TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள்

2 posters

Go down

ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள் Empty ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள்

Post by krishnaamma Sat Mar 01, 2014 7:54 am

[You must be registered and logged in to see this image.]வாழ்க்கை வரம் நமக்கு ………….. வாழதெரிந்தால் ! அப்படி வாழத் தெரிந்தவர்கள் இங்கே சில பேர். தெரியாதவர்கள்தான் பல பேர் . அந்தச் சிலரைப் பலராக்கும் அக்கறைதான் இந்த இணைப்பின் நோக்கம்!
நம் வாழ்கையில் ஆனந்தம் அட்சயபாத்திரமாக  இருக்க வேண்டும் என்பதுதானே நம் அனைவரது விருப்பமும் ?! அதற்கு எந்தப் புரட்டிப் போடும் புரட்சியும் தேவையில்லை. நம்முள் கொஞ்சம்  மாற்றம் போதும் .
“என்னை நானே கொண்டாடிக் கொள்கிறேன்”  என்பார் ஓஷோ ![/color][/size]
அப்படி உங்களை நீங்களும் கொண்டாடுவதற்கு உங்கள் மனதை இன்னும் அழகாக்கும் சூட்சுமம்  சொல்லத்தான்………. இந்த  ஆனந்தமான வாழ்க்கைக்கு  ‘ !
வாருங்கள் சதம் அடிப்போம் .
மனதில்  ஊறட்டும் உற்சாகம் !

  1. சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை . சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான் . எனவே கன்ட்ரோல் நம்மிடம்தான் . எனவே ஆனந்தமாக இருக்க வேண்டுமா , வேண்டாமா என்பதை முடிவு செய்ய  வேண்டியது நீங்கள்  மட்டும் தான் .
  2. வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாக கழிக்காதீர்கள்.  கொஞ்சம்  இலகுவாகவும் நகைசுவையாகவும் அணுகுங்கள் அருகில் இருப்பவர்கள் நகைச்சுவை சொன்னால் சிரியுங்கள் . தினமும் இரண்டு , முன்று நபர்களையாவது சிரிக்க வையுங்கள் . சிரிப்பு ஒரு தொற்று நோய். இடம் விட்டு இடம் பெயர்ந்து ஆரோக்கியமாக பரவும் .
  3. உடற்பயிட்சியும் ஆரோகியமான உணவும் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் ; உடலின் சக்தி தேவையை  நிறைவேற்றும் .உற்சாகமாக உணர்வீர்கள் . உடற்பயிற்சியின்போது உடலில் சுரக்கும்  ‘என்டோர்பின்’ களால்  மனது புத்துணர்வு பெரும் என்கிறது மருத்துவ உலகம்.
  4. வேலை , கடமை இத்யாதிகளுக்கு  மத்தியில் புத்தகம் படிப்பது , நன்றாக ஒரு குளியல் போடுவது ,இசை கேட்பது ….இப்படி ஏதாவாது உங்கள் மனதுக்கு பிடித்த  ஒரு செயலுக்கு தினமும் சில நிமிடங்கள் ஒதுக்குங்கள் .அதேபோல் , தினமும் கொஞ்ச நேரம் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சிதரும் பசுமையான நினைவுகளை அசைபோடுங்கள் .
  5. ஆனந்தம் என்பது ‘லக்’ அல்ல , நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவுதான் என்பதில் தெளிவாக இருங்கள் .அன்னப் பறவையாக மாறி நல்லவற்றையும்  அதிகம் கவனியுங்கள். உங்களை கடந்து போகும் சம்பவங்களில், சந்தோஷமான விஷயங்களை அதிகம் உள்வாங்குங்கள் .
  6. தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி கடலில் போடுங்கள் . ஏதேனும் தவறு , தோல்வி நடந்தால் அதற்குரிய காரணத்தை ஆராய வேண்டுமே தவிர ,,,,,,,,,,,,, நத்தை ஓட்டுக்குள் முடங்கி விடகூடாது
  7. உங்கள் மனதை நீங்கள் தான் உ ற்சாகபடுத்தவேண்டும். குழந்தைகளுடன் செலவிடும் சந்தோஷ தருணகங்கள், நல்ல நகைசுவை திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை உங்களை ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்கிறார் ஆராச்சியாளர்கள் .
  8. திருத்தமாக உடையணிந்து நேர்த்தியாக இருக்க பழகுங்கள் . மனோரீதியாக அது உங்களை தன்னம்பிக்கையாகவும் ,ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வைக்கும்.
  9. புது இடங்களை பார்ப்பது, புது மனிதர்களுடன் பழகுவதெல்லாம் உற்சாகமான வாழ்கையின் வழித்தடங்கள் . எனவே அவ்வப்போது ‘ வெளியே’ செல்லுங்கள். பரிசுத்தமான இயற்கையின் இடங்கள் இதற்கான சிறந்த இடமாக இருக்கும் .
  10. ஆன்மிகவாதியாக இருங்கள். ஆனால், மதவாதியாக மாறிவிடாதீர்கள். உங்களுக்கு ஆனந்தமும் நிம்மதியும் தரும் நூல்களை வாசியுங்கள் .
  11. கவலைகள் இல்லாத மனிதன் இல்லை. அவற்றையும் வாழ்கையின் ஒரு பாகமாக் ஏற்றுக்கொள்ளுங்கள் . காலம் கவலையை ஆற்றிவிடும்.
  12. விருப்பமிருந்தால் ஒரு செல்லப்பிராணியை வளருங்கள் . அதனுடன் தினமும் நேரம் செலவிடுங்கள் . எதிர்பார்ப்பில்லாத அன்பு , அதனிடம்  நிறையவே  கிடைக்கும் !
  13. தினமும் காலையில் ஒரு ஆனந்தமான நாள் உங்களுக்காக  காத்திருக்கிறது என்று விழித்து  கொள்ளுங்கள் .இரவு படுக்கைக்கு செல்லும் முன் அன்றைய நாளின் சந்தோஷங்களை அசைபோடுங்கள் . யாரையாவது காயபடுத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்  என முடிவெடுங்கள்.
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள் Empty Re: ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள்

Post by krishnaamma Sat Mar 01, 2014 7:55 am

நல்ல அம்மா நீங்கள் தான் !
குழந்தைகள்[/b] ஏதாவது தவறு செய்தால், அது தவறு என்பதை அவர்களுக்கு உணரசெய்யுங்கள் . உணர்ந்த பின் மேம்படும் மீண்டும் அறிவுரை சொல்லாதிர்கள்.

[*]உங்களுக்கு பிடித்த எல்லாமே உங்கள் குழந்தைக்கும் பிடிக்க வேண்டும் என்பதில்லை . எனவே ,குழந்தையின் ரசனைக்கு மதிப்பு கொடுங்கள்.
[*]குழந்தைகள் உங்களை எரிச்சல் படுத்தும் . மதிக்காதது போல் தோன்றும் .உங்களுக்கு பிடிக்காததை செய்யும். பொறுமை ரொம்ப முக்கியம். அவர்கள் குழந்தைகள் தானே?!
[*]எண்ணங்கள் முடியல ……………… ‘நீங்களாவது டாக்டர் ஆகுங்கள் ‘ என்று உங்கள் ஏக்கங்களை அவர்களின் இலட்சியங்களாக திணிக்காதீர்கள் . குழந்தைகளின் விருப்பங்கள் சார்ந்தே அவர்களின் எதிர்காலமும் அமையட்டும்.என்று எந்தநிலையிலும் அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை கொடுங்கள் . பயத்தை பழகவிடாதிர்கள் .
[*]அம்மா, அப்பா இருக்கோம் ‘   என்று எந்தச்  சந்தர்பத்திலும் அவர்களுக்கு பாதுகாப்பு  உணர்வைக் கொடுங்கள் . பயத்தை  பழக விடாதீர்கள்.
[*]குழந்தைகளின் ரசனையை ஊக்கபடுத்துங்கள்.இசை , நடனம் ,விளையாட்டு  என்று அவர்களுக்கு விருப்பமனத்தில் அவர்களை சேர்த்து விடுங்கள்.
[*]நீங்கள் ஏதாவது தவறு செய்தால் குழந்தையிடம் மன்னிப்பு கேட்கலாம் ………..தவறில்லை. தப்பு செய்தால் மன்னிப்பு கேட்க  வேண்டும் என்ற பழக்கத்தை  அது குழந்தையிடம் ஆழமாக பதித்து  விடும்.
[*]குழந்தைகளுடன் குடும்பமாக   அவ்வப்போது வெளியே சென்று வருவது , பெற்றோர் – குழந்தைகள் பிணைப்பை வலுவாக்கும்
[*]‘உன்னைப் பத்து மாசம் சுமந்தவ நான் ‘ என்றெல்லாம் சொல்லவேண்டாம்   குழந்தைகள் அதற்குரிய பருவம் வரும்போது  தானாக புரிந்து கொள்ளும் .
[*]குழந்தைகளின் சின்னச் சின்ன குறும்புகளுக்கு தண்டனை கொடுக்காதீர்கள். வாழ்கை ஒரு பாடம் தான் . ஒவ்வொரு பருவத்திலும் சில சேட்டைகள் இருக்கும் . அதை அனுமதியுங்கள்.
[*]குழந்தைகளின் சின்னச்  சின்ன  வெற்றிகள், திறமைகளைப் பாராட்டுங்கள். பாராட்டுக்கள் அவர்களுடைய வழியை அவர்களுக்கு உறுதிப்படுத்தும் . நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்ய உற்சாகப்படுத்தும்.
[*]‘முக வாட்டமா, மன அழுத்தமா, ஆனந்தமா……’ என்று குழந்தைகளின் மன நிலயை எப்போதும் கவனித்துக் கொண்டே இருங்கள்  .ஒரு நல்ல அம்மாவின் அடையாளம் அது .
[*]குழந்தைகளுக்கு வீட்டில் உள்ள வேலைகளில் சின்னச் சின்ன பொறுப்புகளை கொடுங்கள். தப்பும் தவாறுமாக அவர்கள் பழகட்டும் . முடிவுகளை எடுக்க ஊக்கப்படுத்துங்கள். இவையெல்லாம் குழந்தைகளுக்கு பொறுப்பையும் தன்னம்பிக்கையும் தரும் .
[*]அம்மா ஆனவுடன் உடற்பயிட்சி எல்லாம் மூட்டை கட்டி வைதாயிட்டா ? தவறு. சிறு சிறு உடற்பயிட்சிகள். செய்யுங்கள் . உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள் . உங்களைப் பார்த்து  குழந்தைகளுக்கு  உடற்பயிட்சி செய்ய ஆர்வமாகும்.
[*]வீட்டு வேலை ஒவ்வொன்றாக முளைத்துக்கொண்டுதான்  இருக்கும் . எனவே , உடல் அசதியாக இருந்தால் நித்திரை செய்து ஓய்வெடுங்கள் .குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும் போது முகத்தில்  அசதியைக்  காட்டாதிர்கள்.
[*]குழந்தைக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருங்கள் .’நான் அம்மா மாதிரி இருக்கணும்’ என்று குழந்தை நினைக்க வேண்டும். உங்கள் சொல்  ஒன்று ……. செயல் ஒன்றாக இருப்பது பயன் தராது .
[*]குழந்தைக்கு ஒரு நல்ல தோழியாகவும் இருங்கள் . பள்ளி கதை பள்ளி வாகணக் கதையெல்லாம்  அவர்கள் ஆர்வமாக பேச வரும் போது , அதை தட்டி கழிக்காமல் கேளுங்கள் .
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள் Empty Re: ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள்

Post by krishnaamma Sat Mar 01, 2014 7:56 am

மகிழ்ச்சியை வேலையில் தொலைத்து விடாதீர்கள்.!

வேலை முக்கியம் தான் .ஆனால் வாழ்க்கை என்பது வேலை மட்டும் இல்லை . எனவே , அதற்கான நேரத்தை மட்டும் அதற்காக ஒதுக்குங்கள் .வாங்கும் சம்பளத்துக்கு குறைவில்லாமல் வேலை பாருங்கள் , கூடுதலாக வேண்டாம் . அலுவலத்துக்காக  குடும்ப ஆனந்தங்களை தலை முழுகாதீர்கள்.
உங்களுக்கு விர்ப்பமான வேலையையே  தேர்வு செய்யுங்கள் .செயல்பாட்டு துறையில் ஆர்வத்தை வைத்துக்கொண்டு  கணக்கு எழுதப்பொகாதீர்கள்.
உங்களால் செய்ய முடியாதவற்றை , கன்னியமாக மறுத்துவிடுங்கள் .மேலதிகாரியை திருப்திப் படுத்த அதிக வேலையே தூக்கி தலையில போட்டுக்கொள்வது மன அழுத்தத்தை தரும் .
உடன் பணி புரிபவர்களின் உதவிகள் தேவை படும் போது தயங்காமல்  பெற்றுக்கொள்ளுங்கள் .தானே செய்வேன் என அடம் பிடிக்காதிர்கள் .அதே போல இக்கட்டான  நேரங்களில் அவர்களின் வேலையே பகிர்ந்து கொள்ளுங்கள் .
வேலையையும் அது சார்ந்த பதட்டங்களையும்  முழுவதாக மறக்க சில நாட்கள் மிக அவசியம் .எனவே, கெடைக்கும் ஓய்வு நாட்களில் குடும்பத்துடன் வெளியே எங்கேனும் சென்று வாருங்கள் .
மேல் அதிகாரியிடம்  வாக்குவாத சூழலை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள் .பலர் முன்னிலையில் மேலதிகாரியின் அறியாமயியா வெளிப்படுத்த நினைக்காதீர்கள்.
இங்கு பலரின் கவலையும் ‘இந்த வேலையை எப்பிடி முடிக்கப் போகிறோம் ?.என்பதைவிட , அந்த வேலையைத்  தொடங்குவதில்தான் . நம்பிக்கையான தொடக்கம் நேர்த்தியான முடிவைத் தரும் .எனவே ,எந்த வேலையையும் நம்பிக்கையுடன் தொடங்குங்கள் .
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள் Empty Re: ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள்

Post by krishnaamma Sat Mar 01, 2014 7:57 am

போடுங்கள் அட்டவணை !

உங்கள் வாழ்கையின் சந்தோஷங்களை வரிசைப்படுத்துங்கள் .பெரும்பாலும்   அவை குழைந்தைகள் , வாழ்க்கைத் துணை ,நல்ல வேலை , ஆன்மிகம் ,உடல்நலம்  என நீளும் . அதன் அடிப்படையில் உங்கள் நேரத்தையும் கவனைத்தையும் செலவிடுங்கள் .
எவற்றுக்கெல்லாம் தேவையில்லாமல் அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை பட்டியலிடுங்கள். அவற்றை ஒதுக்குங்கள் அல்லது சுருக்குங்கள். தொலைகாட்சி , கையடக்க தொலைபேசிகள்  முதலியன    சில    உதாரணங்கள்.
உங்கள் பணிகளைத் திட்டமிட்டுச் செய்யுங்கள். குடும்பத்துக்கான நேரத்தில் அலுவலகமும், அலுவலக நேரத்தில் குடும்பமும் தலையிட வேண்டாம்.
வாரக் கடைசியில், நீங்கள் உணர்ந்த சந்தோஷ தருணங்கள், மற்றவர்களுடன்  சேர்ந்து சிரித்த நிமிடங்கள் ஆகியவற்றை பட்டியல் போடுங்கள் . இது, உங்கள் வாழ்க்கை எந்தளவுக்கு ஆனந்தமாக கழிகிறது என்பதை அறிவதற்கான சுய பரிசோதனை.
நேரம் தவறாமை , மிக முக்கியம். காலை முதல் இரவு வரை அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பது ………………… பதற்றம் ,பரபரப்பு முதலியவற்றை நம் வாழ்வில் இருந்து விரட்டும். வேலைகளுக்கு செல்லும் பெண்கள், அடுத்த நாளுக்கான உடையில் இருந்து தங்கள் இருசக்கர வாகனம் வரி சரி செய்தால் மேற்பார்வை எல்லாம் முதல் நாள் இரவே முடித்து விட வேண்டியது நல்லது .
மின்-அஞ்சல் பார்க்க, கடிதம் எழுதுவதெல்லாம் காலை, இரவு என ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு நேரம் வசதியாக இருக்கும். உங்களுக்கான அந்த நேரத்தைக் கண்டுபிடித்து ,அந்த வேலைகளை அந்த நேரத்துக்கு ஒதுக்குங்கள்.
டையரி எழுதுங்கள் . வாரம்,மாதம், வருட இறுதிகளில் உங்கள் டையரியை  புரட்டுங்கள். உங்களது இலக்குகளையும், அதற்கு நீங்கள் கொடுத்துள்ள உழைப்பையும் அறியலாம் .
நம்பிக்கை, குடும்ப வாழ்க்கையின் அஸ்தி வாரம். மற்றவர்கள் உங்கள் துணை மீது சொல்லும் குற்றச்சாட்டுகளைப்  போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், அவரிடமே நேரடியாக கேட்டு விடுங்கள். அதேபோல உங்கள் துணியை யாரிடமும் விட்டுக் கொடுத்துப் பேசாதீர்கள் .
உங்கள் துணைக்கு நீங்கள் என்ன வாக்குறுதி கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவதில் உறுதியா இருங்கள்.  நிறை வேற்ற  முடியாத  வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பதே நன்று .
வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு  மதிப்பு கொடுங்கள் . முடிவுகள் எடுக்கும் போது  கலந்துரையாடுங்கள் . ஒருவருக்கொருவர் முக்கியத்துவம்  கொடுப்பது,  ஆரோக்கியமான  வாழ்க்கையின் அடையாளம்.
மனம் விட்டுப் பேசுங்கள் , அதற்காக  தேவையில்லாத பழைய சோகக்  கதைகளை கிண்டி கிளறாமல், ஆரோக்கியமான  உறவுக்கு அழைத்துச்  செல்லும்  சந்தொஷமான விஷயங்களைப் பேசுங்கள்.
உங்கள் விருப்பத்துக்கு தக்கபடி   வாழ்க்கைத் துணையை  வளைக்கப்  பார்ப்பதுதான் பல் வேறு  சிக்கல்களுக்கும்  காரணமாகிவிடுகிறது. எனவே, அவர் களை அவர்களாகவே இருக்க விடுங்கள், அப்படியே நேசியுங்கள். ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லை தானே?!
சின்னச் சின்ன அன்பில்தான்  ஜீவன் இருக்கிறது. எனவே, அவரின் பிறந்த நாள் , திருமண நாள் போன்றவற்றை நினைவில்  வைத்து வாழ்த்துங்கள்.உங்கள் வாழ்க்கைத்  துணையின் பெற்றோரின்  சிறப்பு  நாட்களையும் நினைவில் வைக்க முடிந்தால், அசத்தி விட்டீர்கள் என்று அர்த்தம் .
வீட்டு வேலை என்பது முழுக்க முழுக்க பெண்களின் பகுதி என சோம்பேறித்தனமாக ஒதுங்காமல், படுக்கையை சுத்தம் செய்வது , மாற்றுவது  என்று பலவற்றை  கணவரும் பகிர்ந்து கொள்ளலாம்.
சதுரங்கம் , உள்ளக விளையாட்டு  சிலவற்றை கணவர், மனைவி, மாமியார், மகன், மகள் என குடும்பமாக அமர்ந்து  விளையாடிப் பாருங்கள்.  இடைவெளிகள் குறையும் ….. ஆனந்தம் அதிகரிக்கும் .
திருமணமாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டாலே சுவார்ஷியங்கள் எல்லாம் காணாமல் போய்விடுகிறது. இது மிக மிகத் தவறு .அடிக்கடி வாழ்த்து அட்டைகள் வழங்குவது, வெளியே இரவு உணவு விடுதிக்கு செல்வது , இருவருமாக திரைப்படம் பார்க்க செல்வது  என அன்புக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டே இருங்கள். செய்வது விரும்பிச் செய்யுங்கள் .
தாம்பத்திய உறவு என்பது ஆரோக்கியமான குடும்ப வாழ்கையின்  சாவியைப்  போன்றது . எந்தக் காரணம் கொண்டும் சாவியைத் தொலைக்காதீர்கள்.
அவ்வப்போது பரிசுகள், பாராட்டுகள், வழங்குங்கள்.சின்னச் சின்ன அங்கீகாரங்களிலும், பாராட்டுகளிலும் வாழ்கையின் சுவாரிஷ்யம் பல மடங்கு அதிகரிக்கும் .
ஒருவர் பேசிக்கொண்டே இருக்க, இன்னொருவர் கேட்டுக்கொண்டே இருப்பது ஆரோகியமான உரையாடல் அல்ல. எனவே, நிறைய பேசுங்கள்……. நிறைய கேளுங்கள். இரண்டும் முக்கியம்.
உங்கள் துணைக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை அறிந்து வைத்திருங்கள். நீங்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பையும் அக்கறையையும் அவருக்கு உணர்த்தும் வழிகள் இவை.
மன்னிப்புக் கேட்பது, கொடுப்பது…….. இரண்டும் சகஜமாக இருக்கட்டும். ‘எப்படி நான் பொய் மன்னிப்பு கேட்பது’  எனும் வீண் ஈகோவை  விட்டு ஒழியுங்கள்.  அதேபோல் மன்னிப்பு கேட்டால் வினாடி கூட தாமதிக்காமல் மன்னித்துவிடுங்கள் . உடனே அந்தப் பிழையாய் மறந்தும் விடுங்கள்.
ஒருவர் கோபமாக இருந்தால் அடுத்த நபர் கொஞ்சம் தணிந்து போகவேண்டும் . சண்டைக்கு சண்டை போட்டால் குடும்ப வாழ்க்கை அதோகதிதான்.
கடந்து சென்ற கசப்பான நிகழ்ச்சிகளை , உரையாடல்களை ‘குத்திக் காட்டிப் பேசாதீர்கள்’. இவை ஆரோகியமான உரையாடல்களுக்குக் கொள்ளி வைக்கும் .
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள் Empty Re: ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள்

Post by krishnaamma Sat Mar 01, 2014 7:57 am

உறவுக்கு கை கொடுங்கள் !

தரமான அன்புக்குரிய தூரத்து  சொந்தக்காரர்களின்  தொடர்புகளை புதுப்பித்து  கொள்ளுங்கள். இவை ஆனந்தத்தின் உற்சாக ஊற்றுக்களை  கண் திறந்திடும்.
‘தினமும் யாருக்காவது ஒரு நல்லது செய்வேன் ‘ என முடிவெடுங்கள். அடுத்தவர்களைச் சந்தோஷ படுத்திப் பார்பதில்லுள்ள  ஆனந்தம் அலாதியானது.
பொறாமையைத் தூக்கி கடலில் போடுங்கள். அடுத்தவர்களின் உயர்வில் நீங்கள் மகிழுங்கள் . ஆனந்தம் உங்களுக்கு நிரந்தரமாகும்.
உச்சாணிக் கொம்புக்கு ஆனந்தம் தேடி வராது. ஆனந்தம் நதி போல . நடப்பவனுக்க்கே பயன் படும் பறப்பவனுக்கு அல்ல !எனவே நான் உயர்ந்தவன் எனும் எண்ணத்தை கைவிடுங்கள்.
கடந்த கால சிந்தனைகளிலேயே மூழ்கி விடாதீர்கள். நிகழ காலத்தின் நியங்களில் வாழுங்கள். எதிர்காலத்தை நம்பிக்கையாக எதிர்கொள்ளுங்கள்.
உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் என உங்கள் நலம் விரும்பிகளுடன் அதிக நேரம் செலவிடுவது ஆரோக்கியமானது .
நிராகடிக்கப்பட்ட முதியவர்களை சந்திக்க முடிந்தால் மிகவும் நல்லது .அது உங்களுக்கு மன நிறைவையும் அவர்களுக்கு ஆனந்தத்தையும் தரும்.
விஷத் தண்ணீர் ஊற்றினால்  ஆனந்தப் பூக்கள் மலராது. எனவே ……… குறை கூறுவது, பிறரை நோகடிப்பது, மற்றவர்களை எதிரிகளாக்குவது என தேவையற்ற  செயல்களை விட்டுத் தள்ளுங்கள்.
அடுத்தவர்கள் என்ன செய்வார்கள் என்பதை விட்டுத் தள்ளுங்கள். அடுத்தவர்களுக்காக வாழும் வாழ்க்கை அட்ஜெக்ட் செய்யப்பட்ட வாழ்க்கை. உங்களுக்காக நீங்கள் வாழும் வாழ்க்கைதான் ஆனந்தமான வாழ்க்கை.
அடுத்தவர்களோடு உங்களை ஒப்பீடு செய்வதை விட்டு விடுங்கள். ‘நாம்தான் பெஸ்ட்’ என்று தன்னம்பிக்கையுடன் இருங்கள். தன்னம்பிக்கை தலைக்கனம் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்தவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்குள் தேவை இன்றி  நுழையாதீர்கள். உங்களுடைய ஆலோசனையை கேட்டாலொழிய, ‘உதவுகிறேன் பேர்வழி ‘ என அவர்களுடைய உள் விவகாரங்களை கிளறாதீர்கள்.
பிரச்சனைகளை நினைத்துக் கொண்டிருக்காமல், முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துங்கள். சில பிரச்சனைகளையே நினைத்துக் கொண்டிருக்காமல், முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துங்கள். சில பிரச்சனைகள் கழுதை சுமக்கும் பொதியைப் போன்றது ! இறக்கி வைத்து விட்டு நடையைய் கட்டுங்கள்.
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள் Empty Re: ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள்

Post by krishnaamma Sat Mar 01, 2014 7:58 am

நட்பைக் கொண்டாடுங்கள்!

உட்சாகமானவர்களை உங்கள் நண்பர்களாக  தேர்ந்தெடுங்கள். ‘அது நடக்காது’, இது முடியாது’ என எதற்க்கெடுத்தாலும் தடை சொல்பவர்களை ஒதுக்கி வையுங்கள்.
உங்களை தவறான வழியில் இழுத்து செல்லும் நபர்களிடம் ‘சாரி’ சொல்லி விட்டு நடப்பை துண்டித்து விடுங்கள்.
நட்பு என்பது பண்டமாற்றுப் பொருள் அல்ல . அது இயல்பாக வழியும் அருவி போன்றது. எனவே, எந்த ஆதாயமும் எதிர்பாராமல் நட்பு பாராட்டுங்கள்.
‘தோழி என்ன நினைப்பாளோ ?’என அவருடைய குறைகளைச் சுட்டிக் காட்டத் தயங்காதீர்கள்.நல்ல ‘நலம் விரும்பி’யாக இருங்கள்… நல்ல விசிறியாக அல்ல .
எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல ……….எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.
நண்பர்களுக்குள் பகிரப்படுவது உச்சபட்ச நம்பிக்கை  உரையாடல்கள். எனவே,  வெளியே அவற்றை அம்பலப்படுத்தாதீர்கள்.
புதிய நபர்களைப் பார்த்தால் பேசத் தயங்காதீர்கள். ஒரு புன்னகை, ஒரு உரையாடல், ஒரு ‘ஹாய்’……இவையெல்லாம் உங்களுக்குக்  ஒரு நல்ல நண்பனை சம்பாதித்துத் தரக் கூடும் .
வெளிப்படையாக, உண்மையாக இருங்கள். நட்பில் போலித்தனம் தேவை இல்லை.
வெறும் பேச்சுடன் விலகிக் கொள்ளாமல், நண்பர்களுக்கு உதவிகரம் நீட்டுவதும், தேவைப்படும் நேரங்களில் அருகில் இருப்பதும் உங்கள் நட்பை இன்னும் அர்த்தப்படுத்தும்.
நட்பு மனதில் உற்சாக மூட்டும், சோர்வடைய செய்வதும், தன்னம்பிக்கையைக் குலைப்பதும் நல்ல நட்பாக இருக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
நல்ல நண்பர்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்து, அவர்களை கடைசியில் தள்ளாதீர்கள். நண்பர்களின் சின்னச் சின்ன வெற்றிகளைக் கொண்டாடுங்கள். உங்களின் சின்னச் சின்ன வெற்றிகளும் அவர்களால் கொண்டாடப்படும்.
அடிக்கடி நண்பர்களை நேரில் சந்தியுங்கள். நேரில் சந்திக்கும் நட்பு ஆரோக்கியமாக வளரும்.
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள் Empty Re: ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள்

Post by krishnaamma Sat Mar 01, 2014 7:58 am

ஆரோக்கியமும் ஆனந்தமே !

ஆரோக்கியமான உடல் இல்லையேல் ஆனந்தமாக இருப்பது எது?! உங்கள் திட்டங்களையும் கனவுகளையும் நிறைவேற்ற ஆரோக்கியமே அஸ்திவாரம்.  அந்தப் புரிதலே முதல் படி.
ஓய்வெடுக்காத உடல், நோய்களின் கூடாரமாகிவிடும்.எனவே, தேவையான அளவு ஓய்வெடுங்கள்.
சோம்பலான மனம் சோர்வான உடலைத் தரும். நடப்பது, ஓடுவது , நடனம், நீச்சல் , சைக்கிளிங் என ஏதாவது ஒரு உற்சாகமான செயலை உடட்பயிட்சியாக்குங்கள்.
நிறைய தண்ணீர் குடியுங்கள். மிகவும் எளிய, ஆனால் பலரும் செய்யாத ஒரு செயல் இது. அதிக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்துக்கு மிக அவசியம்.
எக்காரணம் கொண்டும் காலை, மதியம், இரவு உணவுகளை தவிர்த்து சோர்வை சம்பாதிக்காதீர்கள். பெட்ரோல் போட்டால் தான் வாகனம் ஓடும்.
நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற ‘ஐங்க்’ உணவுகளை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.
குழந்தைகளைப் பாராட்டவும், உற்சாக மூட்டவும் சாக்லட்டுக்கள், சிப்ஸ்  வகைகளைக் கொடுத்துப் பழக்காதீர்கள்.
தொலைகாட்சி பார்த்துக்கொண்டே வெந்ததை விழுங்காமல், தினமும் குறைந்தது இரவு உணவையாவது அனைவரும் சேர்ந்து சாப்பிடுங்கள். ஆனந்தமும், உற்சாகமும், ஆரோக்கியமும் தங்கும்.
உப்பு, எண்ணையை உணவில் குறைத்துப் பழகுங்கள்.அவை உங்கள் ஆரோக்கியத்தின் எதிரி.
புகை, மது, அதிக கோபம் போன்றவை ஆரோக்கியமான உடலின் எதிரிகள் என்பாதை மீண்டும் ஒரு முறை நினைவில் நிறுத்துங்கள்.
மன அழுத்தத்தை குறையுங்கள். யோகா, தியானம், ஆன்மிகம் என உங்கள் மனதை அமைதிப்படுத்துபவற்றில்  கவனம் செலுத்துங்கள்.
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள் Empty Re: ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள்

Post by krishnaamma Sat Mar 01, 2014 7:59 am

‘தீதும் நன்று பிறர் தர வாரா……….’

பேச்சிலும் செயலிலும் உண்மையைப் பின்பற்று பவர்களுக்கு மன நிறைவான  வாழ்க்கை அமைவது உறுதி. பொய் பேசுபவர்களுக்கு ஆனந்தம் அந்நியமாகிவிடும். நிங்கள் சொன்ன பொய்யும் அதனால் ஏற்பட்ட மனச்சுமையும் சதா உங்களைத் துரத்திக்கொண்டிருக்கும் . மற்றவர்களால் கண்டறியப்படும்  உங்களின் சிறு பொய் கூட  சமூகத்தில் நீங்கள் பல காலம் சம்பாதித்து  வைத்திருக்கும் நன் மதிப்பை பாழ் செய்துவிடும்.
கடந்தகால கவலைகள், சோகங்கள், அவமானங்கள் போன்ற நிகழ்வுகளை நினைத்து நினைத்துப் பார்ப்பதில் , பயன் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. அதேபோல, ‘எதிர்காலத்தில் நோய் வந்திவிடுமோ , வேலை போய்விடுமோ’ என கற்பனையான பயம் முன்பாக மண்டியிட்டு பதறி வாழும் நிகழ்காலத்தை நழுவ விட்டுவிடாதீர்கள். ‘LIVE THE MOMENT’ என்பார்கள். இந்த நிமிடத்தை அனுபவித்து வாழுங்கள்.
வரவுக்கு ஏற்றம் என்பது மிக முக்கியம். தீபாவளி, பொங்கல், ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ்  போன்ற பண்டிகை, பிள்ளைகளின் பாடசாலை கட்டணம் எல்லாம் எந்த தேதியில் வரும் என்பது பல மாதங்களுக்கு முன்பே அறிந்து கொள்ள இயலும் என்பதால், அந்த செலவுகளுக்கு சில மாதங்களுக்கு  முன்பிருந்தே சேமியுங்கள். கூடவே கடன் இல்லாத வாழ்க்கையே ஒரு பெரிய நிம்மதிதான். தேவைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசம் அறிந்திருப்பதும் நல்லது.
பெற்றோர்களை மதியுங்கள். குறிப்பாக வயதான காலத்தில் அருகில் வைத்துப் பராமரியுங்கள் . அவர்கள் மறைவிற்கு பிறகும் நீங்கள் குற்றவுணர்ச்சி இல்லாமல் மனநிறைவோடு வாழாலாம் .
உங்களை நேசிக்க, மதிக்க மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள். நீங்களே உங்களை கொண்டாடுங்கள். உங்களை எப்போதும் மனதுக்குள் உயர்வாகவே நினையுங்கள் . அதற்கு உங்களைத்  தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆடை ஆபரணங்களால்  உடலை அலங்காரம் செய்வதுடன் மறக்காமல் முகத்தில் சிரிப்பை அணிந்து கொள்ளுங்கள்.                                                                                                                                                                                                                                                                               ‘தீதும் நன்று பிறர் தர வாரா’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளைப்போல, நம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் நம்முடைய செயல்களே தீர்மானிக்கும். வாழ்க்கை என்பது ஒரு பயணம். அதன் ஒவ்வொரு எல்லைக் கல்லையும் கொண்டாடுங்கள். பயணம் நிறைவாக முடியும்!
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள் Empty Re: ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள்

Post by ஜனனி Sat Mar 01, 2014 6:21 pm

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள் Empty Re: ஆனந்த வாழ்க்கைக்கு 100 சிறந்த துணுக்குகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum