TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1

3 posters

Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1

Post by logu Fri Apr 18, 2014 10:07 pm

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Jokes1


நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.


பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.


வேலு : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.


பட்டைய கிளப்பும் பாக்கி : "நடிகையின் இடையைப் பார்த்தே வக்கீல் கேள்வி கேக்குறாரே, ஏன்?"
பேட்டை மாமா : "குறுக்கு விசாரணை பண்றாராம்".


டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?


வேலு : "ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது தப்பாப்போச்சு"
ரமனன் : "ஏன்?"
வேலு : "பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."


வேலு : எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க் இருக்காங்க . . .
கைப்பில்ல : இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
வேலு : நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.


வேலு : என் சொந்த ஊரு மதுரை. இப்பதான் திருச்சி வர்றேன். என் பேரு 'அங்கு ராஜ்'
பாக்கி : இங்கு என்ன பேர் வச்சிருக்கீங்க?
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty Re: கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1

Post by logu Fri Apr 18, 2014 10:08 pm

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Jokes1


கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Jokes4

அரசியல்வாதி 1 : கட்சியில எந்தத் தொண்டரும் சரியா வேலை செய்ய மாட்டேங்குறாங்க.
அரசியல்வாது 2 : அப்ப 'தொண்டர்கள்' னு சொல்லுங்க.


சர்வர் : முதலாளி சதாம் உசேன உங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கலாம் அதுக்காக போர்டுல இப்படியா எழுதறது.
முதலாளி : என்ன எழுதியிருக்கேன்?
சர்வர் : தயிர் சதாம் தக்காளி சதாம் லெமன் சதாம் ரெடி அப்படீன்னு எழுதியிருக்கீங்க.


பாக்கி : ஏன் சார் நீங்களோ வீணை வித்வான் பின்ன ஏன் குரல் சரியில்லைன்னு கச்சேரி வேணாண்டீங்க?
ரமனன் : நான் பாடிக்கிட்டே தான் வாசிப்பேன் அதனால தான்.


வேலு : கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா
பாக்கி : நீ என்னாவே....?
வேலு : காலியாயிருவேன்.


சிலுக்கு சீனி : "படம் சக்கைப்போடு போடுறமாதிரி ஒரு தலைப்பு சொல்லுங்க"
விச்சு : "கரும்பு".


ரமனன் : புத்தகக் கடைக்காரர்கிட்ட வம்பிழுத்தது தப்பாப் போச்சு.
வேலு : ஏன்?
ரமனன் : நல்லா புரட்டி எடுத்துட்டாரு.


டாக்டர் : அந்தப் பேசண்டுக்கு என் மேல கோபம் போல தெரியுது.
நர்ஸ் : எப்படிச் சொல்றீங்க ?
டாக்டர் : நாக்கை நீட்டச் சொன்னா, அந்த சாக்குல நாக்கைத் துருத்துறாரே.


வேலு : கைலி வியாபாரி எப்படி சிரிப்பாரு?
பாக்கி : கு'லுங்கி' கு'லுங்கி' த்தான்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி ஜோக்ஸ் 3

Post by logu Fri Apr 18, 2014 10:09 pm

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Jokes1


அவர் : வியாபாரத்துல என்னோட பிரதிபலிப்பு என் மகனிடமும் தெரியுது.
இவர் : என்ன வியாபாரத்துல?
அவர் : கண்ணாடி வியாபாரத்துல.


பாக்கி : வாக்கு மூலம் குடுக்கும்போது உட்கார முடியாது 
ரமனன் : ஏன்?
பாக்கி : அது வாக்கு 'மூலம்' ஆச்சே.


வேலு : "அங்கே என்ன பட்டிமன்றம்?"
விச்சு : "வீரப்பனா? அதிரடிப்படையா? ன்னு தான்.


வேலு : "என்னப்பா சர்வர் மெதுவடைல ஓட்டை இவ்வளவு பெரிசா இருக்கே."
பேட்டை மாமா : "நான்தான் சார் தவறுதலா கால் கட்டை விரலால ஓட்டை போட்டுட்டேன்"


நிருபர் : உங்க பேர்ல ரசிகர் மன்றம், நற்பணி மன்றம்னு வைக்கிறாங்களே, அது பத்தி என்ன நினைக்கிறீங்க?
நடிகை : அதைவிட என்பேர்ல நீதி 'மன்றம்' வச்சா ரொம்ப சந்தோசப்படுவேன்.


நண்பர் 1 : என்ன சார் ஸ்டூல் பாக்கவே வினோதமா இருக்கு.
நண்பர் 2 : இது ஸ்டூல் இல்ல மைசூர்பாகு சரியா வரல்ல. அதனால வீணா போக வேண்டாமேன்னு ஸ்டுலா பண்ணிட்டா யாராவது வந்தா உக்கார வச்சுக்கலாம் பாருங்க.


பாஸ்கி : புதுசா ஒரு சின்ன வீடு செட்டப் பண்ணலாம்னு இருக்கேன்.
ஜோதிடர் : அதுக்கு நான் என்ன பண்ணனும் ?
பாஸ்கி : வாஸ்து சாஸ்திரப்படி வயசு குறிச்சுக் குருத்தீங்கன்னா நல்லா இருக்கும்.


பாஸ்கி : அந்த ஹோட்டல் கோகோ கோலா ஃப்ரீ அப்படீன்னு போட்டிருந்தத பாத்துட்டு ஏமாந்துட்டேன்!
ஏன்?
பாக்கி : ஸ்ட்ராவுக்கு 10 ரூபா சார்ஜ் பண்ணிட்டாங்களே!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி ஜோக்ஸ் 4

Post by logu Fri Apr 18, 2014 10:09 pm

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Jokes1


கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Jokes5

நண்பர் 1 : என் - பையனுக்கு ராஜா-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சு 
நண்பர் 2 : ஏன் என்ன ஆச்சு ? 
நண்பர் 1 : எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான்


மனைவி : வேலைக்காரியை இனிமே வர வேண்டாம்னு சொன்னீங்களாமே,,,,,, அதைச் சொல்ல நீங்க யாரு ? 
கணவன் : அப்படினா வேலைக்கு சேர்த்துக்கலாம்ங்கறியா ? 
மனைவி : இல்ல ,,, நானே சொல்லிடறேன் இனிமே வராதேன்னு.


நண்பர் 1 : அந்த ஊர்ல நிறைய கடன் வாங்கினேன் அதனால இந்த ஊருக்கு வந்தேன். இங்கேயும் கடன் வாங்கறேன்.
நண்பர் 2 : இப்படி கடன் வாங்கறது சரியா சொல்லு?
நண்பர் 1 : நான் கேட்கும்போதெல்லாம் தர்றாங்களே அது மட்டும் சரியா சொல்லு.


கோபு : அதிரடி மெகா சீரியல் எடுக்கிறீங்களா... என்ன தலைப்பு ? 
பாபு : இதுவாடா முடியும்


வேலு : சட்டத்தை மாத்தணும்ங்கறதுல அவர் உறுதியா இருக்கார் .. .. 
பாக்கி : ஏன் .. .. .. ? 
வேலு : அவங்க வீட்ல எல்லா சட்டத்தையும் கரையான் அரிச்சிடுச்சாம் .. ..


பாக்கி : அதிக விலை கொடுத்து இந்த கார வாங்கறாரு. ஆனா அவருக்கு ஒண்ணுமே தெரியாது போலருக்கே.
வேலு : எத வச்சு சொல்ற?
பாக்கி : வண்டில ஸ்பீட் ப்ரேக் எங்கன்னு கேக்கறார்.


காதலி : நேற்று உங்க நண்பர் ராஜுவும் இதே ரோஜாவைக் கொடுத்துதான் ஐ லவ்யூ சொன்னார் 
காதலன் : தப்பு,, தப்பு அது வேற ரோஜாவா இருக்கும். இது இன்னிக்கு எங்க தோட்டத்தில் நானே பறிச்சது.


ரமனன் : எங்க வீட்டு நாய் செத்துப்போச்சு . . . என்னால ஜீரணிக்கவே முடியல்ல.
முராரி : அய்யய்ய நீங்க நாயெல்லாம் சாப்பிடுவீங்களா?
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி ஜோக்ஸ் 5

Post by logu Fri Apr 18, 2014 10:11 pm

வேலு : நேத்து பல்லே விலக்கலை .. .. 
ரமனன் : ஏன் .. .. 
வேலு : என் மனைவி பக்கத்திலே இருந்ததால் வாயே திறக்க முடியலை ..


கணவன் : நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு சொன்னான்,,, நீ ஏண்டி முழிக்கிறே ? 
மனைவி : அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறதை.


பாக்கி : நேற்று ஏன் லீவு ? 
ரமனன் : ஒரு சேஞ்சுக்கு வீட்டிலேயே தூங்கிட்டேன் சார்


கணவன் : "உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக தங்க நகைக்கு பதிலா வெங்கல நகை செஞ்சு போட்டா என்ன அர்த்தம்?"
மனைவி : "நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்."


வேலு : அந்த விமான விபத்து எப்படி நடந்தது ? 
பாக்கி : யரோ ஒரு பாராசூட் வீரர் விமானம் பறந்துகிட்டு இருந்தப்ப குறுக்க நின்னு லிஃப்ட் கேட்டாராம் .. ..


ரமனன் : சதா வாந்தி வருது டாக்டர் 
முராரி : சாதா வாந்தியா... ஸ்பெஷல் வாந்தியா


காதலன் : அன்பே ,,, இந்த கடற்கரை ,,, குளிர்ந்த காற்று தனிமை இதெல்லாம் என்ன தோண்றது ? 
காதலி : வாய்க்கு ருசியா சாப்பிட ஒரு சுண்டல்காரனைக்கூட காணலையேன்னு தோணுது ,,,


கோச் : அவ்வளவு ஊக்க மருந்து எடுத்துக்கிட்டும் எப்படி உன்னால ஓட்டப்பந்தயத்துல பதக்கம் எடுக்க முடியாம போச்சுன்னு தெரில்ல."
வீரர் : "அங்கதான் என்னோட புத்திசாலித்தனம் இருக்கு முதல்ல வந்திருந்தா நான் மருந்து எடுத்துக்கிட்டது தெரிஞ்சுருக்கும் அதனால கடைசியா வந்தா சந்தேகம் வராது பாருங்க."
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி ஜோக்ஸ் 6

Post by logu Fri Apr 18, 2014 10:12 pm

பாக்கி : என் மனைவியோடு ஹேhட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. . 
ரமனன் : என்னாச்சு ? 
பாக்கி : காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா


மனைவி : எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க .. .. ? 
கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு


மகன் : அப்பா உன்னால இருட்டுல எழுத முடியுமா? 
தந்தை : ஓ! முடியுமே 
மகன் : அப்ப என் ரேங்க் கார்ட்ல கையெழுத்துப் போடுங்க


நண்பர் 1 : எதுக்கு எல்லாப் பேஷண்டுகளும் ஜாலியா இருக்காங்க ? 
நண்பர் 2 : டாக்டர்கள் ஸ்டிரைக் ஆச்சே, அதான்


ரானி : போஸ்ட் மேனைக் காதலிக்கிறீயே... என்ன சொல்றார் ? 
வேனி : ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்கிறார்


பாக்கி : அந்த டாக்டர் போலின்னு எப்படிச் சொல்றே ? 
வேலு : சுகர் டெஸ்ட் பண்ண எவ்வளவுன்னு கேட்டா ஒரு கிலோ 20 ரூபாய்ங்கறாரே


நண்பர் : என்ன ஜோஸியரே, கிளிக் கூண்டு ரொம்பச் சின்னதாயிருக்கு ? 
ஜோசியர் : உள்ளே இருக்கிறது, வெட்டுக்கிளிங்க


மனைவி : உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . . 
கணவன் : வேற என்னதான் போட்ட?
மனைவி : பேசாம பட்டிணி போட்டேன்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி ஜோக்ஸ் 8

Post by logu Fri Apr 18, 2014 10:12 pm

நோயாளி : என்னது டி.டி.எஸ் ஆபரேஷன் தியேட்டர் திறந்திருக்கீங்களா..,,? 
டாக்டர் : ஆமாம், ஆபரேஷன் தியேட்டர்ஸ் டி.டி.எஸ் சவுண்ட் எஃபெக்ட் இருக்கு .. .. ..


மனைவி : நமக்கு கல்யாணம் முடிஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க 
கணவன் : எனக்கு மறந்து போச்சு 
மனைவி : இது கூடவா ? 
கணவன் : நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும். 


ரசிகர் : ஏழை குடும்பக் கதை படம்னு சொன்னீங்க படம் ஒரே செக்ஸியா இருக்கே ? 
இயக்குனர் : கதாநாயகி துணி வாங்கக்கூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க.. ..


ரமனன் : வெயிலுக்கு எங்கேயாவது வெளியூர் போகலாம்னு இருக்கேன். . 
வேலு : வெயிலுக்கா... அதுக்கு ஏண்டா வெளியூர் போறே ? சும்மா வெளியிலே போய் நில்லு... போதும்.. .


இன்ஸ்பெக்டர் : கொள்ளைக்கும்பல்ல டிரைவரா நடிச்சு தகவல்களை அனுப்பச் சொன்னா என்ன 6 மாசமா ஒரு தகவலும் உங்கிட்டேர்ந்து வரவே இல்ல?
போலிஸ் : இங்க எனக்கு நல்ல சம்பளம் கொடுத்து வீடெல்லாம் குடுத்து பாத்துக்கறாங்க அய்யா.


இயக்குனர் : படத்தோட முடிவுல ஹீரோவான நீங்க வில்லனா மாறிடறீங்க..,. 
நடிகர் : பேசின சம்பளத்தை உடனே தரல்லேன்னா இப்பவே வில்லனா மாறிடுவேன்


தயாரிப்பாளர் : முதல்வர்கிட்ட இல்லே .. .. .. இந்தப் பிரச்னையைப் பிரதமர்கிட்டேயே கொண்டுபோகப் போறேன். இன்னும் கால்வாசி படம் ஷூட்டிங் பாக்கியிருக்கு. அதுக்குள்ள முழுப்படமும் திருட்டு வி.சி.டி-ல் வந்துடுச்சு .. ..

காதலன் : கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன் ,,,,,, 
காதலி : அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ? 
காதலன் : உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி ஜோக்ஸ் 9

Post by logu Fri Apr 18, 2014 10:13 pm



நண்பர் 1 : என் பொண்ணோட கல்யாண விசிடியக்கூட பாக்கவிடமாட்டேன்றாங்க?
நண்பர் 2 : இதென்ன அக்ரமமா இருக்கு?
நண்பர் 1 : தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிதான் பாக்கணுமாம். இல்லாட்டா 3 வருஷம் சிறை தண்டனையாம்.


வேலு : வெறும் கையால் மின்சார கம்பிகளை நம்மால் தொட முடியுமா?
ரமனன் : ஓ, ஒரே ஒரு முறை தொடமுடியுமே!


பாக்கி : நம்ம படம் B அண்ட் உ-ல மட்டும் ஃபுல்லா ஒடுதுன்னீங்க .. .. பின்ன கலேக்ஷனே சரியில்லையே ? 
முராரி : B அண்ட் உ-னு நான் சொன்னது ஏரியா இல்லே சார் .. .. தியேட்டர் வரிசை


நண்பர் 1 : என்.டி. ராமாராவும் நாகேஸ்வரராவும் திருப்பதிக்கு ஒண்ணா எப்படிப் போவாங்க?
நண்பர் 2 : ராவோட ராவா.


நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.


நண்பர் : நீங்க எடுத்த சஸ்பென்ஸ் படங்கள்லேயே கடைசியா எடுத்ததுதான் ரொம்ப பயங்கர சஸ்பென்ஸ்னு சொல்றீங்களே .. .. ஏன் ? 
டைரக்டர் : கடைசிவரைக்கும் கதை என்னன்னு எனக்கே புரியலையே


முதல் நடிகை : அந்த நடிகர் தயாரிக்கிற படம்னா பணத்தை மொத்தமா கொடுப்பாரே .. .. .. அப்புறமும் ஏன் அலுத்துக்கறே ? 
இரண்டாம் நடிகை : எங்கே கொடுத்தார் .. .. ? முத்தமா இல்ல கொடுத்துத் தொலைச்சுட்டார்


மாலா : தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
கலா : ஏன்னா அதைத் தான் தோய்க்கிறாங்களே. அதுதான்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி ஜோக்ஸ் 10

Post by logu Fri Apr 18, 2014 10:14 pm

தாத்தா : நாய்க்கு ஒரு கால் இல்லைன்னா எப்படிக் கூப்பிடுவாங்க
பேரன் : நொண்டி நாய்ன்னு, மூணுகால் நாய்ன்னு கூப்பிடுவாங்க
தாத்தா : இல்ல... நய் ன்னு கூப்பிடுவாங்க.


டைரக்டர் : நூறு கெஸ்ட் நடிகர்கள் கிடைப்பாங்களா .. .. .. ? 
உதவியாளர் : எதுக்கு .. .. ? 
டைரக்டர் : மகாபாரதத்துல கௌரவர்களா நடிக்கத்தான்


பூஜா : அவர் ஏன் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிறார்?
ராஜா : அவருக்கு அடிக்கடி லைப்ரரி போற மாதிரி கனவு வருமாம்.


ரமனன் : ஃபைனான்ஸ் கம்பெனியில கடன் வாங்கித்தான் அந்தப் படத்தை எடுத்தாங்களாம் 
முராரி : அதான் .. .. படம் தியேட்டரைவிட்டு சீக்கிரமா ஒடிடுச்சு


நோயாளி : அதென்ன டாக்டர் சின்ன ஆப்பரேசன்?
டாக்டர் : கத்தி எடுக்காம நகத்தாலேயே கிழிச்சு ஆப்பரேசன் பண்ணுவேன்.


கிராமத்து ஆள்: இந்த ரூமுக்குத் தலைக்கு ஐம்பது ரூபாய் வாடகையா, சார்!
லாட்ஜ் மானேஜர்: ஒரு தலைக்கும் அதே வாடகை தான்: இராவணன் வந்து தங்கினாலும் அதே வாடகை தான்.


நண்பர் 1 : இந்திய ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறதே, எதனால் தெரியுமா?
நண்பர் 2 : ஏனாம்?
நண்பர் 1 : தீப கர்ப்பமா இருக்கிறதுனால.


நோயாளி : பல்லைப் பிடுங்கின அப்புறம் வலி இருக்குமா டாக்டர் .. .. .. ? 
டாக்டர் : பல்லைப் பிடுங்கின அப்புறம், அதுக்கு வலிச்சா உங்களுக்கு என்ன?
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி ஜோக்ஸ் 11

Post by logu Fri Apr 18, 2014 10:15 pm

கோபு : வெளியிலே வெயில்லே வந்தா உருகிடற மனுஷர் யாரு?
பாபு: தெரியாதே!
கோபு: பெருமாள் கோவில் பட்டர்.


நோயாளியின் மனைவி : என் கணவருக்கு டெம்பரேச்சர் பார்க்கறதுக்கு, என்னை எதுக்கு டாக்டர் வெளியே போகச் சொல்றீங்க .. .. ? 
டாக்டர் : அப்பத்தானே தர்மாமீட்டர் வைக்கறதுக்கு அவர் வாயைத் திறப்பாரு


தயாரிப்பாளர் : இதோ பாருங்க சார் .. .. கதையில கிராமத்து மண் வாசனை வீசணும்னு சொன்னது என்வோ உண்மைதான் .. .. அதுக்காக எழுதி கதையைப் புழுதியில் புரட்டியா தர்றது ?

நண்பர் 1 : உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?
நண்பர் 2 : அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்.


மாணவன் 1 : நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
மாணவன் 2 : யாரோ இங்கே தமிழாசிரியர் யாரு ன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.


குற்றவாளி : யுவர் ஆனர் .. .. 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது .. .. 
நீதிபதி : ஆமா .. .. 
குற்றவாளி : அப்படித் தப்பிக்கற 1000 பேர்ல நானும் ஒருத்தனா இருந்துட்டுப் போறேன் .. ..


ரானி : டெலிவிஷன்லே ஷோபனாரவி எப்பவும் சேலைத் தலைப்பைப்போர்த்திக்கிட்டு தான் செய்தி வாசிப்பாங்க. ஏன் அப்படீ?
வேனி : தெரியாதே!
ரானி : அவங்க வாசிக்கிறது தலைப்பு செய்தியாச்சே!


மனைவி : பந்தியிலே பூரிக்குச் சட்னியும் பொங்கலுக்குக் கிழங்குமாக மாற்றிப் பரிமாறுகிறார்களே .. .. என்ன விஷயம் ? 
கணவன் : நடப்பது கலப்புத் திருமணமாம் .. ..
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி ஜோக்ஸ் 12

Post by logu Fri Apr 18, 2014 10:16 pm

ரமனன் : ஒசிப் பத்திரிகை பாக்கற கூட்டம் ஒவரா போயிருச்சா .. .. .. எப்படி ? 
முராரி : பக்கத்து வீட்டுப் பிரமுகருக்குக் குற்றப்பத்திரிகை வந்துருக்கு அதைப் படிக்க ஒரே கூட்டம்


நண்பர் 1 : ஏன் வருத்தமாய் இருக்கீங்க ? 
நண்பர் 2 : அடுத்தவங்க பேச்சை நான் ஒட்டுக் கேட்கிறேன்னு நிறைய பேர் பேசிக்கிறாங்க


ரானி : உங்க வேலைக்காரி துணி துவைக்கும் போது கூலிங் கிளாஸ் போட்டுக்கிறாளே!
வேனி : அதுவா அவ உபயோகப்படுத்தறது ஸன்லைட் சோப்பாம்.


டாக்டர் : வாயில் என்ன கட்டு ? 
நோயாளி : எனக்குக் கொழுப்பு அதிகமாயிடுச்சு வாயைக் கட்டணும்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க ?


வேலு : நீங்கள் எப்பொழுதுமே இப்படித் தான் திக்குவீர்களா?
பாக்கி : எப்பொழுதும் இல்லை. டாக்டர் பே.... பே..சு..ம் பொழுது ம.... மட்..டு...ந்தான்.


கோபு : உங்க பையன் கோவிலுக்குப் போனா அதிகமா பொய் பேசறானே, ஏன்?
பாபு : கோவிலுக்குள்ளே போனதும் அவன் மெய் மறந்துடுவான்.


ரமனன் : அந்த மேஜை ரொம்ப வெட்கப்படுது
முராரி : ஏன்?
ரமனன் : அதற்கு டிராயர் இல்லை.


தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி ஜோக்ஸ் 13

Post by logu Fri Apr 18, 2014 10:16 pm

கணவன் : நான் ஒரு ரூபாய் நாணயம் ஒண்ணைத் தொலைச்சிட்டேங்கறதுக்காக என்னை நாணயம் தவறியவன்னு உங்கப்பாகிட்டே நீ சொல்றது கொஞ்சம்கூட நல்லா இல்லே .. ..

மனைவி : கவிதா, கமலா, கிருபா, கீர்த்தனா - இவங்க பின்னாடியெல்லாம் நம்ப பையன் சுத்தறான் .. .. . 
கணவன் : மு-வலமாக இருக்கே


தொண்டர் : எங்க தலைவர்கிட்டே பத்தாயிரம் ஜோடி செருப்புகள் இருக்கிறது ஆனா, அதெல்லாம் பணம் கொடுத்து வாங்கினது இல்லே மேடையில் தலைவர் பேசறப்போ வந்து விழந்த செருப்புகளைத்தான் சேகரிச்சு வெச்சிருக்கார்

முராரி : அந்த மரம் ஒரு கிராஜூவேட்.
கோபு : அப்படியா
முராரி : ஆமாம். அது பட்ட மரம்


குப்பு : உங்க பையன் பேரென்ன?
சுப்பு : ராஜ மார்த்தாண்ட வீரபாண்டிய ராம சுப்பிரமணியம்.
குப்பு : பேர் ஆசை பெரு நஷ்டம் - ன்னு சொல்லுவாங்க தெரியுமா?


தலைவர் : எதிர்க்கட்சிக்காரர், குழந்தைகளுக்கு இலவசத் துணியை மட்டும் கொடுத்துவிட்டு உங்களிடம் ஓட்டுக் கேட்கிறார். ஆனால், எங்கள் தலைவர் எத்தனையோ பெண்களுக்கு இலவசமாகக் குழந்தைகளையே கொடுத்திருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆசிரியர் : மாலா, ஆறில் பத்து போகுமா?
மாலா : போகும் சார்!
ஆசிரியர் : எப்படி?
மாலா : எங்க வீடு ஆத்துக்குப் பக்கத்திலேதான் சார் இருக்கு. எங்கம்மா தினமும், பத்துப் பாத்திரத்தை அங்கே தான் தேய்ப்பாங்க


ராமு : யானைக்கு உடம்புக்குச் சரியில்லைன்னு ஆஸ்பத்திரிக்குப் போச்சுது. எறும்பு நானும் வரேன்னு சொல்லி கூடவே போச்சுது. ஏன்?
சோமு : தெரியலையே?
ராமு : யானைக்கு ரத்தம் தேவைப்பட்டால் கொடுக்கத்தான்
சோமு : ???????
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி ஜோக்ஸ் 14

Post by logu Fri Apr 18, 2014 10:17 pm

தொண்டர் 1 : இருபது ஸீட்ல ஜெயிச்சா போதும்னு தலைவர் சொல்றாரே ஆட்சியமைக்க அது போதுமா ? 
தொண்டர் 2 : ஆட்சியைக் கவிழக்க அது போதுமே


பாபு : உன் மனைவி யாருக்கு ஓட்டுப் போடுவாங்க?
கோபு: நான் யாருக்கு ஓட்டுப் போடுவேனோ, அவருக்குத்தான்
பாபு : யார் அவர்?
கோபு: அதை இன்னும் என் மனைவி முடிவு செய்யவில்லையே!


தொண்டர் : தலைவரே நம்ம கட்சி இரண்டா பிளந்துடுச்சி என்ன செய்யலாம் .. .. ? 
தலைவர் : இவ்வளவுதானே .. .. பிளந்த கட்சியோட கூட்டணி அமைச்சுடுவோம் .. ..


ஆசிரியர் : ஷாஜகான் என்ன கட்டினார்?
மாணவன் : லுங்கி கட்டினார். 
ஆசிரியர் : !!


தலைவர் : ஊழல் பெரிதா, மதவாதம் பெரிதா என்பது பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை .. .. பதவியே எல்லாவற்றையும்விடப் பெரிது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும் .. ..

ஒருவர் : உங்களுக்குத் தேவை இல்லாதது ஏதாவது இருந்தால் போடுங்கள். காசு கொடுக்கிறேன்.
மற்றொருவர் : ஒரு நிமிஷம் இரு. என் மனைவியைக் கூப்பிடுகிறேன்.


தொண்டர் 1 : நம்ம தலைவர் தேர்தல்ல நிற்க அவருக்குப் பணம் வேணுமாம் .. .. .. 
தொண்டர் 2 : எலெக்ஷன் டெபாசிட் கட்டவா .. .. ? 
தொண்டர் 1 : இல்ல .. .. ஜாமீன்ல வெளியே வர பணம் கட்ட .. ..


நண்பர் 1 : நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்று நினைத்தேன்.
நண்பர் 2 : செய்வதுதானே
நண்பர் 1 : கை எச்சலாகிவிடுமே.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி ஜோக்ஸ் 15

Post by logu Fri Apr 18, 2014 10:18 pm

தொண்டர் 1 : அரசியல்ல புதுமை பண்ணறதுக்கு ஒரு எல்லையே இல்லை நம்ம தலைவருக்கு .. .. 
தொண்டர் 2 : ஏன் .. .. .. ? 
தொண்டர் 1 : எந்தக் கட்சியோட கூட்டணி வெச்சுக்கப் போறோம்கற விஷயத்தைத் தேர்தலுக்கப்புறம் அறிவிக்கப் போறாராம்.


வேலு : மெதுவடை, வடைகறி - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
ரமனன் : ஒரு நாள் வித்தியாசம்.


பாக்கி : ஏ ரோல உட்கார்ந்து சினிமா பார்த்தா சினிமா தெரியாது, 
ரமனன் : ஏன்?
பாக்கி : ஏன்னா பீ ரோ முன்னாடி இருக்கே.


வேலு : சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!
மாணவன் : தெரியாது!
வேலு : சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.


தொண்டர் : எந்த நம்பிக்கையில் இவ்வளவு கடன் வாங்கி எலெக்ஷன் செலவு பண்றீங்க .. .. ? 
தலைவர் : ஜெயிக்கிற எம்.பிக்களை வித்துக் கடனை அடைச்சுடலாம்னுதான் .. ..


நண்பர் 1 : அது ஓர் அழுகை சினிமா. படம் பார்க்கும் போது அழுதுவிட்டேன்!
நண்பர் 2 : எந்த இடத்தில்?
நண்பர் 1 : உட்கார்ந்து கொண்டு படம் பார்த்த அதே இடத்தில் தான்.


நண்பர் : கவர்னர் பதவிக்கு உங்க பெயர் அடிபடுது ,,,,, நீங்க என்னடான்னா கவலையா காட்சி தர்றீங்களே ? 
அரசியல்வாதி : இந்த தடவையாவது எப்படியும் ஜெயிச்சிடணுங்கற கவலைதான்.


வேலு : நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!
முராரி : அதிசயமாயிருக்கே!
வேலு : காரணம். அவன்தான் அவ புருஷன்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி ஜோக்ஸ் 16

Post by logu Fri Apr 18, 2014 10:19 pm

ரானி : ஒஙக வீட்டு டி.வில ராத்திரி பத்துமணி நியூஸ் வரும்போது டி.வில படம் ஏன் சின்னதா தெரியுது 
வேனி : அது செய்திச் சுருக்கம் தானே அதான் அப்படித் தெரியுது !


இண்டர்வியூவில் அதிகாரி : என்னப்பா! நாற்காலியை எடுத்துக்கிட்டுப் போறே?
வேலு : நீங்கதானே சார், டேக் யுவர் சீட்னு சொன்னீங்க!


தொண்டர் 1 : என்ன .. .. உங்க தலைவர் சென்னைக்கு வந்தா பேசவே மாட்டேங்கிறாரு .. .. ?
தொண்டர் 2 : நான்தான் சொன்னேனே அவருக்கு டெல்லிலதான் வாய்ஸ் அதிகம்னு ..


ரமனன் : சார் ,,,, மூணு நாளைக்கு முன்னாடி வீட்டை விட்டுப்போன என் மனைவி இன்னும் வீடு வரலை .. 
போலீஸ் : கவலைப்படாதீங்க ,,,, எல்லா ஜவுளிக் கடையிலயும் தேடிப் பார்க்கச் சொல்றேன்.


பாக்கி : அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான் தெரியுமா?
பாபு : தெரியலையே!
பாக்கி : வெறும் பனியனை மட்டும் போட்டுக் கொண்டு ஆபீசுக்கு வரக்கூடாது என்று தான்.


டாக்டர் : எங்க 'ஆ' காட்டுங்க பாக்கலாம்..
கோபு : ஏன் டாக்டர் நீங்க 'ஆ' பார்ததே இல்லையா..?


ஒருவர் : என்னது பேப்பர்ரோஸ்ட் ஓரத்திலே வரிசையா ஓட்டை இருக்குது?
மற்றொருவர் : இது கம்ப்யூட்டர் பேப்பர் ரோஸ்ட்...


தொண்டர் 1 : இந்தத் தடவை தலைவர் தேர்தலுக்கு ஓட்டுக் கேட்க தொகுதிக்கு வர மாட்டாராம் .. .. 
தொண்டர் 2 : வழக்கமா தேர்தலுக்கு அப்புறமதானே தொகுதிக்கு வரமாட்டாரு .. .. ஏன் இந்தத் தடவை மாத்திட்டாரு .. .. ?
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி ஜோக்ஸ் 17

Post by logu Fri Apr 18, 2014 10:19 pm

ஒருவர் : என்னங்க நாலு போன்கால் பேசிட்டு ஒண்ணுக்கு காசு தர்றீங்க?..யோவ்.. 
மற்றொருவர் : நாலு கால் ஒண்ணுதனேயா....


கோபு : ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சுகிட்டு தூங்குறான், ஏன்?ஏன்னா... 
பாபு : அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்..


வேலு : எல்லா மொழிகளையும் பேசக்கூடியது எது?
ரமனன் : எதிரொலி.


பெண் : பையனுக்கு பொண்ணு பார்க்கச் சொன்னேனே ,,,,,, 
தரகர் : நல்ல இடம், 50 சவரன் போடுறேங்கறா ,,,,, 
பெண் : அப்ப முடிச்சிட வேண்டியது தானே 
தரகர் : அதில் தானே சிக்கல் ,,, மாமியார் இல்லாத இடமா வேணுமாம்.


ரமனன் : என்னப்பா.. இது நேத்து சாப்பிட்ட காபி மாதிரியே இருக்கு..?
வேலு : இது XEROX காபி


மனைவி : வர வர நீங்க இளைச்சிக் கிட்டே போறதா எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க,,,, 
கணவன் : நீ என்ன சொன்னே ? 
மனைவி : ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு வீட்டு வேலையும் பார்த்தா அப்படித்தான் இருக்கும்னு சொன்னேங்க.


ஒருவர் : பக்கத்து தியேட்டரிலே ஆட்டுக்கார அலமேலு படத்தை ஏன் எடுத்துட்டாங்க?
மற்றொருவர் : நம்ம தியேட்டரிலே பாயும் புலி ஓடுதுல்லே.


நிருபர் : தீபாவளிக்கு ரிலீசாகுற உங்க படம் பிச்சுக்கிட்டுபோகும்ன்னு சொல்றீங்களே,,,,, படத்துக்கு என்ன பெயர் 
தயாரிப்பாளர் : "ராக்கெட்டு"
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி ஜோக்ஸ் 18

Post by logu Fri Apr 18, 2014 10:20 pm

தொண்டர் 1 : மத்தியிலே ஆட்சியைக் கலைச்சுட்டு திரும்பின நேரம் தலைவருக்கு ரெட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கு .. .. 
தொண்டர் 2 : அப்படியா .. .. என்ன பேர் வெச்சிருக்கார் .. .. ? 
தொண்டர் 1 : கலை-ச்செல்வன், கலை-யரசி .. ..


வேலு : வாஜ்பாயிக்கும், மூப்பனாருக்கும் என்ன வித்தியாசம்.?
ரமனன் : வாஜ்பாயி பாக்-(Pak)கோட பேசமாட்டார்..., மூப்பனார் பாக்கோடதான் பேசுவார்...


தொண்டர் : எங்கள் தலைவர் சரியாகக் கணக்குப் பார்க்காமல் எல்லா ஸீட்டுகளையும் தோழமைக் கட்சிகளுக்கே கொடுத்துவிட்டதால், கடைசியில் எங்களுக்கு ஸீட் இல்லாமல,; போய்விட்டது. எனவே, தோழமைக் கட்சிகள் தலா இரண்டு ஸீட்டுகளைத் திரும்ப எங்களிடம் ஒப்படைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .. ..

ரமனன் : ஒரு டாக்டர் கதை எழுதினா எப்படி அத்தியாயம் பிரிப்பார்?
வேலு : சாப்பாட்டுக்கு முன்பு - சாப்பாட்டுக்குப் பின்புன்னு!


நடிகை : யார் இந்த பொக்கேயை கொடுத்துட்டு போனது ? 
செகரட்டரி : உங்க பரம ரசிகர்னு சொல்லிட்டு பொக்கைவாய்க் கிழவர் ஒருத்தர் கொடுத்துட்டுப் போனாருங்க.


நண்பர் 1 : பெப்சி குடிக்கும்போது அவர் ஏன் டென்டுல்கரை கையில் புடிச்சிருக்காரு..?
நண்பர் 2 : டென்டுல்கர் ஓப்பனராச்சே.. அதான்.


தலைவர் : சென்ற முறை வெற்றி பெற்ற பிறகு தொகுதியை வந்து பார்க்கவில்லை என கோபப்படுகிறீர்களே .. .. டெல்லியில் உட்கார்ந்துகொண்டு, இந்திய வரைபடத்தில் எத்தனை முறை நம் தொகுதியைப் பாரத்துக் கண்கலங்கியிருக்கேன் தெரியுமா .. .. ?

ரமனன் : "பேண்ட் வாத்தியக் காரங்க ஏன் நடந்துண்டே வாசிக்கறாங்க?"
வேலு : "பேண்ட் சத்தம் பொறுக்க முடியாமத்தான்."
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி ஜோக்ஸ் 19

Post by logu Fri Apr 18, 2014 10:21 pm

தலைவர் : கடந்த ஆட்சியிலே இலவசத் திருமணங்கள் மட்டும் செய்துவைத்தார்கள். ஆனால், எதிலும் புதுமை செய்யும் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவச விவாகரத்துகளையும் நடத்திக்காட்டுவோம்

செய்தி - 500 ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டுகள் கலப்பு 
மகன் : அப்பா .. .. .. கீழே ஒரு ஐந்நூறு ரூபா நோட்டு கெடக்கு .. .. 
அப்பா : பேசாம வாடா .. .. கண்ட பேப்பரையெல்லாம் பொறுக்காதே .. .


வேலு : "பாகவதர் ஏன் பாடும்போது கண்ண மூடிக்கிறார்?"
பாக்கி : "எதிர்த்தாப்ல பாட்ட கேக்கறவங்களோட முகபாவம் பாக்க சகிச்சலயாம்."


வீட்டுக்காரர் : உன் கைப்பக்குவத்தை சாப்பிட்டு என் உடம்பு எடை கூடிடுச்சு பொன்னம்மா ,,, பாரேன்,,, தொந்தி கூட வந்தாச்சு ,,,, 
வேலைக்காரி : இதையே எங்க வீட்ல என் பொண்ணு கையால சாப்பிட்ட உங்க மகனும் சொன்னாருங்க எஜமான்.


கனவர் : சம்பளம் கொடுத்தா ஐந்நூறு ரூபா நோட்டா வாங்கிக்கிட்டு வராதீங்கனு நீதானே சொன்னே .. ..சில்லறையாவே வாங்கிட்டு வந்திருக்கேன் .. ..

ரமனன் : அது என்ன கோல்டு சாம்பார்...?
வேலு : இதிலே 24 கேரட் போட்டிருக்கு அதான்


ஒருவர் : அந்தப் பாடகருக்கு குரல் கடவுள் கொடுத்த வரம்னு சொல்றாங்களே?
மற்றொருவர் : ஆமாம்! அவர் வாயைத் திறக்கறதோட சரி. அதிலேருந்து என்ன வரும்னு கடவுளுக்குத்தான் தெரியுங்கறதுனால இருக்கும்.


கஸ்டமர் : நீ கொடுத்த சிக்கன் சூப் வேடிக்கையா இருந்தது
வெயிட்டர் : அப்புறம் சிரிச்சீங்களா இல்லையா?
கஸ்டமர் : ?!?!?!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty கடி ஜோக்ஸ் 20

Post by logu Fri Apr 18, 2014 10:21 pm

ஒருவர் பிச்சைகாரரிடம் 
நண்பர் : ஏம்பா, ஐந்நூறு ரூபா நோட்டுக்கு சில்லறை இருக்குமா .. .. ? 
பிச்சைக்காரன் : நாங்களும் பேப்பர், டி.வி. நியூஸ்யெல்லாம் பார்க்கறவங்கதான் சார் .. ..


மனைவி : என்னங்க இது,,,, நடு ராத்திரியில் இப்படி எழுந்து உட்கார்ந்திருக்கீங்க? 
செக்யூரிட்டி அதிகாரி : நான்தான் ஏற்கனவே உன்கிட்ட தூங்கும் போதும் உனக்கு பாதுகாப்பா இருப்பேன்னு சொன்னதை மறந்துட்டியா விமலா ,,,


வேலு : உட்காரமுடியாத தரை எது..?
பாக்கி : புளியோதரை..


கஸ்டமர் : ஏம்ப்பா காபி ஆர்டர் பண்ணினா வெறும் கப்பை மட்டும் கொண்டு வந்து வைக்கற?
வெய்டர் : நீங்கதான சார் "கப் கிளீனா" இருக்கணும்னு சொன்னீங்க.


ரமனன் : நான் எதிர்காலத்துல ஒரு டாக்டராகவோ, இல்லே ஒரு பைலட்டாகவோ ஆகலாம்னு இருக்கேன் .. .. 
வேலு : எப்படியோ .. .. ஜனங்களை மேல கொண்டுபோகறதுல குறியா இருக்கே, ஹும்


காதலன் : கலா நல்லவேளை,,, 6 மணிக்குள்ள வந்து என் வயித்துல பாலை வார்த்தே ,,,, 
காதலி : இல்லாட்டி ? 
காதலன் : 6 மணிக்கு மேல் மாலாவை வரச் சொல்லி இருந்தேன்,,,, ரெண்டு பேர்ட்டயும் மாட்டியிருப்பேனே ,,,,


ரமனன் : அவர் ரொம்ப குண்டு தான் ஆணா அதுக்காக அந்த ஹோட்டல்ல அவரை இப்படி அவமானப்படுத்தியிருக்கக் கூடாது
பாக்கி : அப்படி என்ன பண்ணீங்க
ரமனன் : மெனுவுக்கு பதிலா "கொடேஷன்" குடுத்தாங்களாம்


நண்பர் 1 : என்னங்க இது .. .. உங்க பையன் கடிகாரத்தை டேபிள் மேலே வெச்சுட்டு, புத்தகத்தைப் படிச்சுக்கிட்டே அதைச் சுத்திச் சுத்தி வரான் .. .. ? 
நண்பர் 2 : அவன் ரவுண்ட் தி க்ளாக் படிச்சுக்கிட்டிருக்கான் .. ..
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty Re: கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1

Post by மாலதி Sat Apr 19, 2014 9:49 am

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty Re: கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1

Post by krishnaamma Sat Apr 19, 2014 8:35 pm

அனைத்தும் அருமை
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1 Empty Re: கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum