Latest topics
» பொன்மொழிகள்!!by Venkat prasad Wed Oct 28, 2020 7:51 pm
» கோபுர எண்கள்
by Venkat prasad Sun Oct 25, 2020 9:36 pm
» நன்றி தெரிவித்தல்
by Venkat prasad Sat Oct 24, 2020 8:13 pm
» புதிய அறிமுகம்
by Venkat prasad Sat Oct 24, 2020 7:59 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun May 28, 2017 8:39 am
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:56 pm
» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 7:21 pm
» தாய் தந்தை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat May 13, 2017 12:32 pm
» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:49 am
» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 6:32 pm
» நீ இல்லையேல் கவிதையில்லை
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 12:23 pm
» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
by velang Thu May 04, 2017 8:27 am
» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
by கவிப்புயல் இனியவன் Tue May 02, 2017 8:18 pm
» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon May 01, 2017 7:42 am
» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 1:46 pm
» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
by velang Fri Apr 28, 2017 10:51 pm
» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
by velang Mon Apr 24, 2017 10:18 pm
» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட
by velang Thu Apr 20, 2017 7:53 am
» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன் Tue Apr 18, 2017 11:58 am
» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:59 am
» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.
by velang Sat Apr 15, 2017 10:28 pm
» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 7:13 pm
» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.
by velang Thu Apr 13, 2017 7:44 am
» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க
by velang Tue Apr 11, 2017 10:04 pm
» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:41 pm
» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்
by velang Fri Apr 07, 2017 10:30 pm
» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
by velang Thu Apr 06, 2017 9:41 pm
» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க
by velang Mon Apr 03, 2017 10:17 pm
» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க
by velang Thu Mar 30, 2017 9:25 pm
» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
by velang Wed Mar 29, 2017 8:25 am
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:42 am
» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:18 am
» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
by velang Wed Mar 22, 2017 10:09 pm
» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
by velang Tue Mar 21, 2017 9:48 pm
» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 8:47 pm
» வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள
by velang Sat Mar 18, 2017 9:30 pm
» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 5:23 pm
» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட
by velang Thu Mar 16, 2017 9:44 pm
» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட
by velang Wed Mar 15, 2017 9:41 pm
» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட
by velang Tue Mar 14, 2017 10:02 pm
பிரசவத்திற்கு பின் பெண்களின் ஆரோக்கியத்தை பேணுவதற்கான வழிகள்..
பிரசவத்திற்கு பின் பெண்களின் ஆரோக்கியத்தை பேணுவதற்கான வழிகள்..

ஒரு பெண் தாயாகும் போதுதான் முழுமை அடைகின்றாள். ஒவ்வொரு பெண்ணும் கருவுற்றிருக்கும் காலம் தொடங்கி பிரசவிக்கும் காலம் வரை பல இன்னல்களை சந்திக்கின்றனர். பிரசவம் முடிந்த பிறகு குழந்தை பராமரிப்பில் மட்டுமே கவனம் செலுத்த தொடங்குகின்றனர். தனது உடல் நலத்தை பற்றிய எண்ணத்தை தவிர்கின்றனர். இதனால், அவர்களது உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். ஆதலால், குழந்தையை பராமரிப்பதோடு அவர்களது உடல்நலத்திலும் ஈடுபாடு கொண்டு பராமரிக்கத் தொடங்கவேண்டும். பிரசவம் என்பது உடல்ரீதியாக ஏற்படக்கூடிய செயல்பாடு. அதனால், உங்கள் குழந்தை பிறந்த முதல் சிலநாட்களுக்கு உங்கள் உடல் மிகவும் பலகீனமாகவும் காயங்கள் குணமடைந்து வரும் காலமாகவும் இருக்கும். இந்த குணமடையும் காலத்தில் உடல்நலம், உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் தளர்ச்சி போன்றவை உங்களை பெரிதும் பாதிக்கக்கூடும்.
ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மற்றற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவமாகும். இருந்தாலும், உங்கள் உடலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு புணர்குழை எரிச்சல்கள் மற்றும் சிறுநீர் பிரச்சனைகள் போன்றவை உங்களை பெரிதும் பாதிக்கும். நீங்கள் கருவுற்றிருக்கும் போது உங்கள் உடலில் பலவகையான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அவை அனைத்தும் குழந்தை பிறந்த உடனே நின்றுவிடாது. குழந்தை பிறந்தவுடன் முதல் சில நாட்களுக்கு உங்கள் உடலில் எந்த பிரச்சனையும் இருக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். போதுமான ஓய்வு மற்றும் கட்டுபாடான டயட் போன்றவை மட்டுமல்லாது உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு உடல்நலத்தை பாதுகாக்கவேண்டும்.
கருவுற்றுக்கும் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் மருத்துவரின் ஆலோசனைப்படி தங்களது டயட்டில் கவனம் செலுத்துவார்கள். ஆனால், பிரசவத்திற்கு பிறகு எல்லா தாய்மார்களும் தங்களது உடல்நலத்தை புறக்கணித்து குழந்தையிடமே அதிக கவனம் செலுத்துவார்கள். அதனால் பிரசவத்திற்கு பிறகு நமது உடல் ஆரோக்கியத்திற்கும் குழந்தையின் நலத்திற்கும் தேவைப்படும் சில பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இதனை பின்பற்றுவதால் நீங்களும் உங்கள் குழந்தையும் சிறந்த ஆரோக்கியமான உடல்நலத்தை பெறுவீர்கள். இந்த பிரசவத்திற்கு பின் பின்பற்றப்படும் உடல்நல டிப்ஸ் உங்கள் மார்பகங்களையும் அறுவைசிகிச்சையினால் ஏற்பட்ட தையல்களையும் பாதுகாக்க உதவும்.
தொற்றுநோய்கள் வாராமல் இருப்பதற்கு பிறப்புறுப்புகள் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். ஒழுங்கான முறையில் கைகளை கழுவுதல் இதுதான் புதிய தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான பின்பற்றவேண்டிய பழக்கமாகும். இது மிகவும் எளிதான டிப்ஸ் என்றாலும் ஜுரம், ஜலதோஷம் மற்றும் வயற்று இன்பெக்ஷன் போன்றவைகள் வராமல் தடுக்கும். கைகளை கழுவதினால் வேலைகள் செய்யும் போது நமது கைகளில் வந்து சேரும் கிருமிகளை விரட்டும்.
கைகளை கழுவ வேண்டும் என்றவுடன் நம் மனதில் எழும் இரண்டு கேள்விகள் இவைதான் "எப்பொழுது கழுவவேண்டும்" மற்றும் "எப்படி கழுவவேண்டும்". சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், காயங்களுக்கு மருந்து தடவுவதற்கு முன்னும் பின்னும்,உங்கள் குழந்தையை தூக்குவதற்கு முன்பும், டயபரை மாற்றிய பின்பும் கைகளை கழுவவேண்டும். சோப்பு தடவி நன்றாக நுரை வரும்வரை தேய்க்கவேண்டும். சுமார் 20 நொடிகளுக்கு விரல்களின் நடுவே, நகங்களில் கீழே, கைகளின் பின்புறம்,மணிக்கட்டு போன்ற இடங்களில் கழுவவேண்டும். பின்னர், தண்ணீர் விட்டு நன்றாக கைகளை கழுவவேண்டும்.
பிரசவத்திற்கு பிறகு ஒவ்வொரு தாய்மாரும் உடல் பரிசோதனைக்கு வழக்கமான செல்லவேண்டும். பிரசவத்திற்கு பிறகு வஜினல் டியர் ஏற்பட்டிருந்தால், முதல் இரண்டு வாரங்களுக்கு அந்த இடத்தில் புண் ஏற்பட்டு வலி எடுக்கும். அந்த புண் ஆறுவதற்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். வீக்கம் குறைவதற்கு ப்ரோசன் பாட்களை உபயோகிக்கலாம். அதனை உங்கள் மாதவிடாய் பாட்களுக்கும் புண்ணிற்கும் நடுவே வைத்து உங்கள் பிறப்புறுப்பு பகுதியில் படுமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.
பிரசவத்திற்கு பின் தாய்மார்களுக்கு சிறுநீர் கோளாறுகள் ஏற்படுவது என்பது பொதுவான ஒன்றாகும். உங்கள் கருப்பையானது சிறுநீர்ப்பை மீது இறங்கிவிடும் இதனால் சிறுநீரை அடக்க முடியாமல் ஆகிவும். எனினும், சில நாட்களுக்கு பிறகு சிறிதாகி சுருங்கி விடும். நீங்கள் இரும்பும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் கசிவு ஏற்படும். இதற்கு நீங்கள் பிரஸ் பாட்களை உபயோகிக்கலாம். பல வாரங்களுக்கு பிறகும் இது நீடித்தால் டாக்டரை அணுகவேண்டும்.சிறுநீர்ப்பையில் உள்ள செதில்கள் வீக்கம் அடைந்ததால் சிறுநீர் கழிப்பது கடினமாக இருக்கும். பிரசவத்திற்கு பிறகு மிகவும் சிரமமாக இருக்கும். சிறுநீர் கழிக்கும் போது தொடர்ந்து எரிச்சல் மற்றும் வலி ஏற்பட்டால் சிறுநீர்ப்பை இன்பெக்ஷன் வரும் வாய்ப்பு அதிகமாகும். இந்த இன்பெக்ஷன் குறைவதற்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் அதிகமாக சிறுநீர் கழித்தால் இன்பெக்ஷன் குறையத் தொடங்கும். ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழித்த பிறகு அந்த பகுதியை தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்.
கழுவிய பிறகு காயவிட வேண்டும். இது உங்கள் இன்பெக்ஷன் மற்றும் வலியையையும் குறைக்கச் செய்யும்.சிறுநீர்கழிக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுவதால் பிறப்புறுப்பில் இருந்தும் சிறுநீர்ப்பையில் இருந்தும் பரவும் இன்பெக்ஷன்கள் தடுக்கப்படும். பிரசவத்திற்கு பிறகு சில வாரங்களுக்கு வஜினல் டிஸ்சார்ஜ் இருந்து கொண்டிருக்கும். உங்கள் பிறப்புறுப்பில் காய்ந்த இரத்தக்கறை இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இன்பெக்ஷன் வராமல் இருப்பதற்கு சானிடரி பாட்களை உபயோகிக்க வேண்டும்.
4 மணிநேரத்திற்கு ஒருமுறை பாட்களை மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை பாட்களை மாற்றும் போதும் சிறுநீர் கழிக்கும் போதும் உங்கள் பிறப்புறுப்பை முறையாக கவனிக்கவேண்டும். கெட்ட வாடை அடித்தாலோ அல்லது சிவந்து காணப்பட்டாலோ டாக்டரை அணுகவேண்டும்.அறுவைசிகிச்சை முறையில் பிரசவித்தால், தையல்களால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உங்கள் தையல்களும் பிறப்புறுப்பும் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் தையல்களிலும் வடுக்களிலும் இன்பெக்ஷன் வராமல் பராமரிக்க வேண்டும்.
குழந்தைக்கு பால் புகட்டிய பின்பு உங்கள் மார்பகங்களில் படிந்திருக்கும் உமிழ்நீரை கழுவ வேண்டும். உங்கள் பாலில் சிறிது எடுத்து மார்காம்புகளில் தடவி காய விடவும். இறுக்கமான உடைகளை தவிர்க்க வேண்டும். காற்று உள்ளே புகுவதற்கு ஏதுவான தளர்ந்த உடைகளையே அணிய வேண்டும். கதர் உள்ளாடைகளை அணிவதால் காயவைப்பதற்கு எளிதாகவும் கிருமிகள் வராமலும் இருக்கும். பிரஸ்ட் பாட்களை உபயோகிக்கலாம். மேலும் அவை நனைந்த பின்பு உடனே மாற்றி விடவும். ஏனெனில் அதில் கிருமிகள் வளருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பிளாஸ்டிக்காலான பேட்களை உபயோகிக்காதீர்கள். லனொலின் கிரீம்கள் மார்காம்பு புண்களுக்கான சிறந்த தீர்வு. பால் புகட்டுவதற்கு முன் இந்த கிரீமை கழுவவேண்டிய அவசியம் இல்லை. பிரசவத்திற்கு பிறகு ஒவ்வொரு தாய்மார்களும் உடல்நலப் பராமரிப்பு முறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உங்கள் உடல்நலம் சீக்கிரமாக குணமடைவதற்கு இந்த டிப்ஸ்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
Re: பிரசவத்திற்கு பின் பெண்களின் ஆரோக்கியத்தை பேணுவதற்கான வழிகள்..
பெண்களுக்கு மிகவும் பயன்தரும் தகவல்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|