Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பது ஏன்?: சீமான்..
2 posters
Page 1 of 1
அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பது ஏன்?: சீமான்..
கோவை, ஏப். 15–
கோவை ராஜ வீதி தேர்நிலை திடலில் நாம் தமிழர் நாடாளுமன்ற தேர்தலும் நமது நிலைப்பாடும் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பாரதீய ஜனதா கட்சி மதவாத கட்சி இல்லை என்று விஜயகாந்த் சொல்கிறார். பா.ஜனதா கட்சி ஏன் மதவாத கட்சி இல்லை என்றால் அது அப்துல்கலாமை ஜனாதிபதிபதியாக்கியதாம். அப்துல்கலாமை ஜனாதிபதியாக்கியது பா.ஜனதா கிடையாது.
குஜராத் கலவரம் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. அதை நிவர்த்தி செய்யத் தான் ராம்விலாஸ் பஸ்வானும், சந்திரபாபு நாயுடுவும் சேர்ந்து அப்துல்கலாமை ஜனாதிபதியாக்கினார்கள்.
இலங்கை நம் நட்பு நாடு என்று சொல்கிறது பாரதீய ஜனதா. இலங்கை நம் நட்பு நாடு. ராஜபக்சே நமது நண்பர் என்கிறது காங்கிரஸ் கட்சி. இலங்கை பகை நாடு என்று அறிவிக்க வேண்டும் என்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி. அவரையும் அவருடைய சகாக்களையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் என்று கூறுகிறார் ஜெயலலிதா. கச்சத்தீவு கொடுத்தது கொடுத்தது தான் என்கின்றன இரண்டு தேசிய கட்சிகளும். அதை எடுத்தால் என் இன மீனவ மக்களுக்கு வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் என்று உறுதியாக நினைப்பவர் அம்மையார் ஜெயலலிதா.
இலங்கையில் ஒரு அரசை அமைக்க மறுக்கிறது இலங்கை அரசு. அதற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று நட்புறவை துண்டிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பவர் அம்மையார் ஜெயலலிதா. இதையெல்லாம் மனதில் கொண்டு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
முள்ளி வாய்க்கால் முற்றத்தை இடித்து விட்டார்களே. அவர்களை போய் சீமான் ஆதரிக்கலாமா? என்று கேட்கிறார்கள். முள்ளி வாய்க்கால் முற்றத்தை இடித்து விட்டார்கள். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சத்தியமாக அதை திருப்பி கட்டி விடுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.
அழிவின் விளிம்பில் இருக்கிற தமிழ் சமுதாயத்துக்கு ஒரே தீர்வு தனி ஈழ சோசலிச குடியரசு. இலங்கை ஒரு நாடு அல்ல. அங்கு தமிழர்களும், சிங்களர்களும் வாழ்கிறார்கள். அவர்கள் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை. எனவே அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கையும், ஈழமும் பிரிய ஒரே வழி பொது வாக்கெடுப்பு தான் என்று தீர்மானம் நிறைவேற்றிய இந்தியாவின் ஒரே தலைவர் ஜெயலலிதா தான்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தான் இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை என்றும் அதற்கு ஒரே தீர்வு தனி ஈழம் தான். இந்த நிலைப்பாட்டை ஏற்கிறோம். அதனால் இரட்டை இலைக்கு வாக்கு கேட்கிறோம்.
ராஜீவ்காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூக்கு தண்டனையை நிறுத்தியவர் இந்த மாநில முதல்–அமைச்சர் ஜெயலலிதா. தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவற்றையெல்லாம் சாத்தியமாக்க ஒரே வழி இரட்டை இலைக்கு வாக்களிப்பது தான்.
தேசிய கட்சிகளான பாஜனதா, காங்கிரஸ், மற்றும் தி.மு.க, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை எதிர்க்கும் வல்லமை பெற்ற ஒரே கட்சி அ.தி.மு.க. அதன் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சீமான் கூறினார்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பது ஏன்?: சீமான்..
பொருத்துஇருந்து பார்போம்
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Similar topics
» அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான்
» தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: வைகோவை சந்தித்த சீமான் அறிவிப்பு
» எம்.ஜி.ஆர்., ரஜினி அடுத்து விஜய்தான்: 'கத்தி'க்கு ஆதரவாக சீமான் ஆவேச வீடியோ பேட்டி
» அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு: காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதே லட்சியம்; சீமான் ஆவேச பேச்சு
» அ.தி.மு.க., கூட்டணியில் மொத்தம் 18 கட்சிகள்: தே.மு.தி.க,வுக்கு 36, ம.தி.மு.க.,வுக்கு 15?
» தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: வைகோவை சந்தித்த சீமான் அறிவிப்பு
» எம்.ஜி.ஆர்., ரஜினி அடுத்து விஜய்தான்: 'கத்தி'க்கு ஆதரவாக சீமான் ஆவேச வீடியோ பேட்டி
» அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு: காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதே லட்சியம்; சீமான் ஆவேச பேச்சு
» அ.தி.மு.க., கூட்டணியில் மொத்தம் 18 கட்சிகள்: தே.மு.தி.க,வுக்கு 36, ம.தி.மு.க.,வுக்கு 15?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum