Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன்:9 மணி நேரத்தில் மீட்பு
Page 1 of 1
ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன்:9 மணி நேரத்தில் மீட்பு
சேலம்
: சேலத்தில் ஐந்து லட்ச ரூபாய் கேட்டு கடத்திச் செல்லப்பட்ட
வெள்ளிப்பட்டறை அதிபர் மகனை, இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி
போலீசார் மீட்டனர். சிறுவனை கடத்திய ஐந்து பேரை கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தாக்லி மாவட்டம் ஜார்த்
கிராமத்தைச் சேர்ந்தவர் சிவாஜி(50). அவரது மனைவி கல்பனா(45). அவர்களுக்கு
ஸ்நேகா என்ற மகளும், சைலேஷ்(18), ரோகித்(14), வைபவ்(12) என்ற மூன்று
மகன்கள் உள்ளனர்.வெள்ளி தொழில் செய்து வரும் சிவாஜி, மகன் சைலேஷுடன் சேலம்
அருகே சேலத்தாம்பட்டியில் வசித்து வருகிறார். மனைவி மற்றும் பிற
குழந்தைகள் மகாராஷ்டிராவில் வசித்து வருகின்றனர். சிவாஜி,
அரியாக்கவுண்டம்பட்டியில் வெள்ளிக்கட்டிகளை உருக்கும் நிறுவனம் நடத்தி
வருகிறார்.சிவாஜியின் மகன் ரோகித்துக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. சில
நாட்களுக்கு முன்னர் அவன் சேலம் வந்தான்.
நேற்று பகலில் ரோகித், வெள்ளி உருக்கும்
இடத்துக்கு சென்றான். இரவு 7 மணியளவில் மொபெட்டில் வீட்டுக்கு
திரும்பினான். சேலத்தாம்பட்டி ஓடப்பகுதியில் ஒருவன், ரோகித்தின் மொபெட்டை
மறித்து லிப்ட் கேட்டான். ரோகித்தும் அந்த வாலிபரை மொபெட்டில் ஏற்றி
சூரமங்கலம் வந்தான்.சிறிது தூரத்தில் நான்கு வாலிபர்கள் ரோகித்தைச் சுற்றி
வளைத்து, கழுத்தில் கத்தி வைத்து கடத்திச் சென்று, ஒரு வீட்டில்
அடைத்தனர்.பிறகு, சிவாஜி மொபைல் போனில் பேசிய மர்ம நபர்கள், 'உனது மகனை
கடத்தி வைத்துள்ளோம். உயிருடன் வேண்டுமானால், ஐந்து லட்ச ரூபாய் கொடுக்க
வேண்டும்' என்று மிரட்டினர்.
அதிர்ச்சியடைந்த சிவாஜி, யாரிடமும் கூறாமல்
மீண்டும் போன் அழைப்பிற்காக காத்திருந்தார்.இரவு 11.30 மணிக்கு மீண்டும்
போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமிகள், 'பணம் ரெடியா, போலீசுக்கு
போனால் உன் மகனை கொன்று விடுவோம்' என்று மிரட்டினர்.பயந்து போன சிவாஜி,
'நான் போலீசிடம் போகவில்லை. இது பற்றி வேறு யாரிடமும் சொல்லமாட்டேன். எனது
மகன் உயிருடன் வேண்டும்; அவனை ஒன்றும் செய்து விடாதீர். தற்போது பணம் 2
லட்சம் தான் இருக்கிறது; அதை கொடுத்து விடுகிறேன்' என்றார். ஆனால் மர்ம
ஆசாமிகள், 'ஐந்து லட்ச ரூபாய் தான் வேண்டும். பணத்தை உடனே ரெடி செய்.
இல்லையெனில், உன் மகன் அவ்வளவு தான்' என்று கூறி ரோகித்தின் கையை பிளேடால்
கிழித்தனர். அவன் சத்தம் போட்டு அழுதான்.
அதை கேட்டு சிவாஜி, 'எனது மகனை ஒன்றும் செய்து
விட வேண்டாம்; பணம் ரெடி செய்து விடுகிறேன்' என்றார்.சிவாஜி, மர்ம
ஆசாமிகளை போலீசில் எப்படியும் பிடித்து கொடுத்து விட வேண்டும் என முடிவு
செய்து, சேலம் போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங்கிடம் தெரிவித்தார்.அவரது
உத்தரவின்படி துணை கமிஷனர் ஜான் நிக்கல்சன் தலைமையில் சிறுவனை மீட்க
நடவடிக்கை மேற்கொண்டனர். ரோகித்தின் தந்தை போல் சேலத்தாம்பட்டியைச்
சேர்ந்த பொன்மலை என்பவரை, மர்ம ஆசாமிகளுடன் பேச வைத்தனர். 'தளவாய்பட்டி
பள்ளி பின்புறம் உள்ள சுடுகாடு பகுதிக்கு ஐந்து லட்ச ரூபாயுடன் 1 மணிக்கு
வருமாறு' கூறினர்.அவர்கள் கூறியபடி அந்த இடத்திற்கு நள்ளிரவில் தனிப்படை
போலீசாரும், பொன்மலையும் சென்றனர். அப்பகுதி மக்கள் சிலரும் மறைந்து
நின்றனர். விடிய விடிய காத்திருந்தனர்.
அதிகாலை 4 மணி அளவில் மர்ம ஆசாமிகள்
ஒவ்வொருவராக சுடுகாட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களுடன்
சிறுவன் ரோகித்தும் அழுது கொண்டு வந்தான். அவர்கள், பொன்மலையை பார்த்து
பணம் ரெடியா என கேட்டனர். அவர், பணப்பையை தூக்கி காட்டினார்.மர்ம ஆசாமிகள்
அவரிடம் வந்து பணப்பையை வாங்கிக் கொண்டு சிறுவனை விட்டனர். அப்போது
மறைந்திருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள், மர்ம ஆசாமிகள் ஐந்து பேரை
சூழ்ந்து கொண்டனர். தப்பி ஓட முடியாமல் சேலத்தாம்பட்டியைச் சேர்ந்த
மணிகண்டன்(19), ராஜு(23) பெரியகவுண்டம்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி(20)
ஆகியோர் பிடிபட்டனர். இருவர் தப்பி ஓடினர்.பிடிபட்டவர்களிடம் நடத்திய
விசாரணையில், தப்பி ஓடிய இளம்பிள்ளையைச் சேர்ந்த சிவபிரகாசம்,
ஏழுமலையையும் போலீசார் பிடித்தனர். அவர்கள் பயன்படுத்திய மூன்று டூ
வீலர்களை பறிமுதல் செய்தனர்.
திட்டம் தீட்டினர் : ஒரு
வாரம் திட்டம் தீட்டி சிறுவனை கடத்தியதாக, கைதான சிவபிரகாசம், போலீஸ் உயர்
அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளான்.கடத்தல் தொடர்பாக கைதான சிவபிரகாசத்தை
போலீசார் விசாரித்ததில், சிறுவன் ரோகித் கோடை விடுமுறைக்கு ஊரில் இருந்து
வந்திருப்பதை அறிந்த சிவபிரகாசம், கூட்டாளிகளுடன் சேர்ந்து, சிறுவனை
கடத்தி பணம் பறிக்க திட்டம் போட்டான். மொபட்டில் வந்த சிறுவனை மடக்கி
கடத்திச் சென்ற பின், பணம் கேட்டு மிரட்டி உள்ளான் என்பதும் தெரிய
வந்தது.அவனுக்கு வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என விசாரிக்க கமிஷனர்
சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.
அடைத்து வைத்தது எங்கே?சிறுவன்
ரோகித் கூறியதாவது:மொபட்டில் சென்ற என்னை கடத்திச் சென்றனர். முதலில் ஒரு
வீட்டிலும், அடுத்து பால் பண்ணை அருகே உள்ள முனியப்பன் கோவில் பகுதியிலும்
அடைத்து வைத்தனர். கடத்திச் சென்றவர்கள் சாப்பிட ஏதும் தராமல், என்னை
அவ்வப்போது அடித்து, உதைத்து மிரட்டினர். தண்ணீர் கூட தரவில்லை. 'நீ
அழுதால் தான் உன் தந்தை பணம் தருவார்' எனக் கூறி பிளேடால் அறுத்தனர்.
கையில் ரத்தம் வந்ததால், வலி தாங்க முடியாமல் அழுதேன். இதை என் வாழ்நாளில்
மறக்க முடியாது.பொதுமக்கள் கோபம்: சிறுவனை கடத்திய ஐந்து பேரை போலீசார்
கைது செய்து, சேலம் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர். இதை
அறிந்த திரளான பொதுமக்கள், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.சிறுவனை
கடத்தியவர்களை பார்த்து, 'இவர்களை உயிருடன் விடாதீர்கள்; சுட்டுக்
கொல்லுங்கள், அப்போது தான் புத்தி வரும்' என ஆவேசமாக சத்தம் போட்டனர்.
அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி
அனுப்பினர்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ரூ.1 கோடி பணயத்தொகைக்காக கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு
» சிறுவன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
» இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு கடத்தப்பட்ட 589 நட்சத்திர ஆமைகள் மீட்பு
» சாவகச்சேரியில் கப்பம் கோரி கடத்தப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு _
» 68 நாள் போராட்டத்துக்குப் பிறகு சிலி சுரங்க மீட்பு பணி வெற்றி : முதல் நபர் பத்திரமாக மீட்பு
» சிறுவன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
» இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு கடத்தப்பட்ட 589 நட்சத்திர ஆமைகள் மீட்பு
» சாவகச்சேரியில் கப்பம் கோரி கடத்தப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு _
» 68 நாள் போராட்டத்துக்குப் பிறகு சிலி சுரங்க மீட்பு பணி வெற்றி : முதல் நபர் பத்திரமாக மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum