Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆனந்தம் தரும் ஆடிப்பூரம்!
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1
ஆனந்தம் தரும் ஆடிப்பூரம்!
கல்யாண வரம் தரும் 'வாரணமாயிரம்...'
பெரியாழ்வாருக்கு பால கோபாலனாகத் தெரிந்த பெருமாள், கோதை ஆண்டாளுக்கு வசீகர வேணுகோபாலனாகத் தோன்றினாராம்! கூடவே ஆயர்பாடி பற்றியும், ஆயர்குல கோபியர் தங்கள் மனதுக்கு உகந்த கணவனை அடைய பாவை நோன்பு கடைப்பிடித்ததைப் பற்றியும் செவிவழியாக அறிந்த ஆண்டாள், ஸ்ரீரங்கனையே கணவனாக அடைவதற்கு தானும் பாவை நோன்பிருக்க முடிவு செய்தாள்.
ஸ்ரீவில்லிப்புத்தூரையே ஆயர்பாடியாகவும், தன்னையும் தோழிகளையும் ஆயர்குல கோபியராகவும், வடபத்ரசாயி கோயிலை கண்ணன் வளர்ந்த நந்தகோபனின் மாளிகையாகவும், வடபத்ரசாயி பெருமாளையே கண்ணனாகவும் கண்டாள்; மனம் குளிரப் பாசுரங்கள் பாடினாள். அத்தனைப் பாடல்களும் உபநிஷத்துகளின் சாரமாகத் திகழ்ந்தன.
பாவை நோன்பிருக்கும் வழிமுறைகளையும், அதன் பலன்களையும் திருப்பாவையில் விவரித்த ஆண்டாள், 'நாச்சியார் திருமொழி'யில், 'வாரணமாயிரம் சூழ வலம் செய்து' என்று ஆரம்பித்து, மைத்துனன் நம்பி மதுசூதன் அவளைக் கைத்தலம் பற்றுவதாகக் கனா காண்கிறாள்.
பொருள் செறிவு மிகுந்த இந்தப் பாடல்களைப் பாடி ஆண்டாளை வழிபடுகிறவர்கள், அனைத்துப் பேறுகளுடன் கூடிய மணவாழ்க்கையையும் சிறந்த மக்கட் பேறையும் பெறுவார்கள்.
ஆண்டாளும் ராமானுஜரும்
'பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே'
- செம்மொழிக் கோதையாம் ஆண்டாளின் வாழித் திருநாமத்தில் வரும் இந்த ஒரு வரி போதும், ஸ்ரீராமானு ஜருக்கும் ஆண்டாளுக்குமான சகோதர பந்தத்தை அறிந்து மகிழ!
வைணவ திவ்வியதேசங்களில் 102-வது தலம், திருமாலிருஞ்சோலை. மதுரைக்கு அருகே உள்ள கள்ளழகர் கோயில் என்றால், எல்லோருக்கும் எளிதில் புரியும். இங்கு, சுந்தரவல்லித் தாயாருடன் அருள்கிறார் ஸ்ரீகள்ளழகர்.
'வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்' என்று இந்தப் பெருமாளைப் போற்றும் ஸ்ரீஆண்டாள், அவருக்கு 100 தடா வெண்ணெய்யும், 100 தடா அக்காரவடிசிலும் சமர்ப்பிப்பதாகப் பிரார்த்தித்துக்கொண்டாள்.
நாறு நறும்பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடாநிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ!
- என்று 'நாச்சியார் திருமொழி'யில் வேண்டுகிறாள்.பிற்காலத்தில் ஸ்ரீராமானுஜர், இந்தப் பிரார்த்தனையைப் பூர்த்திசெய்தாராம்.
ஆகவே, அவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றபோது, நான்கு அடி முன்னே வந்து, 'வாரும் என் அண்ணாவே' என்று அழைத்தாளாம் ஆண்டாள். எனவே உடையவருக்கு, 'கோயில் அண்ணன்' என்றும் ஒரு திருநாமம் உண்டு.
கோதையின் 'திருப்பாவை' மீது பற்றுக் கொண்டவர் ஆதலால், ஸ்ரீராமானுஜரை 'திருப்பாவை ஜீயர்' என்றும் சிறப்பிப்பார்கள்.
ஆண்டாள் மாலை!
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் சூடிய மாலைக்கு, இன்றைக்கும் மகத்துவம் உண்டு. திருப்பதி யில் வேங்கடவன் திருக்கல்யாணத்தின்போதும், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்பும்... ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து ஸ்ரீஆண்டாள் சூடிய மாலை அந்தத் தலங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அந்தந்தத் தலத்தின் பெருமாள்கள் சூடிக்கொண்ட பிறகே, விழா தொடருமாம்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆடிப்பூரம்
பெரியபெருமாள், பெரியாழ்வார், பெரிய கோபுரம், பெரிய தேர்... என்று பெரும் சிறப்புகள் கொண்ட ஸ்ரீவில்லிப்புத்தூரில், ஆண்டாளின் அவதார உற்ஸவம் விமரிசையாக நடைபெறும்.
ஆடிப்பூரத்தன்று தேர்த் திருவிழா! கோயிலின் பெரிய கோபுரத்துக்கு முக்கால் பங்கு அளவில் பிரமாண்ட உருவத்துடன் திகழும் இந்தத் தேர், தமிழகத்தின் 3-வது பெரிய தேர் என்கிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருவுருவங்கள், ராமாயண- மகாபாரதக் காட்சிகளுடன் திகழும் இந்தத் தேரினை இழுக்க மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தேவை. தேர்த் திருவிழாவன்று ஆண்டாளும் ஸ்ரீரங்கமன்னாரும் இதில் உலா வருவர். தேர் நிலையை அடைந்ததும், திருப்பூர மண்டபத்தில் ஸ்ரீரங்கமன்னாருக்கும் ஆண்டாளுக்கும் நடைபெறும் திருமஞ்சன- திருவாராத னையைக் காணக் கண் கோடி வேண்டும்!
ஸ்ரீரங்கனாக ஆண்டாள்!
சென்னை- மயிலாப்பூரில் ஸ்ரீமாதவபெருமாள் ஆலயத்தில், ஆடிப்பூரத்தன்று ஆண்டாளுக்கு அரங்கன் அலங்காரம் செய்வார்கள். ஸ்ரீஅரங்கனாகக் காட்சி தரும் ஆண்டாளை தரிசிப்பது சிறப்பு!
நீலாயதாட்சிக்கு மஞ்சள் நீராட்டு!
நாகப்பட்டினம் ஸ்ரீநீலாயதாட்சியம்மன் கோயிலில் ஆடிப்பூரப் பெருவிழா விசேஷம். கொடியேற்றம் முதல் ஆடிப்பூரம் வரை தினமும் இரண்டு முறை வீதியுலா வருகிறாள் அம்பாள். இந்த வீதியுலாவில் கண்ணாடிப் பல்லக்கும், பீங்கான் பல்லக்கும் சிறப்பிடம் பெறும்.
ஆடிப்பூரத்தன்று, இந்த அம்மனுக்குப் பூரம் கழித்தல் எனும் மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெறும் (இந்த அம்பாள் கன்னியாகத் திகழ்கிறாள் என்பது ஐதீகம்). அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களை ஆலயத்துக்கு அழைத்து வந்து, அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, பழம், வளையல், கண்ணாடி, சீப்பு, சிமிழ், வளையல், ரவிக்கைத் துணி, தாலிச்சரடு ஆகியவற்றைக் கொடுத்து மரியாதை செய்வர். இந்தக் கோயிலுக்கு வந்து ஸ்ரீநீலாயதாட்சியம்மனை வழிபட, செல்வம், கல்வி மேலோங்கும்; சிறப்பான வாழ்வு அமையும் என்கிறார்கள்.
பெரியநாயகிக்கு திருக்கல்யாணம்!
விருத்தாசலம்- ஸ்ரீவிருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப் பூர திருவிழா நாளில், அம்பாள் பெரியநாயகிக்குச் சிறப்பு அபிஷேக- அலங்காரங்களும், தொடர்ந்து வீதியுலாவும் நடைபெறும். இரவு- பெண் அழைப்பு! கண்ணாடிப் பல்லக்கில் மணப்பெண் அலங்காரத்துடன் பவனி வருவாள் அம்பிகை. மறுநாள் (11-ஆம் நாள்) திருக்கல்யாணம். ஊர் மக்களே பெண் வீட்டாராகவும், மாப்பிள்ளை வீட்டாராகவும் பிரிந்து, தங்கள் வீட்டுக் கல்யாணத்தைப் போன்று அம்பாளுக்குச் சீரும் சிறப்புமாக திருக்கல்யாணம் நடத்துகிறார்கள். திருமணம் முடிந்ததும், மொய் எழுதும் வழக்கமும் உண்டு!
காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு!
திருநெல்வேலி காந்திமதி யம்மனுக்கு, ஆடிப் பூர விழாவின் 4-ஆம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறும். உள்ளூர் நாகஸ்வரக் கலைஞர்களே இந்த வைபவத்துக்கான கட்டளைதாரர்கள்.
இந்த வைபவத்தின்போது, ஊற வைத்த பயறு வகைகளை, அம்பாளின் மடியில் கட்டிவைத்து அலங்காரம் செய்வர்; பார்ப்பதற்குக் கர்ப்பிணி போலவே காட்சி தருவாள் காந்திமதி அம்மன். இந்த வளைகாப்பு வைபவத்தைக் காணும் கன்னிகளுக்குத் திருமணம் கைகூடும், குழந்தை இல்லாதவர்களுக்கு பிள்ளைப்பேறு வாய்க்கும் என்பது ஐதீகம். விழாவுக்கு வந்தவர்களுக்கு வளையல் பிரசாதம் தரப்படும். இந்த வளையலை அணியும் புதுமணப் பெண்ணுக்கு அடுத்த பூரத்துக்குள் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி!
- இரா. இராமதாஸ், புதுச்சேரி

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ப்ரியா ஆனந்தம்!
» எங்கும் எதிலும் ஆனந்தம்
» ஃப்ரீடம் 251: ஆனந்தம் யாருக்கு?
» வியப்பைத் தரும் விண்டோஸ் 8. மைக்ரோசொப்ட் தரும் ஆச்சரியமான தகவல்கள்.
» அமாவாசை, பௌர்ணமியின் மகத்துவம் என்ன? ஆனந்தம்
» எங்கும் எதிலும் ஆனந்தம்
» ஃப்ரீடம் 251: ஆனந்தம் யாருக்கு?
» வியப்பைத் தரும் விண்டோஸ் 8. மைக்ரோசொப்ட் தரும் ஆச்சரியமான தகவல்கள்.
» அமாவாசை, பௌர்ணமியின் மகத்துவம் என்ன? ஆனந்தம்
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum