Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழின அழிப்பில் இன்பம் கண்ட இலங்கை முஸ்லிம்கள் பாவத்தின் சுமையை அனுபவிக்கின்றார்களா?
2 posters
Page 1 of 1
தமிழின அழிப்பில் இன்பம் கண்ட இலங்கை முஸ்லிம்கள் பாவத்தின் சுமையை அனுபவிக்கின்றார்களா?
அநியாயங்களையும் அட்டூழியங்களையும் இஸ்லாம் வெறுக்கின்றது. அதை வெறுக்கின்ற மக்களாகவும் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
அநியாயங்கள் என்கின்ற போது அதில் மனித உரிமை மீறல்கள் அடங்குகின்றது. ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அரசின் சொகுசு வாழ்க்கையும் ஆடம்பர வாழ்க்கையும் கண்ணை மூடிவிட்டது.
ஈவிரக்கத்தையும் மறைத்து விட்டது. மனித நேயத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது. இதை நாம் இப்படியும் எடுக்கலாம். அதாவது அடுத்தவன் துன்பத்தில் இன்பம் காணும் கூட்டமாக இன்றைய இலங்கை முஸ்லிம் சமுதாயம்.
தமிழர் துன்பத்தில் இன்பம் கண்ட இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள். எந்த மனித உரிமையை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்தோமோ அந்த மனித உரிமையைக் கேட்கக் கூடிய கூட்டமாக மாற வேண்டிய கட்டாயத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்கள்.
வடக்கில் அரங்கேறியது மனிதப் படுகொலை மற்றும் இனஅழிப்பு என்பது ஒரே மொழி பேசும் அடுத்த வீட்டு சகோதர இனம் என்று ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாவது ஒரு பத்திரிகை அறிக்கை விட்டதுண்டா.
வடக்கில் நடந்த இனஅழிப்பைக் கண்டித்து ஒரு முஸ்லிம் குரலாவது கண்டனம் தெரிவித்ததுண்டா? மனதால் நொந்ததுண்டா? நாமும் ஒரு சிறுபான்மையினம் இன்று தமிழ் மக்களுக்கு நாளை நமக்கு என்று எந்த முஸ்லிம் அரசியல்வாதியாவது சிந்தித்ததுண்டா?
மேலும் மேலும் முஸ்லிம்களையும் தமிழர்களையும் இணையவிடாது பிரித்தாளும் செயலில் ஈடுபட்டார்களே தவிர, இந்த இரண்டு இனங்களையும் இணைத்து ஒரு அரசியல் செய்யும் நோக்கமே இல்லாமல் செய்து விட்டார்கள்.
எந்தவொரு மனித உரிமை மீறல்களையும் தட்டிக் கேட்கும் மக்களாக முஸ்லிம் மக்கள் இல்லை இன்றைய முஸ்லிம்களிடம் மனித நேயமே இல்லாமல் போய்விட்டது.
வட கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் நன்மை கருதி பாதுகாப்புக் கருதித்தான் கிழக்கு மாகாண ஆட்சியை அரசிடம் ஒப்படைத்தோம் என்று மு.கா தலைவர் ஹக்கீம் கிழக்கு மாகாண ஆட்சியை அரசுக்கு தாரைவார்த்துவிட்டுக் கருத்து தெரிவித்திருந்தார்.
எந்த மக்களுக்காக கிழக்கு ஆட்சி அரசுக்கு தாரை வார்க்கப்பட்டதோ அந்த மக் களின் பாதுகாப்பு தற்போது என்னவாயிற்று. எப்போதும் பயந்த மக்களாக நடுங்கிய மக்களாக உள்ளார்கள்.
இராணுவப் பிரசன்னம்
வடக்கில் தமிழ்ப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் பிரசன்னம் மற்றும் காணாமல் போதல், சித்திரவதை, கற்பழிப்பு, ஆட்கடத்தல் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தவறாக நடாத்தப்படுதல், மனித உரிமைப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்ட நிபுணர்கள் ஆகியோர் மீதான தாக்குதல்கள் போன்ற பிரச்சினைகள் உள்ளன.
தற்போது முஸ்லிம் பகுதிகள் முற்றாக இராணுவத்தின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளது. கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் தொட்டு புல்மோட்டை வரையுமான முஸ்லிம் பகுதிகள் இராணுவத்தினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
இப்படியாக முற்று முழுதான ஒரு இராணுவ மயமாக்கலை அரசு தமிழ் முஸ்லிம் மக்கள் மீது திணித்து வருகின்றது. இப்படியான இராணுவ மயமாக்கலால் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு அங்கு அதிகமாகவுள்ளது.
எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில் முஸ்லிம் மக்கள் மேற்கு. தெற்குப் பகுதிகளில் உள்ளார்கள்.
இலங்கை மீது நம்பகத் தன்மையில்லை
இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை வலுப்பெற்று வருகின்றது. இலங்கை ஜெனீவாவில் சொல்வது வேறு இலங்கைக்குள் சொல்வதும், செய்வதும் வேறு வடகிழக்கில் தொடர்ந்து படைகளும், படை முகாம்களும் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. மீண்டும் ஓமந்தையில் செக்கிங் கெடுபிடிகள்.
இதேவேளை வடக்கில் இருந்து படைகளை வெளியேற்றி இந்தியாவுக்கு அனுப்பவா என்று ஜனாதிபதி கடந்த வருடம் இந்திய எம்பிக்கள் குழுவிடம் கேட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது. மற்றும் வடக்கில் இருந்து படைகள் எக்காரணம் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.
அப்படியானால் ஜெனீவாவில் இலங்கை பூனை மாதிரி பதுங்குவதும், ஜெனீவா மாநாடு முடிந்த பின்பு இலங்கைக்குள் புலி போன்று பாய்வதும் வாடிக்கையாகி இருந்து வருகின்றது. இதனால்தான் மேற்குலக நாடுகள் இலங்கையை நம்புவதாக இல்லை, இலங்கையின் நம்பகத்தன்மையை இலங்கை இழந்து நிற்கின்றது.
இலங்கை நினைத்தால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்தி இலங்கை தனது நம்பகத்தன்மையை உருவாக்கலாம். ஆனால் இலங்கைதான் விடாக்கண்டன் கொடாக் கண்டன் என்றவாறு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த நோக்கமும் கிடையாது.
இலங்கை கடந்த வருடங்களாக மனித உரிமை விடயத்திலும் காணாமல் போன மக்களின் விடயத்திலும் ஜெனீவாவில் பல வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆனால் ஒரு வாக்குறுதியையாவது இன்னும் நிறைவேற்றவில்லையென்று சர்வதேச அமைப்புக்கள் இலங்கை மீது இன்னும் சீற்றம் கொண்டுள்ளது.
மனித உரிமை தொடர்பில் இலங்கை அரசால் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை உலக சமூகமானது ஏற்றுக்கொள்ளமாட்டாது என்றும் இலங்கை அரசு தனது நாட்டில் இடம்பெறும் மனித உரிமைகள் தொடர்பாக பல ஆண்டுகளாக வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி வந்துள்ளது என்று காட்டமாக பிரித்தானியாவில் இருந்து இயங்கும் அம்னெஸ்டி இன்டர்நெஷனல் என்கின்ற சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை மீது தொடர்ந்தும் கடிந்து வருகின்றது.
ஐ.நா விசாரணையில் முஸ்லிம்களின் பாதுகாப்புள்ளது
வடக்கில் அரங்கேறியது இனப்படுகொலை இனஅழிப்பு. இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. இந்த மனிதப்படுகொலையை மனித நேயமுள்ள எந்த மனினும் ஏற்றுக் கொள்ள முடியாது.
கொலையாளிகள் விசாரணை செய்யப்பட வேண்டும் தண்டிக்கப்பட வேண்டும். அந்த விசாரணையிலும் தண்டனையிலும் முஸ்லிம்களின் பாதுகாப்புள்ளது. தமிழர்கள் தண்டிக்கப்படும் போது அடுத்த தண்டனை முஸ்லிம்கள்தான் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
தமிழர்கள் போராட்டத்தில்தான் முஸ்லிம்களின் விடுதலை தங்கியுள்ளது. தமிழர்கள் தோற்று விடக்கூடாது. தமிழர்கள் தோற்று விட்டால் முஸ்லிம்கள் அழிக்கப்பட்டு விடுவார்கள். அதன் ஆரம்பம்தான் அண்மைய தர்கா நகர், பேருவளை சம்பவங்கள்.
தமிழர்களை அழித்து விட்டோம் என்கின்ற மமதையில்தான் இன்று முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றது. முஸ்லிம்கள் தொடர்ந்து சிங்களக் கட்சிகளுக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் கூஜா தூக்கிக் கொண்டு முஸ்லிம் இனஅழிப்புக்கு துணைபோகின்றார்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள்.
இரண்டாம் இனமான தமிழர்கள் இந்த நாட்டில் தலை நிமிர்ந்து வாழாத வரை மூன்றாம் இனமான முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு பௌத்த ஆதிக்கம் விடாது என்பதை முஸ்லிம்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர்களின் நியாயமான போராட்டத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு விமோசனம் கிடைக்காத வரை முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் நிம்மதி இருக்காது.
முஸ்லிம்களுக்கு நிம்மதி அமைதி வேண்டுமானால் முஸ்லிம்கள் தமிழர்களை இனியும் ஒதுக்க முடியாது. முஸ்லிம்களுக்கு தமிழர்களின் தேவை எவ்வளவு அவசியமானது என்பதை முஸ்லிம்கள் மீதான அண்மையச் சம்பவங்கள் புடம் போட்டுக் காட்டுகின்றது.
தமிழர்களுடன் இணைந்து செல்ல வேண்டும் என்று தென்பகுதி முஸ்லிம்கள் விரும்புகின்றார்கள். காரணம் அண்மைய முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு ஒரு படிப்பினையாகவுள்ளது.
பட்டுத் தேறியவர்களாக முஸ்லிம்கள்
நாங்கள் சிங்கள மக்களுடன் பிட்டும் தேங்காயுமாகவுள்ளோம் எங்களுக்குள் எதுவும் நடக்காது. அந்தளவு நெருக்கமாக சிங்கள மக்களுடன் உள்ளோம் என்றுதான் மேற்கு தெற்கு முஸ்லிம்கள் எப்போதும் சொல்லி வந்தார்கள்.
ஆனால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் அன்னியோன்னியமாக பக்கத்து வீட்டில் நெருக்கமாக வாழ்ந்து வந்த சிங்களக் குடும்பங்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் தொடுத்துள்ளார்கள். இப்போதுதான் முஸ்லிம்கள் தூக்கத்தில் இருந்து விழித்தவர்கள் போன்று பட்டுத் தேறியுள்ளார்கள்.
அப்படியானால் எந்தளவுக்கு சிங்கள மக்களுக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மியன்மார் போன்று இலங்கையிலும் ஒரு நிலைமையை உருவாக்க வேண்டும் அதன் மூலமாக தொடர்ந்து தனது ஆட்சியைத் தக்க வைக்கலாம் என்று ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் என்பது தற்போது ஒரு இடைவேளையே ஒழிய நிரந்தரமான நிறுத்தம் அல்ல.முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.நடவடிக்கை தொடரும் என்று பொதுபல சேனாவே தெரிவித்துள்ளது.
இப்போது முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து செல்லக் கூடிய நல்ல நிலை உருவாகியுள்ளது.
முஸ்லிம்களை பிழையாக வழிநடத்தும் முஸ்லிம் அரசியல்
முஸ்லிம்களை பிழையான வழியில் முஸ்லிம் அரசியல்வாதிகள் இட்டுச் செல்கின்றார்கள். மு.கா.ஆரம்பிக்கப்பட்ட பின்புதான் முஸ்லிம் தமிழர்கள் மத்தியில் பிணக்குகளும் சண்டை சச்சரவுகளும் அதிகரித்துக் காணப்பட்டது.
மு.கா என்கின்ற கட்சியின் தாக்கம், உருவாக்கம் என்பது தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிரிவை ஏற்படுத்தியுள்ளதே தவிர முஸ்லிம்களின் எந்த உரிமையைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
எந்த உரிமைக்காக மு.கா போராடியுள்ளது என்று முஸ்லிம்கள் சிந்தித்தால் அங்கு ஒன்றுமே இல்லை. ஆனால் முஸ்லிம் காங்கிரசில் உள்ள சிலரை வாழ வைத்துள்ளது. தற்போது பலரை முஸ்லிம் காங்கிரஸ் நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துள்ளது.
பலர் நஷ்டமடைந்துள்ளார்கள். முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்ட பலர் பெருத்த நஷ்டத்தை அடைந்து விட்டார்கள்.
காலா காலம் முஸ்லிம் காங்கிரசுக்காக செலவு செய்வதற்காக பலர் முண்டியடித்துக் கொண்டும் வரிந்து கட்டிக் கொண்டும் யாரோ ஒருவரை வெற்றியடையச் செய்வதற்காக வருகின்றாhர்கள். இப்படிச் செலவு செய்கின்றவர்களில் யாராவது ஒருவர் தமிழ் முஸ்லிம் உறவுக்காக ஏதாவது செய்கின்றார்களா அல்லது செய்துள்ளார்களா இல்லையே.
தமிழர்களும் தமிழ் கட்சிகளும் தீண்டத் தகாதவர்கள். ஆனால் சிங்களக் கட்சிகளும் சிங்கள அரசியல்வாதிகளும் தேனிலவுக் கூட்டு. அதனால்தான் முஸ்லிம்கள் இன்று பௌத்த மதத்தின் பெயரால் மிகவும் மோசமான நிலைமையை அனுபவிக்கின்றோம்.
வடகிழக்கு முஸ்லிம்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்தது தமிழ் தேசியம். ஆயுதப் போராட்ட காலத்தில் பல கசப்பான அனுபவங்களை முஸ்லிம்களுக்கு தந்து விட்டுச் சென்றுள்ளது என்பது உண்மைதான்.
ஆனால் கிழக்கில் நடந்துள்ள அத்தனை முஸ்லிம் படுகொலைக்குக் காரணமானவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்களான கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் என்கின்றவர்களால்தான் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டு பலமாகவே உள்ளது.
அப்படிப்பட்டவர்களுடன் கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைத்து முஸ்லிம்கள் தேனிலவு கொள்ளவில்லையா. அப்படியானால் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியான கூட்டமைப்புடன் ஏன் முஸ்லிம்கள் கூட்டுச் சேர முடியாது.
முடியும். ஆனால் கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்ந்தால் அங்கு சுகபோகங்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கையை முஸ்லிம் அரசியல்வாதிகளால் வாழ முடியாது.
கூட்டமைப்புடன் இணைந்தால் சொகுசு வாழ்க்கை கிடைக்காது என்ற ஒரேயொரு காரணத்தால்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்வதை தவிர்த்து வருகின்றார்கள்.
முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளால் பிழையாக வழிநடத்தப்பட்டு வருகின்றார்கள். குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பிழையான பாதையில் இட்டுச் செல்லப்படுகின்றார்கள்.
சாரதி இல்லாத வாகனம் போன்று துடுப்பில்லாத வள்ளம் போன்று முஸ்லிம்களுக்கென்று ஒரு தலைமையில்லாது ஒரு அமைப்பு இல்லாது ஒரு கட்சி இல்லாது முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக உள்ளார்கள்.
வாய்ப்பேச்சில் வீரம் பத்திரிகை அறிக்கையில் மன்னர்கள் மேடைப் பேச்சில் உசுப்பேற்றல் போன்றவற்றால்தான் இன்று முஸ்லிம்கள் இவ்வளவு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
வடக்கின் தமிழ்த் தேசிய நேசக்கரம்
அண்மைய முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த தாக்குதல்களைக் கண்டித்து வடக்கு மாகாண சபையில் ஒரு கண்டனப் பிரேரணையே நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் யாழ் பல்கலைக்கழக புத்திஜீவிகளின் கண்டனமும் வேலைநிறுத்தப் போராட்டமும் தெரிவிக்கப்பட்டது.
இவைகள் முஸ்லிம்களுக்காக தமிழர் சேனை பொங்கி எழுந்துள்ளது. மொழியால் நாம் ஒரே இனம். முஸ்லிம்களுக்காக தமிழர் தட்டிக் கேட்க வேண்டும். தமிழர்களுக்காக முஸ்லிம்கள் தட்டிக் கேட்க வேண்டும். இந்த ஒற்றுமைதான் இப்போதைய அவசர தேவை.
இது காலத்தின் கட்டாய தேவை. எப்போதும் முஸ்லிம்களுடன் நெருக்கமாகவுள்ள வட மாகாண முதலமைச்சர் ஆட்சியில் உள்ளார். இப்படிபட்ட நிலையில் முஸ்லிம்கள்- தமிழ் தேசியத்துடன் இணைந்த செல்ல வேண்டிய தேவை தொக்கி நிற்கின்றது.
ஆனால் கிழக்கு மாகாண சபையில் நாங்கள்தான் கிழக்கின் ஆட்சியைத் தீர்மானித்தோம். நாங்கள்தான் கிழக்கு மாகாண ஆட்சியை உருவாக்கினோம். என்று மார்தட்டுகின்ற முஸ்லிம் காங்கிரசினால் ஒரு கண்டனப் பிரேரணை கொண்டு வரமுடிந்ததா? இல்லையே.
இது முஸ்லிம் காங்கிரசிற்கும் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் பெருத்த அவமானமாகப் பார்க்கப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரசினால் ஆளப்படுகின்ற சபையொன்றினால் முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஒரு பிரேரணை கொண்டு வர முடியவில்லையென்றால் இதைவிட அவமானம் உள்ளதா?
தமிழர்களுக்கு எதிராக இத்தனை கொடுமைகள் நடந்த போதிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள், சிங்கள ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துக் கொண்டு வேடிக்கை பார்த்து ரசித்தார்கள்.
தட்டிக் கேட்க நாதியில்லாத முஸ்லிம் அரசியல்வாதிகள் மனித நேயத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு சவத்தின் மேல் நின்று கொண்டு உணவு உண்பது போன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் நடந்து கொண்டார்கள்.
அதன் பலனைத்தான் இன்று முஸ்லிம் சமூகம் அனுபவிக்கின்றது. அந்தப் பாவத்தின் சுமையை இன்று முஸ்லிம் சமுதாயம் சுமக்கின்றது. நேற்று தமிழர்களுக்கு இன்று முஸ்லிம்களுக்கு அதுதான் நடந்துள்ளது.
ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களின் உயிர்கள் சிங்கள இராணுவத்தினால் நரபலி எடுக்கப்பட்ட போது, காவு கொள்ளப்பட்ட போது ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாவது குரல் கொடுக்கவில்லையே. ஆனால் முஸ்லிம்களின் நான்கு உயிர்களுக்காக தமிழ் தேசியமும் கூட்டமைப்பும் தனது கடமையை நன்றாகச் செய்துள்ளது.
தமிழ் மக்களுக்கு ஆட்சியாளர்கள் செய்த அத்தனை கொடுமைகளுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் துணைபோயுள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். இந்தப் பழமொழி முஸ்லிம்களுக்கு மிகவும் பொருத்தமானது.
பௌத்தத்தின் பெயரால் முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது தொடுக்கப்பட்டு வருகின்ற போருக்கு எதிராக முஸ்லிம்கள் தமிழ் தேசியத்தின் உதவிக் கரத்தைப் பெறவேண்டிய கட்டாயத் தேவைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை.
காலம் கடந்தாவது முஸ்லிம்களுக்கு ஞானம் பிறக்கட்டும். தமிழ் தேசியத்துடன் முஸ்லிம் மக்கள் இணைய வேண்டும். பௌத்தம் முஸ்லிம்களைத் துரத்துகின்றபோது உள்நாட்டில் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பை எங்ஙனம் பெறப் போகின்றார்கள் என்பதும் முஸ்லிம்களுக்கான குரலாக முஸ்லிம் காங்கிரஸ் அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகள் இருப்பார்களா அல்லது ஓடி ஒழிவார்களா என்பது மிகவிரைவில் புலனாகும்.
ஆனாலும் அப்போது தமிழ் கூட்டமைப்பு முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் என்பதில் சந்தேகமிருக்காது.
எம்.எம்.நிலாம்டீன்

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: தமிழின அழிப்பில் இன்பம் கண்ட இலங்கை முஸ்லிம்கள் பாவத்தின் சுமையை அனுபவிக்கின்றார்களா?
முற்பகலில் செய்த வினை
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» மறக்க முடியுமா இந்தியா இலங்கை நடத்திய தமிழின படுகொலையை? மே 18 –தமிழின இனப்படுகொலை நாள்.
» தமிழ் இன அழிப்பில் வெளிவராத அதிர்ற்சி காட்சிகள்! மனதை இழக்கும் கண்ணீர்..
» புத்தக சுமையை குறைக்க பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர்: குஜராத் மாநிலத்தில் அறிமுகம்.
» சுய இன்பம்
» சுய இன்பம் புத்துணர்ச்சியை அளிக்குமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum