TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


“வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!”

5 posters

Go down

“வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!” Empty “வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!”

Post by Tamil Fri May 30, 2014 12:35 pm

தோல்வி வந்தபோதும் துவளாமல் இருக்கிறார் துரைமுருகன். தி.மு.க-வின் சோதனைக் காலமான இந்த நேரத்தில் துரைமுருகனிடம் பேசினேன்.
''இப்படித் தேர்தல் முடிவுகள் அமையும் என்று எதிர்பார்த்தீர்களா?''
''நிச்சயம் எதிர்பார்க்காத தோல்விதான். அதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எங்களைப் பிடிக்காத பத்திரிகைகள்கூட சில இடங்களில் நாங்கள் வெல்வோம் என்றே எழுதினார்கள். ஒன்றில்கூட வெல்ல முடியாதது ஏமாற்றமே.''
[You must be registered and logged in to see this image.]
''இந்தத் தோல்விக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?''
''ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். பணம் ஏராளமாகப் பாய்ந்தது என்றும் தோற்றால் பதவி இல்லாமல் போய்விடும் என்று மந்திரிகள்  மிரட்டப்பட்டதாகவும் அதனால் அவர்கள் செலவழித்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. சில இடங்களில் 500 ரூபாயும் சில இடங்களில் 1,000 ரூபாயும்  கொடுத்து அ.தி.மு.க. ஏற்படுத்திய பண அலையில்தான் வென்றுள்ளார்கள்.''  
''உங்களின் நண்பர் வைகோ தொடர்ந்து தோல்வியடைந்தே வருகிறாரே?''
''அவர் என்னுடன் படித்த நண்பர். தி.மு.க-வில் இருக்கும்போது, மிக நெருக்கமாக இருந்தார். என்னைப் பொறுத்தவரை தேர்தல் கூட்டணி அமைப்பதிலோ, கட்சியை நடத்துவதிலோ இன்னும் சாதுர்யம் வேண்டும். ஓடாத குதிரையின் மீது பணம் கட்டுவதிலேயே குறியாக இருக்கிறார். எங்கிருந்தாலும் என் பழைய நண்பர் என்பதால், அவரின் தோல்விக்காக அனுதாபப்படுகிறேன்.''
''பா.ஜ.க. ஆட்சி எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?''
''என்னைப் பொறுத்தவரை மத்தியிலோ, மாநிலத்திலோ ஆட்சிக்கு வரும் கட்சி பெரும்பான்மையுடன்தான் வர வேண்டும் என்று எண்ணுகிறேன். அப்படி இருந்தால்தான் சில காரியங்களை நினைத்தபடி செய்ய முடியும். மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் வந்து நாட்டிற்கு இழப்பு ஏற்படாமல், அவர்கள் ஆட்சிக்கு வந்தது நல்லதுதான். அவர்களின் போக்கு எப்படி இருக்கும் என்று போகப்போகத்தான் பார்க்க வேண்டும். பிரசாரக் கூட்டங்களில் இந்துத்துவாவை வலியுறுத்தவில்லை. இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள உத்தரப்பிரதேசத்தில் வென்றுள்ளார்கள். இது இஸ்லாமியர்களும் அவர்களுக்கு ஓட்டு அளித்துள்ளதைக் காட்டுகிறது. இதையெல்லாம் கணக்கிட்டு ஒரு மதச்சார்பற்ற ஆட்சியை மோடி நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன். மோடியின் அரசில் தலையிட மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ்-ஸும் தெரிவித்துள்ளது. அது உண்மையாக இருக்க வேண்டும்.''
''மீண்டும் தே.மு.தி.க. உங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று முயற்சி செய்தீர்கள். ஆனால் தே.மு.தி.க. ஓர் இடத்தில்கூட வெல்லவில்லையே?''
''அவரும் தோற்றுப்போய் உள்ளார். நாங்களும் தோற்றுப்போய்தான் உள்ளோம். அவரவர் அரசியலை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.''
''அழகிரி குறித்துக் கடுமையான கருத்துகள் தெரிவிக்காமல் இருந்த நீங்கள், ஸ்டாலின் ராஜினாமாவை ஒட்டி 'அழகிரி நாடகமாடுகிறார்’ என்று விமர்சித்துள்ளீர்களே?''
''நடப்பது நாடகம் என்று அவர் சொன்னார். அப்படியானால் அந்த நாடகத்தில் அவரும் ஒரு பாத்திரம் என்றுதான் சொன்னேன். அவரை விமர்சனமெல்லாம் செய்யவில்லை.''
''நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் மகனுக்கு சீட் கொடுக்காததால், நீங்கள் தலைமை மீது வருத்தத்தில் உள்ளதாகப் பேசப்படுகிறதே?''
''சீட் கேட்டது உண்மை, ஆனால் அந்தத் தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டது. எனவே தி.மு.க-வில் சீட் கேட்ட யாருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய்விட்டது. மேலும் தலைமைப் பொறுப்பில் இருப்பதால், தி.மு.க. எப்போதும் கூட்டணிக் கட்சிகளுக்குத்தான் முன்னுரிமை அளிக்கும் என்பது எனக்குத் தெரியும். எனவே வருந்துவதற்கு எந்தச் சூழலும் இல்லை.''
''ஈழப் பிரச்னைக்கு பாரதிய ஜனதா அரசில் தீர்வு கிடைக்கும் என்று சொல்லி ஓட்டு கேட்டார்கள்.[You must be registered and logged in to see this image.] ஆனால் அதற்கு நேர்மாறாக நிலைமை இருக்கிறதே?''
''இடிஅமீன் உகாண்டாவில் ஆட்சிக்கு வந்தவுடன் 'எனது நாட்டைச் சுரண்டும் இந்தியர்கள் அனைவரும் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்’ என்றான். அவர்கள் அனைவரும் குஜராத்தியினரும்கூட. உடனே தனி விமானங்களை அனுப்பி அத்தனை பேரையும் அழைத்து தண்டகாரண்யத்தில் குடியேற்றினார் மொரார்ஜி தேசாய். குஜராத்திகள் எங்கு இருந்தாலும் அவர்களுக்காக குஜராத்தியான தேசாயின் தசை துடித்ததைப்போல ஈழத் தமிழனுக்காக எங்கள் தசை துடிக்கிறது என்கிற நியாயத்தை மோடி உணர வேண்டும். தி.மு.க-வை விமர்சித்து பா.ஜ.க-விற்கு ஓட்டு கேட்டவர்களுக்குப் பரிசாக, ராஜபக்ஷேவை வரவழைத்துக் கரியைப் பூசியிருக்கிறது பாரதிய ஜனதா!''
- செந்தில்குமார், படங்கள் : ஆ.முத்துக்குமார்
 
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

“வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!” Empty Re: “வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!”

Post by sakthy Fri May 30, 2014 2:32 pm

மேலே உள்ளவற்றுக்கு கருத்து எழுதி என்ன பலன்?
போலி அரசியல் நடத்தி ஈழத் தமிழர்களுக்காக முதலைக் கண்ணீர் விடும் தி.மு.க. வை நமக்குத் தெரிந்திருந்தும்,ஒரு கோபம் தான்.

அது போல் இனப்படுகொலை செய்த ராஜபக்சே வருவதை, தமிழகத்தில் போலி அரசியல் நடத்தும் ஈனப் பிறவிகளான மேலே உள்ளவர்களும் ,இன உணர்வாளர்களும் எதிர்த்தார்கள்.

ஆனாலும் இன்றைய சூழலில் சில காய்களை நகர்த்த வேண்டிய கட்டாயம் சிலருக்கு உண்டு. காங்கிரஸ் போல் துணை போகாமல், ஈழத் தமிழர் நிலைமையை ஓரளவாவது சரிசெய்ய அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
வைகோ வை விமர்சிக்க இந்த மூட்டைப் பூச்சிக்கு தகுதி கிடையாது. ஒன்றாகப் படித்திருந்தால் போதுமா?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

“வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!” Empty Re: “வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!”

Post by krishnaamma Fri May 30, 2014 2:49 pm

வைகோ வை விமர்சிக்க இந்த மூட்டைப் பூச்சிக்கு தகுதி கிடையாது. ஒன்றாகப் படித்திருந்தால் போதுமா?
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

“வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!” Empty Re: “வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!”

Post by மாலதி Sun Jun 01, 2014 7:23 am

[You must be registered and logged in to see this image.]
வைகோ_வின் தோல்விக்காக பரிதாபாப்படுகிறேன் என்று "துரைமுருகன்" எனும் முன்னாள் சட்டமன்ற துரியோதனன் இந்த வார ஜீனியர் விகடனில் நக்கல் செய்திருக்கிறார்.................,

இவரின் "தொளபதி" 35 தொகுதிகளையும் இழந்து பூஜ்ஜியமாகி அறைக்குள் முடங்கி கிடக்கும் அவலட்சணத்தை பார்த்து ஊரே பரிதாபப்படுகிறது இந்த சூழலில் இவர் நம்மை பார்த்து பல்லிளிக்கிறார்........., இந்த பேத்தல் நாயகன் தன் மகனுக்காக வேலூர் தொகுதியை கேட்டு 157 மனுக்களை தாக்கல் செய்ய வைத்தும் சீட்டு கிடைக்காததால் கூட்டணி கட்சிக்கு உள்ளடி செய்ததை ஊரே அறியும்..,

காத்திருங்கள் துரைமுருகரே....., உங்களுக்கான "கட்டம் கட்டும்" நேரம் விரைவில் வரும் வரை....,

துரைமுருகரே....., இந்த வார ஜீனியர் விகடனில் உங்கள் இயக்கத்தின் தேர்தல் தோல்விக்காகவும் உங்கள் "தொளபதியாரின் ஆளை சொல்லு ரூலை சொல்கிறேன் என்ற ஸ்டாலின் சமஸ்தானத்தின்" தவறான வழிநடத்தலுக்கும் சேர்த்து ஒரு பரிதாப கட்டுரை வந்துள்ளது.., அதை படியுங்கள்....,

-----------------------------------------------------------------------------

ஆண்டொன்று கடக்க வயதொன்று குறையும் என்பதுதான் கருணாநிதியின் உளவியல் கணக்கு. ஒவ்வொரு ஜூன் 3-ம் தேதி அன்று தனது பிறந்தநாள் கொண்டாட்ட ஜுவாலையில் உற்சாகம் அடைந்து அடுத்த ஓராண்டை அசத்துவார் கருணாநிதி. ஆனால், இந்தப் பிறந்தநாளில் அசதி அடைந்துவிட்டார். நாடாளுமன்ற தேர்தல் தோல்வி, 91 வயது பூரிப்பை பெருமளவில் கொண்டாட முடியாமல் தடுத்துவிட்டது!

''என்னுடைய தலைவன் யார்? 1971-ம் ஆண்டு முதல் யார் இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்பதையும் குடியரசுத் தலைவர் மாளிகையில் யார் குடியேற வேண்டும் என்பதையும் நிர்ணயிக்கும் இடத்தில் இருப்பவன்'' என்று மேடைதோறும் கறுப்பு சிவப்பு கரை வேட்டிகள், தொண்டை கரையைக் கரையக் கத்தி வந்த நிலையில்... அவரைச் சட்டை செய்யவே தேவைப்படாமல் ஒரு தேர்தல் முடிந்துவிட்டது. 35 தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க ஒரு இடத்தில்கூட வெற்றியைப் பெறவில்லை. தி.மு.க இந்தத் தேர்தலில் வாங்கிய முட்டையை ஜெயலலிதாவின் அ.தி.மு.க 1996, 2004 ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாங்கியிருக்கிறார்கள் என்றாலும் இன்றைய தி.மு.க வாங்கிய வாக்குகளைக் கவனிக்கும்போது கவலைக்குரியதாக இருக்கிறது.

44.34 சதவிகித வாக்குகளை அ.தி.மு.க அள்ளியுள்ளது. தி.மு.க-வினால் 23.6 சதவிகித வாக்குகளையே வாங்க முடிந்துள்ளது. அதாவது பாதி அளவுக்குப் பரிதாபமாகப் போனது. தென் தமிழகத்தின் எல்லையான கன்னியாகுமரியிலும் வட தமிழகத்தின் ஓரமான புதுச்சேரியிலும் தி.மு.க வேட்பாளர்கள் நான்காவது இடத்துக்கு தலைகுப்புறத் தள்ளப்பட்டார்கள். விருதுநகர், ஈரோடு, தர்மபுரி, பொள்ளாச்சி, திருப்பூர், வேலூர், கோவை ஆகிய ஏழு தொகுதியிலும் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர்கள் மூன்றாவது இடத்துக்குப் போய்விட்டார்கள். தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-க்கும் தான் போட்டி என்று பீத்திக் கொண்டதுகூட இந்த ஒன்பது தொகுதியில் பணால் ஆகிவிட்டது. இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைக்கூட இந்த ஒன்பது தொகுதிகளில் பெற முடியவில்லை.

இந்தக் கணக்கை சட்டமன்றத் தொகுதி வாரியாக பிரித்துப் பார்த்தால் இன்னும் கேவலம். 234 சட்டமன்றத் தொகுதிகளில் 217 தொகுதிகளில் அ.தி.மு.க கூடுதல் வாக்குகள் வாங்கியுள்ளது. அதாவது, இந்தத் தேர்தலையே சட்டமன்றத் தேர்தலாக கணக்கிட்டால், அ.தி.மு.க. 217 எம்.எல்.ஏ-க்கள் வென்றதாகப் பொருள். மீதம் உள்ள 17 தொகுதிகளையாவது தி.மு.க கைப்பற்றியிருக்கும் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். அந்த 17-ல் தி.மு.க நான்கே நான்கு தொகுதிகளில்தான் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது. திருவாரூர், பாளையங்கோட்டை, கூடலூர், ஆத்தூர் ஆகியவையே அந்த நான்கும். இதில் திருவாரூர் தொகுதி இருப்பதுதான் கருணாநிதியின் 91-வது பிறந்தநாள் நேரத்து மகிழ்ச்சிக்கு உரியது. இதுவரை தான் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோற்காதவர் என்ற பெருமை கருணாநிதிக்கு உண்டு. அதனை கருணாநிதி தக்க வைத்துக்கொண்டுவிட்டார். ஆனால் ஸ்டாலின், இப்போது எம்.எல்.ஏ-வாக இருக்கும் கொளத்தூர் தொகுதியில் அவரை அ.தி.மு.க முந்திவிட்டது. தோல்வி முகமே அங்கும் இன்னுமொரு கவலைக்குரிய புள்ளி விவரம்... 54 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தை பாரதிய ஜனதாவும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க ஆகியவை கைப்பற்றி உள்ளன. இதுதான் இன்றைய யதார்த்தம்.
மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்ட துயரம் காரணமாகத்தான் ஜூன் 3-ம் தேதி பிறந்தநாளுக்கு முன்னதாக 2-ம் தேதி தி.மு.க-வின் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டியிருக்கிறார் கருணாநிதி. 'நான் புல்டோசர். நினைச்சா நசுக்கிடுவேன்’ என்று 1992 காலகட்டத்தில் அன்றைய திருச்சி மாவட்ட தி.மு.க செயலாளரை மிரட்டிப் பணியவைக்கும் அளவுக்கு தைரியம் இருந்த கருணாநிதியால் இன்று என்ன செய்ய முடியும் என்பது தெரியவில்லை. ஆனால், நாம் எம்.எல்.ஏ ஆவோம், அமைச்சர் ஆவோம், முதலமைச்சர் ஆவோம், நம் குடும்பம் பணக்கார வரிசையை எட்டிப் பிடிக்கும் என்ற கற்பனை எல்லாம் இல்லாத காலத்தில் இருந்து அவர் வளர்த்த இயக்கம் இது. சட்டமன்றத்தில் மூன்றாவது... இரண்டாவது... முதலாவது என முன்னேறி இன்று... இரண்டாவது... மூன்றாவது... நான்காவது என பின்னோக்கிப் போவதைத் தன் கண் முன்னாலேயே கருணாநிதி பார்க்கும் வேதனையின் அளவுகோல் கருணாநிதிக்கு மட்டும்தான் புரியும். தேர்தல் தோல்விக்குப் பிறகு வாக்காளர்களை விமர்சித்து அறிக்கைவிடும் கருணாநிதி, இந்தமுறை அடக்கி வாசிப்பது இதனால்தான். பிரச்னை மக்களிடம் இல்லை, கட்சியில் இருக்கிறது என்பதை உணர்ந்ததால்தான் இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தப் பின்னடைவுக்குக் காரணம் கருணாநிதி அல்ல. அவருக்கும் இந்தத் தோல்விக்கும்... ஏன் இந்தத் தேர்தலுக்கும்... இன்னும் ஆழமாய் உணர்ந்தவர்களுக்குத் தெரியும். தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலுக்குமே கருணாநிதியைக் காரணம் காட்ட முடியாது. 'எல்லாம் நானே’ என்று இருந்த கருணாநிதி, தானே தன்னந்தனியேதான் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இருந்தார். ஆனாலும் பேசிய வாய் சும்மா இருக்கவில்லை. சில ஊர்களில் பேசினார். பல ஊர்களுக்குப் போகவில்லை. தேர்தல் முடிவைக் கேட்டு திடுக்கிட்டுப்போனார். லாபம் பார்த்துக் கொடுப்பான் மகன், என்று காத்திருந்தார். முதலும் போய்விட்டதால் முழிக்கிறார் கருணாநிதி. காரணம் மகன் ஸ்டாலினைத் தவிர வேறு யாராக இருந்தாலும் தேர் காலில் நசுக்கியிருப்பார். ஆனால் தேர் அவர் வசம் இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளவே இந்தக் கூட்டம் பயன்படும்.

கூட்டணி பேசியது முதல், வேட்பாளர்களை தேர்வு செய்தது வரை, ஊர் ஊராகப் போனது முதல் தேர்தல் செலவுகளைக் கணக்கு வைத்தது வரை அனைத்திலும் ஸ்டாலின் ஆட்சியே நடந்தது. தான் மட்டுமே நடத்தும் தேர்தல் என்றும் நிரூபிக்கத் துடித்தார். எனவே விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர் ஸ்டாலின்தான். இதை ஸ்டாலினே உணர்ந்ததால்தான், வருத்த மிகுதியால் தான் வகித்து வந்த கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகும் கடிதத்தை எழுதினார். இந்தத் தேர்தல் தோல்வியை யார் அழுது புரண்டாலும் திருத்தி எழுத முடியாது. ஆனால், இனி தோற்காமல் இருப்பதற்கான பாதையில் பயணப்பட ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என்பதே இன்றைய சந்தேகம்.

மாவட்டச் செயலாளர்கள் என்ற இரும்புத் திரையை இடித்து நொறுக்காத வரை ஸ்டாலினின் தோல்விகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஏனென்றால், தோல்வியைத் தழுவிய வேட்பாளர்கள் அனைவரும் ஸ்டாலின் ஆதரவு மாவட்டச் செயலாளர்களின் மனப்பூர்வ ஆசீர்வாதத்தால் வேட்பாளர்களாக ஆக்கப்பட்டவர்கள். யாரை நிறுத்தினால் கட்சி ஜெயிக்கும், யாருக்கு இந்தத் தொகுதியில் செல்வாக்கு என்றெல்லாம் பார்க்காமல், யார் தன்னை மீறி வளரமாட்டாரோ அவரை வேட்பாளராக இந்த மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரை செய்தார்கள். கட்சியை வளர்க்க யார் பயன்படுவார் என்று பார்க்காமல் தன்னுடைய தோளுக்கு மேல் யார் வளராமல் இருப்பார்களோ அவர்களை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வந்ததன் விளைவு இது.
மதுரை விமான நிலையம் தொடங்கி குமரி கடல்வரையிலான நான்கு நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக எந்தப் புத்திசாலியும் போடமாட்டான். ஒரு நிமிடம் யோசித்திருந்தால் பெரும் பிழையை உணர்ந்திருக்க முடியும். மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்பதற்காக கட்சியிலேயே உறுப்பினர்களாக இல்லாதவர்களை, '20 கோடி செலவு செய்வீர்களா?! என்ற ஒரே ஒரு தகுதியை மட்டுமே பார்த்து வேட்பாளர் ஆக்கினார் ஸ்டாலின். விருதுநகர் ரத்தினவேலுவுக்கும் நெல்லை தேவதாச சுந்தரத்துக்கும் ஜெயித்தாலும் ஒன்றுதான். தோற்றாலும் ஒன்றுதான். பணம் போனதற்காக வேண்டுமானால் வருத்தப்படலாம். கட்சி தோற்றதற்கான கஷ்டம் அதைவிடக் குறைவாகத்தான் இருக்கும். கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் கருப்பசாமிப் பாண்டியனும் அழைத்து வருபவர்களுக்குக் கண்ணை மூடிக்கொண்டு வேட்பாளர் ஆக்குவேன் என்றால், அவர்கள் இருவரைத் தவிர மாவட்டத்தில் வேறு யாரும் வேண்டாமா?

அந்த இரண்டு பேரை எதிர்த்துத்தான் தி.மு.க 30 ஆண்டு காலம் அந்த மாவட்டத்தில் வளர்ந்தது. கார்டன் கதவுகள் மூடப்பட்ட நிலையில் அவர்களுக்கு அறிவாலயம் அடைக்கலம் கொடுத்தது. தவறு இல்லை. மாவட்டச் செயலாளர்கள் ஆனார்கள். அது அவர்களது திறமைக்கு கிடைத்த பரிசாகவும் இருக்கலாம். அதற்காக, மூடிய கதவுக்குப் பின்னால் தளபதியுடன் அவர்கள் பேசிக்கொண்டு இருக்க மூன்று மணிநேரம் வெளியில் காத்திருக்க வேண்டுமா மற்றவர்கள்? வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பவர்கள் அழகிரி கோஷ்டி அல்ல. அவர்களும் ஸ்டாலின் கோஷ்டிதான். ஸ்டாலின் ஒழிக என்று சொல்பவர்கள் அல்ல. கழகத் தொண்டன் கேட்பது, 'எங்களது மாவட்டச் செயலாளர்களின் அடக்குமுறையைத்தான் எதிர்க்கிறோமே தவிர, தளபதியை அல்ல. ஆனால் அவர் மாவட்டச் செயலாளர்களின் விரோதிகள் அனைவரையும் தன்னுடைய விரோதியாகப் பார்க்கிறார்’ என்பதுதான்.
இதனால்தான் மாவட்டச் செயலாளர் பரிந்துரைத்த வேட்பாளருக்கு வேலை பார்க்காமல் தொண்டன் சுணக்கம் காட்டினான். 'உதயசூரியன் சின்னம் இந்தத் தொகுதியில் நிற்கிறது’ என்ற சிந்தனையே கழகத் தொண்டனுக்கு இல்லாமல் போய் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆணவ எண்ணம் கொண்டவர்களாக நடந்துகொண்ட அமைச்சர்கள், மமதையுடன் செயல்படும் மாவட்டச் செயலாளர்களின் ஏஜெண்டுகளாக வேட்பாளர்களை உண்மைத் தொண்டர்கள் உணர்ந்ததால்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சொந்தக் கட்சிக்காரர்களின் உழைப்பையும் இந்தத் தேர்தலில் சொந்தக் கட்சிக்காரர்களின் வாக்குகளையும் இழந்தது தி.மு.க. இதனை ஸ்டாலின்தான் சரி செய்ய வேண்டும்.

இதே ஆட்களை மாவட்டச் செயலாளர்களாக வைத்திருந்தால், சட்டமன்றத் தேர்தலிலும் வேட்பாளர் தேர்வு இப்படித்தான் இருக்கும். இன்னின்னார் வென்று வந்தால் நம் மாவட்டத்தில் அவர்கள் அமைச்சராக்கப்படக் கூடும் என்பதால் ஆரம்பத்திலேயே கட்டையைப் போட்டு தடுப்பார்கள். மாவட்டங்களில், தொகுதிகளில் செல்வாக்கான நபர்கள் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும். இதே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது இடத்துக்கு சட்டமன்றத் தேர்தலிலும் போனால் பாதிப்பு கருணாநிதிக்கு அல்ல. அவர் ஐந்து முறை ஆண்டு களைத்துப் போனவர். ஸ்டாலினால் ஒருமுறைகூட இன்னும் உட்கார முடியவில்லை. எட்டாக்கனியாக மாறிவிட்டது முதல்வர் பதவி. சில மாவட்டச் செயலாளர்களுக்காக தன்னுடைய லட்சியத்தை பலி கொடுக்கப் போகிறாரா ஸ்டாலின்?
அசைக்க முடியாத இரும்பு மனிதர்கள் அல்ல இவர்கள். ஜெயலலிதா முதல்வர் ஆகி மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகும், அவரை விமர்சித்து ஒருவார்த்தைகூடப் பேசாத மாவட்டச் செயலாளர்கள் இந்தக் கட்சியில் இருக்கிறார்கள். அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்களோடு அன்கோ போட்டவர்களும் உண்டு. இன்றைய அமைச்சர்களுடன் ரகசியத் தொடர்பு கொண்டவர்களும் உண்டு. இவர்கள் மீது கைவைப்பதால் எதுவும் நடக்காது. அவ்வளவு செல்வாக்கு படைத்தவர்கள் என்றால், தலைமைக் கழகத்துக்கு கொண்டு வந்து அவர்களது தகுதியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று இருக்கும் மாவட்டச் செயலாளர்களைவிட மிக மிக அதிக நெருக்கமாக ஸ்டாலினுக்கு இருந்தவர் திருவள்ளூர் இ.ஏ.பி. சிவாஜி. நம்பர் டூ என்று பெயர் எடுத்த அவரை எங்கே காணோம்? அவர் மீது ஒரு புகார் சொல்லப்பட்டதும் உடனடியாக தூக்கி எறிந்தவர் ஸ்டாலின்.
'ஒருவர் மூன்று முறைக்கு மேல் மாவட்டச் செயலாளராக இருக்கக் கூடாது’ என்று கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு சொன்னவர் ஸ்டாலின்தான். முன்வரிசையில் இருந்த வீரபாண்டி ஆறுமுகம், 'இது தலைமைக்கும் பொருந்துமா?’ என்று கேட்டார். அனைவரும் கப்சிப் ஆனார்கள். 'வீரபாண்டி ஆறுமுகத்தை தூக்குவதற்காகத்தான் தளபதி இதைச் சொன்னார்’ என்று அப்போது சொன்னார்கள். 'இல்லை, உண்மையில் நான் வளர்ச்சிக்குத்தான் சொன்னேன்’ என்றால் அதே அஸ்திரத்தை இப்போது ஸ்டாலின் எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் சுப.தங்கவேலனும், தூத்துக்குடி பெரியசாமியும், கடலூர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் மாவட்டச் செயலாளர் ஆகி இரண்டு மாமாங்கம் ஆகிவிட்டது. இவர்களுக்கு எதிர்த்த வீட்டில் ஒரு குழந்தை பிறந்து, அது பள்ளிக்கு போய், கல்லூரிக்கு போய், வேலைக்கு போய், திருமணம் முடித்து, குழந்தையைப் பெற்று... அவன் குழந்தை பள்ளிக்குப் போய்.... என்றாகிவிட்டது. ஆனால் கட்சியின் வாக்கு சதவிகிதம் 29-ல் இருந்து 23 ஆகிவருகிறது. சதவிகித கணக்கில் குறைவாகத் தெரியலாம். ஆனால், எத்தனையோ லட்சம் வாக்குகள் வித்தியாசம். சுப.தங்கவேலன், தனக்கு இணையான வயது கொண்டவரைக் கொண்டுவந்தார் வேட்பாளராக. தூத்துக்குடி பெரியசாமிக்கு அந்த சிரமமும் இல்லை. சட்டமன்றத் தேர்தலா மகள், நாடாளுமன்றத் தேர்தலா மகன். வாரிசுகளுக்கு இடமில்லை என்று துரைமுருகன் மகனுக்கு ஒரு நீதி என்றால் அந்த அளவுகோல் தூத்துக்குடியில் தூக்கிவீசப்பட்டது ஏன்? 'ஆளைச் சொல்லு ரூலைச் சொல்றேன்’ என்பார்கள். அப்படியா ஸ்டாலின் சமஸ்தானத்தில்?

அதே பொன்முடி, அதே வேலு, அதே நேரு, அதே ஐ.பி., அதே சுரேஷ்ராஜன், அதே பொங்கலூர், அதே என்.கே.கே.பி.ராஜா... என்று போனால், மற்றவர்கள் கொடி கட்டவும் கூட்டம் சேர்க்கவும் கோஷம் போடவும் மட்டும்தானா? காமராஜர் 'கே’ ப்ளான் போட்டது மாதிரி, 'எஸ்’ ப்ளான் போட்டால் மட்டுமே கட்சியைக் காப்பாற்றி தன்னையும் ஸ்டாலின் நிலை நிறுத்திக்கொள்ள முடியும். இவர்களிடம் தயவு தாட்சண்யம் காட்டினால், அவர் மீது பரிதாபப்படுவதற்கே ஆள் இல்லாமல் போய்விடும். இந்தத் தடையைத் தாண்டாமல் அவரால் இலக்கை அடைய முடியாது.
தோல்வி ஸ்டாலினுக்கு சில பாடங்களைக் கொடுத்துள்ளது. 'தி.மு.க-வில் இருக்கும் குடும்ப ஆதிக்கம்தான் தோல்விக்கு காரணம்’ என்று ஸ்டாலின் நிர்வாகிகளிடம் சொல்லி வருகிறார். தயாநிதியையும் அழகிரியையும் அமைச்சர் ஆக்கியபோதும் கனிமொழியை எம்.பி ஆக்கியபோதும் அவர் தடுத்திருக்க வேண்டும். காலம் கடந்து தனக்கு தலைவலி வந்தபிறகு இவர்களைத் தடுக்க நினைக்கிறார். இப்போது இவர்களது ஆதிக்கத்தைவிட, ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்தினரது நடமாட்டத்தைத்தான் முதலில் கட்டுப்படுத்த வேண்டும். கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் தொடங்கி, வேட்பாளர்களுக்கு பேசுவது வரை மருமகன் சபரீசன் காட்டும் பரபரப்பு பார்த்து, கட்சியில் என்ன பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதை ஸ்டாலின் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அனைத்து திருமண அழைப்பிதழ்களிலும் துர்கா ஸ்டாலின் படம் ஒரேவிதமான நீலநிற புடவையில் மின்னுவது, கட்சியின்
சட்டதிட்டக் குழுவின் அனுமதி பெற்றதா?

ஸ்டாலின் கட்சியை திருத்த நினைக்கிறாரா? மாற்ற நினைக்கிறாரா? ஏற்கெனவே, செம்மொழி மாநாட்டில் ஒரு மேடையை குடும்பம் ஆக்கிரமிப்பு செய்த செய்திதான் 2011 தோல்விக்கு அடித்தளம் அமைத்தது. அதன் பிறகும் திருச்சி மாநாட்டின் முன்வரிசையில் 'புதிய’ அதிகார மையங்களை அனுமதிக்கலாமா? அந்த முதல் இரண்டு வரிசையில் இருப்பவர்கள் யார் யார் என்று பெயரைச் சொல்லவாவது தி.மு.க உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களால் முடியுமா?

ஸ்டாலின் தனது தவறான பாதையை மாற்றிக்கொண்டால்தான் தலைமைப் பதவியை அடையவோ தக்கவைக்கவோ முடியும்
____________________________________________________


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

“வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!” Empty Re: “வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!”

Post by rammalar Sun Jun 01, 2014 5:36 pm

hmmm 
rammalar
rammalar
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 99
Join date : 01/09/2011

Back to top Go down

“வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!” Empty Re: “வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum