Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பத்து வருடப் பயணத்தின் பின் ரோசட்டா விண்கலம் வெற்றி இலக்கை அடைந்தது.ரோசட்டாவின் கதை இது.
2 posters
Page 1 of 1

வால் நட்சத்திரத்தின் ஒன்று,1969 இல் அதைக் கண்டுபிடித்த இருவரின் பெயரில், 67-பி / சுரியுமோவ்-ஜெராசிமெங்கோ என வைத்து அழைக்கப்பட்டது. இவர்களில் ஜெராசிமெங்கோ பெண் விஞ்ஞானி. இருவருமே ரஷியாவைச் சேர்ந்தவர்கள். சுமார் 4 கிலோ மீட்டர் நீளமும் மூன்றரை கிலோ மீட்டர் அகலமும் கொண்ட இந்த 67?P வால் நட்சத்திரம்,ஆறரை ஆண்டுகளூக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும். .எல்லா வால் நட்சத்திரங்களும் நீள் வட்டப் பாதையைக் கொண்டவை என்பதால் எங்கிருந்தோ வந்து தலைகாட்டி விட்டு மீண்டும் வந்த வழியே செல்பவை ஆகும்.
வால் நட்சத்திரம் சூரியனை மேலும் மேலும் நெருங்கும் போது, அதை சூரியனின் வெப்பம் தாக்குவதன் விளைவாக வால் நட்சத்திரத்தில் உறைந்த நிலையில் உள்ள பனிக்கட்டி மற்றும் வாயுக்கள் -- திரவமாக மாறாமலேயே ஆவியாகும். இவற்றின் துணுக்குகள் சூரியனிலிருந்து வெளிப்படும் துகள்களால் பின்னுக்குத் தள்ளப்படும்.இவ்விதமாக வால் நட்சத்திரத்துக்கு வால் முளைக்க ஆரம்பிக்கும். வாயுத் துணுக்குள் ஒரு வாலாகவும் தூசு ஒரு வாலாகவும் தோன்றும். வால் நட்சத்திரம் அக்கட்டத்தில் இரண்டு வால்களைப் பெற்றதாக விளங்கும்.
இந்த நிலையில் குறிப்பிட்ட 67?P வால் நட்சத்திரத்தை ஆராய முற்பட்டார்கள்.இப்படி
ஒரு வால் நட்சத்திரம் இவ்விதம் ஆராயப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
இதற்காக ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய ரோசட்டா என்னும் பெயர் கொண்ட விண்கலம் , 67/P என்று சுருக்கமாகக் குறிப்பிடும் வால் நட்சத்திரத்தை நோக்கி, 2004 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இவ்வளவு ஆண்டுகள் கழித்து இப்போது தான் அந்த விண்கலம் மேற்படி வால் நட்சத்திரத்தை நெருங்கியுள்ளது.
இந்த மாதம் 6 ஆம் தேதி ,இன்று, ரோசட்டா அந்த வால் நட்சத்திரத்தை வட்டமிட ஆரம்பித்து வட்டமிட்டபடியே அது வால் நட்சத்திரத்துடன் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்த வால் நட்சத்திரம் சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் போது சுமார் 85 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். பிறகு அங்கிருந்து தொடங்கி சூரியனை நோக்கி வர ஆரம்பிக்கும். அந்தக் கட்டத்தில் அதாவது சூரியனை நோக்கி அந்த வால் நட்சத்திரம் வர ஆரம்பிக்கும் போது, ரோசட்டா அதைத் துரத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த ரோசட்டா மூன்று தடவை பூமியையும்,ஒரு தடவை செவ்வாய் கோளையும் சுற்றி, அதன் வேகத்தை அதிகரித்த்து.இதன் பலனாக அது 80 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் செல்ல முடிந்தது. பத்து ஆண்டுகள் ஆனதற்கு இது தான் காரணம்.
ரோசட்டா இப்படி சுற்றிச் சுற்றி வந்த காலகட்டத்தில், அது ஸ்டெயின்ஸ், மற்றும் லூடேஷியா ஆகிய விண்கற்களை நெருங்கி ஆராய்ந்து தகவல் அனுப்பியது.
ரோசட்டா பூமியிலிருந்து 80 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்த போது அதாவது 2011 ஆம் ஆண்டு, ரோசட்டாவில் உள்ள கருவிகள் தொடர்ந்து செயல்பட மின்சாரம் தேவை என்பதால், அந்த விண்கலத்தில் இருந்த கருவிகள் செயல்படுவதை நிறுத்தி, ரோசட்டாவை நீள் உறக்கத்தில் இருக்கும்படி செய்தார்கள்.
சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதற்கென ரோசட்டாவின் இரு புறங்களிலும் தலா 14 மீட்டர் நீளத்துக்கு சோலார் செல் எனப்படும் மின் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் சூரியனிலிருந்து 80 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போது அந்த மின் பலகைகள் மீது அற்ப அளவுக்கே சூரிய ஒளி விழும். ஆகவே போதுமான மின்சாரம் உற்பத்தியாகாது. இதை மனதில் கொண்டே ரோசட்டாவை நீள் உறக்கத்தில் ஆழ்த்தினர்.
அதே நேரத்தில் அவ்வளவு தொலைவிலிருந்து மறுபடி சூரியனை நோக்கி வர ஆரம்பிக்கும் கட்டத்தில் ரோசட்டா விழித்துக் கொள்ள வழி செய்யும் வகையில், ரோசட்டாவில் உள்ள கணினி விழித்துக் கொண்டு பூமிக்குத் தகவல் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்ட்து.
சுமார் 31 மாத காலம் உறக்கத்தில் இருந்த ரோசட்டா, கடந்த ஜனவரி 20 ஆம் தேதி விழித்துக் கொண்டு தகவல் அனுப்பியது. இந்த தகவல் பூமிக்கு வந்து சேர 45 நிமிடங்கள் ஆகின. ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் தலைமைக் நிலையத்தில் காத்திருந்த விஞ்ஞானிகள் தகவல் கிடைத்தவுடன் தயாரானார்கள்.
ரோசட்டாவின் கணினி கோளாறு ஏற்பட்டு அந்த விண்கலம் விழித்துக் கொள்ளாமல் போயிருந்தால் ?
ரோசட்டா விண்கலம் அந்த வால் நட்சத்திரம் சூரியனை சுற்றி முடிக்கிற வரை அதை வட்டமிட்டபடி காத்திருந்து,தற்போது வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கி வந்த நிலையில்,அதை நெருங்கிச் சுற்றிக் கொண்டிருக்கிறது. நவம்பர் 11 ஆம் தேதி வால் நட்சத்திரத்தில் மெதுவாக இறங்கி ஆய்வுப் பணிகளைத் தொடங்கும்.
வால் நட்சத்திரத்தை தொடந்து சுற்றவிருக்கும் ரோசட்டாவிலிருந்து துளையிடும் கருவி, மோப்பக் கருவி முதலியவற்றுடன் கூடிய ஒரு சிறிய கலம், நவம்பர் 11 ஆம் தேதி வாக்கில் வால் நட்சத்திரத்தில் இறங்கி, ஆய்வுகளை நடத்தி, கிடைக்கும் தகவல்கள் பூமிக்கு அனுப்பும்.
ரோசட்டா வால்வெள்ளியை படம் பிடித்து அனுப்பிய முதல் படம்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: பத்து வருடப் பயணத்தின் பின் ரோசட்டா விண்கலம் வெற்றி இலக்கை அடைந்தது.ரோசட்டாவின் கதை இது.
எதற்காக இந்த வால் நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் தேர்ந்து எடுத்தனர்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» எளிதாக வெற்றி இலக்கை அடைய உதவும் பயனுள்ள இணையதளம்.
» சிறிய கிரகத்தை ஆய்வு செய்து 7 ஆண்டுகளுக்கு பின் திரும்பியது ஜப்பான் விண்கலம்

» செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது "ரோவர்' விண்கலம்: 8 மாத பயணம் வெற்றி
» 36 ஆண்டுகளுக்குப் பின் 142 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை : தமிழ்த் தேசத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி !!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum