Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விக்கிபீடியாவை முற்றாக நம்பலாமா?
4 posters
Page 1 of 1
விக்கிபீடியாவை முற்றாக நம்பலாமா?
விக்கிபீடியாவை முற்றாக நம்பலாமா?
விக்கிபீடியா(Wikipedia) என்பது இணையத்தின் கட்டற்ற கலைக்களஞ்சியம் என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் சனவரி 15, 2001ல் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 100 ற்கு மேற்பட்ட மொழிகளில் தொகுப்புகள் இடம் பெற்று வருகின்றன.விக்கி -கவாய் மொழியில் விரைவு என்றும்,பீடியா என்பது என்சைக்ளோபீடியா என்ற ஆங்கிலச் சொல்லில் இருந்து பெறப்பட்டும் உருவாக்கப்பட்டது. தமிழில் விக்கிப்பீடியா 2003 இல் ஆரம்பிக்கப்பட்டு,61 ஆயிரத்திற்கு மேற்பட முழுத் தொகுப்பாகவும்,குறுகிய தொகுப்பாகவும்,64.492 பயணர் கணக்குகளையும் கொண்டுள்ளது.
விக்கிபீடியாவில் ஆர்வமுள்ள எவரும் கணக்குகளை ஆரம்பித்து பங்களிப்பு செய்யலாம். எந்தத் தகுதியும் கிடையாது. ஆங்கிலம்,சேர்மன்,பிரென்ச் இப்படிப் பல மொழிகளில் தொகுக்கப்பட்டவற்றை மொழிபெயர்த்து தமிழில் கொடுக்கலாம்.அந்த மொழிகளில் இல்லாத நமது விடயங்களை, நாம் எழுதி ஆதாரங்களுடன் தொகுக்கலாம். அதே சமயம் இப்படி தொகுக்கப்படும் தொகுப்புகளை யாரும் திருத்தவும் நீக்கவும் முடியும்.
சில தொகுப்புகள் சிலரால் தவறாகத் திருத்தப்பட்டு இருக்கின்றன,நீக்கப்பட்டிருக்கின்றன. தொகுப்பவர்கள்,மொழிபெயர்ப்பவர்களுக்கு தகுதி என்பது கிடையாது.எழுதும் திறமையை வைத்து எழுதுகிறார்கள்.தொகுக்கப்படும் தொகுப்புகளில் பலருக்கு துறை சார்ந்த அறிவு கிடையாது என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
குறிப்பாக மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவர் மருத்துவம் பற்றி எழுதுவதில்லை. வேறொரு மொழியில் வந்தவற்றை சேர்த்திருப்பார் அல்லது கிடைத்த தகவல்களை வைத்து சேர்த்து அல்லது திருத்தி இருப்பார்.
இதே தளத்தில் தேவராஜ சுவாமிகள் எழுதிய ஆறு பாடல்களில் ஒன்றான கந்தசஸ்டிக்கவசம் பாடல் தவறாக தரப்பட்டது.அந்தப் பாடல் விக்கிபீடியாவில் இருந்து எடுத்துத் தரப்பட்டது. இதை ஒரு உதாரணமாக கொள்ளலாம். எப்படி விக்கிபீடியாவில் தவறாக அந்தப் பாடல் வந்தது? துறை சாராத ஒருவர் ஆராயாது அப்படியே கொடுத்திருக்கிறார். கவனமாக ஒருமுறை படித்திருந்தால்,சொற்களின் பொருள் தெரிந்திருக்கும்,புரிந்திருக்கும்.ஆனால் அப்படிச் செய்யாமல் எங்கிருந்தோ கிடைத்ததை அப்படியே கொடுத்திருக்கிறார்கள்.இப்படித்தான் தவறுகள் வருகின்றன.
அதுபோல் இதே பாடலைப் பாடிய நம் நாட்டுப் பாடகர்களில், சீர்காழி கோவிந்தராசனைத் தவிர, மற்றைய அனைவரும் தவறாகவே பாடி உள்ளார்கள்.இது வருத்தம் தரும் செய்தியாகும்.
ஆக எப்படி தவறு ஏற்பட்டது? இப்படி மருத்துவம், வரலாறு போன்ற பல, தங்கள் விருப்பப்படி கேள்விப்பட்டபடி,சில திறமையற்றவர்களால் அல்லது சரியான ஆதாரங்களைக் கண்டறியாது தொகுக்கப்படுவதால் தான் இந்த தவறுகள் ஏற்படுகின்றன.
தமிழக வரலாற்றுத் தகவல்கள் ஆங்கிலத்தில் இருந்து அப்படியே மொழி பெயர்க்கப்படுவதும்,சில சேர்க்கவும் படுகிறது. அதே சமயம் ஆதாரங்களுடன் தமிழக வரலாற்றுத் தகவல்கள் இருந்தாலும்,அவை சேர்க்கப்படுவதில்லை. இதற்கு விக்கிபீடியாவை குற்றம் சொல்ல முடியாது.
தொகுப்பவர்கள்,திருத்துபவர்கள் சரியாக செய்வதில்லை. உதாரணமாக இந்து சமயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள், ஆதாரங்கள் கிடைத்தாலும் திருத்த அவர்கள் மனது இடம் கொடுக்காது. உண்மையுடன் செயல்படுபவர்கள் திருத்த முயன்றால்,அதை அவர்கள் மீண்டும் மாற்றி விடுவார்கள்.
சமஸ்கிருதம் சேர்மானியக் குடும்ப மொழி என ஆதாரங்களுடன் ஆங்கிலத் தளங்கள் சொல்லியும் கூட,இந்திய மொழியாக வட மொழிக்கு வக்காலத்து வாங்கி, தமிழில் எழுதுபவர்கள் சிலர் பார்க்கிறார்கள்.
இந்திய வரலாறு என்றவுடன் கற்காலம் கி.மு.3300 எனத் தொடங்கி,சிந்துவெளி-மத்தியகால அரசு-வேத காலம்-இசுலாமிய அரசு- என வருமே தவிர, தமிழர் ஆட்சி எவையும் வர மாட்டாது.தமிழர் அரசை 2000 ற்குப் பின்னர் ஆரம்பிக்கிறார்கள்.அதைக் கூட களப்பிரயர் கால இருண்டகாலம் என மூடி மறைத்து விடுவார்கள்.இதை அப்படியே தமிழ் விக்கிபிடியாவும் செய்கிறது.
தமிழக வரலாற்று நூல்கள் அனைத்தும் பொய்யாகி விட்டதா? தமிழ் வரலாற்று நூல்களில் உள்ள ஆதாரங்களை படிக்காத ஆங்கிலேயர்,ஆங்கிலத்தில் தங்களுக்குத் தெரிந்ததை எழுதலாம். ஆனால் தமிழ் தெரிந்தவர்கள் அப்படியே மொழிபெயர்ப்பதா? ஆதாரங்களை சேர்க்கக் கூடாதா? ஆங்கிலேயர்,வெள்ளையர்கள் சொன்னால் எல்லாமே உண்மை என்றாகி விடுமா? இதுதான் தமிழர்கள் வரலாற்றிலும் நடந்தது. ஆரியர்களின் நிறம்.
இந்தியா,இலங்கை,தமிழ் நாடு இவற்றின் வரலாற்றுத் தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்தாலே பல தவறுகள் இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான வேத காலப் பண்பாட்டில் தோற்றம் பெற்றது என்று சொல்லும் போது, அதைக் கொண்டு வந்த ஆரியர்கள் எப்போது வந்தார்கள்?வியாசர் எப்போது வேதத்தை தொகுத்தார்? வியாசருக்கு முந்தைய வள்ளுவனுக்கு இந்தளவு முக்கியத்துவம் கிடையாதா? பல கேள்விகள்.
two main sub-genres of Indian classical music that evolved from ancient Hindu traditions; the other sub-genre being Hindustani music, which emerged as a distinct form because of Persian and Islamic influences in North India. மறைமுகமாக கர்நாடக இசை Hindu traditions என்றும்,வட இந்தியாவில் இருந்து வந்தது என்றும் எழுதப்படுகிறது. இதையே சிலர் சொல்லியும் வருகிறார்கள்.
இன்னும் சில ஒவ்வொரு மொழியிலும் வேறு விதமாக மொழிபெயர்க்கப்படுகிறது. உதாரணமாக கர்நாடக இசை பற்றிய தொகுப்பை ஆங்கிலம்,தமிழ்,சேர்மன்,பிரான்ஸ் மொழியில் படித்துப் பாருங்கள்.ஒவ்வொன்றும் வேறு விதமாக இருக்கும்.
ஆக மொத்தத்தில் தமிழில் தொகுப்பவர்கள், ஆங்கிலத்தை,சம்ஸ்கிருத வடமொழிகளை ஆதாரம் வைத்து தொகுக்குகிறார்கள்.வரலாற்று களஞ்சியமாக இருக்க வேண்டிய விக்கிபீடியா ஆதாரங்களின் அடிப்படையில் தொகுக்கப்படல் வேண்டுமே தவிர, உணர்வு பூர்வமாக மற்றவர்களை திருப்திப்படுத்த,மற்ற மொழிகளில் இருந்து அப்படியே தொகுக்கப்பட,திருத்தப்படக் கூடாது. இதை நம்மவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இலங்கை வரலாற்றை, சிங்களவர்கள் எழுதி -திருத்தும் மகாவம்சத்தை அடிப்படையாக கொள்ளலாமா? அதுபோல் தமிழர் வரலாறுகளை, இராமாயணத்தையும்,வட நாட்டு நூல்களையும் வைத்து எடை போடாது,உண்மையான ஆதாரங்களை வைத்து, விக்கிபீடியா போன்ற தளங்களில் நம்மவர்கள் எழுதித் தொகுக்க வேண்டும்.சில தொகுப்புகளுக்கு வேறு சில இணையத்தளங்களை ஆதாரமாக காட்டுகிறார்கள். ஆதாரமாகக் காட்டும் இணையத் தளங்கள் சரியான தகவல்களை கொண்டிருக்கிறதா?
விக்கிபீடியா எழுத்தாளர்கள், சினிமா நடிகர் நடிகைகளுக்கு கொடுக்கும் முன்னுரிமையை, பல நல்ல முக்கியமான விசயங்களுக்குக் கொடுக்கலாம்.அதன் மூலம் பலர் பயனடையலாம்.ஒருமுறை நடிகை/நடிகர் ஒருவரின் பக்கத்திற்கு சென்று பாருங்கள். எத்தனை ஆதாரங்கள்?
இதே போல் மருத்துவம் சம்பந்தமானவற்றில் பல தவறுகள் விக்கிபீடியாவில் இருந்ததை சமீபத்தில் மருத்துவத் துறை சார்ந்த ஆய்வாளர்கள் சுட்டிகாட்டி இருந்தார்கள். எனவே ஒரு விசயத்தை முற்றாக சரியாக தெரிந்து கொள்ள வேண்டுமாயின்,உடனே விக்கிபீடியாவை ஆதாரமாக எடுத்து விடாது, வேறு சிலவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
நல்லதொரு களஞ்சியத்தை பலர் உருவாக்கும் அதே சமயம்,சிலர் தவறுகளை, தவறு செய்யக் கூடாத இடங்களில் செய்யும் போது, வருத்தத்தையே கொடுக்கிறது.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: விக்கிபீடியாவை முற்றாக நம்பலாமா?
நல்லதொரு களஞ்சியத்தை பலர் உருவாக்கும் அதே சமயம்,சிலர் தவறுகளை, தவறு செய்யக் கூடாத இடங்களில் செய்யும் போது, வருத்தத்தையே கொடுக்கிறது.
Re: விக்கிபீடியாவை முற்றாக நம்பலாமா?
முற்றாக நம்பக்கூடாது...
-
ஒரே ஆறுதல்...
-
பதிவுகளில் குறைகள் சுட்டிக்காட்டினால்
திருத்துவார்கள்...
-
திறமை இருந்தால் நாமே புதிய
விஷயங்களை திருத்தமாகப் பதியலாம்...
-
-
ஒரே ஆறுதல்...
-
பதிவுகளில் குறைகள் சுட்டிக்காட்டினால்
திருத்துவார்கள்...
-
திறமை இருந்தால் நாமே புதிய
விஷயங்களை திருத்தமாகப் பதியலாம்...
-
rammalar- மன்ற ஆலோசகர்
- Posts : 99
Join date : 01/09/2011
Re: விக்கிபீடியாவை முற்றாக நம்பலாமா?
rammalar wrote:முற்றாக நம்பக்கூடாது...
-
ஒரே ஆறுதல்...
-
பதிவுகளில் குறைகள் சுட்டிக்காட்டினால்
திருத்துவார்கள்...
-
திறமை இருந்தால் நாமே புதிய
விஷயங்களை திருத்தமாகப் பதியலாம்...
-
Similar topics
» இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவை நாம் நம்பலாமா? நம்பக்கூடாது என்பது தான் நாம் அளிக்கும் பதில்! - ஈழவேந்தன்
» படங்களில் மாயாஜாலம் - உங்கள் கண்களை நீங்கள் நம்பலாமா ? (படங்கள் இணைப்பு)
» கணினியில் மென்பொருளை முற்றாக அழிப்பதில் சிரமமா?
» முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை முற்றாக நீக்க சில வழிகள்!
» காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி படையினரால் முற்றாக இடித்தழிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum