TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்!

Go down

மாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்! Empty மாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்!

Post by மாலதி Sun Sep 14, 2014 6:48 am

''நேத்துகூட நல்லாப் பேசிட்டு இருந்தார். நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு வலின்னு கத்தியவர்தான்...''; ''இரண்டு தடவை அட்டாக் வந்துச்சு... அப்பவே கவனிச்சிருந்தால் பிழைச்சிருக்கலாம்!'' - மாரடைப்பால் உயிரிழப்பவர்களைப் பற்றிய கதைகள் பெரும்பாலும் இப்படித்தான் தொடங்கும். முன்கூட்டிய அறிகுறி எதுவும் இல்லாமல், சட்டென வந்து உயிரை உலுக்கி விளையாடும் மாரடைப்புக்கு இளம் வயதினரும் தப்புவது இல்லை. மாரடைப்புபற்றிய விழிப்பு உணர்வோ, முதலுதவி விவரங்களோ தெரியாததால்தான் இத்தகைய இழப்புகளுக்கு ஆளாக வேண்டிய  துயரம். 
''யாரோ ஒருவர் நம்முடைய மார்புப் பகுதியில் அழுத்துவது போன்று அதிகமான வலி இருக்கும். இதனுடன் அதீத வியர்வை மற்றும் மயக்கம் வரும் அறிகுறிகளும் இருக்கும். அது ஒருவேளை மாரடைப்பாக இருக்கலாம். 20 நிமிடங்களுக்குள் இந்த அறிகுறிகள் நின்றுவிட்டால், அது 'மைனர் ஹார்ட் அட்டாக்’. 20 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தால் அது 'சிவியர் ஹார்ட் அட்டாக்’. இதில் எந்த வகையாக இருந்தாலும், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வது அவசியம்' என்று வலியுறுத்துகிறார் ஃபிரான்டியர் லைஃப் லைன் மருத்துவமனையின் இதய நோய்ச் சிகிச்சை நிபுணர் டாக்டர் நாராயணசுவாமி.[You must be registered and logged in to see this image.]
''பொதுவாக நான்கு வகையினருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீண்ட காலமாக சர்க்கரை, ரத்த அழுத்தம் அல்லது ரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு உள்ளவர்கள் மற்றும் பாதிப்புகள் இருந்தும் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஒரு நாளைக்கு 10 சிகரெட்டுகளுக்கு மேல் புகைப்பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தப் பிரச்னை இருப்பவர்கள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடனடியாகப் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பையும் குறைக்கலாம்.
நெஞ்சில் வலி, வியர்வை, மயக்கம் என மாரடைப்புக்கான அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். அப்படி மருத்துவமனைக்குச் செல்லும்போதே,           'ஆஸ்ப்ரின்’ மாத்திரையை அவருக்குக் கொடுக்க வேண்டும். இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தத்தில் ரத்தத் தட்டுகள் (பிளேட்லெட்) உள்ளன. இவை ஒன்று சேர்ந்து ரத்த உறைதலை ஏற்படுத்தும். ஆஸ்ப்ரின் மாத்திரையானது ரத்தத் தட்டுகள் ஒன்று சேர்ந்து அடைப்பு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும். ஏற்கெனவே ஏற்பட்ட அடைப்பையும் சரிசெய்ய முயற்சிக்கும். அதனால்தான் அந்த மாத்திரையை மாரடைப்பு வந்தவர்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறோம்.[You must be registered and logged in to see this image.]
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், அவருக்கு காற்று செல்ல வழிவிடாமல் கூட்டமாக சுற்றி நிற்கக் கூடாது. மருத்துவமனைக்குச் சென்ற பிறகு, அவருக்கு மருந்து மாத்திரை மூலம் ரத்தம் உறைதலை சரி செய்யலாமா அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்யலாமா என்பதை டாக்டர் முடிவு செய்து சிகிச்சை அளிப்பார்.
[You must be registered and logged in to see this image.]
ஒருவேளை மருத்துவமனை மிக தொலைவில் உள்ளது. கொண்டுசெல்வதற்குள் மாரடைப்பு வந்தவர் மயங்கிவிட்டார் என்றால், அவருக்கு சில முதல் உதவிகளைச் செய்யலாம். முதலில் அவரைப் படுக்கவைத்து, அவரது நெஞ்சு கூடு ஏறி இறங்குகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அவரது கை அல்லது காலில் நாடித் துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும். நெஞ்சில் காதை வைத்து இதயத் துடிப்பு உள்ளதா என்பதைப் பார்த்து, அவரது வாயோடு வாய் வைத்து காற்றை உள்ளே செலுத்த வேண்டும். பின்னர், நோயாளியின் அருகில் அமர்ந்து, இடது மார்புப் பகுதியில் நம்முடைய இரண்டு கைகளின் உள்ளங்கைப் பகுதியை ஒன்றுசேர்த்து அரை செ.மீ. அளவுக்கு மென்மையாக அழுத்த வேண்டும். இந்த வகையில், மூன்று முறை நெஞ்சில் அழுத்த வேண்டும். பிறகு ஒருமுறை வாயோடு வாய் வைத்துக் காற்றை ஊத வேண்டும். இந்த இரண்டையும் மாறி மாறித் தொடர்ந்து செய்ய வேண்டும். நெஞ்சில் அழுத்தும்போது வேகமாக அழுத்தக் கூடாது. அப்படிச் செய்வதால், விலா எலும்பு உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவருக்கான இந்த முதல் உதவிச் சிகிச்சைகளைச் செய்வதோடு, உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவும் முயற்சிக்க வேண்டும்.
நோயாளிக்குச் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால், அவருக்கு சர்க்கரை அல்லது குளுக்கோஸ் கொடுத்து, சாப்பிடச் சொல்ல வேண்டும். மாரடைப்பின்போது இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடுக்கப்படுகிறது. இதனால், ரத்தம் இன்றி இதயத் தசைகள் செயல் இழக்க ஆரம்பிக்கும். எனவே, எவ்வளவு சீக்கிரம் மாரடைப்பு வந்தவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளிக்கிறோமோ... அந்த அளவுக்கு அவரது இதயத் தசைகளைக் காப்பாற்ற முடியும்!'' என்றார்.
சமயோஜிதமாகச் செயல்பட்டால் சங்கடம் இல்லை!


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum