TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


'ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு!'' காரணங்களை அடுக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி

Go down

'ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு!'' காரணங்களை அடுக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி Empty 'ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு!'' காரணங்களை அடுக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி

Post by Tamil Wed May 28, 2014 1:20 pm

''மோடியின் மேடைப் பேச்சுக்களை நாம் உற்றுக் கவனித்தால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியப் பாரம்பரியத்தின் வேர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஊறிப்போய் இருப்பதை அதில் நாம் உணர முடியும்.  அந்த உணர்வுதான், சார்க் நாடுகளின் தலைவர்களை அவருடைய பதவியேற்புக்கு அழைக்க வைத்துள்ளது. இந்திய ரத்தத்தில் ஊறிப்போய் உள்ள பாரம்பரியப் பழக்கத்தின்படி விடுக்கப்பட்ட அழைப்பாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரனோடு தீராத பகை இருந்தாலும், நம் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைப்போம் அல்லவா? அதுபோன்றதுதான் இந்தச் செயல்.
 
[You must be registered and logged in to see this image.]
இந்த நிகழ்வால் பாகிஸ்தான், இலங்கை உடனான வெளியுறக் கொள்கைகள் அடியோடு மாறிவிடும் என்றோ அற்புதம் நிகழ்ந்துவிடும் என்றோ எதிர்பார்ப்பதிலும், இது மிகப்பெரிய ராஜதந்திர நடவடிக்கை என்று பாராட்டுவதிலும், எந்த அர்த்தமும் இல்லை. அப்படி எதுவும் நடந்துவிடவும் முடியாது. வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான முடிவுகள், இரு நாட்டுப் பிரச்னைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள், அதற்கான ஆலோசனைகள், திட்டங்கள் எல்லாம் முற்றிலும் வேறு முகம் கொண்டவை.
அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் ராஜபக்ஷேவின் வருகையை இவ்வளவு கடுமையாக எதிர்த்தது, இங்குள்ள தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்த நலன்களுக்கு விரோதமானது. இவர்கள் அனைவரும் தமிழர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்று உண்மையாக நினைத்திருந்தால், நிச்சயமாக அவ்வளவு கடுமையாக ராஜபக்ஷே வருகையை எதிர்த்திருக்க மாட்டார்கள்.  
தமிழக முதலமைச்சர் மற்றும் ஏனைய தமிழக அரசியல் கட்சிகளின் இந்த எதிர்ப்பு, அங்கு முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் தமிழர்களுக்கு இன்னும் மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். முள்வேலி முகாம்களுக்குள் இருக்கும் தமிழர்களை அங்கிருந்து வெளிக்கொண்டுவர வேண்டுமானால், அந்த நாட்டில் தனி மெஜாரிட்டியுடன் இருக்கும் ராஜபக்ஷேவோடு நீங்கள் சுமுக [You must be registered and logged in to see this image.]உறவை வளர்த்தால் மட்டுமே சாத்தியம். அப்படிப்பட்ட உறவை ஏற்படுத்த, இதுபோன்ற சமயங்களில் இவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து எதிர்ப்பதும் கோஷம் போடுவதும் கொடும்பாவி எரிப்பதும் கட்சிக்கு ஆள் சேர்க்கத்தான் பயன்படுமே தவிர, இலங்கைத் தமிழர்களின் நலனுக்கு உதவாது. இன்றும் இலங்கையில் கொழும்பு உள்பட முக்கியமான நகரங்களில் வாணிபம் செய்துகொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள். அது இங்குள்ள அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்டச் சூழலில் இவர்கள் தெரிவிக்கும்  எதிர்ப்பு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, யாரும் சிந்திப்பது இல்லை.
இன்றுள்ள உலக அரசியல் சூழலில் இந்திரா காந்தி பங்களாதேஷில் செய்த போர் அரசியலை செய்ய முடியாது. நம்மால் மட்டுமல்ல... அமெரிக்காவால்கூட அப்படிச் செய்ய முடியாது. அதனால்தான் சிரியா, லிபியா, உக்ரைன், வட கொரியா விவகாரத்தில் அமெரிக்கா அடக்கி வாசிக்கிறது. அதுபோல், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்தியது போன்ற போராளி இயக்கத்தை இனிமேல் எந்த நாட்டிலும் யாரும் நடத்த முடியாது. இதை எல்லாம் நன்றாக யோசித்துப் புரிந்துகொண்டு, தங்களின் அடிப்படையான அரசியல் நிலைப்பாட்டை தமிழக அரசியல் கட்சிகள் மாற்றி அமைக்க வேண்டும்.
மேலும், தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னை மட்டுமே தமிழகத்தின் பிரச்னை அல்ல. இங்குள்ள பல பிரச்னைகளில் அதுவும் ஒரு பிரச்னை.  அதைப் புரிந்துகொள்ளாமல், ராஜபக்ஷேவின் வருகையைக் காரணம் காட்டி, வலுவான பிரதமராக உருவெடுத்து இருக்கும் மோடியின் அழைப்பை நிராகரித்ததன் மூலம், தமிழகத்தின் நலனையும் இவர்கள் நிராகரித்துள்ளனர். ஏனென்றால், தமிழகத்தின் தயவில் மத்திய அமைச்சரவை நடந்துகொண்டிருந்தபோது, இவர்களில் 12 பேர் அங்கு அமைச்சர்களாக இருந்தபோதே, தமிழகத்துக்கு ஒரு நன்மையும் நடக்கவில்லை. இப்போது தொடக்கத்திலேயே மத்திய அரசை அவமதித்துவிட்டு, எந்த முகத்தோடு தமிழகத்துக்குத் தேவையான திட்டங்கள், நிதியுதவி ஆகியவற்றைப் போய் கேட்பார்கள்? மத்திய அரசோடு சுமுக உறவு, அண்டை நாடுகளோடு இணக்கமான போக்கு ஆகியவற்றை வளர்க்க இவர்கள் முன்வர வேண்டும். அதுவே தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும்.'' -  தீர்க்கமாக சொல்கிறார் கர்னல் ஹரிஹரன்.
ஜோ.ஸ்டாலின்
விகடன் 
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum