Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
18 பேர் எங்கே? மூடப்படுகிறதா மவுலிவாக்கம் மர்மம்?
Page 1 of 1

ஜுனியர் விகடனிலிருந்து…,
[You must be registered and logged in to see this image.]
18 பேர் எங்கே? மூடப்படுகிறதா மவுலிவாக்கம் மர்மம்?
தமிழகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய கட்டட விபத்து மவுலிவாக்கம் விபத்தாகத்தான் இருக்கும். ஒரு சாதாரண மழைக்கும் இடிக்கும் தாங்காமல் மண்ணுக்குள் இறங்கிய கட்டடம் சீட்டுக் கட்டுபோல் சிதைந்ததில், 61 பேர் சடலங்களாகி உள்ளனர். 27 பேர் உயிரோடு மீட்கப்பட்டாலும், அவர்களில் பலரின் நிலை மோசமாகத்தான் உள்ளது. மீட்கப்பட்ட சடலங்களில் 60 பேரின் அடையாளம் தெரிந்துவிட்டது. ஒரு சடலத்துக்கு மட்டும் உரிமை கேட்டு யாரும் வரவில்லை. அத்துடன், பல கேள்விகளும் எஞ்சி இருக்கின்றன.
விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, 'விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டப்பட்டதால் தான் அது இடிந்துபோனது. அதில் சி.எம்.டி.ஏ-வின் தவறு எதுவும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். கட்டடம் கட்டும்போது ஒவ்வொரு நிலையிலும் அதை சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் அல்லவா? அவர்கள் அப்படிக் கண்காணித்தார்களா? கண்காணித்து இருந்தால், இத்தனை உயிர்கள் எப்படி பலியாகி இருக்கும்? இதையெல்லாம், நிர்வாக மட்டத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்களா என்பது தெரியவில்லை.
கட்டட அனுமதிக்காக விண்ணப்பித்தபோதே, அவர்கள் அத்துடன் இணைக்க வேண்டிய மண் பரிசோதனை ஆவணம் உள்ளிட்ட மற்ற துறைகளின் தடையில்லா சான்றிதழ்களைக் கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அனுமதி கொடுக்கப்பட்டபோது இருந்த அந்தத் துறையின் அமைச்சர் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்துக்கு முதலமைச்சர் வருவதற்கு முன்பும் சரி, வந்து போன பின்னும் சரி, எந்த அமைச்சரும் அந்தப் பக்கம் தலைகாட்டவில்லை. அமைச்சர் சின்னையா மட்டும் சம்பவம் நடந்த பிறகு ஒருநாள் வந்திருந்தார். பொதுமக்களோடு ஓரத்தில் நின்றுவிட்டுத் திரும்பிவிட்டார். அதிகாரபூர்வமாக சி.எம்.டி.ஏ எந்த விளக்க அறிக்கையையும் இதுவரை தரவில்லை. அதிகாரிகள் கண்காணிக்கவில்லை என்பதற்கும் இதுவரை பதில் இல்லை.
இந்த மீட்புப் பணி குறித்து சிலர் சந்தேகங்கள் கிளப்ப ஆரம்பித்து உள்ளனர். 'இந்த பில்டிங் விழுந்தபோது முதல் இரண்டு தளங்கள் அப்படியே பூமிக்குள் அமுங்கிவிட்டன. அவை முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தரைமட்டம் வரை மீட்பு பணிகள் நடக்கும்போது, பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடைசி மூன்று நாட்கள் மீடியாவை அனுமதிக்கவில்லை. திடீரென ஜூலை 8-ம் தேதியோடு மீட்புப்பணி முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது தரைக்குள் போன இரண்டு தளங்களைத் தோண்டினார்களா, இல்லையா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஆனால், அரசாங்கம் தெரிவித்த 88 பேரை சடலங்களாகவும் காயத்துடனும் மீட்டதோடு பணியையும் முடித்துக்கொண்டார்களா என்பது சந்தேகமாக உள்ளது'' என்கிறார்கள்.
''சார், முதல் மாடியில்தான் நிறைய பேர் இருந்தார்கள். அவர்கள் முழுமையாக மீட்கப்பட்டார்களா என்பது தெரியவில்லை. இதுபற்றி கேட்டால் போலீஸ் சரியான பதிலைச் சொல்ல மறுக்கிறது. எங்களை பில்டிங் பக்கமே விடமறுக்கிறார்கள்'' என்று சொல்லிக்கொண்டு இருந்தார் ஒருவர். 'இது தடை செய்யப்பட்ட பகுதி’ என்று அறிவித்துவிட்டார்கள். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.
''அப்பல்ராமு, லட்சுமி, மீனாம்பாள், பங்காரு நாயுடு, கௌரீஸ்வரி, துர்கா, தவுடு... இவர்கள் எல்லாம் இந்த இடத்தில் வேலை பார்த்தவர்கள். இவர்களைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை'' என்று சொல்கிறார்கள். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வினோத்குமாருக்கு அவருடைய தந்தையின் சடலம் இதுவரை கிடைக்கவில்லையாம். ஒடிசாவைச் சேர்ந்த பிரகாஷ்குமார் உயிரோடு மீட்கப்பட்டு உள்ளார். ஆனால், பிரகாஷ்குமாரின் சடலம் என்று ஒடிசாவுக்கு ஒரு உடல் கொண்டு செல்லப்பட்டது. உண்மை தெரிந்து அந்த உடலைக் கொண்டுவந்துவிட்டார்கள். அது யாருடைய சடலம் என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
''சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் ஒரு ஜோடி கால்கள், ஒரு கை மட்டும் உள்ளது. இந்த உடல் உறுப்புகள் யாருடையது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இறந்தவர்கள், உயிரோடு மீட்கப்பட்டவர்கள் உடலோடு இவை ஒத்துப்போகவில்லை. அப்படியானால் யாருடையது என்பதும் தெரியவில்லை. காதோடு பிய்ந்த நிலையில் ஒரு ஜோடி கம்மல்கள் உள்ளது. அதுவும் யாருடையது எனத் தெரியவில்லை'' என்று சொல்லி பீதியைக் கிளப்புகிறார்கள். ''இந்த அடிப்படையில் பார்த்தால் சுமார் 18 பேர் நிலைமை தெரியவில்லை'' என்று சொல்லப்படுகிறது.
ஏராளமான தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக வேலை பார்த்துள்ளார்கள். அவர்களின் குழந்தைகளும் இங்கு இருந்துள்ளன. கார் பார்க்கிங் இடத்தில் ஏராளமான தொட்டில்கள் இருந்ததை முன்பு பலரும் பார்த்துள்ளார்கள். அப்படியானால், அந்தக் குழந்தைகள் என்ன ஆனார்கள் என்பது பற்றி தகவல் இல்லை. இறந்தவர்கள் பட்டியலில் ஆண், பெண் என்று மட்டுமே பிரித்துச் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கணக்கிட்டுச் சொல்லவே இல்லை. ஜல்லி, மணல் மற்றும் கட்டுமானப் பொருட்களை சப்ளை செய்யதவர்களும் வந்திருந்தார்கள்.
எங்கள் கணக்குப்படி 100-க்கும் மேற்பட்டவர்கள் அந்தக் கட்டடத்துக்குள் இருந்திருக்கலாம் என்று நினைக்கப்படுகிறது. புதையுண்டு போனவர்களின் உண்மையான கணக்கு வரவில்ல.
இதுபற்றி பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவின் தலைவர், போலீஸ் டி.ஐ.ஜி. செல்வத்திடம் பேசினோம். ''எங்களுடைய பணியை நாங்கள் நிறைவாகச் செய்துள்ளோம். கீழ்த்தளத்தில் கார் பார்க்கிங் இருந்தது. அதற்குக் கீழே அஸ்திவாரம்தான். நாங்கள் கார் பார்க்கிங் வரை தோண்டிப் பார்த்து உயிருடன் இருந்தவர்களை காப்பாற்றி உள்ளோம். இறந்தவர்களின் உடல்களையும் வெளியில் எடுத்துள்ளோம். மீட்புப் பணிகள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் முடிவடைந்து விட்டன. பொதுமக்கள் பார்க்கும்போது தரைத்தளத்தை நாங்கள் தோண்டிப் பார்க்கவில்லை என்பதுபோல் தோன்றும். ஆனால், அது உண்மையல்ல. பூமிக்குக் கீழேயும் ஆய்வு முடிந்துவிட்டது. அதன் பிறகு அதை சரிசெய்துவிட்டோம்.
இடிந்த கட்டடத்தில் இருந்த சுவர்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை. பொடிப் பொடியாக ஆகிவிட்டது. கட்டடத்தில் உள்ள தூண்கள் மட்டுமே இருந்தன. அவையும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருந்தன. நாங்கள் தென்னிந்தியா முழுவதிலும் இதுபோன்ற கட்டட விபத்துகளில் மீட்பு பணிகள் மேற்கொண்டுள்ளோம். அதில் எல்லாம் உள்ளே மாட்டிக்கொண்டவர்கள் உயிர் பிழைத்திருக்க ஏதேனும் ஒரு இடத்தில் வாய்ப்புகள் இருக்கும். ஆனால், இந்த கட்டட விபத்தில் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. அந்தளவுக்கு கட்டடம் மோசமாக சிதிலமடைந்து இருந்தது.
அப்படி இருந்தும் துரிதமாக செயல்பட்டு 27 பேரை உயிரோடு மீட்டது மிகுந்த மனநிறைவைக் கொடுத்தது. எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது, பக்கத்தில் இடியாமல் நின்றுகொண்டிருந்த மற்றொரு பில்டிங்தான். அதை மாடலாக வைத்தே எங்களுடைய மீட்புப் பணியை மேற்கொண்டோம்'' என்று சொன்னார்.
ஆனால், ஏராளமான சந்தேகங்கள் இந்த கட்டடத்துக்குள் புதையுண்டு இருப்பது தெரிகிறது.
''லாபம் மட்டுமே குறியாகக்கொண்டவர்கள் வந்துவிட்டார்கள்!''
497.4 மில்லியன் டாலர் பணப்புழக்கம்... 50 லட்சம் தொழிலாளர்கள்... ஆயிரக்கணக்கான நிறுவனங்கள்... என மிகப்பெரிய நெட்வொர்க் கொண்டது தமிழக கட்டுமானத் தொழில். கொத்தனார், சித்தாள், மேஸ்திரி என்று சாதாரணமாக இருந்த தொழில்... பொறியாளர்கள், உயர் தொழில்நுட்பம், மிகப்பெரிய நிறுவனங்கள் ஈடுபடும் வர்த்தகமாக தமிழகத்தில் வளர்ந்தது கடந்த 15 ஆண்டுகளுக்குள்தான்.
இந்தப் பிரச்னையில் அதிகம் குற்றம் சாட்டப்படுவது இந்தத் தொழிலில் இறங்கியுள்ள தொழில் அதிபர்களைத்தான். எனவே, பில்டர்ஸ் அசோஷியேஷன் ஆஃப் இந்தியாவின் துணைத் தலைவரான ஓ.கே.செல்வராஜிடம் பேசினோம். ''கட்டுமானத் தொழிலில் சில பொறுப்பற்றவர்கள் செய்யும் செயலால் ஒட்டுமொத்தமாக எல்லா பில்டர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இப்போது இந்தத் தொழிலில் எந்தவித அனுபவமும் இல்லாத பல பணக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் குறி, லாபம் மட்டுமே.
பொதுமக்களும் கட்டடத்தின் விலை பேசுவதோடு தங்களின் வேலை முடிந்தது என்று நினைத்துக்கொள்கிறார்கள். கட்டடம் கட்டுபவர் இந்தத் தொழிலில் முன் அனுபவம் உள்ளவர்களா? நாம் வீடு வாங்கும் பகுதி அடுக்குமாடிக் கட்டுவதற்கு ஏற்ற இடமா? அதைக் கட்டப்போகும் பொறியாளர் யார்? அவர் தகுதியானவர்தானா? மண் பரிசோதனை ஆதாரச் சான்றிதழ் சரியாக உள்ளதா? இதையெல்லாம் பொதுமக்கள் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். தாராளமாக அவர்கள் அனைத்து ஆவணங்களையும் வாங்கி பரிசோதிக்கலாம். மண் பரிசோதனை மிக மிக அவசியம்.
பில்டர்ஸ் அசோசியேஷனில் அந்த நிறுவனங்கள் உறுப்பினர்களா என்று பார்க்கலாம். ஏனென்றால், அப்படி இருக்கும்போது நாங்கள் விதிமுறை மீறல்களை அனுமதிப்பது இல்லை. அதோடு எங்கள் கூட்டமைப்பு சார்பில், அவ்வப்போது கட்டுமானத் தொழிலில் ஏற்படும் வளர்ச்சிகள், அரசு விதிமுறைகள், புதிதாக வந்துள்ள சட்டங்களை எங்களுடைய மீட்டிங்கில் தெரியப்படுத்துகிறோம். ஆனால், எங்கள் கூட்டமைப்பில் இல்லாமல் தனியாக இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் தெரிவது இல்லை. மவுலிவாக்கம் பிரச்னைக்குப் பிறகு இனி அடுக்குமாடி கட்டடத்தில் வீடு வாங்குபவர்கள், பூமிக்குக் கீழே போடப்பட்டுள்ள பில்லர்களின் வலிமை எப்படி இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். விதிமுறைப்படி வீடு கட்டப்பட்டுள்ளது என்பதற்கு நிறைவுச் சான்றிதழ் வழங்குவதுபோல், பில்லர்கள் வலிமையாக அமைக்கப்பட்டு உள்ளது என்பதற்கும் சான்று வழங்க வேண்டும்'' என்றார்.
பில்டர்களின் தரப்பு இப்படி என்றால், சி.எம்.டி.ஏ-வின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று சில கட்டுமான நிறுவன அதிபர்களிடம் பேசினோம். எல்லா தவறுகளுக்கும் அவர்கள் சி.எம்.டி.ஏ-தான் மிக முக்கியக் காரணம் என்கின்றனர்.
''ஒரு கட்டட அனுமதிக்கு விண்ணப்பம் செய்யும்போதே பேரங்கள் ஆரம்பமாகிவிடுகின்றன. அதில் இருந்து கட்டட வேலை முடிந்து அது விதிமுறைப்படி நிறைவடைந்துள்ளது என்று கம்ப்ளீஷன் சான்றிதழ் வாங்கும் வரை அந்தப் பேரம் தொடர்கிறது. ஒரு அடுக்குமாடி வீடு கட்டுவதற்கு 50 அரசு அமைப்புகளிடம் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இதனால் 18 முதல் 24 மாதங்கள் வரை கால தாமதம் ஏற்படுகிறது. மிகப்பெரிய அபார்ட்மென்ட், தொழில் நிறுவனங்கள் கட்டும் கட்டடங்களுக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலையைச் சொல்லவே முடியாது.
ஆனால், கோடிகளில் தொழில் செய்யும் மிகப்பெரிய பில்டர்கள் விண்ணப்பித்த மறுநாளே வேலையைத் தொடங்கிவிடுவார்கள். அனுமதி கிடைக்கும் வரை அவர்கள் காத்திருப்பது இல்லை. ஏனென்றால், எப்படியும் வேறு வழியில்தானே அனுமதி வரப்போகிறது என்று அவர்களுக்குத் தெரியும். அதுபோல், சி.எம்.டி.ஏ-வில் மாநகராட்சி பொறியாளர்தான் இந்த ஆவணங்களை எல்லாம் பரிசோதித்து அனுமதி தர வேண்டும். ஆனால், அவர்கள் கையெழுத்துப் போடும் வேலையை மட்டும்தான் செய்கிறார்கள். எந்தவிதமான ஆய்வும் கிடையாது. அப்படியே அவர்கள் ஆய்வுக்கு வந்தால், பணம் கறப்பதற்கான விஷயமாகத்தான் வருவார்கள்.
கட்டடங்களுக்கான பிளானை பில்டர்கள் என்னதான் தெளிவாகப்போட்டுக் கொடுத்தாலும், இவர்கள் அதற்கு அனுமதி அளிப்பதற்கு மிகத் தாமதம் செய்கின்றனர். பெரிய கட்டுமானத் திட்டங்களுக்கே 18 மாதங்கள் இழுத்தடிக்கிறார்கள். இப்படி காலதாமதம் செய்வதால், கட்டுமானச் செலவு ஒரு சதுர அடிக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரிக்கிறது. இதனால் வீடுகளின் விலை கன்னாபின்னாவென்று உயர்கிறது. சராசரியாக அடுக்குமாடி குடியிருப்பின் விலையில் சதுர அடிக்கு 100 ரூபாய் அரசு அதிகாரிகளை கவனிக்க செலவாகிறது'' என்று சொல்கிறார்கள்.
அரசாங்கம் சி.எம்.டி.ஏ-வை சீரமைப்பதில் இருந்து தொடங்க வேண்டும்.
புதைந்துபோன 21 லட்சம்!
மவுலிவாக்கம் பில்டிங் மழையில் சரிந்த சனிக்கிழமை, அங்கே பணிபுரியும் ஊழியர்களுக்கு வார சம்பள நாள். அவர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்வதற்காக கேஷியர் 21 லட்ச ரூபாயுடன் அந்தக் கட்டடத்தில் இருந்துள்ளார். அந்தப் பணம் மண்ணோடு மண்ணாகப் புதைந்துவிட்டதாம். இந்தத் தகவல் தெரிந்த சிலர் எப்படியாவது பணத்தைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று அந்த கான்கிரீட் சமாதியை வட்டமடிக்க ஆரம்பித்துள்ளனர்.

Similar topics
» உஷாராகிறது போலீஸ்: தமிழக பயங்கரவாதிகள் 11 பேர் எங்கே?
» வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களில் 9 பேர் எங்கே?
» அந்த 17,500 பேர் எங்கே? புலிகளின் தளபதி எழிலன் மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது!
» கமல் ரசிகர்களை கொதிக்க வைக்கும் அறிக்கை: “ரஜினி, விஜய் எங்கே? நீர் எங்கே?”
» எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதல்; பெட்டிகள் தூக்கி வீசப்பட்டது 12 பேர் பலி 45 பேர் படுகாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum