TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பந்தல் இல்லாமலே பாகற்காய் ...!

Go down

பந்தல் இல்லாமலே பாகற்காய் ...! Empty பந்தல் இல்லாமலே பாகற்காய் ...!

Post by Tamil Wed Aug 20, 2014 9:52 pm

மகசூல்
காசி. வேம்பையன்
பந்தல் இல்லாமலே பாகற்காய்...!
பந்தல் இல்லாமலே பாகற்காய் ...! Title_horline
மிதிபாகற்காயைச் சாகுபடி செய்ய சித்திரைப் பட்டம்தான் சிறந்தது.
ஒரு தடவைக்குச் சரியாக 100 கிலோ காய் கிடைக்கும். மொத்தம் 1,800 கிலோ
மூன்று மாதத்தில்... நூறு குழி நிலத்தில் ஏழாயிரம் ரூபாய் வருமானம்.
பந்தல் இல்லாமலே பாகற்காய் ...! Pv24a"அந்தப் பந்தல்... இந்தப் பந்தல்னு எந்தப் பந்தலும் இதுக்குத் தேவையே... இல்லீங்க. சும்மா நிலத்துல விதைச்சி விட்டா போதும்... தரையிலயே தன்னால வளரும். வருமானத்துக்கும் வஞ்சகமிருக்காது" தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே இருக்கும் திருப்பனம்புலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கனகராஜ் பேசுவது... பாரம்பர்ய ரகம் என்று பெருமையோடு சொல்லப்படும் மிதிபாகற்காய் பற்றித்தான்.
பந்தல் செலவுகளுக்குப் பயந்தே, பாகற்காய் உள்ளிட்ட பந்தல் சாகுபடி பக்கம் செல்வதை பெரும்பாலான விவசாயிகள் விரும்புவதில்லை. இந்நிலையில், பந்தலுக்கான செலவைக் குறைப்பதற்காக 'பிரமிடு பந்தல்', 'கொட்டாரப் பந்தல்', 'நெடும்பந்தல்' என்று விதம்விதமான பந்தல்களைக் கண்டுபிடித்து, முடிந்தவரை செலவைக் கட்டுப்படுத்தி பலன் பார்த்துக் கொண்டுள்ளனர் விவசாயிகள் பலரும். இத்தகைய நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பலன் பார்த்திருக்கும் விவசாயிகளின் அனுபவங்களைத் தொடர்ந்து நம்முடைய இதழில் வெளிப்படுத்தியிருக்கிறோம். அந்த வரிசையில் இங்கே இடம் பிடிக்கிறார்... 'பந்தலே தேவையில்லை' என்று களத்தில் இறங்கி, கலக்கிக் கொண்டிருக்கும் கனகராஜ்.
பெரும்பாலான விவசாயிகள் விதைப்பது பெரிய பாகற்காயைத்தான். மிகச் சிறிய அளவில் இருக்கும் மிதிபாகற்காயை அவ்வளவாக யாரும் விதைப்பதில்லை. குறைந்த அளவில், பந்தல் முறையில் இதை விளை விக்கின்றனர். சில இடங்களில், தரையிலேயே விளைவிக்கின்றனர்.
மிதிபாகற்காய்க்கு எப்போதுமே மக்களிடம் மவுசு அதிகம்தான். அதிலும் குறைந்த அளவிலானவர்களே இதை உற்பத்தி செய்வதால்... தேவைக்கு ஏற்ப கிடைப்பதில்லை. இதனால், இதன் விலை எப்போதுமே உச்சத்தில்தான். சில்லரைக் கடைகளில் ஒரு கிலோ மிதிபாகற்காயின் விலை... குறைந்தபட்சம் 25 ரூபாய் என்பதே கடந்த சில ஆண்டுகளின் வரலாறு. அதிகபட்சம்... 50 ரூபாய் வரைக்கும் கூட போயிருக்கிறது!
"தண்ணி இருந்தா நெல்லு... இல்லாட்டி எள்ளு!"
சரி, கனகராஜ் சொல்வதற்கு காது கொடுப்போமா...?
பந்தல் இல்லாமலே பாகற்காய் ...! Pv24
"பதினைஞ்சு வருஷமா விவசாயம் பாத்துகிட்டு இருக்குறேன். ஆடி மாசம் காவிரி ஆத்துல தண்ணி வந்தா, நெல்லு நடுவேன். அறுப்பு முடிஞ்ச பிறகு தண்ணி இருந்தா... நெல்லு, இல்லாட்டி எள்ளுனு ஏதாவது ஒரு பயிரை விதைச்சுடுவேன். அதேசமயம், கோடையில வயலைச் சும்மா போடறதில்ல. கண்டிப்பா ஒரு போகத்துக்கு மட்டும் மிதிபாகற்காயைப் போட்டுடுவேன்" என்று சுருக்கமாக அறிமுகப் படலம் முடித்தவர், சாகுபடி முறைகளைச் சொன்னார். அதை இங்கே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
சிறப்பான சித்திரைப் பட்டம்!
மிதிபாகற்காயைச் சாகுபடி செய்ய சித்திரைப் பட்டம்தான் சிறந்தது. மணல் பாங்கான வடிகால் வசதியோடு இருக்கும் எல்லா மண் வகைகளும் இதற்கு ஏற்றது. நடவுக்கு முன் நிலத்தை நான்கு உழவு போட்டு, மூன்றடி இடைவெளியில், இரண்டு அடி அகலத்தில், 15 அடி நீள பார் அமைக்க வேண்டும். இரண்டு பாருக்கும் இடையிலான மூன்று அடி இடைவெளி நிலத்தில்தான் விதைக்கவேண்டும். அதாவது, அரை அடி இடைவெளியில் குழிகளை எடுத்து, ஒரு கைப்பிடி அளவு எருவைப் போட்டு மூடி, குழிக்கு ஐந்து விதைகள் வீதம் ஊன்றினால் போதும். 100 குழி (சுமார் 33 சென்ட்) நிலத்துக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும்.
பந்தல் இல்லாமலே பாகற்காய் ...! Pv24c
ஏழாவது நாளில் முளை வரும். 15 முதல் 20 நாட்களில் செடியைச் சுற்றி இருக்கும் களைகளை அகற்றிவிட்டு, குழிக்கு 50 கிராம் டி.ஏ.பி. உரத்தை வைத்து தண்ணீர் கட்டவேண்டும். 25ம் நாளில் இருந்து கொடி படர ஆரம்பிக்கும். 35ம் நாளுக்குள்ளாக பூ எடுக்கும். அந்தச் சமயத்தில் கொடியின் வளர்ச்சிக்காக ஏழு கிலோ யூரியா, ஏழு கிலோ பொட்டாஷை கலந்து, கொடிகளின் வேர் பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக... கொடுக்க வேண்டும் (நான்கு விரல்களால் அள்ளி வைப்பது).
45 முதல் 50ம் நாளில் அறுவடை ஆரம்பமாகிவிடும். அதிலிருந்து 15 நாட்களுக்கு ஒரு தடவை பத்து கிலோ யூரியா, பத்து கிலோ பொட்டாஷ் கலந்து, தூருக்குத் தூர் கொஞ்சம் வைத்து தண்ணீர் கட்டவேண்டும். நிலத்தின் தன்மையைப் பொருத்து 7 முதல் 10 நாள் இடைவெளியில் தண்ணீர் கட்டினால் போதும்.
பறிப்புக்கு 100 கிலோ!
பந்தல் இல்லாமலே பாகற்காய் ...! Pv24bஅசுவினி, பச்சைப் புழு ஆகியவற்றின் தாக்குதல்தான் அதிகமாக இருக்கும். பத்து லிட்டர் டேங்க் ஒன்றுக்கு, 25 மில்லி வீதம் டைமெத்தேட் மருந்தினைக் கலந்து தெளித்தால் போதும் (100 குழி நிலத்துக்கு 4 டேங்க்). முதல் பறிப்பைத் தொடர்ந்து, ஐந்து நாள் இடைவெளியில் காய் பறிக்கலாம். அதாவது, 50ம் நாள் தொடங்கி, 140ம் நாள் வரை 18 தடவை காய் பறிக்கலாம். ஒரு தடவைக்குச் சரியாக 100 கிலோ காய் கிடைக்கும். மொத்தம் 1,800 கிலோ கிடைக்கும்."
இதுதான் அவர் சொன்ன பாடம்.
"மூணு மாசத்துல ஏழாயிரம் ரூபாய்!"
நிறைவாகப் பேசிய கனகராஜ், "மிதிபாகற்காய்க்கு ரசிகர் கூட்டமே இருக்கு. ஆனா, அவங்க கேக்குற அளவுக்கு நம்மளால உற்பத்தி பண்ணி கொடுக்க முடியறதில்ல. அதுக்குக் காரணம்... பெரும்பாலும் கோடையிலதான் இதைப் போட வேண்டியிருக்கு. அப்பத்தான் தண்ணி இல்லாம இருக்கும். தரையிலேயே இதை விதைக்க முடியும். அதேசமயம், பயிர் பண்றதுக்கும் தண்ணி இல்லாம போயிடறதால, அதிக அளவுல இதை விதைக்க முடியறதில்ல. அப்புறம், இந்தக் காயை பறிக்கறதும் கொஞ்சம் சிரமமான வேலை. அதுக்குப் பயந்துகிட்டே பல பேரு கிட்ட நெருங்க மாட்டாங்க. ஆனா, நான் இதை விடாம செய்துகிட்டிருக்கேன். அதுக்குக் காரணம்... இதுல கிடைக்கிற ஒரு லாபம்தான்!
பந்தல் இல்லாமலே பாகற்காய் ...! Pv24dவிளைஞ்சதை, பக்கத்துல இருக்கற திருவையாறு மார்க்கெட்டு வியாபாரிக்குத்தான் கொடுக்கிறேன். ஒரு கிலோ காய் 8 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரைக்கும் விலை வெச்சி எங்ககிட்ட வாங்கிக்கிறார். சராசரி கிலோ 9 ரூபாய். கோடையில சும்மா போட்டு வைக்காம, முடிஞ்ச வரைக்கும் பாடுபட்டா... மூணு மாசத்துல... நூறு குழி நிலத்துல ஒரு ஏழாயிரம் ரூபாயைக் கையில பாக்கலாம். அதை வெச்சு நாலு நல்லது கெட்டது பாத்துக்க முடியுமே!" என்று உற்சாகத்தோடு சொன்னார்.
பாரம்பர்ய முறையிலும் பயிரிடலாமே!
பாரம்பர்ய ரகமான மிதிபாகற்காயை இவர் பயிரிடுவது ரசாயன முறை விவசாயத்தில். இதையே இயற்கை முறையில் சாகுபடி செய்ய முடியுமா... 'முடியும்' என்றால் எப்படி? என்பது போன்ற கேள்விகள் எழ, கோவில்பட்டி, வேளாண்மை அலுவலர் செல்வத்திடம் கேட்டோம்.
"மிதிபாகற்காயை தாராளமாக இயற்கை முறை விவசாயத்திலும் செய்யலாம். ரசாயன உரத்துக்கு மாற்றாக, எரு, மண்புழு உரம், எலும்புத்தூள், இலை மட்கு உரம் போன்றவற்றை பயன்படுத்தலாம். அத்தனைச் சத்துக்களும் கிடைத்துவிடும். இலை மட்கு உரத்தைப் பயன்படுத்தினால் (பார்க்கப் பெட்டிச் செய்தி), டி.ஏ.பி. உரத்தில் இருக்கும் அத்தனைச் சத்துக்களும் நிலத்துக்குக் கிடைத்துவிடும்.
நீங்களே தயாரிக்கலாம் வேப்பங்கொட்டை கரைசல்!
பாகல் கொடியில் காய் எடுக்க ஆரம்பித்ததுமே... கடலைப் பிண்ணாக்கு கொடுத்தால், வளர்ச்சிக்குத் தேவையானச் சத்துகள் கிடைத்துவிடும். அதோடு, ஏக்கருக்கு 200 கிலோ வேப்பங்கொட்டையை இடித்தும் கொடுக்கலாம். கடையில் கிடைக்கும் வேப்பம் பிண்ணாக்கைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, நாமே வேப்பங்கொட்டையைச் சேகரித்து, இடித்துக் கொடுப்பது நல்லது. அப்போதுதான் வேப்பம்முத்துக்களில் இருக்கும் 23 வித சத்துகளும் பயிருக்கு நேரடியாகக் கிடைக்கும். கடைகளில் கிடைக்கும் வேப்பம் பிண்ணாக்கில், வேப்பம்முத்துகளில் இருக்கும் ‘அசாடிரக்டின்’ என்ற பொருளை தனியாகப் பிரித்துவிட்டே கொடுக்கிறார்கள். அதனால் அந்தச் சத்துக்கள் அதில் இருக்காது. சமயங்களில் புளியன் கொட்டைத் தூள் கலந்தும் விற்கப்படுகிறது.
புகையிலைக் கரைசலே போதும்!
பந்தல் இல்லாமலே பாகற்காய் ...! Pv24eநாம் அதிகமாகப் பயன்படுத்தும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள், ஒரு முறை தெளிக்கப்பட்டாலே, ஐந்து வருடத்துக்கு அதனுடய நஞ்சு, நம் நிலத்திலேயே இருக்கும். எனவே, அதற்கு மாற்றாக, இயற்கையாக கிடைக்கும் வேம்பு போன்ற பொருட்களைப் பயன்படுத்தி பூச்சிவிரட்டி தயார் செய்து பயன்படுத்தினாலே நல்ல பலன் இருக்கும். சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படாது.
அசுவினி, பச்சைப் புழு, தண்டுத் துளைப்பான் போன்ற பூச்சிகள்தான் பாகற்காயைத் தாக்கும். இவற்றைத் தடுக்க, வேப்பங்கொட்டை, பூண்டு, புகையிலை கலந்த கரைசலை அடித்தாலே போதும் (பார்க்கப் பெட்டிச் செய்தி). டேங்குக்கு (பத்து லிட்டர்), புகையிலைக் கரைசல் ஒரு லிட்டர், காதி சோப் (100 கிராம்) கரைசல், ஆகியவற்றுடன் தண்ணீர் கலந்து தெளித்தாலே பூச்சிகளைக் கட்டுப்படுத்தி விடலாம். இந்தக் கரைசலை மாலை வேளையில் தெளிப்பதுதான் நல்லது.
இதேபோல பஞ்சகவ்யா, அமுதக் கரைசல் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தும்போது நிலத்தில் பயிருக்குத் தேவையான சத்துகளும், பூச்சி, நோய் தொந்தரவும் குறைவாகவே இருக்கும்.
ரசாயனமோ... இயற்கையோ... பந்தல் இல்லாமல் பாகற்காய் விளையப்போவதில் சந்தேகமில்லை. ஆனால், நஞ்சு இல்லாமலும் விளைவிக்கவேண்டும் என்பதை விவசாயிகள்தான் முடிவு செய்யவேண்டும்" என்று இயல்பாகச் சொல்லி முடித்தார் செல்வம்!
படங்கள் ஆர். குமரேசன், மு. நியாஸ் அகமது
பந்தல் இல்லாமலே பாகற்காய் ...! Pv24f
வேப்பங்கொட்டை +பூண்டு + புகையிலைக் கரைசல்
ஒரு ஏக்கருக்குத் தேவையான கரைசலைத் தயாரிக்க... வேப்பங்கொட்டை இடித்த தூள்-5 கிலோ, வெள்ளைப் பூண்டு-250 கிராம், கட்டைப் புகையிலை-500 கிராம் ஆகியவை தேவைப்படும். இந்த மூன்றையும் ஒரே காட்டன் துணியில் கட்டி, பத்து லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பிறகு, வடிகட்டினால்... பத்து லிட்டர் கரைசல் கிடைக்கும்.
இலை மட்கு உரம் தயாரிப்பு!
இலை மட்கு உரத்தைத் தயாரிக்க, வயலைச் சுற்றி இருக்கும் மரங்களின் இலை, தழைகளை வெட்டி சேகரிக்க வேண்டும். நிலத்தின் ஒரு மூலையில் தேவையான அளவுக்கு ஒரு குழி எடுத்து, இலை-தழைகளை ஒரு அடுக்கு போட்டு, அடுத்த அடுக்காக சாணத்தைக் கரைத்து தெளிக்கவேண்டும். அதன் மீது செம்மண் போட்டு மூடிவிடவேண்டும். இதுபோல குழி நிரம்பும் அளவுக்கு, இலை-தழை மற்றும் சாணக் கரைசல்-செம்மண் என்று மாற்றி, மாற்றி செய்யவேண்டும். அப்படியே 45 நாட்கள் வைத்திருந்து, குழியைப் திறந்து பார்த்தால்... மட்கு உரம் தயார்.
5 வட்டாரங்களில் வேலை.... அலுத்துக் கொள்ளும் அதிகாரிகள்..!
பந்தல் இல்லாமலே பாகற்காய் ...! Pv24gபசுமை விகடன், ஜூலை 10-2009 தேதியிட்ட இதழில், 'உழைப்பை உறிஞ்சும் உளுந்து விதைகள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. இதையடுத்து, தமிழ்நாடு, விதைச்சான்றளிப்புத் துறை ஊழியர்களிடமிருந்து நமக்கு ஒரு கடிதம்.
'விதை மோசடிக்காரர்களால், விவசாயிகள் ஏமாற்றப்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது. விதைச் சான்றளிப்புத் துறைக்குப் போதிய முக்கியத்துவம் இல்லாதிருப்பதும் இதற்கு ஒரு காரணம். போதுமான ஊழியர்கள் இல்லாமல், இந்தத் துறை தன்னுடைய பணிகளை முழுமையாகச் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
அனைத்துப் பயிர்களுக்கும் விதைதான் ஆதாரம். தரமான விதைகளால்தான் நல்ல மகசூலை கொடுக்க முடியும். அப்படித் தரமான விதைகள் விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்வதுதான் விதைச் சான்றளிப்புத் துறையின் பணி. இதற்காக, ஒவ்வொரு விதைச்சான்று அலுவலரும்... விதைக்காக தான் பதிவு செய்யும் பயிர்களை இரண்டு முறை வயல் ஆய்வு செய்து, சுத்திகரிப்பு அறிக்கை வழங்கி, சுத்திகரிப்புப் பணிகளை மேற்பார்வை செய்து, சான்று அட்டை பொருத்தி, பண்ணைப் பணிகளில் ஆதாரநிலை விதை உற்பத்திகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். இவர்களது ஒவ்வொரு பணியும் பதிவு செய்யப்படுவதால் ஏமாற்றுவதற்கு வழியேயில்லை. இந்த நிலையில் 4 முதல் 5 வட்டாரங்களில் ஒரு விதைச் சான்று அலுவலர் வேலை செய்யவேண்டி உள்ளதால் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடிவதில்லை. எனவே, தமிழக அரசு வேளாண்மை துறை மறுசீரமைப்பில் கூறியுள்ளதுபோல இரண்டு வட்டாரங்களுக்கு ஒரு விதைச்சான்று அலுவலர் என்பதை உடனே அமல் செய்ய வேண்டும் என இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
கோவணாண்டியின் காவலன்' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» 12 ஏக்கர்... 7 மாதங்கள்... 25 லட்சம்... பணம் காய்க்கும் பந்தல்...!
» "பந்தல் சேதமாக்கப்பட்ட போதிலும்,அடக்குமுறைக்கு எதிராக த.தே.கூட்டமைப்பின் உண்ணாவிரதம் ஆரம்பம்"
» கின்னஸ் சாதனை படைக்கப் போகிறது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பந்தல்
» RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!
» இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன்படுத்த

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum