Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உங்கள் உடல் நலம் உங்களுக்கு முக்கியமா? ஒரு முறை சிந்தியுங்கள்.
2 posters
Page 1 of 1

பொதுவாக இணையத்தளங்களில் சில வேறுபாடுகள் உண்டு. நேரடியான இணையத்தளம் ஒன்று சரியான தகவல்களைத் தரும்.உதாரணமாக அரச இணையம்,கல்லூரி,வங்கி இணையத்தளம் போன்றவை அவர்களீன் சொந்த இணையத்தளம் என்பதால்,தகவல்களை நேரடியாக சரியாகத் தருகிறது.வங்கியில் பணம் செலுத்த நேரடியாக வங்கியின் இணையத்தளத்தை அணுக வேண்டும்.தரகர் இணையத்தளத்தை அணுகக் கூடாது.
சில சமயம் ஒரு இணையத தளத்திற்கு சென்றால்,அதே போன்ற வேறொரு இணையத்தளம் வந்து நம் தகவல்களை திருடி விடும். சில கருத்துக்களங்களில் இணைய உரிமையாளர் -அட்மின்- அனுமதியுடன் பதிவிட வேண்டும்.அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் தான் பதிவுகள்,கருத்துக்கள் வெளியிடப்படும். இன்னொன்று சிந்தனைக்களம் போல் கருத்துக்களமாக,இயங்கும். அப்படியான தளங்களில் நாம் நேரடியாக அட்மின் அனுமதி இல்லாமல் பதிவிட முடியும்.இணைய விதிகளுக்கு ஏற்றதாக இல்லா விட்டால், வெளிவந்த பின்னரே நீக்க முடியும். அப்படிப் பதிவிடும் பதிவுகள் உண்மையாக இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என சொல்ல முடியாது.
ஏனெனில் பல தகவல்கள் பல்வேறு தலைப்பில் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஒரு நோய்க்கு பல்வேறு மருந்துகள்,மருத்துவ முறைகள் சொல்லப்படும். அந்தப் பதிவுகளை பதிவிடுபவர்கள், வேறு எங்காவது இணையம் அல்லது படித்ததில் இருந்து கொண்டு வந்து பதிவிடுகிறார்கள். அதானால் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வதோ,ஏற்றுக் கொள்ளாமல் விடுவதோ, படிப்பவர்கள் முடிவாகும். சில செய்திகள் பதிவுகள் உண்மையாக இருக்கலாம் சில உண்மையற்றவையாகவும் இருக்கலாம். அதனால் முக்கியமாக மருத்துவத் தகவல்களை,உடல் சம்பந்தமான தகவல்களை அதன் உண்மைத்தன்மையை தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்துவதை, நீங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும்.
ஒரு கடைக்கு சென்றால் துணியின் நிறம்,உடைகளின் அளவு, சினிமா, கல்வி, தொழில், தலைக்கும் பாவிக்கும் பொருள்,சோப்பில் இருந்து எல்லாவற்றுக்கும் பல முறை எண்ணிப் பார்க்கிறோம் இல்லையேல் வேறு யாரிடமாவது கேட்கிறோம்.ஒரு கைக்குட்டை வாங்கும் போது கூட அம்மா,மனைவி,நண்பர்கள் என்று யாரிடமாவது காட்டிக் கேட்கிறோம். அளவு சரியா என்று பார்க்கிறோம். தலையை வாரிக் கொண்டால் பல முறை கண்ணாடி முன் நின்று சரி பார்க்கிறோம்.உடைக்கும்,காலணிக்கும்,உணவிற்கும்,ஏன் சிகரெட்டிற்கும், மதுவுக்கும் கூட, பல முறை போலியா நல்லதா எனப் பார்க்கிறோம்,மற்றவர்களிடம் கேட்கிறோம்.சரவணபவனிற்கு சென்றால் கூட மற்றவர்கள் மேசைப் பார்த்து என்ன சாப்பிடுகிறார் எனப் பார்த்து ஓடர் செய்கிறோம்.
ஆனால் நம் உடல் நிலை ஆரோக்கியம் என்று வரும் போது மட்டும், நாம் ஒரு தடவைக்கு மேல் யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. மருத்துவர் மருந்துகளைக் கொடுக்கிறார். அப்படியே எடுக்கிறோம்.அந்த மருந்து எப்படிப்பட்டது,எங்கே தயாரிக்கப்பட்டது,நாள்பட்டதா, எந்த பக்க விளைவுகளைத் தருகிறது என்று யாராவது பார்ப்பதுண்டா? படித்ததுண்டா,கேட்டதுண்டா?
ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சைதான் ஒரே வழி என்றால், சில இலட்சங்களைப் புரட்ட ஓடுகிறோமே தவிர,அந்த அறுவை சிகிச்சை அவசியமா இல்லையா என்று யாராவது வேறு யாரிடமோ,வேறொரு மருத்துவரிடமோ, தெரிந்த வேறொருவரிடமோ கேட்பதுண்டா? டாக்டர் சொன்னார் என்று மறுபேச்சில்லாமல் செயற்படுகிறோமே தவிர எப்போதாவது சிந்தித்ததுண்டா?யாரிடமாவது கேட்டதுண்டா?
இணையத்தளங்களில் பல மருத்துவக் குறிப்புகள் வரும். பரீட்சித்துப் பார்ப்போம். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லையே,ஏன்? உடல் இழைக்க தங்கள் அனுபவத்தை வைத்து வழிகளைச் சொல்வார்கள். செய்து பார்ப்போம். ஒருவர் உடலைப் போல் இன்னொருவர் உடல் இருப்பதில்லை என்பதை ஏன் புரிந்து கொள்வதில்லை? ஏராளமாக அள்ளி உள்ளே தள்ளுவார்கள்.ஆனாலும் ஓமக்குச்சி போல் இருப்பார்கள். ஒரு வேளை சாப்பிடுவார். ஆனாலும் குண்டாகி விடுகிறார்.இவை நமக்குத் தெரிந்தது தான்.ஆனாலும் எண்ணிப் பார்ப்பதில்லை. எல்லாவற்றையும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுகிறோமே ஏன்?
வெளி நாடுகளில் மருத்துவ காப்புறுதியினர் மற்றும் மருத்துவர்கள் கூட கடுமையான, ஆபத்தான நோய்களுக்கு இரண்டாவது கருத்தைக் (second opinion) கேட்கும்படி சொல்கிறார்கள். சில நோய்களுக்கு, இரண்டுக்கு மேற்பட்ட மருத்துவர்களிடம் செலவைக் கேட்கிறார்கள்,குணப்படுத்தும் முறையைக் கேட்கிறார்கள்,அறுவை சிகிச்சை அவசியமா எனக் கேட்கிறார்கள்.அவர்கள் மட்டுமல்லாது,மருத்துவக் காப்புறுதியினரும் கூட இரண்டாவது மருத்துவரின் கருத்தைக் கேட்கும்படி சொல்கிறார்கள்.
நம் உடலை விட,உடல் நலத்தை விட ,உடையும் துணியும்,தலை வாருவதும் முக்கியமாக நமக்குப் படுகிறது . நெற்றியில் இடும் பொட்டு சரியாக வைக்கப்பட்டிருக்கிறதா என கண்ணாடியில்,சாப்பிடும் தட்டில்,தெருவில் நிற்கும் கார் கண்ணாடியில் பார்க்கும் நாம், ஏன் நம் உடலைப் பற்றிய விசயத்தில் கவனம் செலுத்துவதில்லை?நமக்கு மருத்துவம் பற்றித் தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டு, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். கேட்க எத்தனை பேர் இருக்கிறார்கள்.இதற்கு பணம் தேவையில்லை.வாயை மட்டும் திறந்து கேட்டால் போதுமானதே!
இடது கண்ணில் அறுவை செய்யப்படுவது,வலது கண்ணில் செய்யப்படுகிறது. மருத்துவ தவறினால் இழக்கப்படும் உயிரே அதிகமானவை.எண்ணிப் பாருங்கள்.
எந்த மருத்துவக் குறிப்பானாலும்,எந்த மருத்துவர் சொன்னாலும்,எந்த மருந்தானாலும் எந்த மருத்துவ நிலையமானாலும் ஒரு முறைக்கு இருமுறை முக்கியமான சந்தர்ப்பங்களில் எண்ணிப் பாருங்கள். அவசியமா, வேறுமுறை இருக்கிறதா என தெரிந்த ஒருவரிடம் கேட்பதால் என்ன குறைந்து விடப் போகிறது?அப்படிப் பார்ப்பதால், உடலையும் காப்பாற்றலாம். உங்கள் வங்கியில் இருக்கும் பணத்தையும் காப்பாற்றலாம்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: உங்கள் உடல் நலம் உங்களுக்கு முக்கியமா? ஒரு முறை சிந்தியுங்கள்.
ஆம் சக்தி அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான்
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Similar topics
» உடல் நலம் காப்போம்! வழிகாட்டி.
» உடல் நலம் பேணுவோம்
» உங்கள் முகத்தை பார்த்தே, உங்கள் ஆரோக்கியத்தை பற்றி வெளிகாட்டும் சீன முறை!
» உடல் நலம் : கிட்னி பற்றி சில அடிப்படை தகவல்கள்
» இதய நலம் காக்கும் உடல் பயிற்சிகள் -பொதுவான கட்டுரை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum