Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)
2 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)
தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
ஒருவரது மனநிலையை அவரது முகத்தில் கண்டு அறியலாம். அவரது முக பாவனைகளை வைத்தே அவரது மனதில் எந்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
மனிதருக்கு முகபாவங்கள் அவரது மன எண்ணங்களை பொறுத்து அமையும்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)
தமிழ்ப் பழமொழி: அகல உழுகிறதை விட ஆழ உழு.
நிலம் உழும் போது நிலத்தின் அடியில் உரம் மிக்க மண் இருக்கும், மேல் மண் அடிக்கடி பயிரிடப்பட்டு தாது பொருட்கள் குறைந்து காணப்படும், புது மண்ணில் பயிர் செழித்து வளரும்.
மேலோட்டமாக உழுதுச் செல்வதை விட ஆழமாக உழுதால் அடிமண் மேலே வரும், இதனால் பயிருக்கும் செழிப்பு.
அதே போல, நூல்கள் படிக்கும் போதும், கல்வி கற்கும் போதும், சில விசயங்கள் கற்றுக்கொள்ளும் போதும் மோலோட்டமாக தெரிந்து கொள்ளாமல் ஆழ்ந்து தெரிந்துகொள்ளல் அவசியமாகும். அதுவே நிலைக்கும். மற்றவை சில தினங்களில் மறந்துவிடும்.
இப்பழமொழி அறிவுரை மட்டும் கூறாமல் பண்டைய தமிழர் விவசாய அறிவையும் விளக்குகிறது.

தமிழ்ப் பழமொழி: அகல் வட்டம் பகல் மழை
அகல் வட்டம் பகல் மழை
அகல் வட்டம் காணப்பட்டால் மழை வர வாய்ப்பு உண்டுய
அகல் வட்டம் என்பது (அகல்) விளக்கின் ஒளியைச்சுற்றி பிரகாசமாக தெரியும் வட்டத்தைப்போல சூரியனைச்சுற்றியும் பெரிய வட்டம் தெரியும். அவ்வாறு வானத்தில் அகல்வட்டம் தெளிவாக காணப்பட்டால் மழை வருவதற்கான வாய்ப்பு உண்டு என்பது பொருள்.
அகல் வட்டம் காணப்பட்டால் மழை வர வாய்ப்பு உண்டுய
அகல் வட்டம் என்பது (அகல்) விளக்கின் ஒளியைச்சுற்றி பிரகாசமாக தெரியும் வட்டத்தைப்போல சூரியனைச்சுற்றியும் பெரிய வட்டம் தெரியும். அவ்வாறு வானத்தில் அகல்வட்டம் தெளிவாக காணப்பட்டால் மழை வருவதற்கான வாய்ப்பு உண்டு என்பது பொருள்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
தமிழ்ப் பழமொழி: அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
சைவ மிருகங்களில் பெரிதான யானைக்கு உணவளித்து தாக்குப்பிடிப்பது கடினம். அது அசைந்து அசைந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். அதனால் உணவு சீக்கிரமாகவே தீர்ந்துவிடும்.
ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வேலை செய்யாது (அசையாது) சம்பாதிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் மிக விரைவில் சொத்துகள் தீர்ந்துவிடும்.
எனவே தேவைக்கு ஏற்ப உழைத்து சம்பாதித்து சாப்பிட வேண்டும்.
சைவ மிருகங்களில் பெரிதான யானைக்கு உணவளித்து தாக்குப்பிடிப்பது கடினம். அது அசைந்து அசைந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். அதனால் உணவு சீக்கிரமாகவே தீர்ந்துவிடும்.
ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வேலை செய்யாது (அசையாது) சம்பாதிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் மிக விரைவில் சொத்துகள் தீர்ந்துவிடும்.
எனவே தேவைக்கு ஏற்ப உழைத்து சம்பாதித்து சாப்பிட வேண்டும்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
தமிழ்ப் பழமொழி: அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்
அம்பலம் என்பதற்கு கோவில் என்ற ஒரு பொருள் உண்டு. அதே போல பண்டைய ஊர் மக்கள் கூடிப்பேசும் மண்டபத்தை அம்பலம் என்றும் கூறுவர். அம்பலத்தில் ஒரு விசயம் வந்துவிட்டால் அது அனைவருக்கும் தெரிந்துவிடும் அதலால் இரகசியம் அம்பலமானது போன்ற சொல்லாடல் ஏற்பட்டது.
அம்பலத்தில் பலர் இருக்க அதன் முன்னிலையில் பேசுவதற்கு தைரியம் வேண்டும். அச்சம் (பயம்) இல்லாதவனே அம்பல மண்டபத்தில் பேச முடியும்.
அம்பலத்தில் பேச தயங்குகிறவனை ஏளனமாக அச்சமுடையவன் என்று கேலி பேசுவதற்கு அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான் என்ற வாக்கியம் வழங்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழி: அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
அச்சாணி என்பது பண்டை வண்டிகளில் சக்கரங்களை கழன்று விடாமல் பிணைத்துக்கொள்ளும் சக்கரக் காப்பாணி ஆகும்.
அச்சில் நிற்கும் ஆணி.
இது கழன்று விட்டால் சக்கரம் தனியே வந்துவிடும், வண்டியும் வீழ்ந்துவிடும், மூன்று சாண் கூட ஓடாது.
குடும்பம், சமூகம், நாடு, அமைப்பு இவ்வாறு எதை எடுத்துக்கொண்டாலு்ம் தலைவன் என்ற அச்சாணி அவசியம். சரியான வழிகாட்டி நடத்திச்செல்லும் அச்சாணி போன்றவன் இல்லையென்றால் அந்த அமைப்பு சரிவர இயங்க முடியாது என்பதை இப்பழமொழி விளக்குகிறது.
உருள்பெருந்தேர்க்கு அச்சாணி யன்னாருடைத்து
- முதுமொழி வெண்பா

அடக்கமே பெண்ணுக்கு அழகு.
அடக்கமே பெண்ணுக்கு அழகு.
அதிகம் பேசும் பெண்களை வாயாடி எனவும் அதிகம் அகங்காரம் கொண்ட பெண்களை அடங்காப்பிடாரி எனவும் வகைப்படுத்தும் சமூகம் நம்முடையது.
ஒரு பெண் மற்றவர்களின் பார்வையில் நேசிக்கப்படுபவளாகவும் பண்பு மிக்கவளாகவும் இருப்பதையை நம் சமூகம் விரும்புகிறது. அமைதியான பண்பு அப்பெண்ணிற்கு அணிகலன் போல ஆகிறது என்பதை சுட்டிக்காட்ட அடக்கமே பெண்ணிற்கு அழகு என்ற பழமொழி வழங்கப்படுகிறது.
ஆத்திரமான அடக்கமற்ற பெண் மற்றவர்கள் பார்வையில் இகழப்படுபவளாகவும் தவறாக நினைக்கப்படுபவள் ஆகவும் இருக்கிறாள். அமைதியாக ஆனால் அறிவுடன் ஒரு பெண் செயல்பட வேண்டும் என்பதையும் சமூகத்தில் பெண் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் ஒரு சமூகம் பெண்களின் நடத்தை அடிப்படையில் வளரும் என்ற சிந்தனையும் இப்பழமொழி விளக்குகிறது.

தமிழ்ப் பழமொழி: அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
அவை அடக்கம், நாவடக்கம், ஐம்பொறி அடக்கம், மன வொழுங்கு போன்ற ஒழுக்கம் உடையவர்களே அறிஞர்கள்.
ஆத்திரமாக இருப்போர்கள், பேசத்தெரியாத விசயங்களையோ பேசக்கூடாதவற்றை நாவடக்கம் இல்லாமல் பேசுவோர்கள், உடல் ஒழுக்கம் இல்லாமல் ஐம்பொறிகளையும் அனுபவிக்க விரும்புவோர்கள், மன ஒழுக்கம் இல்லாமல் காம குரோத செயல்களை செய்வோர்கள் போன்றவர்கள் அறிஞர்கள் அல்லர். இதை ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழியாலும் அறியலாம்.
திருவள்ளுவரும் அடக்கமுடைமை என்று அதன் சிறப்பை போற்றுகிறார். எனவே அடக்கம் சிறந்த பண்பாக பேசப்படுகிறது.

தமிழ்ப் பழமொழி: அடாது செய்தவன் படாது படுவான்

அடாது என்பதற்கு தவறு என்று பொருள்.
தவறு செய்தவன் தொடர்ந்து பெரும் துன்பம் அனுபவிக்க நேரும்.
இங்கே கவனிக்க வேண்டியது ஒருவன் ஒரு தவறு செய்துவிட்டால் அதை மறைக்க பல தவறுகள் செய்ய வேண்டிவரும்.
அதை மறைக்க மேலும் தவற வேண்டி வரும். இவ்வாறு ஒவ்வொரு தவறின் பின் விளைவுகள் அவரை தொடர்ந்து துரத்தி வந்து கொண்டிருக்கும்.
எனவே அவன் விடாது பாடுபடுவான்.
அடாது என்பதற்கு தவறு என்று பொருள்.
தவறு செய்தவன் தொடர்ந்து பெரும் துன்பம் அனுபவிக்க நேரும்.
இங்கே கவனிக்க வேண்டியது ஒருவன் ஒரு தவறு செய்துவிட்டால் அதை மறைக்க பல தவறுகள் செய்ய வேண்டிவரும்.
அதை மறைக்க மேலும் தவற வேண்டி வரும். இவ்வாறு ஒவ்வொரு தவறின் பின் விளைவுகள் அவரை தொடர்ந்து துரத்தி வந்து கொண்டிருக்கும்.
எனவே அவன் விடாது பாடுபடுவான்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
தமிழ்ப் பழமொழி: அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்
அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்
நாம் பிறரிடம் பேசும் போது உள்மனதில் வஞ்சகம், பொறாமை, கோபம், காழ்ப்புணர்ச்சி போன்றவை இருப்பினும்அவரிடம் நல்லமுறையில் இனிப்பாக பேசி பழகுவோம். அல்லது காரியத்தை சாதித்துக்கொள்வோம்.
இதை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் என்பர்.
விஷம் போன்று தாக்கும் கொடுமையான சொற்களை உள்ளேயே அடக்கிக்கொண்டு நல்ல இனிப்பான சொற்களை மட்டும் எல்லோரிடமும் பேச வேண்டும். இந்த மனக்கட்டுப்பாடு அவசியம் தேவை.
இதை குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதில் இருந்தும் வள்ளுவ பெருந்தகை கனியிருப்ப காய் கவர்ந்தற்று எனும் சொல்லாடலிலும் அறியலாம்.
இதைத்தவிர மேலும் ஒரு வெளிப்படையான விளக்கம் இப்பழமொழி கூறுகிறது
நாக்கு பார்ப்பதற்கு ஒன்றாகவே இருந்தாலும் அதில் பல பாகங்கள் உள்ளது.
இன்றைய மருத்துவ அறிஞர்கள் நாக்கை பகுத்தாய்ந்து கூறுவது இனிப்புச்சுவையை உணரும் சுவை அரும்புகள் நாக்கின் நுனிப்பகுதியில் உள்ளது. கசப்புச்சுவையை அறியும் சுவை அரும்புகள் நாக்கின் கடைசி தொண்டைப்பகுதியி்ல் உள்ளது என்பதாகும்.
இதையே வெளிப்படையாக இப்பழமொழி அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும் என்று எடுத்து முதியோர்களின் மருத்துவ அறிவையும் விளக்குகிறது.

தமிழ்ப் பழமொழி: அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

அணை போட்டு தடுத்து நிறுத்தி சேமித்த வெள்ளம்(நீர்) அணையை கடந்து விட்டால் அதன் பின் அதே அணைக்கு திரும்ப முடியாது.
சரியாக பயன்படுத்தப்படாமல் வீணாகும் வெள்ளம் பிறகு தேவைப்படும் நேரம் கிடைக்காது.
வாய்ப்பு என்பது வரும் போது அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாய்ப்பு "அணை கடந்த வெள்ளம் போல" சென்று விட்டால் மறுபடி அந்த வாய்ப்பு வரும் என்று கூறமுடியாது. எனவே நேரத்தையும் வாய்பையும் பிறகு கவலைப்படாமல் இப்போதே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அணை போட்டு தடுத்து நிறுத்தி சேமித்த வெள்ளம்(நீர்) அணையை கடந்து விட்டால் அதன் பின் அதே அணைக்கு திரும்ப முடியாது.
சரியாக பயன்படுத்தப்படாமல் வீணாகும் வெள்ளம் பிறகு தேவைப்படும் நேரம் கிடைக்காது.
வாய்ப்பு என்பது வரும் போது அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாய்ப்பு "அணை கடந்த வெள்ளம் போல" சென்று விட்டால் மறுபடி அந்த வாய்ப்பு வரும் என்று கூறமுடியாது. எனவே நேரத்தையும் வாய்பையும் பிறகு கவலைப்படாமல் இப்போதே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
தமிழ்ப் பழமொழி: அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

சுவரில் ஓட்டடையிட்டு களவாடுதலுக்கு "கன்னமிடுதல்" என்று சொல்வதுண்டு.
உண்ண உணவு தந்தவர்கள் வீட்டிலேயே திருடுவது மிகப்பெரிய பாதக செயலாகும்.
மின்னல் வாழை மரத்தில் இறங்கினால், மரம் கருகி கன்னக்கோல் கிடைக்கும், அதைக்கொண்டு எந்த கடினமான சுவற்றையும் துளையிடுவிடலாம் என்பதும் ஒரு கர்ணபரம்பரை கதை..
உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா என்ற பழமொழி போல நன்றி மறக்கலாகாது என்பதை உணர்த்துவதே இந்த பழமொழியின் பொருள்.
சுவரில் ஓட்டடையிட்டு களவாடுதலுக்கு "கன்னமிடுதல்" என்று சொல்வதுண்டு.
உண்ண உணவு தந்தவர்கள் வீட்டிலேயே திருடுவது மிகப்பெரிய பாதக செயலாகும்.
மின்னல் வாழை மரத்தில் இறங்கினால், மரம் கருகி கன்னக்கோல் கிடைக்கும், அதைக்கொண்டு எந்த கடினமான சுவற்றையும் துளையிடுவிடலாம் என்பதும் ஒரு கர்ணபரம்பரை கதை..
உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா என்ற பழமொழி போல நன்றி மறக்கலாகாது என்பதை உணர்த்துவதே இந்த பழமொழியின் பொருள்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
தமிழ்ப் பழமொழி: அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
இங்கே அவன் என்பதற்கு இறைவன் என்று பொருள்.
எழுதியது என்றால் தலைவிதி என்பதைக் குறிக்கும்.
இந்துக்களின் நம்பிக்கை படி தலைவிதி என்பது முன்ஜென்ம பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஏற்பட்ட நம் கர்ம பலன்கள்.
அதை ஏற்படுத்திக்கொண்டது நாமே தான். நாம் செய்யும் செயல்களை பொறுத்து அதன் நல்வினை அல்லது தீவினையை நாம் அனுபவித்தாக வேண்டும். எனவே அவ்வினைக்கு ஏற்ப பிறவியின் விதி ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டதாக இருக்கும்.
விதியை மதியால் வெல்லலாம்என்பதும் ஒரு நம்பிக்கை. அதற்கு தியானம் போன்ற யோக முறைகளால் நம்மை நம் கர்ம பலனில் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு நாமே நம் பலனை அழித்துக்கொள்லலாம்.

தமிழ்ப் பழமொழி: அப்பியாச வித்தைக்கு அழிவில்லை
அப்பியாச வித்தைக்கு அழிவில்லை
வெகுநாளாக முனைப்புடன் பயிற்சி செய்து கற்ற வித்தை (கலை) ஆனது எக்காலத்தும் நினைவிலிருந்து அழியாமல் இருக்கும்.
வெறுமையான ஏட்டு கல்வி சில நாளில் மறந்து போய்விடும். ஆனால் அதை செய்முறை பயிற்சி செய்து பார்த்துவிட்டோமானால் அது மறக்காமல் இருக்கும்.
அப்பியாசம் = பயிற்சி செய்தல்
வித்தை = கலை
வெகுநாளாக முனைப்புடன் பயிற்சி செய்து கற்ற வித்தை (கலை) ஆனது எக்காலத்தும் நினைவிலிருந்து அழியாமல் இருக்கும்.
வெறுமையான ஏட்டு கல்வி சில நாளில் மறந்து போய்விடும். ஆனால் அதை செய்முறை பயிற்சி செய்து பார்த்துவிட்டோமானால் அது மறக்காமல் இருக்கும்.
அப்பியாசம் = பயிற்சி செய்தல்
வித்தை = கலை
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
அரசனை நம்பி புருசனை கைவிடாதே
அரசனை நம்பி புருசனை கைவிடாதே
(அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக)
அரசன் தன்னை பார்த்துக்கொள்வதாக சொன்னதை நம்பி தன் சொந்த கணவனை விட்டு வந்த பெண் பின்பு அரசனும் இல்லை கணவனும் இல்லை என்று ஆகிவிட்ட நிலையை கூறுகிறது இப்பழமொழி.
இப்பழமொழி உதாரணமாக பயன்படுத்தப்படும்.
புருசன் = கணவன்
(அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக)
அரசன் தன்னை பார்த்துக்கொள்வதாக சொன்னதை நம்பி தன் சொந்த கணவனை விட்டு வந்த பெண் பின்பு அரசனும் இல்லை கணவனும் இல்லை என்று ஆகிவிட்ட நிலையை கூறுகிறது இப்பழமொழி.
இப்பழமொழி உதாரணமாக பயன்படுத்தப்படும்.
புருசன் = கணவன்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே

இரவலாக கிடைத்த ஆடை எப்போதும் நம்முடன் இருக்கும் என நம்பி தனக்கு சொந்தமான ஆடையை களைவது முட்டாள் தனம்.
இரவல் கொடுத்தவர் எப்போது வேண்டுமானாலும் அந்த ஆடையை திருப்பி கேட்டு வாங்கிவிடலாம்.
தற்காலிகமாக வந்த பலனை எண்ணி தனக்கு சொந்தமான பொருளை விட்டுவிடாதீர்கள் என்பது பழமொழியின் பொருள்.
சீலை = சேலை, பெண்களின் மேலாடை
கந்தை = ஆடை, துணி, கிழிந்த ஆடை
இரவலாக கிடைத்த ஆடை எப்போதும் நம்முடன் இருக்கும் என நம்பி தனக்கு சொந்தமான ஆடையை களைவது முட்டாள் தனம்.
இரவல் கொடுத்தவர் எப்போது வேண்டுமானாலும் அந்த ஆடையை திருப்பி கேட்டு வாங்கிவிடலாம்.
தற்காலிகமாக வந்த பலனை எண்ணி தனக்கு சொந்தமான பொருளை விட்டுவிடாதீர்கள் என்பது பழமொழியின் பொருள்.
சீலை = சேலை, பெண்களின் மேலாடை
கந்தை = ஆடை, துணி, கிழிந்த ஆடை
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
தமிழ்ப் பழமொழி: அறமுறுக்கினால் அற்றும் போகும்
அறமுறுக்கினால் அற்றும் போகும்
ஒரு கயிறையோ துணியையோ அதன் வலிமையை மீறி முறுக்கினால் அது அறுந்துவிட வாய்ப்பு உண்டு.
இதே போல ஒருவனை அளவுக்கு மீறி திட்டினாலோ, அறிவுரை கூறினாலோ அது எதிர்விளைவை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு உண்டு.
அதனால் எதையும் அளவோடு செய்ய வேண்டும்.
அற = அதிகமாக
முறுக்குதல் = இறுக்குதல்
அற்றும் = அறுந்தும், முறிந்தும்
ஒரு கயிறையோ துணியையோ அதன் வலிமையை மீறி முறுக்கினால் அது அறுந்துவிட வாய்ப்பு உண்டு.
இதே போல ஒருவனை அளவுக்கு மீறி திட்டினாலோ, அறிவுரை கூறினாலோ அது எதிர்விளைவை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு உண்டு.
அதனால் எதையும் அளவோடு செய்ய வேண்டும்.
அற = அதிகமாக
முறுக்குதல் = இறுக்குதல்
அற்றும் = அறுந்தும், முறிந்தும்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
தமிழ்ப் பழமொழி: அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

இதன் நிஜ வடிவம் "அறிவுள்ளோர் சிநேகம் அதிக உத்தமம்" என்றிருக்க வேண்டும்.
அறிவுள்ளோர்களுடனான நட்பு நம்மையும் உயர்த்தும் பண்படுத்தும்.
சிநேகம் = நட்புறவு
இதன் நிஜ வடிவம் "அறிவுள்ளோர் சிநேகம் அதிக உத்தமம்" என்றிருக்க வேண்டும்.
அறிவுள்ளோர்களுடனான நட்பு நம்மையும் உயர்த்தும் பண்படுத்தும்.
சிநேகம் = நட்புறவு
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
" அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்"
" அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்"
அருமையான முது மொழி
1. முயற்சி செய்யாமல் பலனை மட்டும் எதிர் பார்க்கும்
பலருக்கு செயலில்லாமல் விளைவு இல்லை என்பது புறியவில்லை, கண்ணன் கீதையிலே சொன்னது போல செயலை
அல்லது , கடமையை செய் பலனை எதிர் பாராதே...
அதாவது நீ கடமையை ஒழுங்காக செய்தாலே
பலனை நீ எதிர் பார்க்க வேண்டாம், தானாகவே வரும் என்னும் பொருள் பட சொன்னது போல கடமையைக் கூட செய்யாமல் இருப்பவர்களை கடமையை செய்யத்தூண்டுவது போல இந்த முதுமொழி அமைந்திருக்கிறது.
முயற்சி திருவினையாக்கும் என்பதைத்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும் என்று சொல்லி இருக்கிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது
2. ஒவ்வொரு மனிதரும் பிறக்கும் போது
அத்துணை நாட்கள் ஒரு தண்ணீர் நிரம்பிய
பையில் நீந்திக் கொண்டிருந்தாலும் ,
அந்த தண்ணீரிலும் அந்தக் குழந்தை ஸ்வாசிக்க
காற்றையும், தொப்புள் கொடி வழியே தாய்மையின்
உணர்வுபூர்வமான சக்தி , தாய் உண்ணும்
உணவிலிருந்தே எடுக்கப்பட்டு அக்குழந்தைக்கு ஏற்ப
அவ்வுணவை மாற்றி அனுப்பிய அபூர்வ சக்தியினால்,
உணவாக அனுப்பப்பட்டும் ,
அக்குழந்தை பாதுகாக்கப்படுகிறது....
அது மட்டுமல்ல தாயின் தொப்புள் கொடியிலிருந்து
தயாரிக்கப்படும் மருந்து அந்தக் குழந்தைக்கு மட்டுமல்ல
அனைத்து குழந்தைகளுக்கும் உயிர் காக்கும் ஜீவரசமாக
இருக்கிறது என்பதை விஞ்ஜானத்தில் கண்டு பிடித்து
அவைகளைப் பாதுகாக்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்
மேலும் தாய்ப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்று நம்
முன்னோர்கள் கூறியதையே இப்போதைய
விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்து
ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்
இப்படி இன்று நாம் கண்டு பிடிக்கும் அனைத்துமே
ஏற்கெனவே ஒருவன் கண்டு பிடித்து
செயலாற்றி இருக்கிறான் என்றால்..அவன்தான்
இறைவன் என்று ஒப்புக் கொள்வதில் தவறென்ன...?
ஏற்கெனவே அவன் உருவாவாக்கியதை கண்டு பிடித்த
நமக்கே விஞ்ஜானி என்று பெயரென்றால் உருவாக்கிய அவனை இறைவன் என்று சொல்வதில் தவறென்ன ....?
என்னே இறையின் சக்தி ,..!!!
என்னே இறையின் படைப்பு ரகசியம் யார் சொன்னது இறை இல்லையென்று...? தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்
அவனன்றி ஒரு அணுவும் அசையாது.
அப்படி பாதுகாப்பாய் இருந்த குழந்தை இயற்கையின் வழியே இந்த பூவுலகுக்கு வருவதற்காக இடையே நசுக்கப் படுகிறது.
நசுக்கப் பட்டு நழுவி முதலில் தலையைக் காட்டி பின் மொத்தமாக இந்தப் ப்ரபஞ்ஜப் ப்ரவேசம் அடைகிறது, அப்படி நசுக்கப் படும்போது
அது வரை அந்தக் குழந்தை ஸ்வாசித்த காற்றும் தடைப்படுகிறது
அந்தக் குழந்தை வெளியே வந்து பூமியில் விழுந்து அதன் உடல் இயக்கம் ஆரம்பிக்க இருக்கும் அந்த இடைவெளியில் அதற்கு மூச்சுவிட காற்று தேவை.
அந்தக் காற்று உள்ளே போகும் வழியை இது வரை இருந்த குடியிருந்த கோயிலின் கருப்பக் க்ரகத்தில் இருந்த கருணையே வடிவான தண்ணீரில் இருந்து விட்டு திடீரென்று வெளியே வரும் போது புறத்தில் இருக்கும் தண்ணீர் போய்விடும் ஆனால் உள் உறுப்புகளில் முக்கியமாக ஸ்வாசக் குழாயில் இப்போது அடைத்துக் கொண்டிருக்கும்,
அந்த தண்ணீர் வெளியேறினால்தான் காற்று
உள்ளே புக முடியும் அதற்குதான் குழந்தை முயற்சி செய்து
அழ ஆரம்பிக்கிறது உரக்கக் குரலெடுத்து அழ ஆரம்பிக்கிறது, அப்படி அந்தக் குழந்தை அழும்போது அந்த தண்ணீர் ஸ்வாசக் குழாயிலிருந்து
வெளியேறுகிறது , அப்படி தண்ணீர் வெளியேறியவுடன்
குழந்தை முதல் மூச்சு விடுகிறது.
அப்படி அழவில்லையென்றால் மருத்துவச்சிகள்
அடித்தாகிலும் அக் குழந்தையை அழ விடுவர்
ஏனென்றால் அழுதால்தான் மூச்சே முதல் மூச்சே விடமுடியும்
முதல் மூச்சு விட்டால்தானே பிழைக்கும்
பிழைத்தால்தானே பால் குடிக்கும் அதனால்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும் என்று ஆன்றோர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்.
விளக்கம்: தமிழ் தேனி

தமிழ்ப் பழமொழி: ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
எண்ணித்துணிக கருமம் என்பது திருவள்ளுவர் வாக்கு.
அதே போல "ஆத்திகரக்காரனுக்கு புத்தி மட்டு" என்பதும் ஒரு பழமொழி.
ஒரு செயலை செய்யுமுன் அதை நன்கு ஆராய்ந்த பின்பே தொடங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் துவங்கினால் அது மிகத்துயரத்தை கொடுத்துவிடும்.
எண்ணித்துணிக கருமம் என்பது திருவள்ளுவர் வாக்கு.
அதே போல "ஆத்திகரக்காரனுக்கு புத்தி மட்டு" என்பதும் ஒரு பழமொழி.
ஒரு செயலை செய்யுமுன் அதை நன்கு ஆராய்ந்த பின்பே தொடங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் துவங்கினால் அது மிகத்துயரத்தை கொடுத்துவிடும்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
இனம் இனத்தோடு தான் சேரும்
இனம் இனத்தோடு தான் சேரும்
இனம் என்பதற்கு பல பொருட்களை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
பணமுள்ளவர் அதே போல பணமுள்ளவர்களிடம் உறவு வைத்துக்கொள்வதையும், ஒரே தொழில் செய்வோர்கள் தங்களுடன் நெருங்கி பழகுவதையும், மற்றும் பல இனப்பாகுபாடுகளும் அதே இனத்துடன் தான் பழக விரும்பும் என்பதையும் கூறலாம்.
பிறப்பால் ஒரு இனத்தில் பிறந்த மிருகம் நாய் பூனை போன்றவைகள் அதே இனத்துடன் பழகுவதையும் இங்கே சொல்லப்படுகிறது.
இனம் என்பதற்கு பல பொருட்களை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
பணமுள்ளவர் அதே போல பணமுள்ளவர்களிடம் உறவு வைத்துக்கொள்வதையும், ஒரே தொழில் செய்வோர்கள் தங்களுடன் நெருங்கி பழகுவதையும், மற்றும் பல இனப்பாகுபாடுகளும் அதே இனத்துடன் தான் பழக விரும்பும் என்பதையும் கூறலாம்.
பிறப்பால் ஒரு இனத்தில் பிறந்த மிருகம் நாய் பூனை போன்றவைகள் அதே இனத்துடன் பழகுவதையும் இங்கே சொல்லப்படுகிறது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
இராமன் ஆண்டா என்ன? இராவணன் ஆண்டா என்ன?
இராமன் ஆண்டா என்ன? இராவணன் ஆண்டா என்ன?
ஒரு நாட்டின் மக்களின் பார்வையில் கூறப்படும் பழமொழி இது. இதன் வெளி அர்த்தம் மக்களுக்கு தன் நாட்டை யார் ஆட்சி செய்தாலும் அதுபற்றி கவலை இல்லை என்பதாக இருந்தாலும் இராமன் , இராவணன் இருவரின் ஆட்சிச்சிறப்பையும் இது தெரிவிக்கிறது..
ஒரு அரசன் என்ற வகையில் பார்த்தால் இராமன் , இராவணன் இருவருமே நல்லாட்சியை வழங்கியவர்கள், அந்த ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடனே இருந்தார்கள் என்பதையே இராமயணம் கூறுகிறது. இராவணன் தன் ஆணவத்தாலும், காமத்தாலுமே அழிகிறான். இது இராவணனுக்கு மட்டுமல்ல எந்த அரசராக இருந்தாலும் இது பொருந்தும்.
எனவே நல்லாட்சி நடப்பதால் அந்நாட்டு மக்களுக்கு இருவரில் யார் ஆண்டாலும் கவலை இல்லை என்பதையே இப்பழமொழி காட்டுகிறது.

இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்

மணற் கேணி (நீர் ஊற்று) நீரை இறைக்க இறைக்க மறுபடி நீர் ஊறிக்கொண்டே இருக்கும். நீரை இறைக்காமல் இருந்தால் நீர் வரத்து குறைந்து விடும்.
அதே போலவே செல்வமானது அடுத்தவருக்கு கொடுத் துபயன்படுத்துவதால் மேலும் பேருகுவே செய்யும்.
ஈய = ஈதல், கொடுத்தல்
மணற்கேணி = நீர் ஊற்று
மணற் கேணி (நீர் ஊற்று) நீரை இறைக்க இறைக்க மறுபடி நீர் ஊறிக்கொண்டே இருக்கும். நீரை இறைக்காமல் இருந்தால் நீர் வரத்து குறைந்து விடும்.
அதே போலவே செல்வமானது அடுத்தவருக்கு கொடுத் துபயன்படுத்துவதால் மேலும் பேருகுவே செய்யும்.
ஈய = ஈதல், கொடுத்தல்
மணற்கேணி = நீர் ஊற்று
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
தமிழ்ப் பழமொழி: ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்
ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்
ஈக்களுக்கு விடம் (விஷம்) தலையில் இருக்குமாம். ஆனால் தேளுக்கு விஷம் அதன் கொடுக்கில் இருக்கும்.
ஈக்களுக்கு விடம் (விஷம்) தலையில் இருக்குமாம். ஆனால் தேளுக்கு விஷம் அதன் கொடுக்கில் இருக்கும்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே
காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே
பயனற்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படாது.
இப்பழமொழி பட்டினத்தார் வாழ்வில் நிகழ்ந்த சம்பவமாக கூறப்படுகிறது. இவ்வாக்கியமே பட்டினத்தார் துறவு நிலைக்கு வர உதவியதாகும்ய.
சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர், கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்தார். 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, திருவெண்காடர் சிவனை வழிபட்டார்.
இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன், வறுமையில் வாடிய சிவபக்த தம்பதியரான சிவசருமர், சுசீலை என்பவர்களின் மகனாக பிறந்தார். மருதவாணர் என்று அழைக்கப்பட்டார். ஒருசமயம் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார். மருதவாணரும் தந்தையின் தொழிலை செய்தார்.
மருதவாணரை வெளியூருக்கு அனுப்பி வாணிபம் செய்து வரச்சொல்ல அவரும் வணிகம் செய்து விட்டு வந்து தாயாரிடம் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். வீட்டிற்கு வந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எருவும் ஒரு காதற்ற ஊசியும் ஒரு ஓலையும் இருந்தது. அதில், ""காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' என்று எழுதப்பட்டிருந்தது. அதைக்கண்ட திருவெண்காடருக்கு ஒரு உண்மை உரைத்தது.
"மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது'' என்ற உண்மையை உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்து சிவனை வணங்கி அவரையே குருவாக ஏற்றார் என்பது வரலாறு.

Similar topics
» பழமொழிகள் (Proverbs in Tamil)
» தமிழ் இலக்கியம் | தமிழறிஞர்கள், புலவர்கள் Tamil Literature, Tamil scholars, poets
» ENGLISH & தமிழ் பழமொழிகள் (1)
» சற்று இளைப்பாற தமிழ் நிழல் தேடிப் போவோம் வாங்க! பழமொழிகள் சில காண்போம்...
» Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum