவை நடாத்தித் தருவதாக சௌந்தர்யா கூறியிருப்பது, தமிழர்களின் இனப்படுகொலையில் பட்டுத் தெறித்த தமிழனின் இரத்த வெள்ளத்தில் ரஜினியும் கை நனைப்பதாகவே அமைகின்றது.
தன் கைகளில் தமிழர்களின் இரத்தம் அப்பிக்கொள்ள ரஜினிகாந்த் அனுமதிக்கப போகின்றாரா அல்லது அதனைத் தடுக்க முயற்சி எடுக்கப்போகின்றாரா என்பது அவர் கைகளில் தான் உள்ளது. ஏனெனில் தழிழர்களிற்கான எதிர்ப்பலைகள் நாளை ரஜினிகாந்தையும் புறக்கணிக்கவோ அல்லது எதிரத்து நிற்கவோ தயங்கிநிற்கப் போவதில்லை என்பதை ரஜினிகாந்தும் அவரது மகளும் விரைவாக உணர்ந்து கொள்வது நல்லது.
– சோழ கரிகாலன்
***
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பது பழ மொழி – அதை அழகாக வழிநடத்துபவர்கள் அல்லி ராஜா குழுமத்தினர்!
அவர்கள் நடத்திய பத்திரிகை மாநாடு எப்படி நடைபெற்றது எவ்வாறு நடத்தினார்கள் என்பது அவர் பேட்டியில் தன்னுடைய பணத்திமிர் மூலம் காட்டினார்- கத்தி படம் எடுப்பது என்பது தன்னுடையே 2 நாள் வருமானம் என்றார்- இதே அல்லிராஜா பாரிஸ் நகரில் கையேந்தி திரிந்தவர் – இவர் இங்கு திடீரென்று ஜானம்டெலிகாம் நடாத்தும் போது பிரான்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு வாய்க்கரிசி போட்டு விட்டு லண்டன் ஓடியவர் தான் இவர்கள். கோடி பணத்தை எப்படி பெற்றார்- “லைக்கா நிறுவனம் மகிந்த அரசுடன் இணைந்து நூறு மில்லியன் டொலர் பணத்தைச் சுருட்டிய தொலைபேசி ஒப்பந்தம் தொடர்பான கட்டுரையை சண்டே லீடர் என்ற ஊடகம் 2008 ஆம் ஆண்டு வெளிப்படுத்தியதைத் தொடர்ந்தும் வேறு காரணங்களுக்காகவும் அந்த ஊடகத்தின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுதுங்க்க கொலைசெய்யப்பட்டார். பின்னதாக 2009 ஆண்டில் மந்தனா இஸ்மையில் அதன் தொடர்ச்சியைப் எழுதிய போது அரச கூலிகளால் தாக்கப்பட்டார்.”
இந்த செய்தியை நாங்கள் கூறவில்லை – இலங்கை பத்திரிகை கூறுகிறது.
ரோடில் நின்ற அல்லிராசா – பிரான்சை விட்டு ஓடிய அல்லிராசா லண்டனில் இருந்து 2008யின் பின் எடுத்த உருவத்தின் பின்னணியே சண்டே லீடர் பத்திரிகையில் வந்த செய்தி. பணத்தை கொண்டே தமிழரின் போராட்டை அழிக்கலாம் என்பதை கருணா போன்றவர்கள் மூலம் புரிந்த கொண்டவர்கள் சிங்கள அரசியல் வாதிகள். அதில் உருவானவர் இந்த அல்லிராசா.
இந்த நற்பின் உச்சிதான் அல்லிராஜா ராணுவ பாதுகாப்புடன் வன்னி சென்றது. வன்னி சென்று – பல்தேசிய நிறுவனங்களைப் சேவை செய்கிறோம் என்ற தலைப்பில் எலும்புத் துண்டுகளை அப்பாவி மக்களுக்கு எறிந்துவிட்டு முழு மாட்டையும் சுருட்டிக்கொள்ளும் பற்றித் தெரிந்தவர்களுக்கு லைக்காவின் சேவையின் தேவையைப் பற்றியும் தெரிந்திருக்கும். மல்ட்டி நாஷனல் கோப்ரட் வியாபாரிகள் என்றால் இப்படித்தான் என்று அமைதியாக இருக்கலாம். இங்கு பிரச்சனை அதுவல்ல, சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் உள்ளே நுளைந்து ராஜபக்ச கிரிமினல் குடும்பத்தோடு இணைந்து குத்தாட்டம் போடக் கோருவதுதான் சிக்கல்.
இதெல்லாம் என்னப்பா என்று கேட்டவர்களுக்கு லைக்காவின் சினிமா மாமாவான ஐங்கரன் நிறுவனத்தின் கருணாகரமூர்த்தி விளக்கம் வேறு அளித்துள்ளார்.லைக்கா குழுமம் இலங்கை விமானப்படை விமானத்தில் உலா வந்ததை மட்டும் ‘தெளிவுபடுத்தியுள்ளார்’. லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் இலங்கை சென்று அவர் படித்த முல்லைத்தீவுப் பள்ளிக்கூடத்திற்குச் சென்றோம் என்கிறார். அதுவும் படு பிஸியாகிவிட்டதால் இலங்கை அரச ஹெலிகொப்டரில் பிரயாணம் செய்தோம் என்கிறார். இலங்கை அரசாங்கத்துடன் வியாபாரம் செய்கிறோம் என்பதெல்லாம் வந்தந்தி என்கிறார். அக்கு வேறு, கறள் பிடித்த ஆணி வேறாக புட்டுப்புட்டு வைத்த பின்னரும் கருணாகர மூர்த்தி சென்னையில் இவ்வாறு கூறியுள்ளார்.
இன்று இரகசியமான முறையில் நட்சத்திர விடுதி ஒன்றில்
லைக்க நிறுவனர் சுபாஸ் அல்லி ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார் .
பத்திரிகை சந்திப்பு என்றால் வழக்கமா ஒரு நாள் முன்பே பத்திரிகையாளர்கள் ஊடகங்களுக்கு பாக்ஸ் அனுப்பப்படும், இன்று இந்த இடத்தில் நேரம் அகியவற்ற கூறிப்பிட்டு ஆனால் லைக்க நிறுவனர் சுபாஸ் அல்லி ராஜா திடீர் என பத்திரிகையாளர் சந்திப்பை மேற்கொண்டார் .
எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு இடம் பெறாத வைகையில் புதுமையான முறையில் தனது பணபலத்துடன் பத்திரிகை ஊடகம் தொலைகாட்சி ஊடகம் போன்றவற்றிக்கு தனித் தனியே கார் அனுப்பி அவர்களை அழைத்து வந்து பேட்டி கொடுத்தார் அவ் பேட்டியில் மிஸ்டர் ராஜபக்சே என்று அடிகடி அவர் வாயால் சொல்லி கொண்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல் புலம்பெயர்ந்த் தேசத்தில் லைக்க சிம் கார்டு அதிகளவில் எமது மக்கள் பவனை செய்கிறார்கள் அவர்கள் இந்த போராட்டங்களை விரும்பவில்லை என்றும் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்
பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும் என்று இருக்கும் போது – இலவசம் என்றால் என்ன நடக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்- அண்மையில் கிழக்கு மாகாணத்தில் 5000 செல் போன் கலை கிழக்கு மாகாணத்தில் சிங்கள ராணுவம் அளித்தது என்பது எல்லோர்ரும் அறிந்த செய்தி, இவை ஏன் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்- புலம் பெயர் மக்களை தனது பார்வைக்குள் வைத்திருக்க மகிந்த அரசு நாடிய வழிதான் இந்த லைக்கா மலிவுவிலை டெலிகாம், அதை இப்போது தான் புலம் பெயர் தமிழ் மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். கடைகளில் லைக்கா விளம்பரம் ஓட்டினால் மாதம் அதற்கு பணம் கொடுக்கிறார்கள்- கார்ட் விற்றால் அதிகளவு கமிஷன் கொடுக்கிறார்கள்- அதில் வாழ்த்த தமிழ் வியாபாரிகளும் இருக்கிறார்கள்.இந்த மாயைக்குள் புலம் பெயர் தமிழர்கள் இருந்தது உண்மை- இன்று அந்த மாயை வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது, தமது விளம்பரத்தை ஓட்ட கஷ்டப்படுகிறார்கள்- அவர்கள் ஒட்டிய சுவர் ஓட்டிகள் கிளிக்கப்படுகின்றனா – ஆனால் வியாபர ஸ்தாபனங்களில் இருக்கும் பெரிய விளம்பரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றால் கடை கண்ணாடிகளைத் தான் உடைக்க வேண்டும்- அந்த வன்முறை அரசியலில் புலம் பெயர் மக்கள் இறங்குவது பிழை என்று பார்க்கப்படுகிறது.
இன்று பல வியாபார ஸ்தலங்கள் லைக்கா விளம்பர பலகைகளை அகத்ற்றுகிரார்கள்- லைக்கா வியாபாரிகள் அதிக பணம் தருவதாக பண ஆசை காட்டுகிறார்கள்.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37374
புலம் பெயர் மக்கள் லைக்காவுக்கு எதிராக போராட்டம் செய்யவில்லை என்கிறார்கள்- புலம் பெயர் மக்களின் வாழ்க்கை நிலையை- இங்கு வந்து வாழ்ந்து பார்த்தல் தான் நாம் எல்லோரும் புரிந்து கொள்ள முடியும்- அப்படி இருந்து பல போராட்டங்களை மகிந்த அரசுக்கு எதிராக செய்ய வேண்டிய நிலையில் தமது அன்றாட வாழ்க்கை கஷ்டத்திலும் செய்கிறார்கள் – அவர்களின் ஏழ்மையை லைக்கா நன்றாக பயன்படுத்திக்கொள்கிறது.
ஆனால் வேறு வித போராட்டங்கள் லைக்காவிட்கு எதிராக நடக்கிறது- அண்மையில் நடந்த விழாவில் லைக்கா விளபரத்தை தமிழர்கள் எதிர்த்தார்கள், லைக்கா விளம்பரங்கள் கிழிக்கப்படுகின்றன- விளம்பரம் ஓட்டுபவர்கள் தெருக்களில் பகலில் நடமாட பயப்படுகிறார்கள்.
ஆனால் தமிழ் நாட்டில் வந்து அதே பணத்திமிருடன் பேசுபவர்- நான் தமிழ் நாட்டிலும் கிராமங்களில் உதவி செய்கிறேன், அதுவும் கன்னியாகுமரியில், மீனவர் வாயை அடைக்க மகிந்த பாவிக்கும் வழி இது என்பதை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை எங்கள் எல்லோராலும்.
இந்தப் பணம் 2008இக்கு பின் எப்படி வந்தது என்ற விளக்கம் ஏன் கேட்கப்படவில்லை?
எங்கோ இருந்த வந்த பணத்தை தமிழர்களுக்கு
பதிவு
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: ஈழத்தமிழர் இரத்தத்தில் கை நனைக்கும் ரஜினிகாந்த்!
ஆதாரங்கள்
ராஜபக்சேவின் சகோதரி ஜெயந்தி ராஜபக்சேவின் மகன் ஹிமல் லீலந்திர ஹெட்டியராச்சி. இவர் ஸ்கை நெட் ஒர்க் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர். (ஆதாரம்)
2007ஆம் ஆண்டு ஸ்கை நெட் ஒர்க் நிறுவனத்தின் 95% பங்குகள் லைக்கா குழுமத்தின் தாய் நிறுவனமான ஹேஸ்டிங்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்படுகிறது. ஆனால் 5% பங்குகளை வைத்திருக்கும் ராஜபக்சேவின் மைத்துனரே ஸ்கை நெட் வொர்க்கின் இயக்குநராகவும் நீடிக்கிறார்.
அதன் பின்னர் ஸ்கை நெட் ஒர்க் குழுமத்தின் போர்டு மெம்பர்களாக் , லைக்காவின் மிலிந்த் காங்லி (சி.இ.ஓ லைக்கா), கிறிஸ்டோபர் டூலே, ஹிமல் லீலந்திர ஹெட்டியராச்சி ஆகிய மூவர்தான் இடம்பெற்றுள்ளனர். அதாவது ஸ்கை நெட் ஒர்க்கும் லைக்காவும் 2008ஆம் ஆண்டே ஒரே நிறுவனமாகிவிட்டது.
இதை இலங்கையில் இருந்து வெளியான சண்டே லீடர் பத்திரிகை 2008ஆம் ஆண்டு ஆதாரங்களுடன் வெளியிட்டது (ஆதாரம்). இதன் பின்னரே இந்த சண்டே லீடரின் ஆசிரியர் படுகொலை செய்யப்படுகிறார்.
2009ஆம் ஆண்டும் சண்டே லீடர் பத்திரிகையில் லைக்கா ராஜபக்சே குடும்ப உறவு பற்றிய கட்டுரை வெளியானது (ஆதாரம்).
அப்போது அதை எழுதிய செய்தியாளர் மர்ம நபர்களால் மிரட்டப்பட்டனர். இதன் பின்னர் கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் பங்கேற்பது குறித்த சர்ச்சையின் போது லைக்கா ராஜபக்சே குடும்ப உறவுகுறித்து சர்ச்சை வெடிக்கிறது. அப்போது கார்ப்பரேட் வாட்ச் என்ற இங்கிலாந்து அமைப்பு சண்டே லீடர் கட்டுரைகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடுகிறது.
அப்போது இங்கிலாந்தின் ஹப்பிங்டன்போஸ்ட்டிலும் லைக்கா – ராஜபக்சே குடும்ப உறவு தொடர்பான கட்டுரை வெளியானது.
இதைத் தொடர்ந்து லைக்கா நிறுவனத்துக்கும் ராஜபக்சே குடும்பத்துக்குமான தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இங்கிலாந்து எம்.பி. டோம், அந்நாட்டு பிரதமர் கேமரூனுக்கு கடிதம் அனுப்பினார். அப்போது ஒட்டுமொத்த தமிழகமே காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி வந்தது. இதை ஏற்று பிரதமர் மன்மோகன்சிங்கும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
ஆனால் ராஜபக்சே நடத்திய காமன்வெல்த் மாநாட்டுக்கு முட்டுக் கொடுத்தது இந்த பினாமி லைக்கா நிறுவனம்தான். காமன்வெல்த் மாநாட்டின் வர்த்தக மாநாட்டுக்கு கோல்டன் ஸ்பான்சர் பெற்ற ஒரே ஒரு நிறுவனம் “ஈழத் தமிழர்” (ராஜபக்சேவுக்கு அவ்வளவு பாசம்) ஒருவரை தலைவராகக் கொண்ட லைக்கா நிறுவனம் என்பதுதான். இதே காமன்வெல்த் மாநாட்டில் ராஜபக்சேவின் மைத்துனரின் ஸ்கை நெட் ஒர்க்கின் போர்டு மெம்பர்களில் ஒருவரும் லைக்காவின் சி.இ.ஓவுமான காங்லி பங்கேற்றார்.
தற்போது லைக்கா குழுமத்தின் சி.இ.ஓவாக இருப்பவர் கிறிஸ்டோபர் டூலே. அதாவது ராஜபக்சே மைத்துனரின் ஸ்கை நெட் ஒர்க்கின் போர்டு மெம்பராக இருந்த நபர்தான் இப்போது லைக்காவின் சி.இ.ஓவாகிறார். ஒரே குழும நிறுவனம் என்பதாலே ராஜபக்சேவின் மைத்துனரின் ஸ்கை நெட் ஒர்க்கில் இருந்த இருவரே இதுவரை லைக்காவின் சி.இ.ஓக்களாக நியமிக்கப்பட முடிகிறது.
இதை அறிவித்ததும் இதே லைக்கா சுபாஷ்கரன். அத்துடன் டூலே குறித்து தனது லைக்கா இணையப் பக்கத்தில் குறிப்புகளை எழுதும் போது 2005-06ஆம் ஆண்டு காலம் வரை மட்டுமே அவரைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
அதன் பின்னர் ராஜபக்சே குடும்பத்துடன் அவர் இணைந்தது குறித்து திட்டமிட்டே மறைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் லைக்காவின் சுபாஷ்கரன் ஒப்புக் கொண்ட ஒருவிஷயம் இலங்கை ஏர்லைன்ஸுடன் தமக்கு வர்த்தக தொடர்பு இருக்கிறது என்பதுதான்.
இலங்கை ஏர்லைன்ஸில் போர்டு ஆப் மெம்பர்களில் ஒருவர் சசீந்திர ராஜபக்சே. இவர் வேறுயாருமல்ல.. ராஜபக்சேவின் சகோதரர் சமல் ராஜபக்சசின் 2வது மகன். ஒட்டுமொத்தமாக ராஜபக்சே குடும்பத்தின் பினாமியாக மட்டுமே லைக்கா நிறுவனம் செயல்படுகிறது என்பதையே இவையெல்லாம் ஆதாரங்களாக காட்டுகின்றன தமிழர் அமைப்புகள்.
இதனால்தான் சுபாஷ்கரனால் இலங்கை ராணுவ ஹெலிகாப்டரில் பயணிக்க முடிகிறது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால்தான் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக சட்டசபை தீர்மானத்தை மீறும் வகையில் இலங்கையுடனும் ராஜபக்சே குடும்பத்துடனும் அனைத்து வர்த்தக உறவுகள் வைத்திருக்கும் லைக்காவின் தயாரிப்பான கத்தியை தடை செய்ய வேண்டும் என்று கோருவதாக கூறுகின்றனர் தமிழர் இயக்கங்கள்.
தமிழன் இட்ட உப்பே, கொஞ்சம் யோசி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» படுக்கையை நனைக்கும் பழக்கம் ஏன்?
» இரத்தத்தில் நனைந்த நரக இரவுகள்.. (கவிதை) வித்யாசாகர்!
» நீரிழிவு இரத்தத்தில் சீனியின் அளவு குறைதல்
» இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் :-
» கீரைகளின் பயன்கள்
» இரத்தத்தில் நனைந்த நரக இரவுகள்.. (கவிதை) வித்யாசாகர்!
» நீரிழிவு இரத்தத்தில் சீனியின் அளவு குறைதல்
» இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் :-
» கீரைகளின் பயன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum