Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கட்டிப் போடும் பெற்றோர்... எட்டிச் செல்லும் குழந்தைகள்! உண்மைகளை உரசும் உஷார் சர்வே
Page 1 of 1

கட்டிப் போடும் பெற்றோர்... எட்டிச் செல்லும் குழந்தைகள்!
உண்மைகளை உரசும் உஷார் சர்வே
அவள் விகடன் டீம்
படங்கள் : வீ.சிவக்குமார், கு.கார்முகில்வண்ணன், ர.சதானந்த், ஜெ.பாரதி
கல்லூரிப் பெண்களிடம் அத்தனை எளிதில் கேள்விகளைக் கேட்டு பதில் வாங்கிவிட முடியாது. ஒன்று... நம் கேள்விகளை வைத்து, நம்மையே ஓட்டி எடுப்பார்கள், அல்லது... ஜஸ்ட் லைக் தட் 'நோ கமென்ட்ஸ்’ சொல்லிவிடுவார்கள். ஆனால், அவர்களின் மனதை வெளிப்படையாக அறியும் ஒரு வழி, கொஸ்டினர். அப்படி கல்லூரிப் பெண்களின் மனதை அறியும் வகையில், மிக நுணுக்கமாகவும், அக்கறையுடனும் நாம் தயாரித்த கொஸ்டினரை, தமிழகத்தின் பரவலான ஊர்களில் இருக்கும் கல்லூரி மாணவிகளிடம் கொடுத்து எடுத்தோம் ஒரு சர்வே!
'பெற்றோர்களுக்கும், பெண்களுக்கும் இடையோன புரிதல் எப்படி இருக்கிறது?' என்பதை படிப்பதுதான் நோக்கம்! இது, உறவுகளுக்கு இடையே இருக்கும் உண்மைகளை நன்றாக உரசிப் பார்க்கும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்!
பொறையாறு, மதுரை, புதுக்கோட்டை, சேலம், சென்னை, விருதுநகர், வேலூர், கோவை, தூத்துக்குடி, அரியலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், திருச்செங்கோடு என மொத்தம் 5,000 மாணவிகளிடம், அவர்களின் கல்லூரி நிர்வாக அனுமதியுடன் கொஸ்டினரை நீட்டினோம். வாங்கியவர்கள் முகத்தில் சந்தோஷம், உற்சாகம், சின்ன தயக்கம் என பலவித ரியாக்ஷன்கள். பல கேள்விகளுக்கு 'பட் பட்’டென்று நிமிடத்தில் 'டிக்’ அடித்தார்கள்.
''நல்லவேளை... காலேஜ்ல வந்து நீட்டினீங்க, வீட்டில் கொண்டுவந்து கொடுத்திருந்தீங்கனா, கண்டிப்பா பதில் சொல்லியிருக்க மாட்டோம். அப்புறம் அம்மா, அப்பா எங்க மனசை கண்டுபிடிச்சுருவாங்களே!'' என்று சிரித்தார்கள் தஞ்சாவூர் மாணவிகள்.
[size][color][font]
''பெர்சனல் விஷயங்களை முதல் முதல்ல யார்கிட்ட ஷேர் பண்ணுவீங்கனு கேட்டா, கண்டிப்பா தோழிங்கற சாய்ஸைதான் நாங்க முதல்ல 'டிக்’ பண்ணுவோம். தோழி மாதிரியே நல்ல தோழனும் எங்களுக்கு இருக்காங்க. அப்பா, அம்மா மாதிரி நம்மளை திட்டாம, அடிக்காம, சந்தேகப்படாம நாம சொல்றதை இவங்கதான் உள்வாங்கிப்பாங்க. அஃப்கோர்ஸ்... இந்த லிஸ்ட்ல அக்கா களுக்கும் இடம் உண்டு. ஆனா, அது பெரும்பான்மை கிடையாது'' என்று நீண்ட விளக்கம் தந்தபடியே, ஐந்தாவது கேள்விக்கு 'டிக்' அடித்தார்கள் திண்டுக்கல், தேனி மாணவிகள்.
தேனி, அரியலூர், கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் பாக்கெட் மணி கேள்விக்கு, ''எங்களுக்கு எல்லாம் பாக்கெட் மணினு தனியா கொடுக்கிறதில்லக்கா. பஸ்ஸுக்கு காசு கொடுக்கிறது மட்டும்தான்!'' என்றார்கள் மாணவிகள் வெகுளியாக.
'திருமணம் யாருடைய விருப்பப்படி?’ என்ற கேள்விக்கு... ''பொண்ணு படிப்பை முடிச்ச உடனேயே கல்யாணம்ங்கிற அப்பா, அம்மாக்களோட எண்ணத்தை மாத்தணும். 'ரொம்ப படிச்சா, அதுக்கேத்த மாப்பிள்ளையை நாங்க எங்க போய் தேடுறது?’னு சொல்றாங்க. என்ன கொடுமைக்கா இது..?'' என்று சோக ஸ்மைலியை வீசினார்கள் தூத்துக்குடி பெண்கள்.
[/font][/color][/size][size][color][font]
''எங்களுக்கு இருக்கிற மெகா பிரச்னையில ஒண்ணு, நாங்க வெளிய போக அப்பா, அம்மா தடா போடுறதுதான். அதனாலேயே 'புராஜெக்ட், அது... இது’னு பொய் சொல்லிட்டு வெளிய போறோம்!'' என்று ரகசியங்களைக் கொட்டிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டார்கள் சென்னை மாணவிகள் சிலர்.
''முன்ன மாதிரி இல்ல, இப்ப எல்லாம் அம்மாகிட்ட பெர்சனலா, ஃப்ரெண்ட்லியா கொஞ்சம் பேச முடியுது. போகப் போக மாறிடுவாங்கனு நினைக்கிறோம்!'' என்று ஃபைனல் டச் கொடுத்து அனுப்பினார்கள் கோவை மாணவிகள்.
பெற்றோர்களே... கல்லூரி செல்லும் உங்கள் மகள்களின் மனதை, உங்களுக்கு படம்பிடித்துக் காட்டவே.... இந்த சர்வே.
'உங்கள் பெற்றோர், உங்களுடன் அதிக நேரம் செலவழிக்கிறார்களா?' எனும் கேள்விக்கு, 41% பேர் 'இல்லை' என்று பதில் கூறியிருப்பது, கவலைக்குரிய விஷயமே!

'மனது விட்டு உங்களின் பெர்சனல் விஷயங்களை யாரிடம் முதலில் பகிர்ந்து கொள்கிறீர்கள்?' எனும் கேள்விக்கு, அம்மாக்களின் சதவிகிதம் 20. இதுவே யோசிக்க வைக்கும் விஷயம்தான். இந்நிலையில், அப் பாக்களின் சதவிகிதம்... 6 என்பது ரொம்ப ரொம்ப கவலையுடன் யோசிக்க வைக்கிறது. குழந்தைகளின் முதல் தோழியாக, தோழனாக இருக்க வேண்டியது பெற்றோர்கள்தானே! குழந்தைகளுக்கு நாம் காது கொடுக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதைத்தான் இது வலியுறுத்துகிறது.
இப்படி ஒவ்வொரு கேள்வியின் மூலமாகவும் குழந்தைகளின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், விருப்பங்கள், கோபங்கள் எல்லாவற்றையும் இந்த சர்வே முடிவுகள் அழகாக படம்பிடித்துள்ளன. அதற்கு தகுந்தாற்போல் உங்களை கொஞ்சம் சரிசெய்துகொண்டால், நீங்கள் அவர்களின் பெஸ்ட் பேரன்ட் மட்டுமல்ல, பெஸ்ட் ஃப்ரெண்டும்கூட!
பிறகென்ன... குழந்தைகளின் எதிர்காலம், நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மேலாக ஜொலிக்குமே!
[/font][/color][/size]
[size][color][font]
ஆச்சர்யமான விஷயம்!
சர்வே முடிவுகளை, சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ரங்கராஜனிடம் சேர்ப்பித்தோம். அதை அலசியவர், ''பிள்ளைகளுடன் நட்பாக இருக்கலாமா, எந்தளவுக்கு இருக்கலாம் என்பதே பல பெற்றோர்களுக்கு குழப்பமாக இருக்கிறது. கல்லூரி மாணவர்களோ... 'சக தோழி, தோழன்கள்தான் தங்களின் எண்ணத்தை ஒத்தவர்களாக, நவீன உலகத்துடன் அப்டேட் ஆனவர்களாக இருக்கிறார்கள்' என்று நம்புகிறார்கள். அதை தவறென்று பெற்றோர்கள் சொல்ல, சரி என்று குழந்தைகள் நிரூபிக்க முயல, அங்கேதான் இருதரப்புக்கும் இடைவெளி விழுகிறது.
'என் குழந்தைக்கு நல்ல நண்பனாக இருக்கிறேன்' என்பதற்காக, உங்கள் சோகத்தை எல்லாம் பகிர்வதோ... உங்கள் தோழிகளுடன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவர்களையும் அழைத்து செல்வதோ... கூடாது. நண்பனாக இருக்க வேண்டுமென்றால், குழந்தைகள், எல்லாவற்றையும் உங்களிடம் மனம் திறந்துபேசும் அளவுக்கு நட்பாக இருங்கள்.... அதுபோதும். ஓவர் ஆக்ஷன் தேவையில்லை.
பிள்ளைகள் தவறு செய்துவிட்டார்கள் என்றால், கண்டித்து, அடித்து, களேபரப்படுத்தாமல், தானாக விழுந்து எழுந்து உணர இடம் கொடுங்கள். கீழே விழாமலேயே இருந்தால்... எப்படி அதன் வலி பற்றி அவர்கள் அறிவார்கள்?'' என்று கேட்ட மருத்துவர் ரங்கராஜன்,
''இந்த சர்வேயில், கல்லூரி கால ஆண் - பெண் நட்பை பெற்றோர் சகஜமாக பார்க்கிறார்கள் என்று 63% பேர் பதில் சொல்லி இருப்பதே... ஆச்சர்யமான, பாராட்டப்பட வேண்டிய விஷயம். இது, பெற்றோர்கள், பிள்ளைகளை புரிந்துகொள்ள முயல்கிறார்கள் என்பதற்கான சான்று!'' என்று புன்னகைத்தபடியே சொன்னார்.[/font][/color][/size]

Similar topics
» பள்ளி அறைக்கு செல்லும் வயதில் "பள்ளியறை' செல்லும் குழந்தைகள்: தென்மாவட்டங்களில் அவலம்
» பெற்றோர் உஷார் : 15 நாளில் 11 மாணவ, மாணவியர் மீட்பு
» குழந்தைகள் கல்வி கடனுக்காக உடல் உறுப்பை விற்கும் பெற்றோர்
» உஷார்., உஷார்., ஒரு வைரஸ் வருகிறது ; டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா ?
» வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்! சா.வடிவரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum