TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இனி என்ன நடக்கும் இலங்கையில்? - பேராசிரியர் ராமு மணிவண்ணன்

Go down

இனி என்ன நடக்கும் இலங்கையில்? - பேராசிரியர் ராமு மணிவண்ணன் Empty இனி என்ன நடக்கும் இலங்கையில்? - பேராசிரியர் ராமு மணிவண்ணன்

Post by krishnaamma Fri Apr 25, 2014 7:06 am

இனி என்ன நடக்கும் இலங்கையில்? - பேராசிரியர் ராமு மணிவண்ணன்
இனி என்ன நடக்கும் இலங்கையில்? - பேராசிரியர் ராமு மணிவண்ணன் 10170877_752237364816262_7456283436470388178_n
24 04 2014

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறிவிட்ட சூழலில், உலகெங்கிலும் உள்ள முக்கியமான 16 தமிழ் அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து, உலக நாடுகளிடம் அவை மீதான தடையையும் கோரியிருக்கிறது இலங்கை அரசாங்கம்!
அத்துடன், இலங்கைக்குள் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றதாக நெடுங்கேணி பகுதியில் கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரைச் சுட்டுக் கொன்றிருக்கிறது. சர்வதேச அழுத்தங்கள் வெறும் பேச்சளவில் உருவானதுமே, இலங்கையில் இருக்கும் நிராயுதபாணி தமிழர்களையும் விதவிதமாக வதைக்கத் தொடங்கிவிட்டது இலங்கை அரசு. இது 2009-ம் ஆண்டுக்குப் பிந்தைய போராகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன், ஈழத் தமிழர் படு கொலைக்கான ஆதாரங்களை 'SRI LANKA: HIDING THE ELEPHANT' என்ற நூலில் 1,000 பக்கங்களுக்கு அடுக்கியிருக்கிறார்.
கடந்த மூன்று வருடங்களாக இலங்கை தொடர்பான ஐ.நா. அமர்வுக்குச் சென்று வரும் ராமு மணிவண்ணனிடம் பேசினேன்...
''நான் தொடர்ந்து ஈழத்துக்குச் சென்று வருபவன். கொத்துக்குண்டுகள் பற்றிய செய்திகள் வருவதற்கு முன்னரே, அதன் விளைவுகளை அங்கு நேரில் கண்டவன். ஆதலால், 2008-ம் ஆண்டு இறுதியில் இருந்தே இந்த நூலுக்கானத் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கிவிட்டேன். அப்போது முதல் இப்போது வரை இறுதிப் போரில் காணாமல்போன குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அந்தப் பயங்கரத்தின் நிழலையும் நிஜத்தையும் இந்த நூலில் தொகுத்திருக்கிறேன்.
இறுதிப் போரின் முடிவில் பிடிபட்ட இளம் பெண்களை, சுமார் 60 பேருந்துகளில் ஏற்றிச் சென்றது இலங்கை ராணுவம். அந்தப் பேருந்துகளோ, அதில் பிடித்துச் செல்லப்பட்டவர்களோ என்ன ஆனார்கள் என இன்று வரை தெரியவில்லை. இந்த மாபெரும் இனப்படுகொலையை, 'போர்க் குற்றம்’ என்றும், 'மனித உரிமை மீறல்’ என்றும் உலகம் விவாதித்துக்கொண்டிருந்த சமயத்தில், 'இல்லை; இது அப்பட்டமான இனப் படுகொலை’ என்று உலகுக்கு உணர்த்த, போர் நடந்த விதம், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கொல்லப்பட்ட மக்கள் என இந்த இன அழித்தொழிப்பு தொடர்பான முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் இந்த நூலில் தொகுத்திருக்கிறேன்.''
''இனிமேலாவது ஐ.நா. மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்குமா?''
''2009-ல் போர் முடிந்தபோது, இலங்கை அரசைப் பாராட்டி ஒரு தீர்மானத்தை இந்தியாவின் ஆதரவோடு நிறைவேற்றியது ஐ.நா. பின்னர், 2012-ம் ஆண்டு இலங்கை அரசே தன் பிரச்னைகளை விசாரித்துத் தீர்த்துக்கொள்ளும் விதத்தில், Lessons Learnt and Reconciliation Commission (L.L.R.C.)’ எனும் நல்லிணக்க ஆணைக் குழுவை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியது. 2013-ம் ஆண்டு L.L.R.C. விசாரணையிலும் மனித உரிமை தொடர்பான விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை என்று அறிவித்தது
ஐ.நா. பின்னர், ஐ.நா-வின் மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை, இலங்கைக்கே நேரடியாகச் சென்று சூழலை ஆராய்ந்து அறிக்கை கொடுத்தார். இப்போது (2014-ல்) சர்வதேச விசாரணை தேவை என, ஐ.நா. மனித உரிமை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஓர் இனப்படுகொலையை வேடிக்கை பார்த்த சர்வதேசச் சமூகம், தமிழர்களின் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்க ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஈழத் தமிழர் பிரச்னை, படிப்படியாக சர்வதேச சமூகத்தின் கைகளுக்குச் சென்றுவிட்டது. இந்தத் தீர்மானங்கள் இன்னும் வலுவாக வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஐ.நா. நடவடிக்கைகளால் நன்மையே இல்லை என்று சொல்லிவிட முடியாது!''
''ஆனால், இதுவரை வெளிவந்த ஐ.நா. அறிக்கைகள் போர்க்குற்றம், மனித உரிமை என்றுதான் பேசுகிறதே தவிர, எங்குமே இனப்படுகொலை என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்தவில்லையே?''
''போர் முடிந்த புதிதில் அயர்லாந்தில் நடந்த மக்கள் தீர்ப்பாயத்தில் போர்க்குற்றம், இனப்படுகொலை என்றுதான் பேசினார்கள். ஆனால் உறுதியான ஆதாரங்கள் வெளிவந்த பின்னர், ஜெர்மனியில் நடந்த மக்கள் தீர்ப்பாய மாநாட்டின் முடிவில் 'இலங்கையில் நடந்தது இனப்படுகொலை’ என்று அறிவித்தார்கள். இந்த நிலையில் நாம் ஐ.நா. தீர்மானத்தை இனப்படுகொலை என்று திட்டவட்டமாக வரையறுக்கப் போராட வேண்டுமே தவிர, 'ஐ.நா-வே வேண்டாம், அமெரிக்கா எந்த நன்மையும் செய்யாது’ என்று பிரச்னையைத் திசை திருப்புவது குழப்பும் வேலையாகப் படுகிறது. தொடர்ந்து போராடுவதன் மூலம் மட்டுமே சர்வதேசச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து, ஈழத் தமிழர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வினைப் பெற முடியும்.
செப்டம்பர் மாதத்தில் இருந்து இலங்கை மீதான விசாரணைக்குரிய ஆயத்தப் பணிகள் தொடங்கும் என நம்புகிறேன். இந்த விசாரணைகளுக்கு, இலங்கை அரசு உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்காவிட்டால், இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் வரும் என எதிர்பார்க்கலாம். ஐ.நா. போன்ற அமைப்புகளால் மட்டுமே அது சாத்தியமாகும்!''
''ஆனால், எண்ணெய் வளமோ, சுரண்டக்கூடிய வேறு வளங்களோ இல்லாத இலங்கை மீது அமெரிக்காவுக்கோ, மேற்கு உலகுக்கோ என்ன அக்கறை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?''
''தெற்கு ஆசியாவின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் பங்கு முக்கியமானது. ஆனால், ஆசியாவில் தன்னை ஒரு 'சூப்பர் பவர்’ ஆக நிறுத்திக்கொள்ள இந்தியா எதையுமே செய்யவில்லை. குறிப்பாக, இலங்கை விவகாரத்தைத் தவறான கண்ணோட்டத்துடன் அணுகுகிறது. 13-வது சட்டத் திருத்தத்தின் மூலம் ஈழத் தமிழர்களுக்கான குறைந்தபட்ச தீர்வைக்கூடப் பெற்றுக் கொடுக்காமல், 'அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தோம்... கழிப்பிடம் கட்டிக் கொடுத்தோம்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இலங்கையைத் தனது பிராந்திய நலன்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சீனா, இந்து மகா சமுத்திரம் முழுக்க தன் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.
என்னைப் பொறுத்தவரை அமெரிக்கா என்று இல்லை, ரஷ்யா, இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தாலும் அதை ஆதரிப்பேன். நமக்குத் தேவை நீதி. அது யார் மூலம் கிடைத்தால் என்ன?''
நன்றி. தமிழ் ஊடகங்கள்
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் நடந்தது இனப்படுகொலை புத்தகத்தால் ஜெனிவாவை அதிர வைத்த பேராசிரியர் மணிவண்ணன்
» இலங்கையில் நடக்கும் போட்டிக்கு தமிழக வீரர்களை அனுப்பிய அதிகாரிகள் சஸ்பென்ட்!
» ஈழத் தமிழர்களுக்கு இனி நாம் என்ன செய்யவேண்டும்? -பேராசிரியர் வி.மருதவாணன்
» கோர்ட்டில் என்ன நடக்கும்? அறிய ஜெ., ஆவல்
» தமிழக டோல்கேட்டுகளில் நடக்கும் கொடுமைகள்… தீர்வு என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum