TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கணினித் துறையில் பூனையா? ஐயோ பாவம். இந்தக் கத்துக்குட்டியின் 3 + 3 பதில்கள்.

2 posters

Go down

கணினித் துறையில் பூனையா? ஐயோ பாவம். இந்தக் கத்துக்குட்டியின் 3 + 3 பதில்கள். Empty கணினித் துறையில் பூனையா? ஐயோ பாவம். இந்தக் கத்துக்குட்டியின் 3 + 3 பதில்கள்.

Post by sakthy Wed Mar 05, 2014 5:48 pm

கணினித் துறையில் பூனையா? ஐயோ பாவம். இந்தக் கத்துக்குட்டியின் 3 + 3 பதில்கள்.

1.Proprietary என்பது open spource ற்கு எதிரானது. அதாவது ஒரு கணினி, கைத்தொலைபேசி நிறுவனம் ஒன்று தங்கள் தயாரிப்பை வெளியிடும் போது இயங்குதளத்தையும் நிறுவி விடுகிறார்கள்.பொதுவாக கைத்தொலைபேசிகளில் நிறுவப்பட்ட இயங்குதளம் windows என்றோ,Android என்றோ இருக்காமல் proprietary என இருந்தால்,அந்த இயங்குதளம் அந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்று பொருளாகும்.அதற்கு மேலதிகமாக கட்டணம் அறவிடப்படாது இலவசமாக இருக்கும். இப்படியான Proprietary Software களை closed-source software எனவும் சொல்கிறார்கள்.

2.Service Pack (SP) என்பது ஒரு இயங்குதளத்தில் தொடர்ச்சியாக வருவது.XP SP1,XP SP2 ,SP 3 (தற்போது உள்ளது.)
வின் 7 இன் SP இப்போது ஒன்று (SP 1)
அதாவது, ஒரு OS ஐ வெளியிடுவோர் (உதாரணமாக மைக்ரோசொப்ட்) தங்கள் இயங்குதளத்தில் ஏற்பட்ட தவறுகள் (bug) ,திருத்தங்கள், பாதுகாப்புகள்(security) போன்றவற்றை தொடர்ந்து updates ஆக வெளியிட்டு வருவார்கள். இதை patches என்பார்கள். இந்த திருத்தங்கள் பொதுவாக automatic updates ஆக அடிக்கடி நமது கணினிகளுக்கு வருகிறது.நாம் வேண்டுமானால் automatic update செய்யாமல் விடலாம். அப்படி செய்யாவிட்டால் திருத்தங்கள் நம் கணினிக்கு வராமல் போய் விடும். இப்படி தொடர்ந்து வரும் updates களை தொகுத்து ஒரு தொகுப்பாக SP எனக் கொடுக்கிறார்கள். இது 1,2,3 எனத் தொடரும்.

ஒரே வசனத்தில் சொல்ல வேண்டுமானால் பல update (patches) களின் தொகுப்பே இந்த service Pack ஆகும்.

இப்போது முதல் வந்த XP யில் உள்ள தவறொன்றை நம்மால் திருத்த முடியாது போகுமானால், SP 1 ஐ நாம் இன்ஸ்டால் செய்தால் அந்தத் தவறைத் தானாக திருத்த, ஒரு fix என்ற tool ஐயும் சேர்த்திருப்பார்கள். XP யின் தற்போதய தொகுப்பு SP 3 இதை இன்ஸ்டால் செய்தால்,இதுவரை வந்த update களில் உள்ள அனைத்தும் ,அத்துடன் தவறுகள் திருத்தும் வசதி போன்ற அனைத்தும் அதில் சேர்க்கப்பட்டிருக்கும்.

முதல் XP ஐ வைத்திருப்பவர்கள் தற்போதய SP 3 ஐ இன்ஸ்டால் செய்து கொண்டால், பல பிழைகள் இல்லாத புதுப் பொலிவுடன் வசதிகளுடன் காட்சி தரும்.

இதில் ஒன்றை சொல்லலாம். தொடக்கத்தில் தமிழ் இணைப்பு XP யில் ஏற்படுத்துவது சிரமம். SP 3 இல் இந்த தமிழ் இணைப்பு (Multilingual User Interface (MUI )-பல மொழி வசதி) சேர்த்துள்ளார்கள்.
எனவே service Pack இணைப்பது நமக்கு அதிக வசதியும் உதவியும் ஆகும்.

win XP April 8 உடன் update நிறுத்தப்படுகிறது. XP உள்ளவர்கள் அப்படியே எதையும் மாற்றாமல்,கோப்புகள் போன்றவற்றை பிரதி எடுக்காமல் வின் 7 போன்றவற்றுக்கு மாற்ற மைக்ரோசொப்ட் LapLink உடன் இணைந்து PCmover Express என்ற migration tool ஒன்றை இலவசமாக வெளியிட்டுள்ளது.

3.start -command prompt-cmd – அதன் பிறகு powercfg -energy என்பதை type செய்யவும்.
சிறிது நேரத்தில் சில விளக்கங்களுடன் details ஐ ஒரு html பக்கத்தில் பார்க்கவும் என வரும்.உதாரணமாக
C:users\........\energy-report.html for more details என வரும்.
அந்த இடத்திற்கு சென்றால் ஒரு இடத்தில் Battery:Battery Information என்பதற்குக் கீழ் Design Capacity.............எனவும்,
Last Full Charge................ என்றும் வரும்.அதில் FC ஐ DC ஆல் பிரித்து 100 இனால் பெருக்கினால் வரும் வீதம் பாட்டறியின் பாவனைக்காலம்.
இதை Power optins -adv settings இல் சென்று சில பாட்டறியின் நிலையைக் கண்டறிய முடியும்...வின் 7

4.warranty என்பது ஒரு பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனம் எழுத்து மூலம் கொடுக்கும் ஒரு உத்தரவாதம்.. அப்படிக் கொடுத்தால்,அந்தப் பொருள் குறிப்பிட்ட காலத்திற்குள் பிழைகள்,பழுதுகள் ஏற்படும்போது,அதை சரி செய்து,பழுதடையும் பாகங்களை இலவசமாக மாற்றிக் கொடுப்பார்கள். பொருளை மாற்ற அல்லது பணத்தை திருப்பி கொடுக்க மாட்டார்கள். Warranty ஒரு எழுதப்பட்ட guarantee என சொல்லலாம்.அமெரிக்காவில் சில பொருட்களுக்கு warranty law வின்படி திருப்தி ஏற்படாத போது (dissatisfaction) இழப்பீடு தரல் வேண்டும்.(பணம் திருப்பிக் கொடுக்க வேண்டும்)

Guarantee என்பது விற்பனையாளர், வினியோகம் செய்பவர்களால் கொடுக்கப்படும் எழுதப்படாத உறுதிமொழி. அதாவது ஒரு பொருளை வாங்கும் போது தரும் பற்றுச்சீட்டு,ரசீது போன்ற ஒன்றை (பிணையாக) வைத்து கொடுக்கும் உறுதி மொழியாகும். இந்த வகையில் திருப்தியடையாத போது பொருளை மாற்ற,அல்லது பணத்தை திருப்பிப் பெற முடியும். வாகனம்,மற்றும் பொருட்களை திருத்திக் கொடுத்து விட்டு, நான் கரன்டி( guaranty) பண்ணிக் கொடுக்கிறேன்,ஒரு வருடம் எந்த தகராறும் கொடுக்காது..... இப்படி சொல்வார்களே அது.சில இடங்களில் (பணம் போன்ற) பிணை (surety) எனவும் சொல்லலாம்.

சில இடங்களில் முன்பணம் கொடுக்கிறார்கள். இதை சிலர் அச்சாரம் என்கிறார்கள். இதுவும் guarantee க்குள் வருகிறது.

சில பொருட்களுக்கு warranty ,guarantee இரண்டுமே இருக்கும். ஒன்று உற்பத்தியாளர்களாலும், அடுத்தது விற்பனையாளர்களாலும் கொடுக்கப்படுகிறது.

5.Windows Defender என்பது முன்னைய வின்டோஸ் வேர்சங்களிலும் இருந்தது என்றாலும்,அதிக சலுகைகள் இருக்கவில்லை.அதனால்தான் அப்போது மைக்ரொசொப்ட் Microsoft Security Essentials என்ற அன்டிவைரஸை முழுப் பதிப்பாக உருவாக்கி இலவசமாகத் தந்தார்கள். 2012 இல் முதல் தரத்தில் இருந்த MSE சென்ற வருடம் மூன்றாவது இடத்திற்கு சென்றது. காரணம் மூன்றாம் தரப்பு அன்டிவைரஸ்கள் வியாபார நோக்குடன் இயங்கியதால், பல விதத்திலும் தரத்தில் உயர்ந்ததாக இருந்ததுதான்.நாளை இவை கூட தரத்தில் மாறுபடலாம்.WD முதல் இடத்திற்கும் செல்லலாம்.

Windows Defender உம் MSE உம் ஒன்றாகவே உள்ளன. அதிக வித்தியாசம் கிடையாது. இன்றைய அன்டிவைரஸ்களில் எவையும் 100 வீதம் பாதுகாப்பானவை அல்ல என்பதை ஒத்துக் கொண்டாகவே வேண்டும்.

பொதுவாக விண்டோஸ் 8/8.1 இல் உள்ள Windows Defender போதுமானதாகும். Third Party Antivirus சில WD ஐவிட சிறிது அதிக பாதுகாப்புடையது என்பதை மறுக்க முடியாது.ஆனால் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,one donkey at a time, என்பது போல் ஒன்றுக்கு மேற்பட இன்ஸ்டால் செய்தால் சில மாதங்களில் அல்லது உடனே conflict வர வாய்ப்புக்கள் அதிகம்.அதனால் ஒன்றை வைத்திருப்பதுதான் சிறந்ததாகும். Third party antivirus (Avast,AVG,Panda......) இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால்,WD ஐ நிறுத்தி,off செய்து விட்டு ஒன்றை மட்டும் பாவிக்கலாம்.

அதே சமயம் சில அன்டிவைரஸ்கள் இரண்டாவது ஒன்றை இன்ஸ்டால் செய்ய customs install என்ற முறையில் அனுமதிக்கிறது.

WD வைத்துக் கொண்டால்,சந்தேகம் பயம் இருந்தால்,வாரம் ஒருமுறை Malwarebytes மூலம் ஸ்கான் செய்து கொள்ளலாம்.ஆபத்தான இணையப் பக்கங்களுக்கு செல்லாமல் விடலாம். மென்பொருள் போன்ற எதையாவது தரவிறக்கம் செய்யும் போது,இணையத்தில் வைத்தே வைரஸ்,மால்வெயர் ஸ்கான் செய்தபின் தரவிறக்கலாம்.

எனவே நாம் சில பாதுகாப்பு முறைகளைக் கையாண்டாலே போதுமானது. ஒவ்வொருவர் சொல்லும் போதும் பயமுறுத்தும் போதும் அங்கேயும் இங்கேயும் ஓட வேண்டியதில்லை.

WD ம் MSE ம் முதலாவது இடத்தில் இல்லாத போதும் கூட,மற்றவற்றை விட தரத்தில் சிறந்தது தான். மால்வெயர்களைக் கண்டறிவதில் சிறிது குறைபாடுகள் இருப்பதற்காக வேறொன்றை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது.

6.Raw Drive பொதுவாக format failure, physically damage, virus attack ,ஃபொர்மட் செய்யும் போது மின் துண்டிப்பு போன்ற காரணங்களால், கணினியால் அந்த வந்தட்டை கண்டறிவதில் சிரமம் ஏற்படும் போது வரும் செய்தியாகும்..
The disk in drive is not formatted. Do you want to format it now? என்ற கேள்வி கேட்கப்படும்.இதில் நீங்கள் ஆம் அல்லது இல்லை என எந்தப் பதிலைக் கொடுத்தாலும் பலன் கிடைக்காது. ஆம் எனக் கொடுத்தாலும் போர்மட் செய்யப்படமாட்டாது.

அதனால் முதலில் data recovery ( icare,Rucuva,Easeus)மூலம் அதில் இருக்கும் தரவுகளை திரும்பப் பெறல் வேண்டும்.எந்தக் காரணம் கொண்டும் அந்த டிஸ்க் கில் சேமிக்கக் கூடாது. காரணம் overwrite செய்வது மேலும் பிரச்சனைகளைத் தரலாம்.

boot sectors பிரச்சனைகள் இருந்தால் chkdsk (CHKDSK/r )மூலம் சரி செய்து பார்க்கலாம். ஆனாலும் chkdsk ,Raw disk இல் உள்ள பிழைகளை ஸ்கான் செய்யாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். Partition இருந்தால் நீக்கி அல்லது புதிய partition ஐ (new volume) உருவாக்கி,unallocated partition ஆக வைத்தும், chkdsk செய்தும் வேண்டுமானால் ஃபொர்மட் செய்தும் பார்க்கலாம்.
எதுவும் சரிவரவில்லையா?

Motherboard உடன் உள்ள இணைப்பை நீக்கி வேறு இணைப்பில் இணைத்துப் பார்க்கலாம். chkdsk க்குப் பதில் testdisk என்ற tool மூலம் முயற்சிக்கலாம்.
BIOS setup ஐயும் சரி செய்து பார்க்கலாம்.

சில சமயம் வின் 7 அல்லாத xp போன்றவற்றில் அந்த வந்தட்டு வேலை செய்யக் கூடும். மாற்றிப் பார்க்கலாம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கணினித் துறையில் பூனையா? ஐயோ பாவம். இந்தக் கத்துக்குட்டியின் 3 + 3 பதில்கள். Empty Re: கணினித் துறையில் பூனையா? ஐயோ பாவம். இந்தக் கத்துக்குட்டியின் 3 + 3 பதில்கள்.

Post by logu Thu Mar 06, 2014 7:53 am

கணினி தகவல் அனைத்தும் அருமை சக்தி
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum