Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காலை எழுந்தவுடன் குதிக்கால் வலிக்கிறதா?
2 posters
Page 1 of 1
காலை எழுந்தவுடன் குதிக்கால் வலிக்கிறதா?
காலை எழுந்தவுடன் குதிக்கால் வலிக்கிறதா?
[You must be registered and logged in to see this image.]
குதிக்கால் வலி –
காலை எழுந்தவுடன் வலிக்கும் பின்பு நடை பயிலச் சற்றுத் தணியும்
ஆம் நீண்ட நேரம் அசைக்காது இருந்து விட்டு எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது குதிகாலில் வலியை ஏற்படுத்துகிறது இந் நோய்.
சில அடிகள் நடக்க வலிதானே குறைந்துவிடும்.
ஆனால் கவனியாது விட்டால் காலம் செல்லச் செல்ல வலியானது நாள் முழுவதும் உங்களுக்குத் துன்பம் தரக் கூடும்.
இதனை பிளான்டர் பஷியடிஸ் (Planter fascitiis) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.
தமிழில் குதி வாதம் என்றே பலரும் குறிப்படுவார்கள்.
வாதம் என எம்மவர்கள் குறிபிட்ட போதும் பக்கவாதம் பாரிச வாதம் போன்ற ஆபத்தான நோயல்ல.
சிலவேளைகளில் அப்பகுதி சிவந்து வீங்கி சூடாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் இவை எதுவுமே வெளிப்படையாகத் தெரிவதி ல்லை.
வலி மட்டுமே ஒரே ஒரு அறிகுறியாக இருக்கும். பாதத்தின் அடிப்பகுதில் உள்ள சவ்வுகளில ஏற்படும்; அழற்சியாலேயே இந்நோய் ஏற்படுகிறது.
இது மூட்டுகளில் ஏற்படும் நோய் அல்ல.
ஏன் வருகிறது...?
ஆனால் இத்தகைய சவ்வு அழற்சி தவிர்ந்த வேறு காரணங்களாலும் குதிக்காலில் வலி ஏற்பட வாய்ப்புண்டு.
பொதுவான நாம் நடக்கும்போது எமது பாதங்களை முழுமையா க ஊன்றி நடப்போம், ஆனால் பாதத்தில் ஆணிக்கூடு, தோற்தடிப்பு
(Callocity), புண்கள், மூட்டு வலிகள், போன்றவை இருந்தால் பாதங்களை சரியாக தரையில் பதியாமல் உட்பக்கமாகவோ வெளிப்புறமாகவோ சற்று சரிந்து நடப்பதாலும் அவ்வாறான வலி ஏற் படலாம்.
பாதத்தின் பிரதான எலும்பான கல்கே னியத்தில்; வழமைக்கு மாறான எலும் புத் துருதல் இருந்தாலும் அவ்வாறான வலி ஏற்பட வாய்ப்புண்டு.

கெண்டைக் காலின் பின்புறமாக இருக்கும் பிரதான சவ்வான அக்கிலிஸ்ரென்டனில் ஏற்படும் அழற்சியும் இவ்வாறான வலியை ஏற்படுத்தலாம்.
இவற்றைத் தவிர பாதத்தின் மூட்டுகளில் ஏற்படக் கூடிய காயங்கள், உருக் குலைவுகள், ரூமற்ரொயிட் வாதம் அல்லது வேறு ஏதாவது நாட்பட்ட நோய்கள் காரணமாகவும் அத்தகைய வலி ஏற்பட வாயப்புண்டு.
சவ்வுகளின் இறுக்கம் மட்டுமின்றி பாதப்பகுதியின் தளர்ச்சி,
உடற்பயிற்சிகளைத் தவறான முறைகளில் செய்வதும் காரண மாகலாம்.
பாதத்தின் இயற்கை யான வளைவுப் பகுதிக்கு நீங் கள் கொடுக்கும் அதிகரித்த வே லைப் பளுவும் மற்றொரு காரணமாகும்.
மிக நீண்ட தூரம் ஓடுதல், அதி வேகமாக ஓடுதல், அடிக்கடி ஓடுதல் போன்ற பயி ற்சிகள் சிலருக்கு வலியை ஏற் படுத்துவதுண்டு.
அளவுப் பொருத்தமற்ற காலணிகளும், அடிப்பகுதி தேய்ந்த
காலணிகளும் குதிகாலில் வலி ஏற்படுத்த வாய்ப்புண்டு
.
சிகிச்சை
சிகிச்சைகள்பல வகைப்படலாம். வலி ஏற்படாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளுடன், தசை சவ்வுகளுக்கான பயிற்சி முறைகள், உட்கொள்ளும் மாத்திரைகள், ஊசி ஏற்றுதல் போன்றவற்றை உங்கள் மருத்துவர் சிபார்சு செய் யக் கூடும்.
காலையில் படுக்கையை விட்டு எழுந்து நடமாட ஆரம்பிக்க முன்னரே பயிற்சிகளை ஆரம்பியுங்கள்.
எழுந்தவுடன் உங்கள் பாதத்தை குறுக்குவாட்டாக அழுத்தித் தேய்த்து சில நிமிடங்களுக்கு மஸாஜ் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

அதேபோல நீண்ட நேரம் ஓரிடத்தில் உட்கார்ந்து இருந்த பின் எழுந்து நடக்க நேர்ந்தால், நடக்க ஆரம்பிக்க முன்னர் மசாஸ் செய்யுங்கள்.
பகலில் பதமான சூட்டு வெந்நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருப்பதும் வலியைத் தணிக்க உதவும்.
இது சுடுநீர் ஒத்தடம் கொடுப்பதை ஒத்தது.
மாறாக ஐஸ் கலந்த தண்ணீரில் கால்களை வைப்பதும் உதவலாம்.

பாதங்களின் கீழ் ஒரு பந்தை வைத்து அதை முன் பின்னாக உருட்டுவதும் மற்றொரு பயிற்சி யாகும்.
அடுத்தது தசைகளைப் பலப்படுத் தும் பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும்.
இவை உங்கள் நோ யை த் தணிப்பதில் நல்ல பல னைக் கொடுக்கும்.
கெண்டைத் தசைகளுக்கான பயிற்சிகள்.
முழங்காலுக்குக் கீழ் இருக்கும் கெண் டைக்கால் தசைகளுக்கான இழுவல் பயிற்சிகளும் குதிக்கால் வலியைத் தணிக்க உதவும்.
மேலே காட்டிய படங்க ளில் உள்ளபடி இரண்டு விதமாக செய்ய வேண்டும்.
சுவரை உங்கள் கைகளால் தள்ளுவது போன்றவையே இப் பயிற்சிகள்.
1) முதலாவது படத்தில் காட்டியபடி உங்கள் இரு கைகளையும்
முழங்கைப் பகுதியில் மடிக்காது நேராக வைத்துக் கொண்டு சுவரை இறுகத்தள்ளுங்கள்.
தள்ளும் போது முன்னிருக்கும் கால் சற்று மடிந்திருக்க பின்னே மடியாதி ருக்கும் காலின் குதிப் பகுதியில் பாரம் பொறுக்குமாறு செய்யுங்கள்.
அடுத்த தடவை கால்களை மாற்றி மறுகாலில் பாரம் பொறு க்குமாறு பயிற்சியைச்செய்யுங்கள்.
2) இரண்டாவது படத்தில் காட்டிய அடுத்த பயிற்சியின்போது
உங்கள் கைகள் முழங்கைப் பகுதியில் சற்று மடிந்திருக்க
சுவரைத் தள்ளுங்கள்.
இது பாதத்தின் முற்பகுதியில் பாரம் தங்குமா று செய் யும்.
உண்மையில் இவை உங்கள் தசைக ளைப் பலமுறைச் செய்து அதனால் எதிர்காலத்தில் வலிகள் தொடராது வேதனையைக்
குறைக்க உதவும்.
பாதத்து தசைகளுக்கான பயிற்சிகள்
பாதத்தின் தசைநார்களுக்குக் கொடு க்கும் பயிற்சிகள் பல வகைப்படலாம்.
துவாயைச் சுருட்டல், மார்பிள் அல்லது நாணயங்களை கால் விரல்களால் பொறுக்கல், மற்றும் காற் பெரு விரல் தட்டல் பயிற்சிகள் போன்றவை சுலபமானவை.
பயிற்சிகளின் பெயர்களைக் கேட்டவுடன் பயந்துவிடாதீர்கள்.
மிகவும் சுலபமானவை.
தொடர்ந்து செய்ய நல்ல பலனையும் கொடுக்கும்.
துவாயைச் சுருட்டல் பயிற்சி –
ஒரு துவாயை தரையில் விரியுங்கள்.
படத்தில் காட்டியபடி உங்கள் பாதத்தை அதன் ஒரு ஓரத்தில் வைத்தபடி அருகே ஒரு நாற்காலியில் உட்காருங்கள்.
துணியை உங்கள் கால்விரல் நுனிகளால் பற்றி உங்கள் பக்கமாக சுருட்டிச் சுருட்டி இழுங்கள்.
பல முறை இவ்வாறு செய்யுங்கள்.
மார்பிள் பொறுக்கல் பயிற்சி
இன்னுமொரு பயிற்சி கால் விரல் களால் மார்பிள்களை பொறுக்கு வதாகும்.
சில மார்பிள்களை, நாணயங்களை அல்லது சோடா மூடிகளை நிலத்தில் போட்டு வையுங்கள்.
அருகில் உயரம் குறைந்த ஒரு கோப்பையை வையுங்கள்.
உங்கள் குதிக்கால் நிலத்தில் படு ம்படி உட்கார்ந்து கொண்டு
மார்பிள்களை உங்கள் கால் விரல்களால் பொறுக்கி எடுத்து அருகில் ஏற்கனவே வைத்த கோப்பைக்குள் போடுங்கள்.
நாணயங்களை இவ்வாறு பொறுக்கிப் போடுவது இன்னும் நல்ல பயிற்சியாகும்.
கால்விரல் தட்டல்
கால்விரல் தட்டல் (Toe tab) இன்னுமொரு நல்ல பயிற்சியாகும்.
இது ஒரு நுணுக்கமான ஆனால் சிறந்த பயிற்சியாகும்.
உங்கள் பாதத்தின் குதிப் பகுதியை தரையில் திடமாக இருக்கும்படி வையுங்கள்.
காலின் முற்பகுதியை ம ட்டும் மேலே உயர்த்துங்கள். இப்பொழுது நான்கு விரல்கள் உயர்ந்தபடி நிற்க பெருவிரலா ல் மாத்திரம் தரையைத் தட்டுங்கள்.
இனி மறுபுறமாகச் செய்யுங்கள்.
அதாவது பெருவிரல் உயர்ந்து நிற்க மற்ற நான்கு விரல்களால் தரையைத் தட்டுங்கள்.
இவ்வாறு பலமுறை செய்ய வேண்டும்.
ஒரு தவணையில் பத்து முறையாவது செய்யுங்கள்.
படிப்படியாக ஒவ்வொரு தவணையிலும் ஐம்பது முறையாவது செய்யும்படி பயிற்சியை அதிகரியுங்கள்.
மருந்துகள் ஊசி
வலியையும் அழற்சியையும் தணிக்கும் வலிநிவாரண
மாத்திரைகளும் உங்களுக்கு நிச்சயம் உதவும்.
வைத்தியரின் ஆலோசனையுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அத்தகைய மாத்திரைகளை நீங்கள் உட்கொள்ள சுகம் தெரியும்.
சில வேளை ஹைட்ரோகோட்டிசோன் ஊசி மருந்தை வலி அதிகமுள்ள இடத்தில் உங்கள் வைத்தியர் போடவும் கூடும்.
-Dr. M.K.முருகானந்தன், M.B.B.S(Cey), D.F.M(SL), F.C.G.P(SL)
குடும்ப வைத்திய நிபுணர்

Similar topics
» காலை எழுந்தவுடன்...
» காலை எழுந்தவுடன்... டாக்டர்.வேலாயுதம்
» காலை எழுந்தவுடன் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு.
» ஜெயா தொலைக் காட்சியில் காலை மலர் நிகழ்ச்சியில் 9.82011 காலை 8.15 மணிக்கு கவிஞர் இரா .இரவி நேர்முகம் கண்டு மகிழுங்கள்
» காலை உணவை தவிர்க்காதீர்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum