Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நம் நாட்டில் தியாகத்துக்கு என்ன மரியாதை? சகாயம் ஐ.ஏ.எஸ் பேச்சு
Page 1 of 1

மனுஸ்ரீ பிலிம் இண்டர் நேஷனல் தயாரிப்பில் மனுக் கண்ணன் இயக்கியுள்ள படம் 'அங்குசம்'. காதலையும் வன்முறையையும் பிரதானமான கருப் பொருளாக்கி உருவாகி வரும் படங்கள் மத்தியில் 'தகவல் அறியும் சட்டம்' பற்றிய விழிப்புணர்வு நோக்கில் உருவாகியுள்ள முதல் தமிழ்ப்படம் தான் 'அங்குசம்'
ஆர்.கே.வி. ஸ்டுடியோ திரையரங்கில் 'அங்குசம்' திரையிடப்பட்டது. திரையீடு முடிந்த பிறகு புதுமை நிகழ்வாக அங்குசம் படக்குழுவினர் பெருமையுடன் வழங்கும் 'தெரிந்த வீரர்கள் தெரியாத விவரங்கள்', என்கிற இந்திய விடுதலை வீரர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பேடு வெளியீட்டு விழா நடந்தது.சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் இந் நூலினை வெளியிட்டார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பேசும் போது" இங்கே இந்த நூல் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். நேர்மையான கருத்தை இந்த சமூகத்தில் விதைக்க முடியுமா என்று மனுக்கண்ணன் கொண்டு வந்திருக்கிறார். அவரை நான் பாராட்டுகிறேன்.
லஞ்சம் என்பது எழைகளுக்கு எதிரானது பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் விரோதமானது தேசத்துக்கு தடையானது.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 சாதாரண மக்கள் கையில் கிடைத்துள்ள அசாதாரண ஆயுதம் என்று கருதுகிறேன். அதைப் பற்றி 'அங்குசம் 'படமெடுத்துள்ள இயக்குநர் மனுக்கண்ணன் நிச்சயம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். நம்நாட்டு தேச விடுதலைக்கு பாடுபட்டவர்களை நாம் எப்படி மதிக்கிறோம்? என்ன தெரிந்து கொண்டு இருக்கிறோம்.?
இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தாகத்தோடும் வேகத்தோடும் வருகிற இளைஞர்கள்,படைப்பாளிகள், முதியவர்கள் பலரை சந்தித்திருக்கிறேன்.
மதுரையில் நான் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது மனுநீதி நாள் அன்று திங்கள் கிழமை மக்களிடம் மனுக்கள் வாங்குவதுண்டு. பல ஊர்களிலிருந்து தொலை தூரத்திலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அப்படி ஒரு நாள் மதிய உணவு கூட உண்ணாமல் 3,4 மணிவரை வாங்கினேன். முடித்துவிட்டு வெளியே வந்த போது ஒரு 45 வயதுக்காரர் அழுக்குச்சட்டை கைலியுடன் வந்தார். 10 நாள் பட்டினி கிடந்த சோர்வுடன் இருந்தார். முன்பே வரவேண்டியதுதானே என்றேன். கூட்டமாக இருந்த து ஐயா என்றார். எங்கே இருந்தீர்கள் என்றேன். இங்குதான் இருந்தேன் என்றார். நீங்கள் யார் என்றேன்.நான் வ.உ.சி.யின் பேரன் என்றார். நான் அதிர்ந்தேன். நான் வ.உ.சி.யின் பேரன் என்றுசொல்ல வேண்டியதுதானே என்றேன். .. காவலர்கள் உள்ளே விடவில்லை என்றார். உனக்கு இங்கே நிற்க உரிமை வாங்கிக் கொடுத்தது என் பாட்டன்தான் என்று சொல்ல வேண்டியதுதானே?என்றேன்
என்ன செய்கிறீர்கள் என்றேன். அவ்வளவு வறுமையில் இருந்தார்.கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கிறோம்என்றார். அப்படி பெயிண்ட் அடித்ததில் கீழே விழுந்து சகோதரருக்கு அடிபட்டு காயமாகி முடியாமல் இருக்கிறார் உதவுங்கள் என்றார். திருமணம் கூட செய்யவில்லை. நான் உடனடியாக மதுரைமாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட உழவர் உணவகம் தொடங்க கடன் அனுமதித்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கினேன்.
வெள்ளையனுக்கு எதிராக சுதேசிக்கப்பல் விட்டவர் வ.உ.சி. இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர். கையிலும் காலிலும் விலங்குகள் போடப்பட்டு செக்கிழுத்தவர். அப்போது குடும்பத்தினர் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா? அவர் செக்கிழுக்கட்டும் கை கால் விலங்குகளை கழற்றி விட்டு இழுக்கச் செய்யுங்கள் என்பதுதான். அவரது குடும்பமே வக்கீல் குடும்பம். அவரது குடும்பத்துக்கு வந்த நிலையைப் பாருங்கள். இதுதான் தியாகிகளின் நிலைமை.என் தேசம் விடுதலை பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் மலர்ச்சி வளர்ச்சி என்று மார் தட்டுகிறோமே இதன் பலனை யார் அனுபவிக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில்என்ன ?
நான் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது மனுநீதி நாள் மக்களிடம் மனுக்கள் வாங்கியபோது உமாராணி என்கிற ஒரு பெண்மணி உதவி கேட்டார்.42 வயதிருக்கும்.என் தந்தையின் தகுதிக்கு ஏற்றமாதிரி உதவுங்கள் ஐயா என்றார். தந்தையின் தகுதி என்றால் உங்கள் தந்தை யார் என்றேன். அவர் பாண்டமங்கலம் தர்மலிங்கம் பிள்ளை என்றார். தர்மலிங்கம் பிள்ளை சுதந்திரப் போராட்டவீரர்.போராட்டத்தில் ஈடுபட்டதால் சொத்துகளை இழந்தவர்.
அவருக்கு உடனடியாக என்னால் உதவ முடியவில்லை. வட்டாட்சியரைக் கேட்டேன். முடியாது விதிகள் இல்லை என்றார். ஏன் என்றேன். சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுக்கு 25 வயது வரைதான் உதவித்தொகை கிடைக்கும் என்றார். அதுதான் சட்டம்? நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்களுக்கே உதவாத சட்டம் என்ன பெரிய சட்டம்? அதை மாற்ற வேண்டும் என்று போராடி தமிழக அரசு தலைமை செயலகத்துக்கு எழுதி கருத்துரு பெற்று சிறப்பு இனமாக கருதிட எழுதினேன். 5 ஆயிரம் பெற உதவினேன் ஐயா என்று உதவி கேட்ட உமாராணி இப்போது அண்ணா என்கிறார். என்னைப் பார்க்க சென்னை வருவதாகக் கூறினார். நானே நேரில் போய் அவரைப் பார்த்த போது அவருக்கு இரு கண்பார்வையும் போய்விட்டதை அறிந்த போது வேதனைப்பட்டேன்.
தேசத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தியாகிகள் வரலாறுகளை எடுத்துக் சொல்லுங்கள் இந்த தேசத்தில் 1999 --2005 ல் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் இது நம் உணவுக்கு பயிரிடும் விவசாயிகள் நிலை. நம் நாகரிகம் பண்பாட்டை காக்கும் நெசவாளர்கள் வறுமையில் இருக்கிறார்கள். கோ ஆப் டெக்ஸ் இயக்குநராக இருக்கிறேன்இப்போது கண்டாங்கி சேலை மீட்டுருவாக்கம் திட்டத்தை செய்கிறோம்.
மூன்று மாதங்களுக்கு முன் காரைக்குடி சென்றேன். அங்கு அவ்வளவு வறுமை. பல வீடுகளுக்கு கதவுகள் இல்லை.கதவுகள் போட முடியாத அளவுக்கு அவ்வளவு வறுமை. இங்கு என்ன இருக்கிறது எடுத்துச் செல்ல என்கிறார்கள். எவ்வளவு வேதனை? என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள்?. இந்தக் கேள்விக்கு பதில் தேடவும் கேள்வி எழுப்பவும் அங்குசம் உதவும்.'' இவ்வாறு சகாயம் ஐ.ஏ.எஸ் பேசினார்.
-விகடன்-

[You must be registered and logged in to see this image.]

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» கூட்டணியால் மரியாதை இழந்தேன்: வைகோ பேச்சு
» நாட்டில் பணவீக்கம் உயர்ந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: அமைச்சர் பேச்சு
» கிரானைட் கொள்ளை: சகாயம் அறிக்கையில் உள்ளது என்ன?
» என்ன நடக்கிறது நம் நாட்டில்?
» உலகில் எந்த நாட்டில் வசிக்கப் போகிறோமோ அந்த நாட்டில் நமக்கு ஆகும் செலவை துல்லியமாக கண்டுபிடிக்கலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum