Latest topics
» சினிமாby வாகரைமைந்தன் Today at 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)
2 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே
காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே
பயனற்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படாது.
இப்பழமொழி பட்டினத்தார் வாழ்வில் நிகழ்ந்த சம்பவமாக கூறப்படுகிறது. இவ்வாக்கியமே பட்டினத்தார் துறவு நிலைக்கு வர உதவியதாகும்ய.
சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர், கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்தார். 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, திருவெண்காடர் சிவனை வழிபட்டார்.
இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன், வறுமையில் வாடிய சிவபக்த தம்பதியரான சிவசருமர், சுசீலை என்பவர்களின் மகனாக பிறந்தார். மருதவாணர் என்று அழைக்கப்பட்டார். ஒருசமயம் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார். மருதவாணரும் தந்தையின் தொழிலை செய்தார்.
மருதவாணரை வெளியூருக்கு அனுப்பி வாணிபம் செய்து வரச்சொல்ல அவரும் வணிகம் செய்து விட்டு வந்து தாயாரிடம் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். வீட்டிற்கு வந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எருவும் ஒரு காதற்ற ஊசியும் ஒரு ஓலையும் இருந்தது. அதில், ""காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' என்று எழுதப்பட்டிருந்தது. அதைக்கண்ட திருவெண்காடருக்கு ஒரு உண்மை உரைத்தது.
"மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது'' என்ற உண்மையை உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்து சிவனை வணங்கி அவரையே குருவாக ஏற்றார் என்பது வரலாறு.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
தனி மரம் தோப்பாகாது!
தனி மரம் தோப்பாகாது!
பல மரம் சேர்ந்து நின்றால் தான் அதை தமிழில் தோப்பு என்பார்கள். ஒற்றை மரத்தை தோப்பு என்று சொல்ல முடியாது. அது எப்போதுமே ஒற்றை மரமே.
அதே போல சமூகத்தில் மனிதர்கள் சேர்ந்து வாழ்ந்தால் தான் அதை சமூகம் என்று சொல்ல முடியும். தனிமையாக வாழும் ஒருவரது வாழ்க்கை நிறைவு பெறாது. ஒற்றுமை குடும்பத்திலும் சமூகங்களிலும் மிக மிக அவசியமான ஒன்று. சமூகத்தில் ஒருவராக தனிமையில் முயற்சி செய்தால் அது பெரும் வெற்றி அடைவதில்லை. ஆனால் பலரும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் வாழ்வில் அவர்கள் பெரும் வெற்றி அடைந்துவிடுவார்கள்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல
கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல
ஒருவர் மிகவும் சாதாரண வேலையை செய்ய ஆரம்பித்து அது மிகப்பெரும் பழியாகவோ பேர் ஆபத்தாகவோ விழைவதை குறிக்க இப்பழமொழி இயல்பாக பயன்படுத்தப்படுகிறது.
இருந்தாலும் இதன் உண்மைப்பொருள் வேறொன்றாக இருக்கிறது.
இங்கே பூதம் என்பது பஞ்சபூதங்களை குறிக்கிறது. அதாவது இந்த உலகம் ஐந்து பொருட்களால் சேர்ந்து உருவாக்கப்பட்டது. நீர், நிலம், காற்று, தீ, ஆகாசம் என்பன அந்த ஐந்து பொருட்களாகும். இதை விளக்க வானம் என்ற வெளி எங்கும் நிரம்பியிருக்கிறதை விளக்க வெளி மற்ற அனைத்து பொருட்களினுள்ளும் உள்ளது அது பூமிக்குள்ளும் இருக்கிறது என்று கூறப்படும்.
பூமிக்குள் தோண்டும் போது, முதலில் வெளி அந்த இடத்தில் வந்துவிடுகிறது. அந்த வெளிக்குள் காற்றும் நிரம்பிவிடுகிறது. மேலும் சிலநேரம் விஷக்காற்றும் வந்துவிடுகிறது. நிலத்திற்குள் தோண்டத்தோண்ட நிலம் எப்போதுமே வந்துகொண்டே இருக்கிறது. இன்னும் தோண்டும் போது வெப்பம் இயல்பாகவே வருகிறது. மேலும் ஆழமாகும் போது நீர் ஊற்று வந்துவிடுகிறது. அதே போல மிக ஆழமாக போகும் போதும் அங்கே மிகமிக வெப்பமான தீக்குழம்பே இருக்கிறது.
எனவே நிலத்திற்குள் தோண்டும் போது பஞ்ச பூதங்கள் கிளம்புவதை விளக்கி இந்த உலகமே ஐம்பூதங்களால் உருவானது என்பதை விளக்க கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல என்ற பழமொழி பயன்படுகிறது.
பஞ்சம் = ஐந்து
பூதங்கள் = பருப்பொருள்

தமிழ்ப் பழமொழி: உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா?
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா?
உண்ண உணவு தந்தவர்கள் வீட்டிலேயே திருடுவது மிகப்பெரிய பாதக செயலாகும்.
உணவு தந்த வீட்டுக்கு கேடு தரும் செயலை நினையாமல் இருக்க வேண்டும். அவர்கள் நம்மை ஒருவரை நல்லவர்கள் என நம்பி போற்றி உணவும் தந்தால் அவருக்கே கேடு செய்வது நம்பிக்கை துரோகமாகும்.
உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா என்ற பழமொழி போல நன்றி மறக்கலாகாது என்பதை உணர்த்துவதே இந்த பழமொழியின் பொருள்.
உண்ண உணவு தந்தவர்கள் வீட்டிலேயே திருடுவது மிகப்பெரிய பாதக செயலாகும்.
உணவு தந்த வீட்டுக்கு கேடு தரும் செயலை நினையாமல் இருக்க வேண்டும். அவர்கள் நம்மை ஒருவரை நல்லவர்கள் என நம்பி போற்றி உணவும் தந்தால் அவருக்கே கேடு செய்வது நம்பிக்கை துரோகமாகும்.
உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா என்ற பழமொழி போல நன்றி மறக்கலாகாது என்பதை உணர்த்துவதே இந்த பழமொழியின் பொருள்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக்கொடுக்க வேண்டுமா?

இயற்கை அவரவர் வாழ்விடத்திற்கு ஏற்ப பல அறிவை தானாகவே கொடுத்துள்ளது.
நீரிலேயே வாழும் மீனுக்கு நீந்த தெரிந்திருக்கும். புதிதாய் பிறந்த மீன் குஞ்சாக இருந்தாலும் தானாகவே அது நீந்த ஆரம்பத்து விடும்.
அதே போல பல கலைகளை கற்றவருடைய பிள்ளைகளுக்கு தானாகவே அந்த கலைகள் மரபணு மூலம் வந்திருக்கும். அல்லது அவர்கள் சீக்கிரமாகவே அதை கற்றுக்கொள்வார்கள்.
இயற்கை அவரவர் வாழ்விடத்திற்கு ஏற்ப பல அறிவை தானாகவே கொடுத்துள்ளது.
நீரிலேயே வாழும் மீனுக்கு நீந்த தெரிந்திருக்கும். புதிதாய் பிறந்த மீன் குஞ்சாக இருந்தாலும் தானாகவே அது நீந்த ஆரம்பத்து விடும்.
அதே போல பல கலைகளை கற்றவருடைய பிள்ளைகளுக்கு தானாகவே அந்த கலைகள் மரபணு மூலம் வந்திருக்கும். அல்லது அவர்கள் சீக்கிரமாகவே அதை கற்றுக்கொள்வார்கள்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்

இப்பழமொழி தமிழர்களின் மருத்துவம் சார்ந்த பழமொழி ஆகும். கடுக்காய் என்பது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒருவகை காய் ஆகும்.
இதன் மேல் தோலை மட்டும் மருத்துவத்திற்கு எடுத்து பொடித்து சூரணமாக ஆக்கி நெய்/தேனுடன் சேர்த்தோ அல்லது வேறு வகையிலோ பயன்படுத்துவார்கள்.
கடுக்காய் மலச்சிக்கலுக்கு மிகவும் சிறந்த மலமிழக்கியாக பயன்படும். அதே போலவே பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.
ஒருவருக்கு மலம் போகாமல் மலச்சிக்கல் நோய் வரும் போது மலமிழக்கியாக எட்டு கடுக்காயை சூரணம் செய்து கொடுத்தால் மலவரத்து சீராகும். இதுவே பிள்ளை பெற்ற தாய்க்கும் மருந்தாக பயன்படும்.
எரு = கழிவு = மலம்

கடுக்காய்க்கு அக நஞ்சு; இஞ்சிக்கு புற நஞ்சு

இப்பழமொழி தமிழ் மருத்துவம் சார்ந்த பழமொழி ஆகும்.
கடுக்காய் என்பது மருந்துக்கு பயன்படும் காய் ஆகும். இம்மருந்து மலச்சிக்கலுக்கும் பெற்ற தாய்க்கும் அதிகமாக பயன்படும். கடுக்காயை மருந்துக்கு பயன்படுத்தும் போது அதன் வெளி தோடை மட்டும் எடுத்துவிட்டு உள்ளே இருக்கும் கொட்டையை நீக்கிவிட வேண்டும்.
இதே போலவே, இஞ்சி (சுக்கு) என்பதும் மிக அதிகமாக கைமருத்துவத்தில் பயன்படுத்தப்படும். பச்சையாக (இஞ்சியாக) இருக்கும் போது அதன் மேல் தோலை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.
கடுக்காயின் உள்ளே இருக்கும் கொட்டையும் இஞ்சிக்கு மேலே இருக்கும் தோலும் நஞ்சு ஆகம். அதனால் அவற்றை மருந்துக்கு பயன்படுத்த கூடாது.

ஒழுகிற வீட்டில் கூட இருக்கலாம், அழுகிற வீட்டில் இருக்கக் கூடாது

அழுகிற வீடு என்றால் இங்கே அவ்வீட்டில் உள்ளவர்கள் எப்போதும் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பவர்கள் என அர்த்தம். எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் அங்கே முன்னேற்றம் என்பதே இருக்காது.
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல மனிதர்கள் தன்னுடன் பழகுபவர்களின் மனநிலை சீக்கிரமாகவே நம் மேல் ஒட்டிக்கொள்ளும். இதே போல தாழ்ந்த எண்ணங்களும் நம்மில் வந்துவிட வாய்ப்புள்ளது
கவலைப்பட்டுக்கொண்டே இருப்போர்கள் அவர் மனநிலை மட்டுமல்லாது கூட இருப்போர்கள் மனநிலையும் இதே போல மாறிவிட வாய்ப்புள்ளது.
ஏழ்மையான வீடாக இருந்தாலும் பரவாயில்லை சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பவர்களுடனேயே பழக வேண்டும். சந்தோஷ மனநிலையிலேயே தன்னம்பிக்கை அதிகம் பிறக்கும். சோகம் இருந்தால் வைராக்கியம் வரும் என்பதும் கொஞ்சம் உண்மைதான். ஆனாலும் எப்போதும் சின்னச்சின்ன விஷயங்களுக்குக்கூட கவலைப்பட்டுக்கொண்டிருப்பவர்களால் எதையும் துணிந்து செய்ய இயலாது. அவர்களுடன் பழகிவந்தால் அவர்கள் அவர்களைப்பற்றி மட்டுமல்லாது நம்மைப்பற்றியும் கவலைப்பட்டு நம் நம்பிக்கைகளை தளர்த்தி விடுவார்கள்.
அழுதுகொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் கூறலாம். ஆனால் அவர்கள் அழுகை நம் நம்பிக்கைகளை தளர்த்திவிட அனுமதிக்கக்கூடாது.

உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்'
இதன் பொருள் உண்மையைச்சொன்னால் அறுந்தது பொருந்திவிடும்.
வில்லிப்புத்தூரார் எழுதிய வில்லிபாரதத்தில் ஒரு கதை வருகிறது. (வியாசர் எழுதிய மகாபாரதம் தான் மூலக்கதை. அதில் இக்கதை கிடையாது)
காட்டில் உலவும் பாஞ்சாலி ஒரு நெல்லிக்கனியை பார்த்து அதை ஆசைப்படுகிறாள். அர்ஜுனன் அதைப்பறித்துக்கொடுத்துவிட்டார்.
இதைக்கண்ட சில முனிவர்கள் ஓடோடி வந்தார்.
"ஐய்யோ, பாதகம் செய்து விட்டீர்கள், இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கனியும் கனி ஆகும். இதை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தவம் கலைந்து ஒரு முனிவர் இதை மட்டும் உண்ண வருவார். இதை அவரே தான் பறிக்க வேண்டும். வேறு ஒருவர் பறித்தாலும் இனி 12 ஆண்டுகள் உண்ணாமல் இருந்து விடுவார். இன்று அந்த நாள். இப்போது தவம் கலைந்து குளிக்கப்போயிருக்கிறார். இனி அந்த பாவம் உங்களுக்குத்தான்"
என்றார்கள்.
அர்ஜுனன் பயந்து போனான். தர்மரிடம் போனான், நீங்க தான் காப்பாத்தணும். தர்மன் யோசிக்க ஆரம்பித்து விட்டார்.
பீமன் சொன்னார். "அண்ணா எப்படியும் நாம் அழியப்போவது உறுதி. எனக்கு ஒரு ஐந்து நிமிடம் மட்டும் கால அவகாசம் கொடுங்கள். இப்போதே போய் நம்மை காட்டிற்கு அனுப்பிய துரியோதனை அழித்துவிட்டு வருகிறேன்" என்றான்
தர்மர் அவனை அமர்த்தி விட்டு கிருஷ்ணனைக்கூப்பிட்டார்.
கிருஷ்ணர் வந்து சொன்னார்.
"அவரவர் அவரவர் மனதில் வைத்திருக்கும் உண்மையை மறைக்காமல் சொன்னால் இக்கனி மறுபடியும் ஒட்டிக்கொள்ளும்" என்றார்.
ஐந்து சகோதரர்களும் தங்கள் மனதில் உள்ள உண்மைகளைச்சொல்லிவிட்டார்கள். கனி ஒட்டவில்லை.
கடைசியாக திரௌபதி முறை வந்தது.
அவள் கூறினாள்.
"ஐந்து பேர் கணவராக இருந்தும் இன்னொருவர் கணவராக இல்லையே என மனம் ஏங்கும்" என்றாள். கனி ஒட்டிவிட்டது.
அனைவரும் திகைத்துவிட்டார்கள்.
சபையில் துகிலுரியும் போது தர்மத்தை எண்ணி ஐந்துபேரும் அமைதியாகிவிட என் மனதில் என்ன இருக்கிறது என அறிந்து அதன்படி நடந்துகொள்ளும் ஒரு கணவன் கிடைக்கவில்லையே என ஏங்கும் என்பது அதன் பொருள்

சருகைக் கண்டு தணலஞ்சுமா
சருகைக் கண்டு தணலஞ்சுமா
சருகைக் கண்டு தணலஞ்சுமா
உலர்ந்த இலையைச் சருகு என்பர். தணல் என்றால் தீ,
உலர்ந்த இலைச் சருகை தீக்கணல் எளிதில் எரித்து விடும்
எனவே அதைக்கண்டு அஞ்சுவதில்லை.
இதையே எளியவரைக்கண்டு வீரன் அஞ்சி ஓடமாட்டான். இவ்வகை சூழ்நிலைகளை விளக்க இப்பழமொழி கையாளப்படுகிறது.

உடம்பைத் தூக்கிக் கடம்பில் போடு
உடம்பைத் தூக்கிக் கடம்பில் போடு
கடம்பு என்பது இங்கே கடம்ப மரத்தையும் கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலையும் குறிக்கிறது.
கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலில் படுத்தால் உடல் நிலை சீராகும் தன்மை கொண்டதால் இப்பழமொழி எழுந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
கடம்பு என்பது இங்கே கடம்ப மரத்தையும் கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலையும் குறிக்கிறது.
கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலில் படுத்தால் உடல் நிலை சீராகும் தன்மை கொண்டதால் இப்பழமொழி எழுந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
முருங்கைய ஒடிச்சு வளர்க்கணும்; புள்ளய அடிச்சு வளர்க்கணும்

முருங்கை மரம் அதன் காய், இலை, விதை, பட்டை போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படும்.
ஆனால் இதன் மரம் பெரிய மரமாக வளர்க்கப்படுவதில்லை. அப்படியே வளர்ந்தாலும் அதன் மரம் மற்ற மரம் போல பயன்படுவதில்லை.
ஏனென்றால் அது மெல்லிய தன்மை கொண்டது. எளிதில் உடைந்து விடும். இதானலேயே முருங்கை வீட்டின் கூரைக்கு மேல் வளர அனுமதிக்க மாட்டார்கள். தெரியாதவர்கள் அம்மரத்தி்ல் ஏறிவி்ட்டால் ஒடிந்துவிழுந்துவிடும்.
முருங்கை இலையை மருந்துக்காகவும் உணவில் கீரை போலவும் பயன்படும். அது நன்கு வளர அடிக்கடி கிளைகளை நன்கு வளராமல் முறித்து வி்ட்டால் அது மேலும் சீக்கிரம் தளிர்விட்டு காய்க்கும்..
இதே போல தவறு செய்யும் குழந்தைகளை தண்டித்து வளர்த்தால் பிற்காலத்தில் நல்ல மனிதராக வளர்ந்து சமுதாயத்திற்கு பயன்படுவான். அளவிற்கு மீறி செல்லம் கொடுத்து வளர்த்த குழந்தைகள் அதிகமாக பொறுப்பில்லாமல் இருப்பதையை சமூகத்தில் காணமுடிகிறது.
புள்ளை என்பது - பிள்ளை அல்லது குழந்தை எனபதன் பேச்சு வழக்கு.

தமிழ்ப் பழமொழி: வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணு அட்டிகை வித்து வட்டியைக் குடு
வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணு அட்டிகை வித்து வட்டியைக் குடு
இது ஒரு மக்களின் நடைமுறை அல்லது மனோபாவ பழமொழி.
அட்டிகை என்பது பெண்கள் இடுப்பில் அணியும் ஒரு ஆபரணம்.
அத்தியாவசிய தேவைகளுக்கு பணம் தேவைப்பட்டால் வட்டிக்கு வாங்குவது நடமுறை. பிறகு வட்டி கட்டியே சொத்தை அழிப்பார்கள்.
அந்த காலத்தில் மட்டுமல்ல இந்த காலத்திலும் தங்க ஆபரணம் என்பது ஆடம்பரமாகவும் அதே சமயம் அந்தஸ்தை நிரூபிக்கும் பொருளாகவு்ம் பார்க்கப்படுகிறது.
ஏழைக்கேற்ற எள்ளுருண்டை மற்றும் விரலுக்கேற்ற வீக்கம் என்பதை மறந்து அந்தஸ்த்தை நிலை நாட்ட ஆபரணம் இல்லா விட்டாலும் வட்டிக்கு எடுத்தாவது ஆபரணம் வாங்கும் பேராசை அவர்களின் அழிவிற்கு காரணமாகும் என்பதை தெளிவாக விளக்கும் பழமொழி இது.
நாம் தஙக ஆபரணம் வாங்கும் போது அதில் செய்கூலி சேதாரம் பார்த்து லாபம் சம்பாதிக்கும் வியாபாரிகள் அதே நகையை விற்கப்போகும போது
அதிலும் சேதாரம் போகத்தான் கணக்கு போடுவார்கள்.
வட்டி கொஞ்சம் தானே பிறகு கொடுத்தால் போதுமே என நினைத்து மெத்தனமாக இருப்பவர்கள் சில காலங்களில் வட்டி அசலை மிஞ்சி அந்த ஆபரணத்தை விற்றாலும் வட்டியை மட்டும் கட்டும் நிலைக்கு வந்துவிடுவார்கள். அதாவது வ்ட்டி அடைபட்டாலும் அசல் அப்படியே கொடுக்க வேண்டியது பாக்கி இருக்கும்.

ஆரம்பரமான அல்லது பகட்டு பேராசை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா?
கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா?
ஒரு நாள் கொங்கணவ முனிவர் காட்டில் தவமிருக்கையில் அவர் மீது ஒரு கொக்கு எச்சமிட்டுவிட்டது. அவர் கோபத்தோடு மேலே நிமிர்ந்து பார்த்தார். அவரது தவ வலிமையில் கொக்கு எரிந்து சாம்பலாகிவிட்டது.
அவர் ஒரு நாள் திருவள்ளுவர் வீட்டுக்கு தர்மம் கேட்டு வந்தார். அவர் கணவருக்கு பணிவிடை செய்துகொண்டிருந்ததால் நெடு நேரமாகியும் வள்ளுவர் மனைவி வாசுகி தர்மம் போட வரவில்லை.
பின்னர் வெளியே தர்மம் போட வந்த போது கொங்கணவ முனிவர் அதே கோபத்தோடு வள்ளுவர் மனைவியயைப் பார்த்தார். ஆனால் அவரது கோபம் வள்ளுவர் மனைவியை எரிக்கவில்லை. வள்ளுவர் மனைவி சிரித்துக்கொண்டே கொக்கு என்று நினத்தாயோ கொங்கணவா என்று கேட்டாராம். பத்தினிப் பெண்களுக்கு தவமுனிவரைவிட அதிக சக்தி உண்டு என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.
இது கண்டு கொங்கணவர் தன் அகம்பாவம் இழந்தார்

தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது
தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது
மஹாபாரதத்தில் அர்ஜுனன் தன்னுடைய வில் திறத்தால்தான் வெற்றி கிடைத்தது என்று நினைத்து வந்தான். ஒருதடவை கர்ணன் விட்ட பிரம்மாஸ்திரத்திலிருந்து அர்ஜுனனை கிருஷ்ணன் காப்பற்ற தேரின் கால் சக்கரத்தை நிலத்தில் புதையுமாறு கிருஷ்ணன் அழுத்தியதால்
அர்ஜுனனின் தலையை நோக்கி வந்த பிரம்மாஸ்திரம் அவனது தலைப்பாகையை மட்டும் பறித்துக்கொண்டு போனது. இத்தோடு அர்ஜுனனின் மமதையும் அழிந்தது.
இதிலிருந்தே இந்தப் பழமொழி வந்தது.
ஒரு பெரிய ஆபத்து வந்து அது சிறிய ஆபத்தாக மாறி அதிலிருந்து பிழைத்து்ககொண்டால் இப்பழமொழியை நாம் பயன் படுத்துகிறோம்.

களவும் கத்தும் மற '
1. களவாடுவதையும் கற்று பின் மறந்து விட வேண்டும் என்பதாக நேரிடையாக ஒரு பொருள் உலக வழக்கில் எடுத்துக்
கொள்ளப் படுகிறது.
2. தமிழ் இலக்கியங்களில் தலைவியும் திருமணத்திற்கு முன்பே யாரும் அறியா வண்ணம் சந்தித்துக் கொள்வதை களவு என்று இலக்கியங்கள் குறிக்கின்றன. எனவே இதையும் குறிக்கிறது என்றும் சொல்பவர்கள் உள்ளார்கள்.
3. இப்பழமொழியின் நிஜவடிவம் ' களவும் கத்தும் மற ' என்று இருக்க வேண்டும். இதில் கத்து என்பதற்கு தமிழில் பொய் அல்லது கயமை என்பது பொருள். திருட்டையும் பொய்யையும் தவிர்த்துவிடு என்பது இதன் பொருள் ஆகும்.
கொள்ளப் படுகிறது.
2. தமிழ் இலக்கியங்களில் தலைவியும் திருமணத்திற்கு முன்பே யாரும் அறியா வண்ணம் சந்தித்துக் கொள்வதை களவு என்று இலக்கியங்கள் குறிக்கின்றன. எனவே இதையும் குறிக்கிறது என்றும் சொல்பவர்கள் உள்ளார்கள்.
3. இப்பழமொழியின் நிஜவடிவம் ' களவும் கத்தும் மற ' என்று இருக்க வேண்டும். இதில் கத்து என்பதற்கு தமிழில் பொய் அல்லது கயமை என்பது பொருள். திருட்டையும் பொய்யையும் தவிர்த்துவிடு என்பது இதன் பொருள் ஆகும்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
தமிழ்ப் பழமொழி: திருநீறிட்டார் கெட்டார்; இடாதார் வாழ்ந்தார்
இதன் உண்மை வடிவம்
"திருநீறிட்டு யார் கெட்டார்; இடாது யார் வாழ்ந்தார்"
என்பதாகும்.
"திருநீறிட்டு யார் கெட்டார்; இடாது யார் வாழ்ந்தார்"
என்பதாகும்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
தமிழ்ப் பழமொழி: பந்திக்கு முந்து படைக்கு பிந்து
இது ஒரு விடுகதை போல பயன்படுத்தப்படும்.
இப்பழமொழியின் நிஜ வடிவம்
"பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும். அது என்ன?" என்பதாகும்
இதற்கு விடை: "வலது கை"
அதாவது, பண்டைக்காலங்களில் போர் புரிவதற்கு வில், ஈட்டி, வாள் போன்றவைகள் ஆயுதமாக பயன்படுத்தப்படும். அவைகளில் வில்லில் அம்பை வைத்து நாணை இழுக்க வலது கை பின்னே போகும், எவ்வளவு பின்னுக்கு இழுக்கிறோமோ அந்த அளவு அம்பு வேகமாகவும் தூரமாகவும் போகும். இதே போல வாள் ஈட்டியிலும் வலது கை அதிகமாக பின்னுக்கே இருந்து பதுங்கி நேரம் பார்த்து தாக்கும்.
இதே வலது கை பந்தியில் சாப்பிடும் போது முந்தி வந்து உணவு எடுக்க பயன்படும்.
இதைத்தான் பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் என கூறுகிறார்கள்.
இந்த விடுகதை போன்ற பழமொழி பந்திக்கு சாப்பிடுவதற்காக முந்தி செல்வதும் படை என்றால் பயந்து பின்னால் செல்வதாகவும் பொருள் கொள்ளப்பட்டு விட்டது.

வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு என்பதை விளக்கும் நமது பண்டைய பெரியோர்களின் அனுபவ மொழி இது.
ஒருவன் எதை விதைக்கிறாரோ அதுவே விளையும். நெல் பயிரிட்டால் அதற்குப்பதிலாக சோளம் விளையாது. அதே போல நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லதும் தீயது செய்தால் தீயதும் விளையும்.
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. அது நாம் செய்த வினையைப்பொறுத்தே அமையும்.
இந்த வினை பயன் உடனே இல்லாமல் எப்போதாவது கூட கிடைக்கலாம். மறுபிறவியில் நம்பிக்கை உள்ள நம்மவர்கள் ஒரு பிறவியில் நாம் செய்யும் செயலுக்கான பலன் (கர்மபலன்) நிச்சயம் அடுத்தப்பிறவியில் கிடைக்கும் என்பதை கூறிச்சென்றுள்ளார்கள். இது நமது எல்லா இதிகாசங்களிலும் இலக்கியங்களிலும் காணக்கிடைக்கிறது. முக்கியமாக சிலப்பதிகாரத்தைச் சொல்லலாம்.

Similar topics
» பழமொழிகள் (Proverbs in Tamil)
» தமிழ் இலக்கியம் | தமிழறிஞர்கள், புலவர்கள் Tamil Literature, Tamil scholars, poets
» ENGLISH & தமிழ் பழமொழிகள் (1)
» சற்று இளைப்பாற தமிழ் நிழல் தேடிப் போவோம் வாங்க! பழமொழிகள் சில காண்போம்...
» Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|